நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
மகாதிர் முழு ஐந்தாண்டு தவணைக்கும் பிரதமராக இருக்க வேண்டும், ஹாடி…
பிரதமர் மகாதிர் முகமட் தொடர்ந்து ஐந்து ஆண்டுகால தவணைக்கும் பிரதமராக இருந்து நாட்டை நிருவாகம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று கூறினார். சில தரப்பினர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உட்பட, பிரதமர் பதவியை அடைவதற்காக…
பிடி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கலின் போது, பிஎஸ்எம் #1050…
பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட RM1050 குறைந்தபட்ச சம்பளத்தை எதிர்த்து, இன்று காலை, போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை, பதாகைகளுடனும் சுட்டறிக்கைகளுடனும் அங்குக் கூடியிருந்த அவர்கள், RM1050…
பிடி இடைத்தேர்தல் : ஒருவர் தகுதி இழப்பு, எழுவர் போட்டி
அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவிடும் வகையில், டான்யால் பாலகோபால் அப்துல்லா போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு, போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக மண்டபத்தில் அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பானைச்…
இசா சமாட்: பிடியை அம்னோ வேண்டாம் என்றது, நான் எடுத்துக்…
முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாரான இசா சமட், அம்னோ போர்ட் டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணித்ததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தான் போட்டியிடுவதாகக் கூறினார். “இது என் சொந்த ஊர். இந்தத் தொகுதி காலியாக உள்ளது. அம்னோ போட்டியிட மறுக்கிறது. “அதனால் போர்ட் டிக்சன்காரனான நான் வாய்ப்பைப்…
ஊழல் தலைவர்களே கெளரவமாக வெளியேறுவீர்: அம்னோ இளைஞர் தலைவர் முழக்கம்
அம்னோ ஏஜிஎம் அம்னோ இளைஞர் தலைவர் அஷிராப் வாஜ்டி டுசுக்கி, ஊழல் தொடர்புள்ள தலைவர்கள் கெளரவமாகக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். “எல்லா நிலைகளிலுமுள்ள அம்னோ தலைவர்களுக்கு அம்னோ இளைஞர்கள் ஒன்றை நினைவுறுத்த விழைகின்றனர்- ஊழலில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் கெளரவமாக விலகிக் கொள்ள வேண்டும். “கட்சியைக் கவசமாகப் …
சைபூலுக்கு எதிராகக் காட்டுக்கூச்சல்
போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், முகம்மட் சைபூல் புகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டபோது மட்டும் கூடியிருந்த பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டனர். அவரின் பெயரைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏளனம்…
முன்கூட்டிக் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு எஸ்எஸ்டி வசூலிக்கும் டெல்கோ-கள் மீது…
மலேசியர்களுக்கு விற்கப்படும் முன்கூட்டி கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு விற்பனை, சேவை கிடையாது. இந்த வரி-விலக்கை அமல்படுத்த தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வரி-விலக்கு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். “தொலைத் தொடர்பு நிறுவனங்கள்…
பிடி இடைத் தேர்தல்: எண்மர் வேட்பு மனு தாக்கல்
போர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்கு வேட்பாளர் நியமனம் காலை மணி 10க்கு முடிவுக்கு வந்தது. மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 10 மணிக்கு தேர்தல் அதிகாரி கைரி மாமோர் வேட்பாளர் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்த எண்மர்: பிகேஆர் தலைவராக…
‘1எம்டிபி ஊழல்’ நூலாசிரியர், நாளை மலாயாப் பல்கலைக்கழகத்தில்
‘1எம்டிபி- தி ஸ்கேண்டல் தாட் புரோட் டாவுன் எ கவர்மெண்ட்’ (1எம்டிபி – ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த ஊழல்) நூலின் ஆசிரியர், அப்புத்தகம் பற்றி விவாதிக்க, நாளை மலாயாப் பல்கலைக்கழகம் வரவுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28-ல் வெளியீடு கண்ட, முன்னாள் ‘கினிபிஸ்’ எழுத்தாளரும், மலேசியாகினி கட்டுரையாளருமான பி குணசேகரம் எழுதிய…
சி4 : புதிய மலேசியாவில், மிசேல் இயோ ‘மலிவான சந்தர்ப்பவாதி’
ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், ஈப்போவில் பிறந்த, புகழ்பெற்ற நடிகரான மிசேல் இயோவை "மலிவான சந்தர்ப்பவாதி" என விவரித்துள்ளார். ‘இவான்ஹோ பிக்சர்ஸ்’ –உடன் இணைந்து, ‘தி பில்லியன் டோலர் வேல்’ (பில்லியன் டாலர் திமிங்கிலம்) எனும் - 1எம்டிபி ஊழல் மற்றும் அதன் “சூத்திரதாரி” ஜோ லோ…
கர்பால் சிங் தேசநிந்தனை வழக்கு மீதான நீதிமன்ற விசாரணை பற்றிய…
தமது தந்தை காலஞ்சென்ற கர்பால் சிங் மீதான 2016 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற தேசநிந்தனை வழக்கு பற்றிய நீதிமன்ற விசாரணையின் விளைவு என்ன என்று கேட்டு வழக்குரைஞர் சங்கீதா கவுர் டியோ தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் மற்றும் சட்ட அமைச்சர் விகே லியு ஆகியோருக்கு…
1எம்டிபி : போலிஸ் நஜிப்பை அழைக்கும், அமர் சிங்
அரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்), 1எம்டிபி வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கை அழைக்கவுள்ளது. புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், அமீர் சிங் இஷார் சிங், அவ்வழக்கு விசாரணையை நிறைவுசெய்ய, நஜிப்பிடமிருந்து சில தகவல்கள் பிடிஆர்எம்-க்குத் தேவைபடுவதாகக் கூறினார். இவ்வழக்கு விசாரணையின்போது,…
