நாட்டுக்கும் இனத்துக்கும் சேவையாற்றுவேன்: பணிஓய்வு பெறும் செனட் தலைவர் சூளுரை

இரண்டு  தவணைகள்  செனட் தலைவராக  இருந்து  பணிஓய்வு பெறும்  அபு  ஸகார்  ஊஜாங்  பணிஓய்வு  பெற்றாலும்  தொடர்ந்து  நாட்டுக்கும்  இனத்துக்கும்  சேவை  செய்யப்போவதாகக்  கூறினார். அவரது  பணிஓய்வைக்  குறிக்கும்  வகையில்  நேற்றிரவு  ஒரு  நிகழ்வு  நடைபெற்றது.   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதில்  விருந்தினராகக்  கலந்து  கொண்டார். “நான் …

அடுனான்: பிஎன் வேட்பாளர்களைப் பிடிக்காதபோது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்

சரவாக்  முதலமைச்சர் அடுனான்  சதேம்  மே  7  மாநிலத்  தேர்தலில்  போட்டியிடும்  பிஎன்  வேட்பாளர்களைப்  பிடிக்கவில்லை  என்றாலும்  தமக்காக  அவர்களுக்கு  வாக்களிக்க  வேண்டும்  என்று  வாக்காளர்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்று  வெட்டுமர  நிறுவனமொன்றில்  நடந்த  கூட்டத்தில்  பேசிய  சரவாக்  பிஎன்  தலைவர்  தாம்  தொடர்ந்து  முதலமைச்சராக  இருப்பதையே  சரவாக்   மக்கள் …

சொர்க்கத்திற்கு குறுக்குவழி கிடையாது, நஜிப் கூறுகிறார்

  இன்று புத்ராஜெய, மஸ்ஜித் புத்ராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் நஜிப் செய்துள்ள டிவிட்டில் சொர்க்கத்திற்கு குறுக்குவழி கிடையாது என்று கூறுகிறார். அந்த டிவிட்டில், "நான் மஸ்ஜித் புத்ராவில் இருந்தேன். சமய போதனை சொர்க்கத்திற்கு குறுக்குவழி இல்லை என்பது பற்றியதாகும். "நாம் அதனை நோக்கி…

குவான் எங்: 4 மில்லியன் மக்களைக் காப்பாற்ற நீர் பற்றாக்குறையைத்…

  அச்சுறுத்தும் நிலையிலிருக்கிற நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படவிருக்கும் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு மில்லியன் மக்களைக் காப்பாற்ற உடனடியாகத் தலையிடுமாறு பினாங்கு மாநில அரசு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சூப்பர் எல் நிநோவால் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் வட பேராக் ஆகிய…

அடினான் வென்றால், சரவாவுக்கு கூடுதல் பணம், ஸாகிட் கூறுகிறார்

எதிர்வரும் சரவாக் மாநில சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் அடினான் சாதெம் பெரும் வெற்றி பெற்றால் சரவாக் மேம்பாட்டிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும். மத்திய அரசுடன் அடினான் நல்லுறவு கொண்டிருப்பதால் பிரதமரும் தானும் சரவாக்கை நிர்மாணிப்பதற்கு தங்களாலான அனைத்தையும் செய்து சரவாக்கின் மேம்பாட்டிற்கு கூடுதல்…

சிலாங்கூர் சட்டமன்ற தலைவர் இயோ சரவாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்

  மாநில தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமல் சரவாக் மாநில அரசாங்கம் எதிரணித் தலைவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து வருகிறது. இன்று காலையில், சிலாங்கூர் மாநில சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். "சிபு விமானதளத்தில் இறங்கி விட்டேன்.…

தொழிலாளர்களின் உரிமைக்காக மகாதீர் தெருவுக்கு வருகிறார்

  முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மீண்டும் கோலாலம்பூர் சாலைகளுக்கு வருகிறார். மே தினத்தன்று மகாதீர் முகமட்டும் சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் அஸ்மின் அலியும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) ஏற்பாடு செய்யும் மே தின பேரணியில் கலந்துகொள்கிறார். பிரதமர் நஜிப்புக்கு எதிரானப் போராட்டம் தொடங்கியதிலிருந்து மகாதீர் தெருப்…

