இந்தியாவில் ஜாகிர் நாய்க்குக்கு எதிராக கைது வாரண்ட் பெற முயற்சி

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் இந்தியாவிடமே ஒப்புவிக்கப்படலாம் என்று த இந்து கூறியுள்ளது. இந்தியாவின் சட்ட அமலாக்க இயக்ககம்(இ.டி), மும்பாய் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் பணச் சலவைச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கு தொடர்பாக ஜாகிர் நாய்க்குக்கும் வேறு சிலருக்கும் எதிராக பிடி ஆணை…

கரடிக் குட்டி வைத்திருந்த பாடகர் கைது

வனவிலங்கு மற்றும் தீவகற்ப மலேசியா தேசிய பூங்கா துறை(பெர்ஹிலிடான்) கோலாலும்பூர், டேசா பாண்டானில் ஒரு கொண்டோமினியத்தில் சூரியக் கரடிக் குட்டி ஒன்றை வைத்திருந்த பாடகி ஒருவரைக் கைது செய்தது. பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து பெர்ஹிலிடான் அதிகாரிகள் அந்த 27-வயது பெண்ணை அவரது வீட்டில் கைது செய்தனர். விசாரணைக்காக…

சுக்ரி: பணிவிலகல் என் சொந்த முடிவு, யாரும் கட்டாயப்படுத்தவில்லை

முதன்முறையாக, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல், ஒப்பந்த காலம் முடியும் முன்னரே பணிவிலகியது ஏன் என்று விளக்கமளித்துள்ளர். பணி விலகியது சுயமாக எடுத்த முடிவு என்றாரவர். “என் ஒப்பந்த காலத்தைக் குறைத்துக்கொண்டது நானாக செய்த முடிவு. ஆனால், முக நூல் போன்ற சமூக…

நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டுகிறார் அம்னோ உதவித் தலைவர்

அம்னோ உதவித் தலைவரும் பெரா எம்பியுமான இஸ்மாயில் சப்ரி யாக்கூப், ஹரி ராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் முக்கிய பதவி நியமனங்கள் மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவிலிருந்து விலகப் போவதாகக் கூறினார். லத்திபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமிப்பதற்குமுன் அக்குழுவுடன் ஆலோசனை கலக்காதது புத்ரா ஜெயா அக்குழுவை வெறும்…

‘தூற்றினாலும் போற்றினாலும் என் கடமையைச் செய்வேன்’ -லத்திபா சூளுரை

லத்திபா கோயா, எம்ஏசிசி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதைப் பலர் குறை சொன்னாலும் அவரைப் பொறுத்தவரை மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறார். “ஹரி ராயாவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட என் நியமனம் குறித்து பலர் குறை கூறியுள்ளனர். கேள்வி கேட்கவும், குறை சொல்லவும் கருத்துக் கூறவும் எல்லாருக்கும் உரிமை…

அண்மைய நியமனங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற விரும்புகிறது நாடாளுமன்றக்…

பொது நியமனங்கள்மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக்குழு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதும். அண்மையில் செய்யப்பட்ட மூன்று முக்கிய நியமனங்கள் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அத்தேர்வுக் குழுவின் தலைவர் வில்லியம் லியோங் கூறினார். அப்துல் ஹமிட் படோர் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாகவும்…

உங்கள் கருத்து: ‘நன்றி சுக்ரி. இனி, லத்திபா சொன்னபடி செய்கிறாரா,…

மேற்கொண்ட பணி முடிந்து விட்டது- எம்ஏசிசியிலிருந்து விலகியபோது சுக்ரி கூறியது பெர்ட்டான்: எம்ஏசிசி-இன் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல் ஓராண்டு என்னும் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். ஆனால், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே அவரது திடீர் பணிவிலகல் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ண…

‘லத்திபா நியமனத்தில் நாடாளுமன்றக் குழுவுடன் கலந்தாலோசிக்காதது நியாயமல்ல’

