கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம், ஷா ஆலம் தொகுதியை இழக்கும்…
கிள்ளான் ஷியாரியா நீதிமன்றம் தகுந்த தகுதிச் சான்றுகள் இன்றிச் சமயக் கல்வி புகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அமனா எம்பி காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம் விதித்ததை அடுத்து அவர் தம் எம்பி பதவியை இழக்கும் அபாயமும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காலிட் …
நஜிப்: பிஎன் தோற்றால் டிஏபிதான் ஆட்சி செய்யும்
அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கூட்டணி வெற்றி பெற்றால், டிஏபி அரசாங்கத்தில் உயர்ப் பதவியை வைத்திருக்கிறதோ இல்லையோ, ஆட்சி செய்யப்போவது அக்கட்சிதான் என்று பிரதமர் நஜிப் கூறினார். “ஜனநாயகமும் அரசியலும் எண்ணிக்கையை வைத்து ஆடப்படும் ஆட்டமாகும். அரசாங்க உயர் பதவி …
யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள் வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து ஆசிரியர் விடுதலை
2014 யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்த பள்ளி ஆசிரியரை கோலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. கே. அன்பரசு,52, குற்றம் செய்தார் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிபதி நிரான் டான் கிரான் தீர்ப்பளித்தார். பெங்களான் உலு, கெரு…
‘இதுவே, மாற்றம் நிகழ ஏற்ற தருணம்’ அன்வார் இப்ராகிம்
அரசாங்கத்தில் மாற்றம் நிகழ இதுவே சரியான தருணம் என்றுரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், 14வது பொதுத் தேர்தலில் எதிரணி தோற்கும் என்ற அரசியல் கணிப்பாளர்களின் ஆருடங்களைப் புறந்தள்ளினார். அரசியல் ஆய்வாளர்கள் இதே கருத்தைத்தான் 2008-இலும், 2013-இலும் தெரிவித்தார்கள் என்று அன்வார் கூறினார். அவர் இன்று ஒரு …
பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புப் பேரணி
தன்னை ‘பேபாஸ்’ என்று அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பு பிப்ரவரி 18-இல் பாஸ் கட்சி நடத்தும் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர்களான அஸ்ருல் முகம்மட் காலிப், அசிரா அசிஸ், ஆர். சுரேஷ் ஆகியோர் இன்று ஓர் அறிக்கையில் அவ்வறிப்பைச் செய்திருந்தனர்.…
மகாதிரின் பல கருத்துகள் காலத்துக்கு ஒத்துவராதவை- சாலே கெருவாக் தாக்கு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவிக்கும் பல கருத்துகள் காலவதியானவை, இக்காலத்துக்குப் பயனற்றவை என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாடியுள்ளார். மகாதிர் இக்காலத்தில் எப்படி செயலாற்றப்படுகிறது, உலக மயம் என்றால் என்ன என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். “இது எல்லைகளற்ற உலகம். மகாதிர் …
பெர்சேயில் கலந்துகொண்ட இரண்டு மாணவர்களை விசாரணைக்கு அழைத்தது யுஎம்எஸ்
யுனிவர்சிடி மலேசியா சாபா(யுஎம்எஸ்), கடந்த ஆண்டு பேர்சே பேரணியில் கலந்துகொண்ட அதன் மாணவர்கள் இருவரை ஜனவரி 25-இல் கட்டொழுங்கு விசாரணைக்கு அழைத்துள்ளது. சுவாரா மஹாசிஸ்வா யுஎம்எஸ் தலைவர் முக்மின் நந்தாங், முன்னாள் “தங்காப் எம்ஓ1” கூட்டணி உறுப்பினர் நுருல் அக்கிலா முகம்மட் சைனுசி ஆகியோரே அவ்விருவருமாவர். நுருல் அக்கிலாவைத் …
மகாதிர்: நான் ராஜத் துரோகியா? அப்படியே ஆகட்டும்
