நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
மலேசியா நிலையான பொருளாதார வளர்ச்சி கண்டு 2024-இல் உயர்-வருமான நாடாக…
மலேசியா பல சவால்களை எதிர்நோக்கினாலும் 2019-இல் 4.7 விழுக்காடும் 2020-இல் 4.6 விழுக்காடும் பொருளாதார வளர்ச்சி கண்டு 2020க்கும் 2024க்குமிடையில் உயர்-வருமானம் பெறும் நாடாக மாறும் என உலக வங்கி கூறுகிறது. 2018-இல் மலேசியாவின் பொருளாதாரம் ஒரு மிதமான வளர்ச்சியை 4.9 விழுக்காடு வளர்ச்சியைக் காணும். 2017-இல்…
‘திருடினால் குற்றஞ்சாட்டப்படுவீர்கள்’- ரோஸ்மா கைது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்கிறார்…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பழிவாங்கும் நோக்கில் ரோஸ்மா மன்சூர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். “எல்லாம் சட்டப்படிதான் செய்கிறோம். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. “ஒரு செயல் சட்டவிரோதமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- அது உறுதி. பழிக்குப்பழி வாங்குதல் என்பதெல்லாம் கிடையாது. “சட்டம் நீங்கள்…
ஈசா: ‘தவறான வேட்பாளர்களே’ பிஎன்னின் ஜிஇ14 தோல்விக்குக் காரணம்
நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா அப்துல் சமட், கடந்த பொதுத் தேர்தலின்போது அம்மாநிலத்தில் பல இடங்கள் குறித்து கவலை கொண்டிருந்தார். ஆனாலும், பக்கத்தான் ஹரப்பான் மாநிலத்தைக் கைப்பற்றும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. “பிஎன் தோல்வியுறும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் கவலை கொண்டிருந்தது…
ரோஸ்மாவுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு 17 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள கொண்டுவரப்பட்டார். நேற்று கைது செய்யப்பட்ட ரோஸ்மா இன்று காலை மணி 7.45 அளவில் எம்எசிசியின் தலைமையகத்திலிருந்து போலீஸ் மற்றும் எம்எசிசி அதிகாரிகள் உடன்வர நீதிமன்றதிற்கு புறப்பட்டார். காலை…
மக்கள் கதறலை காதில் வாங்காத பாரிசான் ஒற்றுமையரசுக்கு ஓலமிடுவதேன்?, சேவியர்
கடந்த பொதுத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவினைப் பெற்று ஆட்சியமைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கு, அம்னோ - பாரிசானுடன் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க எந்த அவசியமுமில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அம்னோ - பாரிசானை மக்கள் ஒதுக்கித்தள்ள இன - சமய வாதம், ஊழல், பணக்…
எம்ஏசிசி ரோஸ்மாவைக் கைது செய்தது, நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்
முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக்கின் மனைவி, ரொஸ்மா மன்சூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) இன்று மாலை கைது செய்யப்பட்டார். இன்று மாலை 3.20 மனியளவில், எம்ஏசிசி அதிகாரிகளால் ரொஸ்மா கைது செய்யப்பட்டதை, அதன் துணை ஆணையர், அஸாம் பாக்கி உறுதிபடுத்தினார். “நாளை, ரொஸ்மா கோலாலம்பூர் செஷன்ஸ்…
ஜாஹிட்மீதும் குற்றம் சாட்டப்படலாம்: லொக்மான் கூறுகிறார்
முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கலாம் என்கிறார் அம்னோ உச்சமன்ற உற்ப்பினர் லொக்மான் நூர் ஆடம். ஜூலை 2-இல் அம்னோ தலைவருமான ஜாஹிட்டிடம் ஒன்பது மணி நேரம் எம்ஏசிசி விசாரணை நடத்தியது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ரிம2.6 பில்லியன் நன்கொடை அளித்ததாகக்…
நஜிப்பிடம் போலீஸ் விசாரணை; ரோஸ்மாவிடம் எம்ஏசிசி விசாரணை
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் இன்று விசாரித்தன. நஜிப் காலை மணி 10க்கு கோலாலும்பூரில் மெனாரா கேபிஜே-இல் உள்ள வணிகக் குற்றவியல் துறை(சிசிஐடி)க்கு வந்து சேர்ந்தார். தலைவாசலில் காத்திருந்த ஊடகங்களைத் தவிர்ப்பதற்காக கார் நிறுத்துமிடத்தில் இருந்தே கட்டிடத்துக்குள்…