முதலமைச்சர் முஸ்லிமாக இருக்க பாரிசானுக்கு வாக்களியுங்கள்

  எதிர்வரும் மே 7 இல் நடைபெறவிருக்கும் சரவாக் மாநில தேர்தலில் அம்மாநில முஸ்லிம்கள் பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முஸ்லிம் தலைவர் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று நங்கா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அன்னுவார் ராபாயி கூறினார். இம்மாநிலத்தில் நாம் பெரும்பான்மையானவர்களாக…

ஹலோ பேராசிரியர் தியோ, இனவாதத்தின் தோற்றுவாய் அம்னோ, தெரிந்துகொள்வீர்

  நாட்டில் இனவாதத்தை எதிர்க்க ஒரே வகைக் கல்வி அமைவுமுறையை அமல்படுத்த வேண்டும் என்று யுகேஎம் பல்கலைக்கழக பேராசிரியர் தியோ கோக் சியோங் கேட்டுக்கொண்டுள்ளார். பேராசிரியர் தியோவின் கூற்று தவறானது. ஏனென்றால், மலேசியாவின் இனவாதப் போக்கிற்கு பல்வகைக் கல்வி அமைவுமுறை அமலில் இருப்பது காரணமல்ல. ஆகவே, ஒரே வகைக்…

பினாங்கு இந்து சங்கம்: சினிமா கொட்டகைகளில் பீர் விற்பதைத் தடை…

பினாங்கு  மாநிலத்தில்  சினிமா  கொட்டகைகளில்  பீர்  விற்பதற்குத்  தடை  விதிக்க  வேண்டும்  என்று  பினாங்கு  இந்து  சங்கம்  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன்  துணைத்   தலைவர்  பி.முருகையா,  அங்கு  பீர்  விற்கப்படுவது    சிறார்கள்  உள்பட  சினிமா  பார்க்கச்  செல்வோரை  பீர்  குடிக்க  ஊக்குவிக்கிறது  என்றார். “சினிமாக்களில்  பீர்  விற்போருக்கு  எதிராக …

நஜிப்பின் சொத்துகளை முடக்கக் கோரி மகாதிர் செய்த மனு ஜூன்…

பிரதமர் நஜீப் துன் ரசாக்கின்  சொத்துக்களை முடக்கி  வைக்கக்  கோரி   முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  வேறு  இருவரும்  செய்துகொண்டுள்ள  மனு  ஜூன்  23-இல்  விசாரணைக்கு  வருகிறது. அதே  நாளில்  அவ்வழக்கைத்  தள்ளுபடி  செய்யக்  கோரி  நஜிப்  செய்து  கொண்டிருக்கும்  மனுமீதும்  விசாரணை  நடைபெறும். இரண்டு  மனுக்கள் …

சரவாக் பிகேஆர் 46 இடங்களில் போட்டி

சரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான், அந்த  எதிரணிக்  கட்சி  46  இடங்களில்  போட்டியிடக்கூடும்  என  அறிவித்ததுடன்  மே  7  தேர்தல்களில்  இப்போதிருப்பதைவிட  இரண்டு  இடங்களில்  கூடுதலாக  வெற்றிபெற  முடியும்  என்றும்  நம்புகிறார். வேட்புமனு  தாக்கல்  செய்யும்  நாளான  திங்கள்கிழமைக்குள்  கட்சி   வேட்பாளர்  பட்டியல்  தயாராகி  விடும்  என்று …

மாணவர் ரிம30,000 புத்தக பற்றுச் சீட்டுகளைப் பறிகொடுத்தார்

பொதுப்  பல்கலைக்கழக  மாணவர்  ஒருவர்  ‘ஆசோங்’  என்பவரிடம்  ரிம30,000  பெறுமதியுள்ள  1மலேசிய  புத்தக  பற்றுச்  சீட்டுகளைக்  கொடுத்து  ஏமாந்தார். ஏப்ரல்  2-இல்  அச்சம்பவம்  நிகழ்ந்தது.  ஏமாற்றப்பட்டதை  அறிந்ததும்  அந்த  22-வயது  மாணவர்  போலீசில்  புகார்  செய்ததாக  ஷா  ஆலம்  போலீஸ்  தலைவர்  ஏசிபி  ஷாபியன்  மாமாட்  கூறினார். “அம்மாணவர் …

