நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அஞ்சுகின்றனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணி 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது. மலேசிய குடும்பங்களின்…
தாய்லாந்து மன்னர் பூமிபோல் காலமானார்
உலகில் மிக நீண்ட காலத்திற்கு ஆட்சியிலிருந்த 88 வயதான தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுலியாதேஜ் இன்று மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை அறிக்கை தெரிவித்தது. 1946 இல் சிம்மாசனமேறிய மன்னர் பூமிபோலின் மரணம் தாய்லாந்து மக்களுக்கு பேரிடியாகும். பல்லாண்டுகளாக தாய்லாந்தில் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும்…
ஆட்சியாளர்கள் கூட்டத்தில் பேரரசர் பங்கேற்பு
இன்று கோலாலும்பூர் இஸ்தானா நெகராவில் இரண்டாம் நாளாக நடைபெறும் 242ஆவது ஆட்சியாளர் கூட்டத்தில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷாவும் கலந்து கொண்டார். ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் தலைமையில் நடைபெறும் அக்கூட்டத்தில் பகாங் சுல்தானைத் தவிர்த்து மற்ற மாநில ஆட்சியாளர்கள் அனைவரும் அவர்களின் …
தேர்தல் தொகுதி சீரமைப்புக்கு எதிராக பிகேஆரும் டிஏபியும் 50க்கு மேற்பட்ட…
பிகேஆர் மற்றும் டிஏபி-இன் சிலாங்கூர் கிளைகள் தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்புக்கு எதிராக 50க்கு மேற்பட்ட ஆட்சேபனைகளைத் தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்தன. தேர்தல் தொகுதிச் சீரமைப்பு செய்யப்பட்டதில் நியாயமில்லை என்றும் அது அரசியல் சார்புள்ளது என்றும் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் …
குவான் எங்குக்கு பினாங்கையும் அவரையும் துப்புரவுபடுத்த துடைப்பம் அன்பளிப்பு
இன்று ஒரு சிறு கும்பல் பினாங்கு கொம்டாரில் கூடி பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பெர்சேக்கு ஆதரவளிப்பதற்குமுன் அவரையும் பினாங்கையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. “பெர்சேயோ மஞ்சள் டி- சட்டைகளோ இனி தேவையில்லை”, என பெர்சத்துவான் கெபாஜிகான் இன்சான் மூலியா என்ற என்ஜிஓ-வின் பிரதிநிதியான அமினா …
முன்னாள் ஐஜிபி: குற்றங்களைக் கண்டுக்கொள்ளாதிருக்க மாதம் ரிம2 மில்லியன் கொடுக்க…
முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ், மூசா ஹசான், குற்றச்செயல் கும்பல்கள் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டுக்கொள்ளாதிருக்க மாதந்தோறும் ரிம2மில்லியன் கொடுக்க முன்வந்தார்கள் எனக் கூறினார். “அக்கும்பல்கள் சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருள் விற்பனை, பெரும் வட்டிக்குக் கடன் கொடுப்பது போன்ற அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர இடம்கொடுத்தால் …
மெட்ரிகுலேஷன் மாணவர்களின் அலவன்ஸ் தொகை அக்டோபர் 18க்குள் கொடுக்கப்படும்
ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடைப்பட்டிருக்கும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான அலவன்ஸ் தொகை அக்டோபர் 18க்குள் கொடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு கூறியது. “அமைச்சு நாடு முமைமையும் 15 மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயிலும் 21,000 மாணவர்களுக்கு அக்டோபர் 18க்குள் அலவன்ஸ் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்தும். அவர்களின் சேமிப்புக் கணக்குகளில் அது சேர்ப்பிக்கப்படும்”, என்று …
ஜிஎஸ்டி- யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்