மலேசிய வழக்குரைஞர் மன்றம், லத்திபா கோயா எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்யப்பட்ட விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளது. மனித உரிமைகளுக்காக போராடுவதில் பெயர்பெற்றுள்ள அவ்வழக்குரைஞருக்கு சட்ட அமலாக்கத் துறையில் போதிய அனுபவம் இல்லை, அவர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் ஆவார். இந்நிலையில் அவரை அப்பதவிக்கு நியமித்தது சரிதானா என்றும்…

நான்கு ஆவாஸ் கேமராக்கள்தான் செயல்படுகின்றனவா? மறுக்கிறது ஆர்டிடி

ஒரு செய்தித்தளத்தில் நெடுஞ்சாலைகளில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஆவாஸ் கேமராக்களில் நான்கு மட்டுமே வேலை செய்வதாக வெளிவந்த தகவலைச் சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) மறுக்கிறது. ஆர்டிடி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 41 ஆவாஸ் கேமராக்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் எல்லாமே வேலை செய்வதாகவும் கூறிற்று. அந்த…

லத்திபா நியமனத்தில் ஏதேச்சதிகாரப் போக்கு, இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல- பெர்சே

தேர்தல் சீரமைப்புக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தன்மூப்பாக லத்திபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமித்த செயலைக் குறைகூறியுள்ளது. “அந்நியமனம் நிர்வாகக் கட்டமைப்பில் பலவீனம் நிலவுவதையும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காட்டுவதாக பெர்சே நினைக்கிறது. “....நடப்புச் சட்டங்கள் யாரை நியமிப்பது என்று பேரரசருக்கு ஆலோசனை…

மசீச தலைவர் : லத்தீபா எம்ஏசிசி தலைவராக நியமனம், நான்…

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கூட்டணி கட்சியின் முன்னாள் உறுப்பினர் லத்திபா கோயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டது, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்குச் சிக்கலாக அமையலாம் என மசீச தேசியத் தலைவர் வீ கா சியோங் கவலை தெரிவித்துள்ளார். “பொதுவாகவே, லத்திப்பா கோயா…

எம்ஏசிசி தலைவர் பணி விலகல் ; லத்திபா கோயா அதன்…

லத்திபா கோயா, மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவராகிறார். முகம்மட் சுக்ரி அப்துல் பணி விலகியதை அடுத்து லத்திபா கோயா எம்ஏசிசி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர்துறை அலுவலகம் (பிஎம்ஓ) இன்று பிற்பகல் அறிவித்தது. சுக்ரியின் ஒப்பந்தக் காலம் 2020, மே 17-இல் முடிவுக்கு வருகிறது. ஆனால், அவர் அதற்கு…

மலேசியா அமெரிக்காவிடமிருந்து விமானியில்லாத விமானங்களை வாங்குகிறது

அமெரிக்கா, இராணுவத் தரத்திலான 12 ட்ரோன்களை, விமானியில்லா விமானங்களை, மலேசியாவுக்கு விற்கவுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரிம80 மில்லியன் என ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது. ஆயுதம் கொண்டிராத இந்த வகை ட்ரோன் விமானம் ஸ்கேன்ஈகள் என்று அழைக்கப்படுகின்றது. போயிங்கின் துணை நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. இது 20 மணி…

‘ஊடக நிறுவனம் கட்சியில் பிரிவினை ஏற்படுத்த முயல்கிறது’- பாஸ் தலைவர்…

பாஸ் தலைவர் ஒருவர், இம்மாத இறுதியில் கட்சியின் ஆண்டுக் கூட்டம், முக்தாமார், நடைபெறவுள்ள வேளையில் ஒரு ஊடக நிறுவனம் கட்சியில் பிளவு உண்டுபண்ண முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் சமட் அந்நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அதில் வெளிவரும் செய்திகள் பாஸுக்குள் பல பிரிவுகள்…