ஊழல் குற்றவாளிகளுக்குச் ‘கசையடி’ தண்டனை, எம்.ஏ.சி.சி. ஆலோசனை
ஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார். கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு…
அமர் சிங்: ரிம160 மில்லியன் கைப்பற்றப்பட்டது என்பதை நஜிப் நிருபிக்கத்…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பெவிலியன் ரெசிடெண்ட் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை போலீஸ் அறிவித்ததைவிட கூடுதலானது என்பதை நஜிப் நிருபிக்கத் தவறி விட்டார் என்று வாணிகக் குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் அமர் சிங் கூறுகிறார். கடந்த மே மாதத்தில், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட உண்மையான தொகை ரிம160…
1எம்டிபி விவகாரம்: அம்னோ, மஇகா தொகுதித் தலைவர்களை போலீஸ் விசாரிக்கிறது
அம்னோ மற்றும் மஇகா தொகுதித் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிதி 1எம்டிபியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, அவர்களில் 10 பேர் பணச் சலவை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணைக்காக கோலாலம்பூருக்கு அழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த விசாரணை இன்று…
இளைஞர்களும் பெண்களும் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும், வேதமூர்த்தி
மலேசிய இந்தியர்கள் உள்நாட்டில் கிடைக்கின்ற வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பன்னாட்டு வர்த்தகச் சந்தையிலும் ஊடுறுவ வேண்டும். குறிப்பாக இளந்தொழில் முனைவர்கள் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமை-சமூக நல அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். கோலாலம்பூர், ஆசிய-பசிபிக் தொழில்நுட்ப-புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில்…
அன்வார் : அம்னோவுடன் ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையிலான ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது என்று பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "இதுபோன்ற முன்மொழிவு எதுவும் இல்லை, எனவே இதுபற்றி விவாதிப்பது பொருந்தாது என்று நான் நினைக்கிறேன். "இது பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை," என்று அன்வார்…
போலிஸ் அருள் கந்தாவை 5 மணி நேரம் விசாரித்தது
எம்டிபி-யின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, அருள் கந்தா கந்தசாமியை, 1எம்டிபி தொடர்பான சாட்சியத்தைப் பெற, போலிசார் நேற்று அவரை அழைத்ததாக நம்பப்படுகிறது. 1எம்டிபி விசாரணையில் நெருங்கிய தொடர்புடைய ஒருவர், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ‘செராமா’-க்களில் பேசிய தனிநபர்களில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிலரில்…
ஆர்ஓஎஸ் ஆலோசனையின்பேரில் நெகிரி செம்பிலான் பெர்சத்து கலைக்கப்பட்டது
பல்வேறு காரணங்களுக்காக நெகிரி செம்பிலான் பெர்சத்து கட்சி கலைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். அக்கடுமையான நடவடிக்கை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்தின் ஆலோசனையின்பேரில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “அங்கு பல பிரச்னைகள். ஆர்ஓஎஸ் (நெகிரி செம்பிலான் கிளையை) கலைத்துவிட்டு மாநிலத்துக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தெரிவு செய்யுமாறு ஆலோசனை…
மகாதிர்: அம்னோவுக்கு ‘எதிர்காலம் இல்லை’, அழிவு உறுதி
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார். “இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள். “அதனால்தான்…
அம்னோ ‘ஏதாவதொரு’ ஹரப்பான் கட்சியுடன் சேர்ந்து ‘ஒற்றுமை அரசாங்கம்’ அமைக்க…
மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குத் திரும்ப எண்ணம் கொண்டிருக்கும் அம்னோ, அதற்காக பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளில் “ஏதாவது ஒன்று”டன் சேர்ந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைக்கத் தயாராக உள்ளது. இதை அதன் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியே கூறியுள்ளார். “அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னரோ பின்னரோ, ஒற்றுமை அரசாங்கம் அமைக்க நாங்கள்…
பரிவும் அக்கறையும் உடைய அமைச்சர் வேதமூர்த்தி, சயாம் மக்கள் புகழாரம்
தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மிகுந்த பரிவும் நலிந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அக்கறையும் கொண்டவர் என்று கெடா, பெண்டாங் வட்டாரத்தில் உள்ள லம்பம் தோட்டத்தில் பூர்வீகமாக வசிக்கும் சயாம் இன மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். லம்பம்…
13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா எம்எசிசியிலிருந்து வெளியேறினார்
கிட்டத்தட்ட 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் இன்றிரவு மணி 10.40 அளவில் ரோஸ்மா மன்சூர் எம்எசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறினார். ரோஸ்மா மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்பதை எம்எசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி நிராகரித்தார். களைப்படைந்து காணப்பட்ட ரோஸ்மா, "நான் ஓகே" என்று கூறினார்.
























