எம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அவரது மனைவி ரோஸ்மா மான்சோரின் வழக்கை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுத்தப் பின்னர், காலை மணி 9.40 அளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்த…

யூ.கே.எம். ஏற்பாட்டிலான ‘இந்தியர்கள் இடம்பெயர்வு கருத்தரங்’கிற்குக் கண்டனம்

இந்திய சமூகம் மலாயாவிற்கு இடம்பெயர்ந்தது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தரங்கை ஏற்பாடு செய்த, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (யூ.கே.எம்.) சிறுபான்மையினர் உரிமைகள் நடவடிக்கைக் கட்சி (மீரா) விமர்சித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி, புதன்கிழமை, ‘தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா அல்லது குடியேற்றமா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு…

வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கூடுதல் நேரம் கோருகிறார் ரோஸ்மாவின் வழக்குரைஞர்

  ரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மனு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் தருமாறு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றதிடம் ரோஸ்மாவின் வழக்குரைஞர் கோரியுள்ளார். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து தாங்கள் 600 பக்க ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் தற்காப்புக் குழு வங்கி அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக ரோஸ்மாவின்…

சாபாவின் முதலமைச்சராக ஷாபி தொடரந்து நீடிக்கிறார், நீதிமன்றம் தீர்ப்பு

  இன்று கோட்டா கின்னாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் சாபாவின் முதமைச்சராக தொடர்ந்து இருப்பார். ஷாபி முதலமைச்சராக மே 12 இல் நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து முன்னாள் முதலைமச்சர் மூசா அமான் சாபா யாங் டி-பெர்த்துவா நெகிரி ஜூஹார் மகிருடின் மற்றும் ஷாபிக்கு…

மஸ்லீ: பி40 பிரிவு பிள்ளைகளுக்கு இலவச காலை உணவு கொடுக்க…

கல்வி அமைச்சு பி40 பிரிவு பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து மிக்க காலை உணவை இலவசமாகக் கொடுக்கலாமா என்று ஆராய்வதாக அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஜப்பானுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டுள்ள அமைச்சர், தோக்கியோவில் இடாபாஷி டயிச்சி தொடக்கநிலைப் பள்ளிக்குச் சென்றபோது…

யார் சிஎம், மூசாவா, ஷாபி அப்டாலா? இன்று பிற்பகல் தீர்ப்பு

சாபாவின் சட்டப்பூர்வ முதலமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலா, மூசா அமானா என்பதை கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி மூன்றுக்குத் தீர்மானிக்கும். ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் தாமே சட்டப்பூர்வ முதலமைச்சர் என்றும் அறிவிக்கக் கோரி மூசா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.…

அசிசா சரவாக் பிகேஆர் தேர்தல்களுக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய ஜூலாவுக்குச் சென்றது…

வரும் சனிக்கிழமை சரவாக்கில் பிகேஆர் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அம்மாநிலத்தில் உள்ள ஜூலாவ் சென்றது ஏன் என்று கேட்கிறார் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா. துணைப் பிரதமர் அத்துடன் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் என்ற…

2019 பட்ஜெட் : பிடிபிடிஎன் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது, பெமுடா…

2019 வரவு செலவு திட்டத்தில், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 59.96 பில்லியனிலிருந்து 60.24 பில்லியனாக உயர்த்தியப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு (பெமுடா பிஎஸ்எம்) வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. இருப்பினும், பிடிபிடிஎன்-னுக்குப் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட தொகை மிகவும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, நேரடியாக மக்களின் நிலைப்பாட்டைக்…

எம்பி: மூசாமீது முன்பே வழக்குத் தொடுக்காததேன்? கனி விளக்க வேண்டும்

அப்துல் கனி பட்டேல் தாம் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது சாபா முன்னாள் முதல்வர் மூசா அமான்மீது ஏன் வழக்குத் தொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார் என பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார். கெப்போங் எம்பியான லிம், சாபாவில் பிறந்தவரான கனி மூசாவுக்கு…

மலேசிய வணிகக் கட்டுப்பாடுகளைப் புத்ராஜெயா அகற்றும்

மலேசியாவில் வர்த்தகம் செய்வதற்கான அனைத்து தடைகளையும் புத்ராஜெயா அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், மலேசியா வர்த்தக-நட்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். தோக்கியோவில், சுமார் 600 தொழில்முனைவர்கள் முன்னிலையில் பேசிய அவர், தனியார் துறைகள் தடை இல்லாமல்…

பெந்தோங் ‘கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் முதலாளி கைது செய்யப்பட்டார்

  பகாங், பெந்தோங்கில் 48 இந்தியக் குடிமக்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தமது தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர் என்று போலீஸ் புகார் செய்ய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தகவலை போலீஸ் வழங்கியதாக தொழிலாளர் இலாகா ஓர் அறிக்கையில்…

செய்தியாளர் கசோகியைக் கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும், சவூதி…

  மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர் ஜமால் கசோகியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சவூதி அரேபியா ஐக்கிய நாட்டு மன்றத்திடம் (ஐநா) திங்கட்கிழமை கூறியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் பற்றிய ஐநாவின் முதல் ஆய்வுக் கூட்டத்தில்…

தீபாவளி வாழ்த்துகள்

தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும்  மலேசியாஇன்று  குடும்பத்தினரின் இனியத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்..... மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்!