உள்ளூர் அம்னோ தலைவர்கள் கட்சிக் கட்டளையை மதிக்காமல் ஈசாவுக்குப் பிரச்சாரம்
போர்ட் டிக்சன் அம்னோ தலைவர்கள் கட்சியின் உத்தரவைப் புறக்கணித்து, அங்கு சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் தொகுதித் தலைவர் முகம்மட் ஈசா சமட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தேடி வருவதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள 53 அம்னோ கிளைகளில் கிட்டத்தட்ட பாதி, ஈசாவுக்காக தேர்தல் பரப்புரை செய்து வருவதாக த மலேசியன் இன்சைட்…
கேஎல்ஐஏ-இல் தங்கியிருந்த சீரியா நாட்டவருக்கு 14நாள் தடுப்புக் காவல்
ஏழு மாதங்களாக 2வது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலைய முனையத்தைத் தங்குமிடமாக்கிக் கொண்டிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீரியா நாட்டவர் ஹசான் அல்-கொண்டார், 14 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாராம். அச் செய்தி உண்மைதான் என்று கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சுல்கிப்ளி ஆடம்ஷா உறுதிப்படுத்தியதாக மலாய்…
சைஃபுல்லின் முதல் ‘அடி’ : அன்வார் ‘கண்ணியமற்றவர்’
பிடி இடைத்தேர்தல் | தேர்தல் பிரச்சாரத்தின் நான்காவது நாளான இன்று, சுயேட்சை வேட்பாளர் சைஃபுல் புக்காரி அஸ்லான், தனது முன்னாள் முதலாளியும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான அன்வார் இப்ராஹிம் மீது தாக்குதல்களைத் தொடங்கினார். மலேசியாகினி சந்தித்தபோது, அன்வார் ‘கண்ணியம்’ இல்லாத மனிதர் என சைஃபுல் தெரிவித்தார். “இந்த இடைத்தேர்தல்,…
எம்ஏசிசி ரொஸ்மாவை நாளை மீண்டும் அழைக்கலாம், கைது செய்யவும் வாய்ப்புண்டு
முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நாளை மீண்டும் அழைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 6 மணியளவில், ரொஸ்மாவின் வழக்கறிஞர், கீதன் ராம் விண்சென்ட் எம்ஏசிசி-இடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், அதில் ரொஸ்மா நாளை காலை 11 மணிக்கு எம்ஏசிசி…
நான் அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டதே இல்லை, மகாதிர் பிபிசி-இடம் சொன்னார்
1998-ல், அன்வார் இப்ராஹிமைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கியதற்காக, தாம் அவரிடம் இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். 14-வது பொதுத் தேர்தலில், (ஜிஇ-14) அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியபோது, அன்வாரின் முந்தைய வழக்கு பிரச்சனைகள் எழவில்லை என டாக்டர் மகாதிர்…
மகாதிர் கையெழுத்தில் தேர்தல் அறிக்கை, ஸாம் இரகசியத்தை வெளியிட்டார்
1999-ம் ஆண்டு, துன் டாக்டர் மகாதிர் தனது கையால் எழுதிய, பிஎன் தேர்தல் அறிக்கையை, முன்னாள் தகவல் அமைச்சர் சைனுட்டின் மைடின் இன்று வெளியிட்டார். 19 ஆண்டுகளாக, அதைப் பத்திரமாக அவர் வைத்திருக்கிறார், மகாதிர் தனக்கு கீழ் உள்ளவர்களை முற்றிலுமாக நம்பி இருப்பவர் அல்ல என்பதற்கு ஆதாரமாக அது…
தொலைபேசி, எஸ்எம்எஸ் மோசடிகளை முறியடிப்பதில் அமைச்சு தீவிரம் – கோபிந்த்
தொடர்பு, பல்லூடக அமைச்சு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) வழி நடைபெறும் ஏமாற்று வேலைகளை முறியடிக்க போலீசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று கூறினார். அந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்தும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போலீசுக்கு…
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்மீது வழக்குத் தொடுப்பது பயனற்றது- நஸ்ரி
