10,972 புதிய நேர்வுகள், கெடாவில் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவிட் 19 | இன்று நாட்டில், 10,972 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கெடாவில் புதிய நேர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், ஜொகூர் தொடர்ந்து இரண்டாவது நாளாக 800-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இன்று 129 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன.…

மேலவை உறுப்பினர்களாக நால்வர் பதவியேற்றனர்

இன்று, மேலவை சபாநாயகர் டாக்டர் ரைஸ் யாத்திம் முன்னிலையில், நால்வர் மேலவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின், ஜோன் அம்ப்ரோஸ், தியோ எங் தீ @ தியோ கோக் சீ மற்றும் போபி ஆ ஃபாங் சுவான் ஆகியோர் அந்த நால்வரும் ஆவர்.…

திபிஎம் : இருமருந்தளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான எஸ்ஓபி ஈகை பெருநாளுக்குப்…

ஈகை பெருநாளுக்குப் பிறகு, இரண்டு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கான எஸ்.ஓ.பி.க்களை அரசாங்கம் அறிவிக்கும் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அக்குழுவினருக்கு அனுமதிக்கப்படும் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதற்காக, தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். "எந்த வணிகத் துறைகளைத் தளர்த்த…

சலாவுதீன் : தடுப்பூசி போடாமல் மாணவர்கள் பள்ளிக்கு எவ்வாறு பாதுகாப்பாக…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு முன்னதாக, கோவிட் -19 தடுப்பூசி போடாத மாணவர்களை எவ்வாறு கையாளத் திட்டமிட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார். சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) இடர் மதிப்பீட்டிற்கு…

மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 829 பேரைக் காவல்துறை மீட்டது –…

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரையிலான காலப்பகுதியில், நாடு முழுவதும் 190 காவல்துறை சோதனைகளில், மனிதக் கடத்தலுக்குப் பலியானதாக நம்பப்படும் 829 பேர் மீட்கப்பட்டு, இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவுகளை (ஐபிஓ) பெற்றனர். கடந்த ஆண்டு 74 பேர் பாதுகாப்பு ஆணைகளைப் (பிஓ) பெற்றுள்ளனர், இந்த…

கருப்புக் கொடி போராட்டத்தில் இணைந்த 3 ஆர்வலர்களுக்கு RM2,000 தண்டம்

நேற்று முந்தினம், கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் நடந்த 'ஃபிளாஷ் மோப்'-இல் பங்கேற்றதற்காக, மக்கள் ஒற்றுமை செயலகத்தின் (எஸ்.எஸ்.ஆர்.) மூன்று ஆர்வலர்களுக்கு RM2,000 தண்டம் விதிக்கப்பட்டது. டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில், சுமார் மூன்று மணி நேரம் சாட்சியமளித்த பின்னர், முகமது அல்ஷாத்ரி அப்துல்லா, மொஹமட் அஸ்ரஃப் ஷரஃபி…

10,710 புதிய நேர்வுகள், 153 மரணங்கள்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மொத்தம் 10,710 புதியக் கோவிட் -19 நேர்வுகளைச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையில், 4,828 நேர்வுகளைப் பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் தொடர்கிறது. இதற்கிடையில், 808 புதிய நேர்வுகளைப் பதிவு செய்து, ஜொகூர் குறிப்பிடத்தக்க…

சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் –…

சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிலியில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை வலியுறுத்தினார். எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் நிலை குறித்த தரவு மற்றும்…

மக்களவை கூட்டத்திற்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

முந்தைய அமர்வுக்குச் செய்ததைப்போல, 80 எம்.பி.க்கள் மக்களவையில் இருக்கலாமா என்பது குறித்த முடிவு, அடுத்த வாரம் ஜூலை 26-ஆம் தேதி சிறப்பு அமர்வு தொடங்குவதற்கு முன்பு முடிவு செய்யப்படும். மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீத் ஹஸ்னோன், இந்த விவகாரம் அந்தந்த அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடன் விவாதிக்கப்படும்…

பிபிஎன்-இன் இரண்டாம் கட்ட அளவுகோல்களை மூன்று மாநிலங்களும் பூர்த்தி செய்யவில்லை

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்குச் சென்ற பினாங்கு, சரவாக் மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்கள் அரசாங்கம் நிர்ணயித்த அளவுகோல்களை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. பிபிஎன்-இன் இரண்டாம் கட்டத்திற்கு மாநிலத்தை நகர்த்துவதற்கு, மூன்று குறிகாட்டிகளைக் கடைபிடிக்கப்பட வேண்டும், அதாவது சராசரியாக ஏழு நாட்கள் கோவிட் -19 நேர்வுகள்…

டத்தாரான் மெர்டேக்காவில் கருப்புக் கொடி, சடலப் பொம்மை போராட்டம்

நேற்று, டத்தாரான் மெர்டேக்காவில், பதினான்கு கறுப்புக் கொடிகள் அசைக்கப்பட்டு, 5 வெள்ளை நிற சடலப் பொம்மைகளுடன், மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) ஒரு 'ஃபிளாஷ் மோப்' -ஐ ஏற்பாடு செய்தது. ஓர் அறிக்கையில், கோவிட் -19 மற்றும் தற்கொலை காரணமாக அதிகரித்து வரும் இறந்தவர்களின் எண்ணிக்கையை அது குறிப்பதாக…