RM263 மில்லியன் இலஞ்சம் தொடர்பான 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா…

சபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்துள்ளது. 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பினாமிகள் வழியாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் மூசா அச்செயல்களில் ஈடுபட்டதாகக்…

இந்து அரசுப் பணியாளர்களுக்கு தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு இவ்வாண்டு தொடங்கி தீபாவளிக்கான ஒரு நாள் பொது விடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுப்பும் வழங்கப்படுகிறது. இது பதிவு செய்யப்படாத விடுப்பாகும். இந்த நற்செய்தி பொதுச் சேவை தலைமைச் செயலாளர் பொர்ஹான் டோலா விடுத்துள்ள அதிகாரத்துவ சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பதிவு செய்யப்படாத அந்த விடுப்பை…

கட்சியைக் கலைக்க வேண்டும், 16 அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையை நீதிமன்றம்…

குறிப்பிட்ட காலவரைக்குள் கிளை மற்றும் தொகுதி தேர்தல்களை நடத்தத் தவறியதால், அம்னோவைக் கலைக்க வேண்டும் எனும் 16 அம்னோ உறுப்பினர்களின் முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. டாக்டர் படாரியா சாகமித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது. 14-வது…

பி.எஸ்.எம். : B40 காப்புறுதி திட்டம், ஏழைகளுக்கு முழுமையானப் பயனைக்…

2019 பட்ஜெட் | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், 2019 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், B40 குழுவினர் பயனடையும் வகையில், கடுமையான வியாதிகளுக்கு RM8,000 வரையில் இலவச மருத்துவத்திற்கான காப்புறுதி திட்டத்தை வழங்கும், புதிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும்,…

மூசா அமானுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான் ஊழல் குற்றங்களுக்காக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாமே வெட்டுமரக் குத்தகை கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த ஊழல்கள். அவர்மீது 35 ஊழல் குற்றங்கள் சுமத்தப்படும் என்று அரசாங்கத்துக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது. இந்த ஊழலில் மொத்தம் யுஎஸ்$63…

பிரதமர் அரசாங்க அதிகாரியா, இல்லையா? கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்யும்

பிரதமர் என்பவர் அரசாங்க அதிகாரியா இல்லையா என்ற விவகாரத்துக்குக் கூட்டரசு நீதிமன்றம் முடிவு காணும். அவ்விவகாரத்தைக் கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல டமன்சாரா எம்பி டோனி புவாவுக்குக் கூட்டரசு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கப் பணியில் இருந்தபோது…

’நன்கொடை’ பொய்தான் பிஎன் தோல்விக்குக் காரணம்: நஜிப்பைச் சாடுகிறது அம்னோ…

தம் கணக்கிலிருந்த பணம் சவூதி அரசாங்கத்திடமிருந்து வந்த நன்கொடை என்று நெடுகிலும் கூறி வந்த நஜிப், இப்போது அது எங்கிருந்து வந்தது என்பது தமக்குத் தெரியாது என்றுரைத்திருப்பதன்வழி மலேசியர்களை, அதிலும் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை ஏமாளிகளாக்கி விட்டார்”, என்று மிங்குவான் மலேசியா ஏடு சாடியுள்ளது. நஜிப், அல் ஜசீராவு…

மசீச-வின் புதியத் தலைவர், வீ கா சியோங்

மசீச தேர்தல் | ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர், வீ கா சியோங், மசீச-வின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மசீச-வைப் பிரதிநிதித்து, நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் ஒரே தலைவர் வீ கா சியோங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு தவணையாக, மசீச-வின் துணைத் தலைவராக இருந்த அவர், மும்முணைப் போட்டியில் வென்று,…

‘முந்தைய அரசாங்கத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ பேராக் சுல்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டல்

“முந்தைய அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யும் தலைவர்களைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்,” என பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ஹராப்பான் அரசாங்கத்திற்கு இன்று நினைவுறுத்தினார். தனிப்பட்ட இலாபத்திற்காகப் பதவியைப் பயன்படுத்தும் தலைவர்களை அம்பலப்படுத்த, குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வம் குவிக்கும் அல்லது வர்த்தகர்களுக்கு ஒரு…

பிடிபிடிஎன் : கடனைத் திருப்பிச் செலுத்த சிறந்த வழிகாண, கடனாளிகளுடன்…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த, டேவான் நெகாரா செனட்டர் யூஸ்மடி யூசுஃப், இந்தச் சிக்களுக்குச் சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் கடனாளிகளுடன் கலந்துபேச வேண்டும் என்றார். கடன் வாங்கியவர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அரசாங்கம் செயல்படுகிறது என்று அவர் விவரித்தார். “அரசாங்கம்…