13,215 புதிய நேர்வுகள், 110 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 110 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,613 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 6,095 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

பிரதமர் வேட்பாளராக அஸ்மினா? நான் மக்களின் கருத்தைச் சொன்னேன் –…

சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி தனது விருப்பமான பிரதமர் வேட்பாளர் அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விளக்கினார். மாறாக, தன்னிடம் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை என்று அந்த லங்காவி எம்.பி. சொன்னார். நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கந்தார்,…

நாடாளுமன்றம் : 26 ஜூலை ‘சிறப்பு அமர்வு’, 6 செப்டம்பரில்…

மக்களவையின் முழு அமர்வு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் தெரிவித்தார். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரையில், அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மக்களவையின் சிறப்பு அமர்வு என்று அவர் விளக்கினார். மக்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்புக் கூட்ட அறிக்கை…

எச்.கே.எல். : மருத்துவரல்லாதப் பணிகளுக்குத் தன்னார்வலர்கள் தேவை

மலேசியாவின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றான கோலாலம்பூர் மருத்துவமனை (எச்.கே.எல்.), தற்போது அங்குள்ள மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மருத்துவரல்லாதத் தன்னார்வலர்களைத் தேடுகிறது. மலேசிய முதலுதவி அமைப்பு (மைஃபாஸ்ட்), தற்போது அதிகரித்து வரும் நோயாளிகளின் சேர்க்கையைச் சமாளிக்க, மருத்துவ ஊழியர்கள் போராடி வருவதால் மருத்துவமனை தங்களிடம் உதவி கோரியதாக தெரிவித்துள்ளது.…

கியூபெக்ஸ் : ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து பணிகளையும் அரசாங்கம் கவனிக்க…

சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஒப்பந்த ஊழியர்கள் எனும் விஷயத்தில், சுகாதார அலுவலர்கள் மீது மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தக்கூடாது என்பதே பொது சேவை ஊழியர்கள் சங்கத்தின் (கியூபெக்ஸ்) கருத்தாகும். அதன் தலைவர் அட்னான் மாட், எம்ஓஎச் மட்டுமின்றி, பிற அமைச்சுகளிலும் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன, அவற்றின்…

கட்டம் 2 நிலையில் இருந்து, மீண்டும் கட்டம் 1-க்கு நகராது…

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வரும் மாநிலங்கள், மீண்டும் முதலாம் கட்டத்திற்குப் 'பின்வாங்காது' என்று பிபிஎன் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார். நிதியமைச்சருமான அவர், ஒரு மாநிலத்தை 'திறந்து மூடுவது' என்பது நிலையானது அல்ல…

11,618 புதிய நேர்வுகள், 118 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 11,618 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, 5 இலக்கங்களில், 11,000-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகின்றது. மேலும், இன்று 118 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

அம்னோ எம்.பி.க்கள் உட்பட, அமைச்சரவை ஒருமனதாக முஹைதீனுக்கு ஆதரவு

பிரதமர் பதவியில் இருந்து "கெளரவமாக" விலகுமாறு, அம்னோ முஹைதீன் யாசினைக் கேட்டுக்கொண்ட ஒரு வாரத்திற்குள், இன்று அமைச்சரவை - அம்னோ எம்.பி.க்களை உள்ளடக்கிய – அந்த பெர்சத்து தலைவருக்கு தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியது. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒருமனதாக…

தினசரி தடுப்பூசிகளின் எண்ணிக்கை 400,000-க்கும் அதிகமாக உள்ளது

நேற்று, 424,541 தடுப்பூசி மருந்தளவுகளுடன், நாட்டில் தினசரி கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள், 400,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. திங்களன்று, தினசரி தடுப்பூசிகள் 421,479 மருந்தளவுகளாக இருந்தன. நேற்று, 260,286 முதல் மருந்தளவுகளும், 164,255 இரண்டாவது மருந்தளவுகளும் வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர்…

டோனி புவா : 11,000-ஐ தாண்டிய கோவிட் -19 நேர்வுகள்,…

2021, மே 16 முதல், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட போதிலும், தினசரி கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வருவதற்குப் பொறுப்பேற்று, சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா பதவி விலக வேண்டுமென்று, டாமான்சாரா எம்.பி. டோனி புவா கேட்டுக் கொண்டார். "எட்டு வாரங்களுக்கும் மேலாக, நாடு நடமாட்டக் கட்டுப்பாடுகளுக்கு…

டிஏபி : ‘எங்களுக்கு அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை’

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்துடன், நம்பிக்கை மற்றும் பட்ஜெட் ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) உள்ளிட்ட எந்த உடன்படிக்கையும் செய்யப்படவில்லை என்று டிஏபி உதவித்  தலைவர் எம் குலசேகரன் தெரிவித்தார். எனவே, டிஏபியை இழுப்பதற்கான அம்னோவின் எந்தவொரு முயற்சியும், அக்கட்சி உள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதை மட்டுமே நோக்கமாகக்…

டுரியான் பழத்தோட்ட அழிப்பிற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை –…

ரவூப்பில், பாரம்பரிய டுரியான் விவசாயிகளால் பயிரிடப்பட்ட 15,000 டுரியான் மரங்களை வெட்டிச்சாய்த்த பஹாங் வனத்துறையின் நடவடிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ராயல் பஹாங் டுரியான் ரிசோர்சஸ் பி.கே.பி.பி. சென். பெர். (ஆர்.பி.டி.ஆர்-பி.கே.பி.பி.) தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில், "சில தரப்பினரால்" எறியப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தகுந்த நேரத்தில் தீர்ப்போம்…

‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ உட்பட, 5 கோரிக்கைகளை வைத்து…