வேலை பாரபட்சம் : மலாய், சீன என்.ஜி.ஓ.-க்களின் மாறுபட்ட பார்வை

வேலை இடங்களில், மெண்டரின் மொழி தெரியாத வேலையாட்கள் தொடர்பான குற்றச்சாட்டில், மலாய் மற்றும் சீன வணிக சமூகங்கள் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளன. மலாய் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (எம்.டி.இ.எம்.) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் யாஜித் ஒத்மான் கூறுகையில், இந்தப் பாகுபாடு இயல்பாக நடந்துவருவது உண்மை, அது தொடர்பில்…

லோரோங் டிஏஆர்-இல் சட்டவிரோதமாக செயல்பட்ட 400 ஸ்டால் கடைகள் அகற்றப்பட்டன

கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்), லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரமலான் பஜாரில் இருந்த 400 ஸ்டால்களையும் அகற்றியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் அக்கடைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கை விடுத்த பின்னரும் அவை அங்கேயே இருந்ததாக டிபிகேஎல் இன்று ஓர் அறிக்கையில் கூறியது. அதன்…

ரிம253 கடனைத் திரும்பப் பெற ஷரிசாட்டின் கணவர், பிள்ளைகள்மீது புத்ரா…

புத்ரா ஜெயா, தேசிய பீட்லோட் மைய(என்எப்சி)த் திட்டத்துக்கு வழங்கிய ரிம253 மில்லியனைத் திரும்பப் பெற அம்னோ முன்னாள் மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவர்மீதும் அவரின் மூன்று பிள்ளைகள்மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது. என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், அவரின் பிள்ளைகள் என்எப்சி முன்னாள் தலைமை செயல்…

பங்களாவைக் கைப்பற்றியது முறையல்ல: அதிகாரிகளைச் சாடினார் ஜோ லோவின் நண்பர்

1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள லோ தேக் ஜோவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், அதிகாரிகள் பினாங்கு தஞ்சோங் பூங்காவில் உள்ள ஜோ லோ குடும்பத்தாரின் பங்களா வீட்டைக் கைப்பற்றியதைக் குறை கூறினார். Citizens Awareness Chant Group எனப்படும் என்ஜிஓ-வை வைத்துள்ள யான் லீ, 1எம்டிபி விவகாரத்துக்கும் அந்த பங்களாவுக்கும்…

கருத்துச் சொல்லும் உரிமை சிறாருக்கும் உண்டு

கருத்துத் தெரிவிக்கவும் பொதுப் பேரணிகளில் கலந்துகொள்ளவும் சிறாருக்கும் உரிமை உண்டு என்பதை அனவரும் மதிக்க வேண்டும். பினாங்கு மாச்சாங் புபோக் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் இதை வலியுறுத்தினார். பினாங்குத் தீவு மாநகராட்சி மன்ற (எம்பிபிபி) கவுன்சிலர் வினோதினி சந்திரஹாசன் பருவ நிலை மாற்றத்துக்கு எதிர்ப்புத்…

உங்கள் கருத்து: வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருக்கும் நிலையை விட்டொழிப்போம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவர பிரதமர் உதவ வேண்டும்- மைக்கி பெயரிலி 770241447347646: மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் கூட்டமைப்பு (மைக்கி) வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அவர்கள் கூறுவதுபோல் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுமானால் அதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.…

அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு இனவாதத்தைத் தூண்டுவதற்காக அல்ல – நிக் அப்டு

அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான ஒத்துழைப்பு நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்று பாஸ் மத்திய செயலவைக் குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார். “இஸ்லாம் இனவாதத்தையும் ஒரு குழு மற்றொன்றைவிட மேலானது என்று உயர்த்திச் சொல்வதையும் நிராகரிக்கிறது. “அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு ஓர் அருட்கொடையாகும். இனவாதத்தைத்…

ஜோ லோ குறித்து வதந்திகள் பரப்பாதீர், அது அவரைப் பிடிப்பதற்கான…

சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவுள்ள தொழில் அதிபர் லோ தய்க் ஜோ அல்லது ஜோ லோ கைது செய்யப்பட்டார் என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறூத்த வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். தவறான தகவல்கள் அவரைப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைவான நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றாரவர். 1எம்டிபி…