உலகின் ஏனைய நாடுகளில் ஒரு லிட்டர் RON95 ரக பெட்ரோல் விலை ரிம10.50 வரை விற்கப்படும் வேளையில், மலேசியாவில் அதன் விலை உலகிலேயே மிகக் குறைவான விலைகளில் ஒன்றாக உள்ளது என்று பிரதமர் கூறுகிறார். அண்டை நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 400 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக…
சிஐஎ-க்கு அனுப்பப்பட்ட கடிதம்: கடும் நடவடிக்கை வேண்டும், பேட்ரியட் வலியுறுத்துகிறது
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பிரதமர் இலாகா சிஐஎ-க்கு அனுப்பிய கடிதம் ஒரு நம்பிக்கைத் துரோகமான மற்றும் இராசத் துரோகமான செயல் என்று பெர்சத்துவான் பேட்ரியட் கெபங்சாஆன் (பேட்ரியட்) கூறுகிறது. இச்செயலை இன்றைய அரசாங்கம் உடனடியாக விசாரித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க…
விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஒத்துழைக்க இராமசாமி தயார்
பினாங்கு மாநில 2-வது துணை முதல் அமைச்சர் பி.இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதில் விசாரணை மேற்கொள்ளும் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவுள்ளதாக இன்று உறுதியளித்தார். இராமசாமி மீதான விசாரணை அறிக்கையைத் திறந்து விட்டதாக போலிஸ் தலைவர் மொஹமட் ஃபுஸி ஹருன் கூறியதைத் தொடர்ந்து, அவர்…
இங்-கின் மறைவு, ஹராப்பானுக்குப் பேரிழப்பு
பலாகோங் சட்டமன்ற உறுப்பினர் ஏடிஇங் தியான் சீ, இன்று அதிகாலை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரின் மறைவு பக்காத்தான் ஹராப்பானுக்கு மாபெரும் இழப்பு. பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், டிஏபி நடவடிக்கை பிரிவில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவரின் பிரிவு, சிலாங்கூர் மக்கள், குறிப்பாக பலாகோங் பகுதி…
கிட் சியாங்: நஜிப் மலேசிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர்
தம்முடைய அதிகாரத்திற்குட்பட்ட ஓர் இலாகா 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு வெளிநாட்டின் தலையீட்டை கோரி இருப்பது தமக்குத் தெரியாது என்று கூறும் நஜிப் அப்துல் ரசாக் "மலேசிய வரலாற்றில் மிக மோசமான பிரதம மந்திரி" ஆவார் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.…
கேமரன் மலை எம்பி சிவராஜாவின் மனு ஆகஸ்ட் 16 இல்…
டிஎபி எம். மனோகரனின் தேர்தல் மனுவை தள்ளுபடி செய்யக் கோரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜாவின் மனுவை ஆகஸ்ட் 16 இல் செவிமடுக்க தேர்தல் நீதிமன்றம் இன்று கோலாலம்பூரில் முடிவு செய்தது. இத்தேதியை நீதிபதி அஸிஸா நவாவி நிர்ணயித்தார். கேமரன் மலை தேர்தல் முடிவை…
தன்னியக்க வாக்காளர் பதிவு முறை, வாக்களிக்கும் வயது குறைப்பு பற்றி…
தேர்தல் ஆணையம் (இசி) தன்னியக்க வாக்காளர் பதிவுமுறை அமலாக்கம் குறித்தும் வாக்களிப்பு வயதைக் குறைப்பது பற்றியும் ஆராய்ந்து வருகிறது. இதன் தொடர்பில் நடப்பில் உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் பதிவுமுறையில் செய்யப்படவுள்ள மாற்றங்களை விளக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர்துறை அமைச்சர் லியு வூய் கியோங் கூறினார். “என்னென்ன …
பழைய சட்டங்களும் பிரச்னைக்குரிய அதிகாரிகளும் 100-நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்குத் தடைக்கற்கள்-…
பக்கத்தான் ஹரப்பான் அதன் வாக்குறுதிகளை 100 நாள்களில் நிறைவேற்ற முடியாமலிருப்பதற்குக் காரணம் பிரச்னைக்குரிய அதிகாரிகளும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களும்தான் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “நாங்கள் (தேர்தல் வாக்குறுதிகளை) நிறைவேற்ற முயன்ற வேளையில் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது”, என்றவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது …
ஜோ லோ கைதா? தெரியாது என்கிறார் மகாதிர், உண்மையா என்று…
மலேசிய கோடீஸ்வரர் ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கேட்டதற்கு அவர் கைது செய்யப்பட்டது தமக்குத் தெரியாது என்றார். போலீஸ் படைத் தலைவர் பூஸி ஹருனும் அது பற்றி அறிந்திருக்கவில்லை. “எனக்குத் தெரியாது. தகவல் சொன்னதற்கு நன்றி. அவர் …