 இராஜமோகன் கருப்பையா காலமானார்

சி.ஐ.எம்.பி.பொருளகத்தின் முன்னாள் பணியாளரும் அதன் கால்பந்துக் குழுவின் முன்னாள் கோல் காவலரும் அப்போதைய நெடுந்தூர ஓட்டப்பந்தைய வீரருமான மோகன் ராஜ் எனப்படும் இராஜமோகன் கருப்பையா கோவிட் நோய்த் தொற்றினால் இன்று (17.7.2021) விடியற்காலை மரணமடைந்தார். இவர் மலேசியஇன்றுவில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் படைத்து வரும் இராகவன் கருப்பையா அவர்களின் அண்ணனாவார். காவல் துறையின் தன்னார்வலர் பிரிவில் பணியாற்றிய காலத்தில் சிறந்த குறி…

அடிமைகள் போன்ற கட்டாய தொழிலாளர்களை மீட்க ஆணையம் தேவை,  மனிதவள அமைச்சு…

ஆர்.கிருஷ்ணன் - " சைம் டார்பி பெர்ஹாட்" நிறுவனம் இவ்வாண்டு மார்ச் மாதவாக்கில் மனித உரிமை நிர்வாக ஆணை உருவாக்கத்திற்கு முன்மொழிந்த போது அதற்கு வாழ்த்துகளைக் கூறினேன். அவ்வாணையம் தொழிலாளர்களின் உரிமைகளையும் மனிதத் தன்மையுடன் மதிப்பீட்டு அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்த்தேன் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறினார். ஆனால், "சைம் டார்பி" நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட அந்த ஆணையம் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது தொழிலாளர்களின்…

12,528 புதிய நேர்வுகள், 138 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில், இன்று மதியம் வரையில், 12,528 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வழங்கிய முறிவில், இன்றைய நேர்வுகளில் 6,840 (54.6 விழுக்காடு) அறிகுறியற்றவை, 5,468 (43.6 விழுக்காடு)…

செலாயாங் மருத்துவமனைக்கு உடல் கொள்கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது

இன்று, கோவிட் -19 நோயாளிகளின் உடல்களை வைக்க, தொழிலதிபர் ஒருவர் சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனைக்கு ஒரு சிறப்பு கொள்கலனை நன்கொடையாக வழங்கினார். கோவிட் -19 இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக, உடல்களை வைக்க இடமில்லாமல் போனதால், கூடுதல் கொள்கலன்களுக்கு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்த செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து இது…

சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு மூன்றாவது மருந்தளவு பரிசோதனை – முன்னாள்…

கோவிட் -19 சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு ஊட்ட (booster) அளவை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் பரிந்துரைத்தார். "பிற நாடுகளில் பதிவாகும் நோய்த்தொற்றுகள், தடுப்பூசி உத்திகளை மறுபரிசீலனை செய்யக் காரணமாக அமைந்துள்ளன, இதனால் தடுப்பூசிகளைக் கலக்கவும், (தற்போதுள்ள சினோவேக் தடுப்பூசியின்) செயல்திறன் குறைபாடுகளைத்…

பேரங்காடிகளில் சில பகுதிகளை மூடுவதற்குப் புதிய எஸ்.ஓ.பி.கள்

நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றம் வழங்கிய புதிய செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஏற்ப, பேரங்காடிகள் இப்போது தங்கள் வளாகத்தின் சில பகுதிகளை மட்டும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன. அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், "ஆடை, அலங்காரங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் பிரிவு தவிர" மற்றப் பகுதிகள்…

ஒப்பந்த மருத்துவர்களின் தலைவிதியை அமைச்சரவை இன்னும் முடிவு செய்யவில்லை –…

கடந்த புதன்கிழமை கூடியிருந்த அமைச்சரவை, ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பண்டார் கூச்சிங் எம்.பி. டாக்டர் கெல்வின் யீ தெரிவித்தார். கூட்டத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை என்று…

கிள்ளான் பள்ளத்தாக்கின் மூத்தக் குடிமக்கள் சந்திப்பு நியமனம் இல்லாமல் தடுப்பூசி…

இன்று தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் (பிபிவி), சந்திப்புக்கான நியமனம் இல்லாமலேயேக் கோவிட் -19 தடுப்பூசி பெறலாம் என்று தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். கோவிட் -19…

டாக்டர் ஆதாம் : முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு எஸ்.ஓ.பி.க்கள் தளர்த்தப்படும்

இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்று முடித்தவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட நெகிழ்வுத்தன்மை விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். "இந்த அறிவிப்பு விரைவில் வரும்," என்று அவர், இரண்டு மருந்தளவிலான தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற நபர்களுக்குக் கடைகளில் சாப்பிட அனுமதி மற்றும்…

6 ஆண்டுகளுக்குப் பிறகு, பில் கயோங் கொலைக்கான வேட்டையில் போலிசார்

ஆறு ஆண்டுகளாகப் போலிசாரால் தேடப்பட்டு வந்த, சரவாக் பழங்குடியினரின் பாரம்பரிய நில உரிமை ஆர்வலர் பில் கயோங் கொலையின் சந்தேக நபர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான். 26 வயதான அந்தச் சந்தேக நபர், கூங் சியாங் மிங் @ பாத்து மிங், கோலாலம்பூரிலிருந்து, நேற்று பிற்பகல் 1.55…

சரியான நியமனம் இருந்தால் புலம்பெயர்ந்தோரைப் பிபிவி ஏற்றுக்கொள்ள வேண்டும் –…

நாடு முழுவதும் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் (பிபிவி), மைசெஜாத்ரா பயன்பாட்டில் சந்திப்பு உறுதிப்படுத்தல் கொண்ட புலம்பெயர்த் தொழிலாளர்களை ஏற்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சாரான அவர், வெளிநாட்டு தொழிலாளர்கள் நியமனம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் சில பிபிவி-களில்…

12,541 புதிய நேர்வுகள், 115 மரணங்கள், 37 புதியத் திரளைகள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 12,541 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. தொடர்ந்து 4 நாட்களாக, நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி வருகின்றன. மேலும், இன்று 115 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,728 பேர்…