அம்னோ சரவாக்கில் கால் பதித்தால் பதவி துறப்பேன்: அடினான் சூளுரை

சரவாக்  முதலமைச்சர்  அடினான்  சாதேம்,  மாநில  பிஎன்  பங்காளிக்  கட்சியான  அம்னோ சரவாக்கில்  நுழைந்தால்  பதவி  துறக்கப்போவதாக  அறிவித்துள்ளார். “அம்னோ  சரவாக்  வருவதை  நாங்கள்  விரும்பவில்லை.  இதை அம்னோ  தலைவரிடமே (பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்)   தெரிவித்திருக்கிறேன். அம்னோ  சரவாக்கில்  கால் வைக்காது. “தேர்தலின்போது  வந்து  உதவி  செய்வார்கள் …

‘கல்வி நிதியை வைத்து வாக்குகள் வாங்கவில்லை’- பிஎன் வேட்பாளர்கள் மறுப்பு

சரவாக்  தேர்தல்:  ஐக்கிய  மக்கள்  கட்சி(யுபிபி)  முன்னாள்  தலைவர்  வொங்  சூன்  கோ,  தாமும்   மற்றுமிரு  பிஎன்  நேரடி  வேட்பாளர்களும்  டுடோங்,  பெலாவான்,  பாவாங்  அசான்  ஆகிய  பகுதிகளில்  வாக்காளர்களுக்குக்  கையூட்டு கொடுப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். மற்றுமிரு  பிஎன்  வேட்பாளர்கள்   டூடோங்கில்   போட்டியிடும்  தியோங்  தாய்  கிங்கும்  பெலாவான் …

19 மலேசிய போராளிகள் சீரியாவிலும் ஈராக்கிலும் சண்டைகளில் மாண்டார்கள்

கடந்த  வார  இறுதியில்  சீரியாவில்  ஒரு மலேசிய  தீவிரவாதி  கொல்லப்பட்டான். இதையும்  சேர்த்து  கடந்த  ஈராண்டுகளில்  சீரியாவிலும் ஈராக்கிலும்  நடந்த  சண்டைகளில்  மொத்தம்  19  மலேசியர்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்  எனப்  போலீஸ்  உயர்  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார். ஏப்ரல்  17-இல்  அப்துல்  கனி  யாக்கூப்,31, அல்-கயிர்  மாநிலத்தில்  ஒரு  சண்டையில் …

சரவாக் சிஎம்: 1எம்டிபி விவகாரம் இங்கு வேண்டாம்

சரவாக்  தேர்தலில்  போட்டியிடும்  கட்சிகள்  சரவாக் விவகாரங்களை  வைத்துதான்  களமிறங்க  வேண்டுமே  தவிர  1எம்டிபி  முறைகேடுகளையும்  மற்ற  தேசிய  விவகாரங்களையும்  கொண்டுவரக்  கூடாது  என  மாநில  பிஎன்  தலைவரும்  முதலமைச்சருமான  அடுனான்  சாதேம்  கூறுகிறார். “எதிரணிகளுக்கு,  குறிப்பாக  டிஏபிக்குச்  சவால்  விடுக்கிறேன்: தேசிய  விவகாரங்களை  சரவாக்  கொண்டுவர  வேண்டாம், …

தேர்தல் காலத்தில் இனவாதம் உச்சக்கட்டம் அடைகிறது, பிடிஎன் தலைவர்

மலேசியாவில்  தேர்தல்  காலங்களில்  இனவாதம்  தலைவிரித்தாடத்  தொடங்கி  விடுகிறது  என்கிறார்  தேசிய  குடிமையியல்  பிரிவுத்  தலைவர்  இப்ராகிம்  சாஆட். நேற்றிரவு  ஷா ஆலாமில்  கருத்தரங்கு  ஒன்றில்  பேசிய  அவர், 1970, 80-களுடன்  ஒப்பிட்டால்  இப்போது  இனவாதம்  அவ்வளவு  மோசமாக  இல்லை  என்றார். “தேர்தல்களின்போதுதான்  பிரச்னை. சில  தரப்புகள்  அரசியல் …