போலீஸ் உத்தரவிட்டும் கலைந்து செல்லாமல் ஜிஎஸ்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 73பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. ஆனால், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு எம்பிகளும் இருந்தனர்- டாக்டர் டி.ஜெயகுமாரும் (சுங்கை சிப்புட்), டாக்டர் முகம்மட் …
ஜாஜிட்: சவூதி அராபியாவில் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
மலேசியா, சவூதி அராபியாவில் இரு நாட்டு நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ள பல உள்கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறது. அவற்றுள் மக்காவிலும் ஜெட்டாவிலும் சாலை அமைக்கும் பணிகளும் அடங்கும் எனத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார். ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு சவூதி சென்றுள்ள அஹ்மட் ஜாஹிட் …
மகாதிர்: என்னை நசுக்க வெறிபிடித்து அலையும் நஜிப் எனது சமையல்காரர்…
தமது மனோதிடத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் தாம் உண்ணும் உணவுக்கு பலத்த அடி கொடுக்கப் பார்க்கிறார் என்று பிரதமர் நஜிப் மீது குற்றம் சாட்டுகிறார் முன்னாள் பிரதமர் மகாதிர். அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை எப்படி அரசாங்கம் மீட்டுக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டிய மகாதிர், இப்போது அவரது அதிகாரியையும்…
ஜமாலையும் சிகப்புச் சட்டையினரையும் பிரதமர் கண்டிக்க வேண்டும்: என்ஜிஓ-கள் கோரிக்கை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுசையும் அவருடைய சிகப்புச் சட்டைக் கூட்டத்தையும் கண்டிக்க வேண்டும் என 13 அரசு-சார்பற்ற அமைப்புகளின்(என்ஜிஓ) குழு ஒன்று கேட்டுக்கொண்டிருக்கின்றது. பெர்சத்துவான் அலிரான் கெசெடாரான் நெகரா(அலிரான்), சுவாராம், பூசாட் கோமாஸ், தேசிய மனித உரிமைக் கழகம் …
அமனா பேராக்கில் 22 இடங்களில் போட்டியிடத் திட்டம்
அடுத்த பொதுத் தேர்தலில் பார்டி அமனா நெகரா( அமனா) பேராக்கின் 59 சட்டமன்ற இடங்களில் 22-க்குப் போட்டியிடத் திட்டமிடுகிறது. “பேராக் அமனா போட்டியிடுவதற்குப் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டிருக்கிறது. அது குறித்து பேராக் பக்கத்தான் ஹராபானிடம் தெரிவிக்கும். “14வது பொதுத் தேர்தலில் 22 சட்டமன்ற இடங்களில் போட்டியிட அமனா …
‘காதில் பூ சுற்ற வேண்டாம், நேரடிப் பதில் தேவை’: 1எம்டிபி…
மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 1எம்டிபி விளக்கக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் அருள் கண்ட கந்தசாமி விளக்கமளித்து முடித்த பின்னர் பல மாணவர்கள் எழுந்து நின்று 1எம்டிபி ஊழல் தொடர்பில் தங்களுக்கு நேரடிப் பதில் தேவை என்று முழக்கமிட்டனர். இரவு 11.15 அளவில் அந்நிகழ்வு முடிவுக்கு வரவிருந்த நேரத்தில் நான்கு …
அருள்: 1எம்டிபி கணக்காய்வு நிறுவனம் விலகிக் கொண்டது, காரணம் அதனால்…
அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-இன் 2015ஆம் ஆண்டுக் கணக்குகளை அந்நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான டிலோய்ட்-டால் முடிக்க இயலவில்லை அதனால்தான் அது விலகிக் கொண்டது. இதனை 1எம்டிபி தலைவர் அருள் கந்தசாமி தெரிவித்தார். அருள், நேற்றிரவு மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளக்கமளிப்பு நிகழ்வு ஒன்றில் பேசினார். கணக்காய்வுக்குத் தேவையான …
ஜமாலின் செயல்கள் அம்னோவைப் பிரதிபலிக்க மாட்டா- நஸ்ரி
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசின் சொல்லும் செயலும் அம்னோவைப் பிரதிபலிப்பதாகக் கருதக் கூடாது என்பதைச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் மீண்டும் வலியுறுத்தினார். ஜமால் தனிப்பட்ட முறையில்தான் பேசுகிறார், செயல்படுகிறார் என்று நஸ்ரி கூறியதாக அஸ்ட்ரோ அவானி அறிவித்தது. 198 …
ஹுஸ்னி பெர்சத்துவில் சேர்வாரா?
