‘சிலாங்கூர் அரசில் முறைகேடுகளை அம்பலப்படு்த்திய ரபிசிக்கு நன்றி’-ஜமால் யூனுஸ்

சுங்கை  புசார்  தொகுதி  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ், பிகேஆரால்   வழிநடத்தப்படும்   சிலாங்கூர்  அரசில்  நிலவும்  முறைகேடுகளை  அம்பலப்படுத்திய  அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  ரபிசி  ரம்லிக்கு  நன்றி  தெரிவித்தார். முகம்மட்  அஸ்மின்  அலியை  மந்திரி  புசாராகக்  கொண்ட  சிலாங்கூர்   அரசில்  அதிகார  மீறல்களும்  ஊழலும்  நிலவுவது  ரபிசி …

சுங்கை புசார், கோலகங்சார் தொகுதிகளில் இன்று வாக்களிப்பு

நாடாளுமன்ற தொகுதிகளான சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் ஆகிவற்றில் இன்று வாக்காளர்கள் பாரிசானா, அமனாவா அல்லது பாஸா என்பதை முடிவு செய்வார்கள். சுங்கை புசாரில், மும்முனை போட்டி நிலவுகிறது. பிஎன் சார்பில் புடிமான் முகமட் ஸோதியும், அமனா சார்பில் அஸாகர் ஸூகுரும், பாஸை பிரதிநிதித்து டாக்டர் ரானி ஓஸ்மானும்…

இந்தியர்களின் வாக்குகள் இனியும் தேசிய முன்னணிக்கு கிடையாது

  காலம்காலமாய் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நீரோடையில் மலேசியா இந்தியர்கள் ஆகிய நம்மை  ஓரங்கட்டிய தேசிய முன்னணியின்  செயல் கசப்பானது. ஒருமுறை பெரிய அளவில் ஏமார்ந்ததே  போதும். அதனிலும் கசப்பானது உலகறிய  தேசிய முன்னணி கட்சி-பிரதமர் நஜிப்பும் “ஹிண்ட்ராப்- தேசிய முன்னணி 5 ஆண்டு செயல் திட்டம்” புரிந்துணர்வு…

மகாதிர்: வெளிநாட்டில் நஜிப்பைக் குறைகூறிப் பேசினால் என் கடப்பிதழைப் பறித்துக்…

வெளிநாடுகளுக்குப் போய்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறிப்  பேசினால்  அவருடைய   கடப்பிதழ்  திரும்பப்  பெற்றுக்கொள்ளப்படும்  எனக்  குடிநுழைவுத்  துறை   டாக்டர்  மகாதிர்  முகமட்டை  எச்சரித்துள்ளதாம். “நஜிப்புக்கு  ஆதரவாக  இல்லாததைப்  பேசினால்  வெளிநாட்டிலிருந்து  திரும்பியதும்  என்  கடப்பிதழ்  மூன்றாண்டுகளுக்கு  இரத்துச்  செய்யப்படும்  என்று  எச்சரிக்கப்பட்டிருக்கிறது”, என  முன்னாள்  பிரதமர் …

ஐஜிபி, இஸ்மாயில் சப்ரிமீதான நூருல் இஸ்ஸாவின் வழக்கு முழு விசாரணைக்கு…

போலீஸ்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  காலிட்  அபு  பக்காரும்  கிராம, வட்டார   மேம்பாட்டு  அமைச்சர்  சப்ரி  யாக்கூம்  தங்கள்மீது  பிகேஆர்  உதவித்  தலைவர்  கொண்டுவந்த   அவதூறு  வழக்கை  இரத்துச்  செய்ய  வேண்டும்  செய்து  கொண்டிருந்த  மனுவைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது. அவர்களின்  மனுவைத்  தள்ளுபடி  செய்த  நீதிபதி …

பிணைப் பண விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு என்ன? ஜாஹிட் விளக்க…

பிலிப்பின்சின்  அபு  சாயாப்  தீவிரவாதக்  கும்பலால்  கடத்திச்  செல்லப்பட்ட  சரவாக்கியர்களை  விடுவிப்பதற்காக  ரிம12 மில்லியன்  பிணைப்பணம்  திரட்டப்பட்டதில்  அரசாங்கத்தின்  பங்கு  என்னவென்பதை  உள்துறை  அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  விளக்க  வேண்டும்  என்று  கோரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது. “ஜாஹிட்  கடத்தலுக்குப்  பிணைப்பணம்  கொடுப்பதை  அரசாங்கம்  ஆதரிப்பதில்லை.  அதற்காக  அது  பணத்தைப் …