புவா: 1எம்டிபி அறிக்கையில் வெட்டப்பட்ட வரிகள் முக்கியமானவை

1எம்டிபி   அறிக்கையிலிருந்து  பொதுக் கணக்குக்  குழுத்  தலைவர்  ஹசான்  அரிப்பின்  அகற்றிய  வரிகள்  விசாரணைக்கு  முக்கியமானவை  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. அறிக்கையிலிருந்து  குறிப்பிட்ட  வரிகளை  எடுத்து  விட்டதை  ஒப்புக்கொண்ட  ஹசான்,  முக்கியமானவை  அல்ல  என்று  நேற்றுக்  கூறியிருந்தது  குறித்து  புவா  கருத்துரைத்தார். ஆனாலும் …

தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவீர்: சுஹாகாம் மீண்டும் கோரிக்கை

மலேசிய  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்)  1948 தேசநிந்தனைச்  சட்டத்தை  அகற்ற  வேண்டும்  என்று  மீண்டும்  வலியுறுத்தியது. சுஹாகாமின்  2015  ஆண்டறிக்கையை  வெளியிட்டபோது  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி  ஆகம்  இந்தக்  கோரிக்கையை  முன்வைத்தார். தேச  நிந்தனைச்  சட்டத்துக்கு  கடந்த  ஆண்டு  ஏப்ரலில்  சில  திருத்தங்கள்  செய்யப்பட்டன. “ஆனாலும்,  கூட்டரசு  அரசமைப்பு …

அவை எம்எச்370 விமானத்தின் பாகங்களே என்பது ‘கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது’

மொசாம்பிக்  கடற்கரையோரம்  கண்டெடுக்கப்பட்ட  விமானத்தின்  உடைந்த  பாகங்கள்  இரண்டும்  எம்எச் 370-இன்  பாகங்கள்தான்  என்பது  “கிட்டத்தட்ட  உறுதி”  என்கிறார்கள்  ஆஸ்திரேலிய  ஆய்வாளர்கள். அவற்றின்  அளவையும் சாயம்  முதலியவற்றையும்   வைத்து  அவர்கள்  அம்முடிவுக்கு  வந்திருக்கிறார்கள். மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370,  2008 மார்ச்  8-இல்  239  பயணிகளுடனும்  பணியாளர்களுடனும்  கோலாலும்பூரிலிருந்து …

குளிர்சாதன வசதிக்கு ரிம10 கட்டணமா? உணவகத்தை அமைச்சு விசாரிக்கிறது

குளிர்சாதன  வசதிக்காக  ரிம10  கட்டணம்  வசூலித்த  கோலாலும்பூர்  உணவகத்தை  உள்நாட்டு  வாணிக,  கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு  விசாரிக்கிறது. குளிர்சாதன  வசதிக்கு  உணவகம்  கட்டணம்  வசூலித்ததைக்    காண்பிக்கும்  ரசீதை  ஒரு  வாடிக்கையாளர்  ஒருவர்  சமூக  ஊடகங்களில்  பதிவிட்டிருந்ததை  அடுத்து  அமைச்சு  நடவடிக்கையில்  இறங்கியது. ரசீதைத்  தயார்  செய்யும்போது  தவறு …

கப்பலில் ஏற்பட்ட தீயில் ஒருவர் பலி, ஐவர் காயமடைந்தனர்

பினாங்குக்கு  அப்பால்  Heung-A Pioneer  என்னும்  கப்பலில்  தீ மூண்டு  வெடிப்பு  ஏற்பட்டதில்  பணியாளர்களில்  ஒருவர்  கொல்லப்பட்டார்,  ஐவர்  காயமடைந்தனர். கப்பலில்  தீ  பற்றியதாக   நேற்றிரவு  10மணி  அளவில்  அவசர  அழைப்பு  ஒன்று  வந்ததாக  பினாங்கு துறைமுகம் சென்,பெர்ஹாட் (பிபிஎஸ்பி) இடைக்கால  தலைமைச்  செயல்  அதிகாரி  ரோஸிஹான்  அடி …