நிதி அமைச்சர் II பதவியிலிருந்து விலகிய பிறகு அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா பெரும்பாலும் அரசியல் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். ஆனாலும் அவர் அம்னோவிலிருந்து பிரிந்தவர்களால் அமைக்கப்பட்ட பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் சேரப்போகிறார் என்று வதந்திகள் உலவுகின்றன. இது உண்மையா என்று மலேசியாகினி ஹுஸ்னியிடம் வினவியதற்கு, “நான் …
எம்ஏஎஸ்: கஜானாவிலிருந்து கூடுதல் நிதியுதவி தேவைப்படாது
மலேசிய விமான நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை வந்திருப்பதால் கஜானா நேசனல் பெர்ஹாட்டிடமிருந்து கூடுதல் நிதியுதவி அதற்கு இனி தேவைப்படாது என்று அதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெல்லு கூறினார். இவ்வாண்டு நவம்பரிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்வரை நிறைய முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பது அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது.…
ஆட்சியாளர்கள் நிர்வாகத்தில் தலையிட மாட்டார்கள்- தெங்கு அட்னான்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் குடிமக்கள் பிரகடனம் ஆட்சியாளர் மன்றத்துக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் ஆட்சியாளர்கள் நாட்டு நிர்வாகத்தில் தலையிடும் வாய்ப்பு குறைவு என்கிறார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நேரில் சென்று சந்தித்தும் …
பாஸ்: பட்ஜெட் தொடர்பில் நஜிப் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது,…
என்னதான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2017 பட்ஜெட்டில் மக்களுக்கு நிறைய உதவிகளும் நன்மைகளும் உண்டு என்று கூறினாலும் மலேசியர்கள் அதை நம்ப மாட்டார்கள் என்கிறது பாஸ். “அவர் பேசுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆனால், அதை மக்கள் நம்புவது கடினம்”, என பாஸ் துணைத் தலைவர் துவான் …
ஜமாலின் திட்டங்களுக்குப் பிரதமர் முடிவு கட்ட வேண்டும்: கெராக்கான் இளைஞர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிகப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசின் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கெராக்கான் இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இயக்கத்துக்கும் அம்னோவுக்கும் தொடர்பில்லை என்று ஜமாலும் சில அம்னோ தலைவர்களும் கூறிக்கொண்டாலும் ஜமால் சுங்கை புசார் அம்னோ …
ஒரு கட்சிக்குச் சாதகமான வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படும் நடவடிக்கையை…
தேர்தல் ஆணையம் முன்மொழிந்திருக்கும் தேர்தல் தொகுதி சீர்திருத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் மனுவை ஈப்போ பாரட் நாடாளுமன்ற தொகுதி டிஎபி உறுப்பினர்கள் இன்று ஈப்போவில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். ஆணையத்தின் முன்மொழிதலுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வெறும் 100 வாக்காளர்களே போதும் என்ற போதிலும், கடந்த சில வாரங்களில்…
முஸ்லிம்- அல்லாதவர்’ என்று அறிவிக்கக் கோரும் பெண்ணின் வழக்கை மறுபடியும்…
தம்மை இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டவர் அல்லர் என்று அறிவிக்க வேண்டுமென்று ரோஸ்லிசா இப்ராகிம் தொடுத்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மறுவிசாரணைக்காக அவ்வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்புவதாகவும் வழக்கை முன்னர் விசாரித்த நீதிபதி அல்லாமல் வேறொருவரை வைத்து விசாரிக்க …
பஹசா மலேசியா பேசத் தெரியாதவர்களின் குடியுரிமையைப் பறிப்பது பெர்சத்துவின் கொள்கையாக…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆட்சிக்கு வந்தால் அது தேசிய மொழியை நன்கு அறிந்திராவர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதை அரசாங்க கொள்கையாக்குமா என்று டிஎபி ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ் கேட்டுள்ளார். இக்கேள்வியை அவர் எழுப்பியதற்கு காரணம் ஈராண்டுகளுக்கு முன்பு இவ்வாறான ஆலோசனை…
2015 -இல் பிரதமர் கணக்கில் ரிம3.4மில்லியன் போடப்பட்டது: சரவாக் ரிப்போர்ட்
2015 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அம்பேங்க் கணக்குகளில் மொத்தம் ரிம3.4மில்லியன் போடப்பட்டதாக சரவாக ரிப்போர்ட் புதிதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அக்கணக்குகளை எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நிக் பைசல் அரிப் கமில் கவனித்து வந்தார் என அது …