தொலைக்காட்சி நிகழ்ச்சி இரத்தானதற்கு நஜிப்பே காரணம்- மகாதிர்

முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நாளை  நகைச்சுவைக்  கலைஞர்  ஹரித்  இஸ்கண்டருடன்  தாம்  கலந்துகொள்ளவிருந்த  தொலைக்காட்சி  ரகளை  நிகழ்ச்சி  இரத்துச்  செய்யப்பட்டதற்குப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  காரணம்  என்கிறார். “அவருடன்  அந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு  நகைச்சுவையாகக் கருத்துப்  பரிமாற்றம்  செய்துகொள்வதாக இருந்தது. “அதுதான்  நோக்கம்,  ஏனென்றால்  அவர் …

சிவப்புச் சாயம் வீசி அலங்கோலப்படுத்தப்பட்ட பிஎன் விளம்பரப் பலகைகள்

சுங்கை  புசாரில்,  பிஎன்  விளம்பரப்  பலகைகளில்  உள்ள    பிஎன்  வேட்பாளர்  புடிமான்  முகம்மட்  ஸோதியின்  படத்தின்மீது  சிவப்புச்  சாயம்  வீசியடிக்கப்பட்டிருந்தது. இரண்டு  விளம்பரப் பலகைகளில்  அவ்வாறு  செய்யப்பட்டிருந்தது. அந்த  விளம்பரப்  பலகைகள்  சுங்கை  புசாரிலிருந்து  செகிஞ்சான்  செல்லும்  சாலையில்   உள்ளன. இரண்டிலும்  புடிமானின்  முகம்   சாயத்தால்  முழுக்க மூடப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று நாடு திரும்பும் வேளையில் ஒரு குடும்பத்தில்…

இந்தோனேசியாவில்  தடுத்து  வைக்கப்பட்டிருந்த  மலேசிய  மீனவர்கள்  இன்று விடுவிக்கப்படுவதாக  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அறிவித்தபோது அதில்  ஒருவர் பெயர்  விடுபட்டிருந்தது  அந்த  மீனவரின்  குடும்பத்துக்கு  ஏமாற்றமாக  அமைந்தது. “இந்தோனேசியா இரண்டு  மீனவர்களை  விடுவிப்பதாக  துணைப்  பிரதமர்  அறிவித்தபோது  நாங்கள்  உணவருந்திக்  கொண்டிருந்தோம். “சியா  கீ  சான்னின் …

சேவியர்: தொழில் நுட்பப் பல்கலைக்கழகமா? சமய ஆய்வு பல்கலைக்கழகமா?

  மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் எப்பொழுது சமய ஆய்வு பல்கலைக்கழகமாக மாறியது? அப்படியே மற்றச் சமயங்களைப் பற்றிப் படிக்க வேண்டும், போதிக்க வேண்டும்  என்றால்,  அச்சமயங்களில் உள்ள சிறந்த போதனைகளைப் போதிக்க வேண்டும் அது நாட்டிற்கு நன்மை பயக்கும். ஆனால் , மற்றவர்களைக் கேவலப்படுத்தும், சிறுமைப்படுத்தும் தவறான தகவல்களை…

1எம்டிபி-இல் யுஎஸ்3.47 பில்லியனைக் காலி செய்தது யார் என்பதை அறிய…

1எம்டிபி-இலிருந்து  காணாமல்  போன  யுஎஸ்3.47 பில்லியனைக்  கண்டுபிடிப்பதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும் அவரது  அரசாங்கமும்  ஆர்வம்  காட்டுவதுபோல்  தெரியவில்லையே  அது  ஏன்  என்று  கேள்வி  எழுப்புகிறார்  முன்னாள்  பாஸ்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா. 1எம்டிபி  தலைவர்  அருள்  கண்ட  கந்தசாமி,  அந்த  நிறுவனம்  யுஎஸ்3.47 பில்லியனை …

ரபிடா: புரோட்டோனில் தலையீடா? நஜிப்பும்தான் அப்போது அமைச்சரவையில் இருந்தார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,    மகாதிர்  முகம்மட்  பிரதமராக  இருந்தபோது  அவரது  அமைச்சரவையில்  தாமும்   ஒர்  அமைச்சராக இருந்ததை   மறந்து  விடக்கூடாது  என்பதை  முன்னாள்  அமைச்சர்  ரபிடா   அசீஸ்  நினைவுறுத்தினார். மகாதிர்  காலத்தில்  புரோட்டோனில்  நிறைய  அரசியல்  தலையீடு  இருந்தது  என்று  நஜிப்  கூறியதற்கு  எதிர்வினையாக  ரபிடா  அவ்வாறு …