கட்சியிலிருந்து வெளியேறிய அம்னோ எம்பிகள்மீது வழக்குத் தொடுப்பது வீண்வேலை என்கிறார் முகம்மட் நஸ்ரி அசிஸ். “ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கை இதற்குமுன்பும் எடுக்கப்பட்டது. ஆனால், முடிவு அம்னோவுக்குச் சாதகமாக அமையவில்லை”, என அந்த பாடாங் ரெங்காஸ் எம்பி கூறினார். “அது பயன் தராது. முன்பு நடந்ததுபோலவே அது நீதிமன்றத்தில் தள்ளுபடி…
அன்வாருக்கு ஸ்டீவி சானின் ஐந்து கேள்விகள்
பிடி தேர்தல் சுயேச்சை வேட்பாளர் ஸ்டீவி சான், ஐந்து கேள்விகளை முன்வைத்து பிகேஆர் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கும் ஸ்டீவி சான், மே 9இல்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது என்பதால் இவ்வளவு அவசரமாக ஏன் ஓர் இடைத்…
பிகேஆர் தேர்தல் : லேடாங் எம்பி தோல்வியைத் தழுவினார்
நேற்று நடந்த, பிகேஆர் கட்சி தேர்தலில், ஜொகூர், லேடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சேட் இப்ராஹிம் சேட் நோ தோல்வியைத் தழுவினார். பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய லேடாங் தொகுதி தலைவருமான டாக்டர் சோங் ஃபாட் ஃபுல் 541 வாக்குகள் பெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். பிகேஆர்-ஐச் சேர்ந்த…
பிகேஆர் தேர்தல்: லாபிஸ் முடிவுகளை இரத்து செய்ய வேண்டும், ரஃபிசி…
பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர் ரஃபிஸி ரம்லி, மத்தியத்திற்கான லாபிஸ் தொகுதி தேர்தல் முடிவுகளை இரத்து செய்யுமாறு, மத்தியத் தேர்தல் குழுவிடம் (ஜேபிபி) இன்று கோரிக்கை வைத்தார். தற்போது கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் ரஃபிஸி, வாக்களிப்பில் ஜேபிபி அதிகாரிகளின் தலையீடு இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜேபிபி தலைவர்,…
அன்வார்மீது புதிதாக குதப்புணர்ச்சிக் குற்றம் சாட்டும் லொக்மான் ஆடமுக்கு எதிராக…
பிகேஆர் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம்மீது புதிதாக ஒரு குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு என்று முகநூலில் வைரலாகிவரும் செய்தி தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடமுக்கு எதிராக பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார். “அது போர்ட் டிக்சன் இடைத்…
அன்வார் பிடி மக்களுக்கு ‘இறைவனின் அன்பளிப்பு’: முன்னாள் மஇகா தலைவர்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் மக்களுக்கு “இறைவன் கொடுத்த அன்பளிப்பு” என்று துதி பாடினார் மஇகா முன்னாள் உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன். நேற்று முதன்முறையாக பக்கத்தான் ஹரப்பான் மேடையில் தோன்றி அதற்கு ஆதரவாக பரப்புரை செய்த சோதிநாதன், வருங்கால பிரதமரைத் தங்களின் எம்பியாக பெறப்போகும் போர்டி…
சட்டவிரோத வாகனமோட்டும் லைசென்சுகளைத் திருப்பிக் கொடுக்க இரண்டு வாரங்களே உள்ளன
சட்டவிரோதமான முறையில் வாகனமோட்டும் லைசென்சுகள் பெற்றவர்கள் அவற்றை சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி)யிடம் ஒப்படைப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன. அதன்பின்னர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு, அவர்களைப் பற்றி முழு விவரம் ஆர்டிடி-யிடம் உள்ளது என்பதையும் நினைவுறுத்தினார். “அந்த வகையில்…
ஹாடி அன்வாரை கேட்கிறார்: ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் இடத்தில்…
அன்வார் இப்ராகிம் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்று அன்வாரிடம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கேட்டுள்ளார். நேற்றிரவு போர்ட் டிக்சன், தெலுக் கெமானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவருக்கு (அன்வாருக்கு) ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையிலிருக்கும் இடத்தில் போட்டியிட தைரியமில்லை என்று ஹாடி…
























