வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது, ஆனால் அதற்கான பதிலடித் திட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் அளவிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் நிதி நெருக்கடிகள், குறிப்பாக நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில், அனைத்துப் பிரச்சினைகளையும் முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதால் இந்நிலை எடுக்கப்பட்டுள்ளதாக…
ஆடாம் : மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும்
மலேசியாவிற்குக் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது, பொது சுகாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் விஞ்ஞானிகளின் ஆற்றலைத் திரட்டி, அதனை உற்பத்தி செய்ய முடியும். தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க, நாட்டிலேயே கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் சுகாதார…
‘கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம்’ ஏன் அவசியம் – அசலினா
நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் போது, கட்சியின் நிலைப்பாட்டிற்கு இணங்காது, சொந்த முடிவு எடுப்பது கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று, பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஓத்மான் சைட் குறிப்பிட்டார். முகநூல் பதிவு ஒன்றில், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசலினா, முன்மொழியப்பட்ட அச்சட்டம்…
இஸ்மாயில் சப்ரியின் முழு அமைச்சரவை சிறப்பானது என்றால், கேஜே மட்டும்…
ஆகஸ்ட் 20-ம் தேதி, இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாவது பிரதமரானபோது, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அம்னோ துணைத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று சில ஆய்வாளர்கள் ஆருடம் கூறினர். புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில், முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தின் 'தோல்வியடைந்த…
பெற்றோரின் கல்லறைக்குச் சென்ற பிரதமர், மக்களின் விமர்சனத்துக்கு ஆளானார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று பஹாங்கில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது அவரது பெற்றோரின் கல்லறைக்குச் சென்றார். இந்த வருகை சில சமூக ஊடகப் பயனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அவரின் வருகை குறித்த ஆஸ்ட்ரோ அவானியின் செய்தி, 1,000-க்கும் மேற்பட்ட கருத்துகளைப் பெற்றது, அவற்றில் பெரும்பாலானவைப்…
`மெர்டேக்கா` என்ற உந்துதலால்..
இது நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தருணம். துங்கு அப்துல் இரஹ்மான் மேடை ஏறி, "மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என்று முழங்கினார் – அது மலாயாவின் விடுதலை அடையாளம். பல்வேறு இடர்களையும் தடைகளையும் கடந்து, அறுபத்து நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன. நாம் ஒரு விவசாய நாட்டிலிருந்து, ஒரு தொழில்துறை…
22,597 புதிய நேர்வுகள், 252 மரணங்கள்
இன்று, கோவிட் -19 புதிய தொற்று எண்ணிக்கை 22,597 -ஆக பதிவாகியுள்ளது. சிலாங்கூர் 5,814 புதிய நேர்வுகளுடன், தொடர்ந்து அதிக தினசரி நேர்வு பங்களிப்பாளராக உள்ளது. சபா, சரவாக் மற்றும் கெடாவில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில், பினாங்கும் ஜொகூரும் அந்த நிலையை…
மோஸ்தி தடுப்பூசி தயாரிப்புகள் மீது கவனம் செலுத்தும் – பிரதமர்
கோவிட் -19 தொடர்பான அனைத்து தடுப்பூசி திட்டங்களும் சுகாதார உத்திகளும் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கைரி ஜமாலுதீன் அபு பக்கர் மூலம், சுகாதார அமைச்சால் மட்டுமே கையாளப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் ஆடாம் பாபா தலைமையிலான அறிவியல், தொழில்நுட்பம்…
‘புதிய தலைமை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ – உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள்
ஆர்வலரும், தகவல் தொடர்பு ஆலோசகருமான நதானியேல் தான், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோது, கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, தனது உண்ணாவிரதத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று வலியுறுத்தினார். எவ்வாறாயினும், பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா காரணமாக ஏற்பட்ட அரசியல்…
கு லி : `அமைச்சரவை உறுப்பினர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்படட்டும்!`
நேற்று, இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவை, பல தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளான போதும், மூத்த அம்னோ தலைவர் ஒருவர், அவர்களுக்காக "பிரார்த்தனை" செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். முஹைதீன் யாசினின் நிர்வாகத்தின் கீழ் கிடைத்ததைவிட, பாதி குறைவான சம்பளம் இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென பிரார்த்திக்குமாறு, தெங்கு…
‘மறுசுழற்சி’ அமைச்சரவை : 17 மாதங்கள் தோல்வி அடைந்தவர்களால், 100…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உருவாக்கிய அமைச்சரவையை, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் கடுமையாக சாடினார். நேற்று காலை, புதிய அமைச்சரவை அறிவிப்பில், ஐந்து அமைச்சர்களும் நான்கு துணை அமைச்சர்களும் மட்டுமே புதியவர்கள். மீதமுள்ள 26 அமைச்சர்களும் (இஸ்மாயில் சப்ரி தவிர) மற்றும் 34 துணை அமைச்சர்களும் ஒரே…
‘ஒவ்வொரு அமைச்சும் 100 நாட்களுக்குள் தங்கள் அடைவுநிலையை நீரூப்பிக்க வேண்டும்’