சுங்கை புசாரில் 1எம்டிபி தலைவர் அருள்

1எம்டிபி  தலைவர்  அருள்  கண்ட  கந்தசாமி,  இன்று  சுங்கை  புசார்  வந்திருந்தார். பிரதமர்துறை   ஏற்பாடு  செய்திருந்த  தேசிய  விவகாரங்கள்மீதான  பேச்சு  என்னும்  நிகழ்ச்சிக்காக  அருள்  அழைக்கப்பட்டிருந்தார். பிஎன்  வேட்பாளர்  புடிமான  முகம்மட்  ஸோதியும்  அந்நிகழ்வுக்கு  வந்திருந்தார். ஆனால், அவர்  மேடையேறவில்லை. இடைத்  தேர்தல்  பரப்புரைக்காகத்தான்  வந்தாரா  என்று  வினவியதற்குப் …

ரோஸ்மாவின் உதவியாளர் கோலா கங்சார் வந்தார் ரபிசியின் செய்தியாளர் கூட்டத்தில்…

பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிசி  ரம்லி  இன்று  கோலா கங்சாரில்  செய்தியாளர்  கூட்டமொன்றை  நடத்துகிறார். அதில்  ரோஸ்மா  மன்சூர்  தனி  ஜெட்  விமானத்தை  வாடகைக்கு  அமர்த்திக்  கொண்ட  விவகாரம்  பற்றி  மேலும்  பல  தகவல்களை  வெளியிடுவார்  என்பதால்  அதைக்  கேட்பதற்காகவே  கோலா  கங்சார்  வந்துள்ளார்  ரோஸ்மாவின்  உதவியாளர்  ரிசால் …

அதிருப்தி கொண்ட அம்னோ உறுப்பினர் அமனாவுக்கு ஆதரவு: அஸ்முனி தகவல்

கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்:  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தலைமைத்துவத்தின்மீதும்  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்  வேட்பாளர்  தேர்ந்தெடுக்கப்பட்ட  விதம்  குறித்தும்  அதிருப்தி  அடைந்துள்ள  அம்னோ  கட்சியினர்  பலர்  அமனாவுக்கு  ஆதரவு  அளிக்கிறார்களாம்.  பேரா  அமனா  தலைவர்  அஸ்முனி  அவி  இவ்வாறு  கூறிகொள்கிறார். அவர்கள்  இந்த  ஆதரவை …

ஆரஞ்ச் நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ள அமனாவுக்கு ‘பைத்தியம்’ பிடித்துள்ளது: பாஸ் தலைவர்…

பார்டி அமனா  நெகாரா  போயும்  போயும் குருமார்களின்  காவி  உடையை  நினைவுபடுத்தும்  ஆரஞ்ச்  நிறத்தையா  கட்சியின்  நிறமாக  தேர்ந்தெடுக்க  வேண்டும்  என கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட் அமார்   நிக்  அப்துல்லா சாடினார். அமனாவின்  சின்னம்  இந்தியாவின்  இமயம்  டிவி-இன்  சின்னத்தைப்  போன்றிருக்கிறது  என்றும்  அவர்  சொன்னார்.…

பிச்சைக்காரர்கள்தான் ஆனாலும் ஒரு நாளில் ரிம1,000 சம்பாதிக்கிறார்கள்

அவர்கள்  தெருக்களில்  அலைந்து  திரிந்து  பிச்சை  எடுப்பவர்களாக  இருக்கலாம்  ஆனாலும்  பிச்சை இடுபவர்களைவிட  பிச்சை  எடுக்கும்  இவர்களிடம்தான்  இருப்பு  அதிகம்  என்கிறார்  பினாங்கு  சமூக  நல  இயக்குனர்  சைட்  சிடுப். பிச்சைக்காரர்களுக்கு  எதிரான  நடவடிக்கையின்போது  சிக்கியவர்களிடம்  விசாரணை  செய்ததில்  அவர்களில்  சிலருக்கு  ஒரு  நாளில்  ஆயிரம்  ரிங்கிட்வரை  கிடைக்கும் …

சேவியர்: சுங்கை புசார் அமனா வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

  பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஒரு ஆன்மீகவாதி, அதற்கான மரியாதைக்குப் பங்கமில்லாமல் செயல்படுவதை அவர்  உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குளைப் பெறுவதற்காக முன்னுக்குப்பின் முரணாகக் கருத்துகள் கூறும் சராசரி அரசியல் வாதிகளைப் போன்று  செயல்படக்கூடாது.   இஸ்லாமியர் அல்லாதோரின்  ஆதரவு தேவையில்லை என்பதனைக் காட்டும்…

பல்கலைக்கழகங்களிலும் அறியாமை ஆட்சி செய்கிறதே: மஇகா தலைவர் ஆதங்கம்

யுனிவர்சிடி  டெக்னோலோஜி  மலேசியா(யுடிஎம்)வில் (யுடிஎம்) மாணவர்களுக்குக்  கற்பிப்பதற்குப் பயன்படுத்தபப்டும்  பாடக் குறிப்புகளில்  இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பது,   அறியாமை   நாடெங்கிலும்,  பல்கலைக்கழகங்களிலும்  பரவிக்  கிடப்பதைக்  காண்பிக்கிறது என மஇகா  தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். இந்துக்களுக்கு  இஸ்லாம்தான்  நன்னடத்தையையும்  சுத்தத்தையும்  கற்றுக்கொடுத்ததாகக்  கூறும்  Tamadun…

யுடிஎம் பாடக் குறிப்பில் தவறு செய்தவர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்:…

யுனிவர்சிடி  டெக்னோலோஜி  மலேசியா(யுடிஎம்)வில்  இந்து  சமயத்தையும்  சீக்கிய  சமயத்தையும்  கற்பிப்பதற்குப்  பயன்படுத்தப்படும்  பட  வில்லைகளில்  தவறான  தகவல்கள்  இடம்பெறக்  காரணமானவரைப்  பணிநீக்கம்  செய்ய  வேண்டும்  என்று  மலேசிய  தேசிய   சீக்கியர்  இயக்கம்(கெராக்சீக்)  கோரிக்கை  விடுத்துள்ளது. கெராக்சீக்   யுடிஎம்மின்  பாடக்  குறிப்பில்  சீக்கிய  சமயம்  பற்றி  “தவறான  தகவல்கள்” இடம்பெற்றிருப்பதாக …

வாக்காளர்கள் பிஎன்னுக்கு வெற்றி கிடைப்பதைத் தடுத்து சாலைக்கட்டணத்துக்கு எதிர்ப்பைக் காட்ட…

சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  வாக்காளர்கள்  ஜூன் 18  இடைத்தேர்தல்களில்  பிஎன்னுக்கு  வெற்றி   கிடைக்காதபடி  செய்து  சாலைக்  கட்டண  உயர்வுக்கெதிராக  தங்கள்  எதிர்ப்பைக்  காட்டிட வேண்டும்  என  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  வலியுறுத்தினார். பிஎன்  இவ்வாண்டில்  எட்டு  நெடுஞ்சாலைகளிலும்  அடுத்த  ஆண்டில்  நான்கிலும்   சாலைக்  கட்டணத்தை …

கர்பாலின் முன்னாள்-காரோட்டுனர் ஆபத்தான முறையில் காரோட்டிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்

காலஞ்சென்ற  கர்பால்  சிங்கின்  முன்னாள்-காரோட்டுனர், சி. செல்வம்,  ஈராண்டுகளுக்கு   முன்னர்  முரட்டுத்தனமாகவும்  ஆபத்தான   முறையிலும்  காரோட்டி   டிஏபி  தலைவருக்கு   மரணம்   விளைவித்தார்  என்ற  குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார். அரசுத்  தரப்பு   செல்வம்  குற்றம்  புரிந்தார்  என்பதற்குத்  தகுந்த   ஆதாரங்களைக்  காண்பிக்கவில்லை என மாஜிஸ்ட்ரேட்  முகம்மட்  இப்ராகிம்  முகம்மட்  குலாம்  கூறினார்.…

ரபிசி: ரோஸ்மாவுக்காக விமானத்தை வாடகைக்கு அமர்த்த எவ்வளவு செலவானது? பிரதமர்துறை…

கடந்த  மாதம்  பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்   ஒரு  விருதைப்  பெறுவதற்காக  தனி  ஜெட்  விமானம்  ஒன்றில்   இஸ்தான்புல்  சென்றுவர  எவ்வளவு  செலவானது  என்பதை  வெளியிடும்  துணிச்சல்  உண்டா  என  பாண்டான்  எம்பி  ரபிசி  ரம்லி  பிரதமர்துறைக்குச்   சவால்  விடுத்தார். ரபிசி,  அந்த  ஜெட்  விமானத்தை  வாடகைக்கு  அமர்த்த …