முஹைதீன் யாசின், பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது உட்பட, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, சில மாணவர் குழுக்கள் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதில், பாகோ எம்.பி. நாட்டை வழிநடத்த தவறிவிட்டார் என்ற அடிப்படையில் இந்த வலியுறுத்தல் செய்யப்பட்டது. தங்கள் கூட்டணியை மார்ஹேன் மாணவர் செயலகம்…

பாஸ் ஆதரவு மன்ற மகளிர் தலைவர் கோவிட் -19 காரணமாக…

பாஸ் ஆதரவாளர்கள் மன்றத்தின் (டி.எச்.பி.பி.) மத்திய மகளிர் தலைவர் ஆர் குமுதா, 42, கோவிட் -19 தொற்று காரணமாக இறந்தார். இன்று பிற்பகல், புத்ராஜெயா மருத்துவமனையில் அவரின் இறுதி மூச்சு நின்றது. டி.எச்.பி.பி.-யின் தலைவர் டாக்டர் என் பாலசுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். "குமாரி…

அம்னோ தேர்தல் இயக்குநராக மாட் ஹசான் நியமிக்கப்பட்டார்

கட்சியின் புதியத் தேர்தல் இயக்குநராக தாஜுட்டின் அப்துல் இரஹ்மானுக்குப் பதிலாக, அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானை நியமிப்பதாக அம்னோ அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தை அறிவித்த அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகச் சொன்னார். "அம்னோ தேர்தல் துறையின் மறுசீரமைப்பு என்பது கட்சியின்…

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் -19 அதிகரிப்புக்கு டெல்டா மாறுபாடு காரணமாகும்

கிள்ளான் பள்ளத்தாக்கில், புதியக் கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பதற்கு, டெல்டா மாறுபாடுகளின் பரவலே காரணம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மோசமான நிலையில் இருக்கும் ஒவ்வொரு நோயாளியும், சராசரியாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் உள்ளனர். கிள்ளான் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்கான…

11,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள், 125 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று 11,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது மலேசியாவில் பதிவான ஆக உயர்ந்த எண்ணிக்கை மட்டுமல்லாமல், முதல் முறையாக தினசரி புதிய நேர்வுகள் ஐந்து இலக்கங்களை இன்று எட்டியது. மேலும், இன்று 125 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை…

8,574 புதிய நேர்வுகள், சிலாங்கூரில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் 4,000-க்கும்…

கோவிட் 19 | இன்று நாட்டில், 8,574 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 102 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,260 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,041 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

உடல்கள் வைக்க கொள்கலன் – கிள்ளான் எச்.தி.ஏ.ஆர். ஏற்றுக்கொண்டது

உடல்களை வைக்க, ம.இ.கா. வழங்கிய கொள்கலன் நன்கொடையை, கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை (எச்.தி.ஏ.ஆர்.) இறுதியாக ஏற்றுகொண்டது. பெருகிவரும் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கும், சடலங்களை வைப்பதற்குமான இடப் பற்றாக்குறையை மருத்துவமனை எதிர்கொள்கிறது என்ற வெளிப்பாடுகளைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. எச்.தி.ஏ.ஆர். தனது முகநூல் பக்கத்தில், தேசிய…

‘கொலைகார அரசாங்கம்’ பொம்மை : மலாக்கா மேம்பாலச் சாலையில் கிடந்தது

'கொலைகார அரசாங்கம்' என்ற சொற்களைக் கொண்ட மனிதப் பொம்மை ஒன்று, இன்று காலை, மலாக்கா மேம்பாலச் சாலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பொம்மையை, ஜாலான் துன் அப்துல் ரசாக் - ஆயேர் கெரோ மேம்பாலச் சாலையில் பொதுமக்கள் கண்டுபிடித்தனர் - அரசாங்க நிர்வாகக் கட்டடமான ஶ்ரீ நெகிரி-க்கு அருகில் காணப்பட்டதாக…

2 இறப்புகளைத் தொடர்ந்து,  பணிச்சுமையைக் குறைக்க பல்கலைக்கழகங்களுக்கு வலியுறுத்து

மலாயா மாணவர் சங்கம் (கே.எம்.யூ.எம்) மாணவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், தற்போது இயங்கலை வகுப்புகளில் தீவிரமாக ஈடுபடும் மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் எடுத்துகொள்ளவும் பல்கலைக்கழகங்களை வலியுறுத்தியது. உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்ததைத் தொடர்ந்து, இந்த வலியுறுத்தல் வந்துள்ளது. இடுபணிகள், சோதனைகள் மற்றும் தேர்வுகள் என அதிகப் பணிச்சுமையால்,…

சைஃபுட்டின் : ‘அரசியல் செய்ய வேண்டாம்’ என்று பிரதமரிடமும் பிஎன்’னிடமும்…

துணைப் பிரதமர் (திபிஎம்) இஸ்மாயில் சப்ரி யாகோப், பிரதமர் முஹைதீன் யாசினிடமும் தேசியக் கூட்டணி (பிஎன்) உறுப்புக் கட்சிகளின் தலைவர்களிடமும், அரசியல் செய்வதை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்று பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார். ஜனவரி மாதம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து, கோவிட் -19…

15,000 டுரியான் மரங்களை வெட்டி சாய்த்த பஹாங்கின் ‘திமிர்தனம்’

கடந்த ஒன்பது நாட்களாக, ரவுப்பில் சர்ச்சையாக இருந்த 15,000 முசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டி சாய்த்த பஹாங் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை, டுரியான் விவசாயிகள் குழு 'ஆணவம்' என்று வர்ணித்து, கண்டனம் தெரிவித்தது. முசாங் கிங்’கைக் காப்பாற்றுங்கள் கூட்டணியின் (Save Musang King Alliance - சாம்கா)…