கைதான குடும்பத்தலைவி மலேசியாவின் முதலாவது பெண் ஐஎஸ் தலைவராம்
14வது பொதுத் தேர்தலின்போது பூச்சோங்கில் வாக்களிப்பு மையம் ஒன்றைத் தாக்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்ட சிலாங்கூர் குடும்பத் தலைவி நாட்டின் முதலாவது பெண் ஐஎஸ் தலைவர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். நேற்று உத்துசான் மலேசியாவிடம் புக்கிட் அமான் சிறப்புப் போலீஸ் பிரிவின் பயங்கரவாத-எதிர்ப்பு உதவி இயக்குனர் ஆயுப் கான் …
சுங்கத்துறை: எஸ்எஸ்டி 16விழுக்காடு அல்ல, பெரும்பாலான பொருள்களுக்கு வரி இல்லை
பயனீட்டாளர்கள் 16விழுக்காடு விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) செலுத்த வேண்டி இருக்காது என புத்ரா ஜெயா கூறி வருவதை சுங்கத்துறை தலைமை இயக்குனர் டி.சுப்ரமணியமும் வழி மொழிந்துள்ளார். எஸ்எஸ்டியின்கீழ் நான்கு வகை வரிகள் உள்ளன என்றும் நான்கும் ஒருசேர விதிக்கப்படாது என்று சுப்ரமணியம் கூறினார். “பெரும்பாலான பொருள்களுக்குச் சுழியம் …
நாடாளுமன்றத்தில் இல்லாததற்காக ஹரப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் இஙா கண்டித்தார்
நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது அவையில் இல்லாததற்காக மக்களைத் துணைத் தலைவர் இஙா கோர் மிங் ஹரப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் கண்டித்தார். அவர்கள் அவையில் இல்லாதது முறையற்றதாகும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார். பெருமளவில் ஹரப்பான் அமைச்சர்கள் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நேற்று மாலை அமைச்சரவையின்…
ஏஜி அலுவலகம் பெங் ஹோக் மரணம் குறித்து மேலும் விசாரணை…
டிஎபி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் தியோ பெங் ஹோக் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜி) போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருணை கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகவலை புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் தியோ குடும்பத்தின் வழக்குரைஞருமான…
குறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்- முஜாஹிட்
இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா, குறைந்த வயது திருமணங்களைக் கண்டிக்கிறார். அது சிறார் உரிமைகளை மறுக்கிறது, தேச நிர்மாணிப்பையும் சீரழிக்கிறது. மலேசியாகினியிடம் பேசிய முஜாஹிட் சிறார் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்றார். சில சட்டங்கள் அதற்கு இடமளிப்பதாகக் கூறிய அவர், அவை மறு ஆய்வு செய்யப்பட …
தையல் பயிற்சி வகுப்புகள்
கடந்த பொதுத் தேர்தலில் கோல லங்காட் மக்களுக்கு வாக்களித்தபடி ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வண்ணம், ஏழை குடும்ப மாதர்களுக்கு சில கைத்தொழில் பயிற்சிகளை வழங்கும் பணிகளை எண் 54-56 ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா, தெலுக் பங்லீமா காராங்கில் செயல்பட்டுவரும்…
ரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை தொடர்கிறது
லெபனானிய நகை நிறுவனம் ஒன்றிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு அனுப்பப்பட்ட நகைகள் குறித்து சுங்கத்துறையில் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக எனச் சுங்கத்துறை இன்னும் விசாரணை செய்து கொண்டுதான் இருக்கிறது. இன்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சுங்கத் தலைமை இயக்குநர் டி.சுப்ரமணியத்திடம் செய்தியாளர்கள் நகை …
ஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட எந்தப் பதவிக்கும் போட்டியிடுவதற்கு…
பிகேஆர் மகளிர் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறும் ஜூரைடா கமருடின், கட்சியில் எந்தப் பதவிக்கும், அது அன்வார் இப்ராகிம் போட்டியிடும் தலைவர் பதவியாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும், தடை விதிக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே அறிக்கையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் …
கோடிக்கணக்கில் ஊழலா? அலசல் ஆரம்பம்!
