உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது: பிரதமர் மோடி பேச்சு

காந்திநகர், ஜன. 8– குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து முன்னேற விரும்புகிறார்கள்.…

குஜராத் துறைமுகத்தை தகர்க்க தீவிரவாதிகள் வந்தனர்: வெடிகுண்டு படகு பற்றி…

புதுடெல்லி, ஜன. 7– இந்தியாவில் மீண்டும் ஒரு தடவை மிகப் பெரிய நாசவேலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருப்பதால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை…

காஷ்மீரில் தொடரும் ஷெல் தாக்குதல்: ‘பொதுமக்கள் வெளியேறுகின்றனர்’

பொதுமக்கள் வாழும் பகுதியில் விழுந்த ஷெல் ஒன்று   சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தானப் பகுதியிலிருந்து தொடரும் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்ப, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டதாக இந்தியா கூறுகிறது. ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் மோசமாகக் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும்…

உள்நாட்டுப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது: ராஜ்நாத் சிங் உத்தரவு

புதுடில்லி:உள்நாட்டுப் பாதுகாப்பில் யாருடனும் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்' என மத்திய உளவுத் துறை, துணை ராணுவப் படைகள் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். "ரா' இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பு, "ஐ.பி.' மத்திய உளவுத் துறை, இந்திய-திபெத்திய எல்லைக்…

படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளே: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர்

குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே இந்தியக் கடல் பகுதியில் வெடித்துச் சிதறிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள், பயங்கரவாதிகள்தான் என ஆதாரங்கள் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். இந்தப் படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்கள் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக பாதுகாப்புப்…

மஹிந்த ராஜபக்ச இந்து மதத்தை சேர்ந்தவர்: பா.ஜ.க தேசிய செயலாளர்…

இந்திய அரசியல் சட்டப்படி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மத்திய அரசு உரிய உதவி செய்யும். இலங்கையில் தமிழர்கள்…

காஷ்மீரில் ஆட்சிமைப்பது பற்றி மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அமித் ஷா…

புதுடெல்லி, ஜன.5- காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அமித் ஷாவுடனான சந்திப்பு முன் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பா.ஜ.க. தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா கூறுகையில், "அவசர கதியில் எந்த முடிவையும்…

மீத்தேன் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க கூடாது: உதயகுமார் பேட்டி

திருவிடைமருதூர், ஜன. 5– காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கை விடக் கோரி கும்பகோணம் செட்டி மண்டபத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேரும் அடங்குவர். இன்று 5–வது நாளாக உண்ணாவிரதம்…

விமானத்தைக் கடத்த பயங்கரவாதிகள் திட்டம் எதிரொலி: விமான நிலையங்களில் பாதுகாப்பு…

உளவுத் துறை எச்சரிக்கையை அடுத்து, கொல்கத்தா விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு ஊழியர்கள். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் அதிகாரிகள். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான்…

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன், பயங்கரவாதிகள் வந்த இரண்டாவது படகு!

மும்பை : இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன், பயங்கரவாதிகள் வந்த இரண்டாவது படகு மாயமாகியுள்ளது. இந்த படகை தேடும் பணியில், கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 31ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் உள்ள, கீத் பந்தர் என்ற இடத்தில்…

ஆராய்ச்சிப் பணிகளுக்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்படும்: மோடி உறுதி

மும்பை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ். அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உறுதி அளித்தார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில்…

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 2 வீரர்கள் உள்பட மூவர் பலி

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண். ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, சம்பா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அனில் மஹோத்ரா…

வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தினால் 5 ஆண்டு சிறை: மத்திய அரசு…

வெளி மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என "பெஸ்பருவா குழு' அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை…

நிர்வாகத் தோல்வியே தீவிரவாதத்துக்கு காரணம்: ரகுவர் தாஸ்

நக்ஸல் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு நிர்வாகத் தோல்வியே முக்கியக் காரணம் என்று தெரிவித்த ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வர் ரகுவர் தாஸ், தனது அரசு நல்லாட்சி தருவதுடன் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் உறுதி கூறினார். ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக செய்தியாளர்களை அவர் ஜாம்ஷெட்பூரில் வெள்ளிக்கிழமை…

குஜராத் கடலில் சுற்றி வளைக்கப்பட்டதால் படகை வெடிக்கச் செய்த பாகிஸ்தான்…

குஜராத் மாநில கடற்பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்ததால், அதிலிருந்தவர்கள் படகை வெடிக்க வைத்து தகர்த்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் மார்க்கமாக நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைப்போன்று மீண்டும் அதுபோன்ற தாக்குதல்களை…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை வெளியிட்ட தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதலை ராணுவம் மேற்கொண்டபோதிலும் இந்திய தரப்பில் உரிய பதிலடி…

ஏர் கலப்பை ஏழு பிறப்பிற்கும் வாழ்வளிக்கிறது!

விவசாயத்தை தொழிலாக கொண்ட நமது மண்ணில், புழுதியில் கிடந்து நாம் பட்ட கஷ்டம் போதும் என்று குடும்ப பெரியவர்கள் முடிவெடுத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் படிப்பு படிக்க வைக்கின்றனர். பொன் விளையும் பூமியை கூட விற்று பிள்ளைகளை கம்ப்யூட்டர் கல்வி படிக்க வைக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் படித்த கல்வி அவர்களது…

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 64 புலிகள் உயிரிழந்துள்ளன

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 64 புலிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்டையாடப்படுவது குறைந்தாலும் இதர காரணங்களால் புலிகள் இறப்பு அதிகரித்துள்ளன.   இதில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக, 15 புலிகள் உயிரிழந்துள்ளன என்று தேசிய புலிகள் காப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. முதுமை, எல்லையை வகுத்துக்…

இந்தியா பாகிஸ்தான் மோதலுடன் துவங்கிய புத்தாண்டு

இந்திய பாகிஸ்தான் எல்லை ராணுவம் (ஆவணப்படம்)   புத்தாண்டன்று இந்திய ராணுவத்தினர் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பொது எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான்கு பாகிஸ்தானிய படையினரும் ஒரு இந்திய ராணுவ சிப்பாயும் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த…

கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு:…

"அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அனைவரும் தங்கள் மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, அதன் கலாசாரத்தைப் பின்பற்றினால், மதமாற்றத்துக்கு அவசியமே ஏற்படாது…

காஷ்மீரில் ஆட்சி: பாஜகவுக்கு பிடிபி மறைமுக அழைப்பு

மெஹபூபா முப்தி "சட்டப்பேரவைத் தேர்தலில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (பிடிபி), ஜம்முவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். இதன்மூலம், பாஜகவுக்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஜம்மு} காஷ்மீரில் சட்டப்பேரவைத்…

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியாவின் பதிலடியில் 4 பேர் பலி

சம்பா எல்லைப் பகுதி (கோப்புப் படம்) ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பாவில் சர்வதேச எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து,…

ஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ சிரமமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை கடைபிடித்து வருகின்றனர். பீட் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல பகுதிகளில் உள்ள ஆழமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற தங்கள் குழந்தைகளை கயிறுகளால் கட்டி சிறிய ஜாடியுடன் அனுப்புகின்றனர். இவ்வாறு…