ஒவ்வொரு அமைச்சும் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள், அவரவர் அமைச்சின் அடைவுநிலையை நீரூப்பிக்க வேண்டுமென தனது அமைச்சரவைக்குப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நிபந்தனை விதித்துள்ளார். இன்றைய அமைச்சரவை அறிவிப்பில், இஸ்மாயில் ஒவ்வொரு அமைச்சும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களைச் செய்ய வேண்டும்…
‘திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்’
திருச்சி, மத்தியச் சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி இதனைத் தெரிவித்தார்.…
புதிய அமைச்சரவையின் முழு பட்டியல்
இன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவையின் முழு பட்டியல் பின்வருமாறு :- பிரதமர் : இஸ்மாயில் சப்ரி யாகூப் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தக மூத்த அமைச்சர் : அஸ்மின் அலி (பெர்சத்து) துணை அமைச்சர் : லிம் பான் ஹாங் (மசீச). மூத்தப்…
சையத் சாதிக் : அமைச்சரவையில் அஸலினா இல்லை, பிரதமர் வாய்ப்பை…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அவரது அமைச்சரவையில் சில வாய்ப்புகளை வீணடித்ததாக, மூடா கட்சி தலைவர் சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மான் விவரித்தார். சையத் சாதிக் பல பெயர்களைக் குறிப்பிட்டார், பெங்கராங் எம்.பி. அஸலீனா ஒத்மான், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி, அம்னோ…
இஸ்மாயில் புதிய அமைச்சரவையை அறிவித்தார், திபிஎம் இல்லை
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று புதிய அமைச்சரவையை அறிவித்தார். வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இஸ்மாயில் பட்டியலை அறிவிக்கும் போது, இன்று உருவாக்கப்பட்ட அமைச்சரவையின் முக்கியப் பணி கோவிட் -19 தொற்றைச் சமாளிப்பதும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதும்…
`சபாநாயகர் பதவியைப் பிரதமர் முடிவு செய்வார்` – அஸார்
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகராக அவரது சேவைகள் தொடருமா இல்லையா என்பதை முடிவு செய்ய, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிடம் விட்டுவிட்டதாக அஸார் ஹருன் கூறினார். "நான் மக்கலவையின் பெரும்பான்மையினரின் தயவால் சபா நாயகர் ஆனேன். பெரும்பான்மை சபையை வழிநடத்தும் பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்,”…
24,599 புதிய நேர்வுகள், 393 மரணங்கள்
இன்று மதியம் 12 மணி வரையில், நாட்டில் 24,599 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே ஆக அதிகமானது. சபா, பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்கள், இன்று மிக உயர்ந்த எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.…
நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை அறிவிக்கப்படும் – பிரதமர்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நாளை (வெள்ளிக்கிழமை), காலை 11 மணிக்குத் தனது அமைச்சரவை பட்டியலை அறிவிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழா வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, இஸ்மாயில் சப்ரி தனது…
என்ஜிஓ : நிறுவனம் அமைத்து பகாங் மாநில பூங்காவைப் பராமரிப்பது…
மாநிலச் சட்டசபையில், நேற்று நிறைவேற்றப்பட்ட பகாங் மாநிலப் பூங்காக்கள் நிறுவனச் சட்டம், மாநிலத்தில் உள்ள பல்லுயிர் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளை அச்சுறுத்தும் ஆபத்து இருப்பதாகச் சுற்றுச்சூழல் அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ), மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (எம்என்எஸ்) தெரிவித்துள்ளது. இது மாநிலப் பூங்காக்கள் வணிக மயமாக்கலை நோக்கி செல்வதைக்…
பிஎம்-பிஎச் சந்திப்பு : நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடும் –…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள் இடையேயான சந்திப்பு, மலேசிய அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகும், ஒருவேளை உறுதியுடன் பின்பற்றப்பட்டால், என்று டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "இந்தச் சந்திப்பு நம் நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தையும் கலாச்சாரத்தையும் மாற்றும்…
கோவிட் -19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிரானவர்கள் அடங்கிய குழு வழக்குத்…
கோவிட் -19 தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் பணியில் ஒரு சட்ட நிறுவனம் தற்போது உள்ளது. பொது டெலிகிராம் சேனல் மூலம் இந்த முயற்சி நடத்தப்படுகிறது, இதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்பி சன்ராவதனே. கட்டாய தடுப்பூசி நடவடிக்கையை ரத்து செய்ய மலேசிய அரசுக்கு…
42.4 விழுக்காடு மக்கள் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளையும் முடித்துள்ளனர் –…
மலேசியாவில், மொத்த மக்கள்தொகையில் 42.4 விழுக்காடு அல்லது 13,842,928 தனிநபர்கள், நேற்றைய நிலவரப்படி இரண்டு மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்பு குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 18,792,979 பேர் அல்லது 57.5 விழுக்காட்டினர் முதல்…
அமைச்சரவை பட்டியலுடன் பிரதமர் அகோங்கை எதிர்கொள்வார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், புதிய அமைச்சரவை பட்டியலை வழங்க இன்று யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னரை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி, பகாங், குவாந்தானில் நடைபெறும். தி ஸ்டார் இணையத் தளச் செய்தியின்படி, இஸ்தானா நெகாராவின் ஆதாரம் ஒன்று…