முன்னாள் பிரதமர் மகாதிர் வரம்பை மீறி விட்டார் என்று ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கான பதிலை மகாதிர் கடிதத்தில் எழுதியுள்ளார். இன்றைய த ஸ்டார் நாளிதழில் பக்கம் 33, கடிதங்கள் பகுதியில் மகாதிரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், சுல்தான் தமக்கு சவால் விட்டாரா அல்லது அந்த…
சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
பாரிசான் நேசனலின் சுங்கை ஆயர் தாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கமாருல் ஸாக்கி அப்துல் மாலிக், 58, இன்று காலை சாபா பெர்ணாமில் அவரது இல்லத்தில் காலமானார். இன்று காலை அவரது தொகுதியில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு அவரை அழைத்து வர அவரது இல்லம் சென்றபோது அவரின் கார் ஓட்டுனர் …
ரிம15ஆயிரம் வருமானம் பெறுவோரும் பிரிமா வீடுகளை வாங்கலாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்ட(பிரிமா)த்தின்கீழ் மேலும் பலர் வீடு வாங்குவதற்கு வழிகோலும் இரண்டு கொள்கை மாற்றங்களை இன்று அறிவித்தார். ஒன்று, பிரிமா வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்குவோருக்கான வருமான வரம்பு ரிம10 ஆயிரத்திலிருந்து ரிம15 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, பிரிமா வீடுகளை வாங்குவோர்…
தடை செய்யப்பட வேண்டியவை லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் அல்ல- வான்…
கோலாலும்பூர் மையப்பகுதியில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சிறுரக மோட்டார் சைக்கிள்களை தடைசெய்யும் கருத்தை இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் ஏற்கவில்லை. “அவற்றால்(மோட்டார் சைக்கிள்கள்) ஏற்படும் தூய்மைக்கேடு சிறிதுதான். பெரிய ஊர்திகள்தாம் தூய்மைக்கேட்டுக்குக் காரணம். “சிறிய வாகனங்களைத் தடை செய்ய வேண்டுமா என்பது …
எம்ஆர்டி அறிமுகக் காலத்தில் 1.2 மில்லியன் பேர் அதில் பயணம்…
டிசம்பர் 16-இல் தொடங்கிய சுங்கை பூலோவுக்கும் செமாந்தானுக்குமிடையிலான எம்ஆர்டி முதல் கட்டச் சேவையில் நேற்றுவரை பயணம் செய்தவர் எண்னிக்கை சுமார் 1.2 மில்லியன். எம்ஆர்டியை அறிமுகப்படுத்தும் வகையில் டிசம்பர் 16-லிருந்து ஒரு மாதத்துக்குப் பயணிகள் எம்ஆர்டி-இல் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த இலவசப் பயணத் திட்டம் இன்றுடன் …
சமூக வலைத்தளங்கள் அபாயகரமானவை- எச்சரிக்கிறார் அஸலினா
பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அரசு அதிகாரிகள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டுமாய் எச்சரித்துள்ளார். அனுபவம் அவரை அப்படிப் பேச வைத்துள்ளது. “லாஸ் வேகாஸ் சென்றிருந்தேன். லாஸ் வேகாஸில் நிறைய சூதாட்ட இயந்திரங்கள் இருப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. “அதைப் படமெடுத்தேன். அதைக் கண்ட …
1எம்டிபி ஊழலாலும் நம்பிக்கை குறைந்திருந்திருப்பதாலும் என்சிசி2 அவசியமாகிறது- நாஸிர்
1எம்டிபி சர்ச்சை காரணமாக கூட்டரசு அரசாங்கத்தின்மீதும் அதன் முக்கிய அமைப்புகளின்மீதும் நம்பிக்கை குறைந்திருப்பதால் இரண்டாது தேசிய ஆலோசனை மன்ற(என்சிசி2)த்தைக் கூட்டுவது அவசியமாகும் என்கிறார் சிஐஎம்பி குழுமத் தலைவர் நாஸிர் ரசாக். என்சிசி2 அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கடந்த செப்டம்பர் மாதமே முன்வைத்த நாஸிர், 1எம்டிபி சர்ச்சையால் அதிகாரத்தைக் …
ஷெல் நிலையங்களில் எண்ணெய் நிரப்ப முடியவில்லை?