அண்மையில் வெளியான ஒரு செய்தி இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பரவலான வகையில் கையாடல் செய்யப்பட்டதாக கூறுகிறது. இது முன்னாள் பிரதமர் துறையின் கீழ் பெமாண்டு என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் உருமாற்ற செயல்திட்ட பிரிவில் பணியாற்றிய இரவீந்திரன் தேவகுணம் அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில்…
ஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்: வேதமூர்த்தி நம்பிக்கை
மலேசிய ஹிந்த்ராப் சங்க(இந்துராப்)த் தலைவர் பி.வேதமூர்த்தி, முன்பு பிஎன் அரசாங்கத்தில் செய்ததைவிட பக்கத்தான் ஹரப்பான் அரசில் நற்பணி ஆற்றிட முடியும் என நம்புகிறார். முன்பு அரசாங்கத்தில் இருந்ததைவிட இப்போது இருப்பது திருப்தி அளிப்பதாக அவர் கூறினார். “கொள்கை காரணமாக முன்பு நான் விலகினேன். ஏனென்றால் (அப்போதைய பிரதமர்) நஜிப் …
கேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச் செய்வது நல்லதல்ல
பொருளாதாரக் கொள்கைகளை முடிவு செய்வதில் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என கைரி ஜமாலுடின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். ஜிஎஸ்டியை இரத்துச் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரெம்பாவ் எம்பி, இதுபோன்ற விவகாரங்களை அறிவார்ந்த முறையில் அணுக வேண்டும் என்றார். “இது ஒரு மிகப் பெரிய அரசியல் விவகாரம் என்பதை …
மக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர் உத்தரவாதம்
மக்களவையில் வாதங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “நாளை (விவாதங்கள் தொடங்கும்போது) அதைக் காண்போம். “வாதங்களைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதைச் சொல்லலாம்”, என இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். நாளை என்னென்ன சட்டவரைவுகள் …
காடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டில் ஹரப்பான் பிரச்னைகளை…
மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், நாடாளுமன்ற மேலவையில் , பிஎன்னுடன் ஒப்பிடும்போது குறைவான இடத்தையே பெற்றுள்ள பக்கத்தான் ஹரப்பான் பிரச்னைகளை எதிர்நோக்கலாம் என்று நினைக்கிறார். “டேவான் நெகரா அம்னோ/பிஎன் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஹரப்பானுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறினார். இன்றைய நிலையில் 70-பேர் அடங்கிய மேலவையில் …
நஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்
விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) அமல்படுத்தப்படும்போது பொருள் விலைகளும் சேவை விலைகளும் கிடுகிடுவென உயரும் என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “எஸ்எஸ்டி அமல்படுத்தப்படும்போது பொருள் மற்றும் சேவை விலைகளும் முறையே 10விழுக்காடும் 6விழுக்காடும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவலைப்படுகிறார்கள். “விலைகள் உயருமானால் வாழ்க்கைச் செலவினம் உயரும். அதன் …
சின் தோங், வேதா மற்றும் ராஜா பாரின் செனட்டராகப் பதவி…
நாளை காலை எட்டு செனட்டர்கள் நாடாளுமன்றத்தில் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர். அவர்களில் டிஎபியின் லியூ சின் தோங், அமனாவின் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் மற்றும் ஹிண்ட்ராப்பின் பி. வேதமூர்த்தியும் அடங்குவர். மலேசியாகினி பார்த்துள்ள நாடாளுமன்ற அழைப்பிதழ்கள்படி, இம்மூவரும் பெடரல் அரசாங்கத்தால் தேர்வு…
