ஷெல் பெட்ரோல் நிலையங்கள் பல தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்நோக்கி வருகின்றன. அதன் விளைவாக பல நிலையங்களில் ஊர்திகளுக்கு எண்ணெய் நிரப்ப முடியவில்லை. ஆனால், அதன் காரணமாக நாட்டில் உள்ள எல்லா ஷெல் நிலையங்களும் மூடப்பட்டு விட்டதாக கூறும் ஊடகச் செய்தியை ஷெல் மலேசியா பேச்சாளர் ஈவோன் சங் மறுத்தார்.…
துருக்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலி
துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கிரிகிஸ்தானின் மானாஸ் விமான நிலையத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 32 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் பெரும்பாலோர் அது விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவ்விமானம் ஹாங்காங்கிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்குச் செல்லும் வழியில் …
பெர்சத்து தொடக்கவிழாவுக்குப் பேராளரை அனுப்பாதது ஏன்? பாஸுக்கு மாபுஸ் கண்டனம்
கடந்த வார இறுதியில் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு ஒரு பேராளரைக்கூட அனுப்பி வைக்காத பாஸ் கட்சியை மாபுஸ் ஒமார் கடிந்து கொண்டார். பாஸ் கட்சி எதிரணிக் கூட்டணியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், பாஸ் பேராளரை அனுப்பி வைக்காதது …
ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ வழக்கை மீண்டும் விசாரிப்பீர்: அபாண்டிக்குக் கோரிக்கை
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் கத்ரி அப்துல்லா, அவருக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்யும் துணிச்சல் உண்டா எனவும் சவால் விடுத்தார். சிங்கப்பூர் நீதிமன்றம், 1எம்டிபி மீதான …
சீனாவின் போலீஸ் நடவடிக்கைகளைப் புகழும் ஜாஹிட்டைச் சாடினார் எம்பி
ஐயா, குற்றங்களை எதிர்த்துப் போராட சீனா பின்பற்றும் முறைகளைப் புகழ்ந்துரைக்கிறீர்களே அப்படிப் புகழ்ந்துரைக்க ஒரு ஜனநாயக நாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா என்று எதிரணி எம்பி ஒருவர் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை நோக்கி வினவுகிறார். “நாம் பிரமிப்பதற்கோ கற்றுக்கொள்ளவோ சீனா ஒரு முன்மாதிரி நாடல்ல. “அது சட்ட …
ஜோகூர் சுல்தான்: மகாதிர் அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார்
மாநிலம் (ஜோகூர்) அதன் நிலத்தை சீனர்களிடம் அடமானம் வைத்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறியிருந்ததற்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அவரை அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார் என்று சாடினார். த ஸ்டார் நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் மகாதிர் கூறிய கருத்துகளால் தாம் கடந்த…
14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் என்று…
மிகப் பிரசித்தி பெற்ற பொருளாதார வல்லுனரான ஜோமோ கவாம் சுந்தரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் வெற்றி பெரும் என்று ஆருடம் கூறியுள்ளார். புது வருடத்தில் ஆருடம் கூறுவது வழக்கமான ஒன்று கூறிய ஜோமோ, ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அத்தேர்தலில் எதிரணி தோல்வி…
மக்கி அழியும் நெகிழிப் பைகளுக்கு நல்ல வரவேற்பு
ஜனவரி முதல் மக்கி அழியும் நெகிழிப் பைகள் அல்லது காகிதப் பைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் லோக பாலன் மோகன் கூறினார். ஆனாலும், இன்னும் சில வணிகர்களும் வியாபாரிகளும் அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை. அதனால் பாதகமில்லை, …
மலேசிய ஐஎஸ் போராளி சீரியாவில் கொல்லப்பட்டான்
இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஸில் ஒரு போராளியாக இருந்த மலேசியரான சைனுரி கமருடின் சீரியாவில் கொல்லப்பட்டான். இரண்டு நாள்களுக்குமுன் சீரியாவில் கொல்லப்பட்ட மூன்று மலேசியர்களில் தால்ஹா என்ற பெயரில் பிரபலமாக விளங்கிய சைனுரியும் ஒருவன் என்பதை புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் துணை இயக்குனர் ஆயுப் கான் …


