ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம்: மேனகாகாந்தி

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்பதால் பா.ஜ.க எதிர்ப்பதாக மேனகாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சு நடத்தியும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அலங்காநல்லூர் பாலமேடு பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். இது பற்றி…

ஜல்லிக்கட்டுக்கு (மஞ்சுவிரட்டு ) அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம்…

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீர விளையாட்டாகவும் கலாசாரச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விழாவை இந்த வருடம் நடத்தியே தீர வேண்டும். ஒருமித்த தமிழ் மக்களின் இத்தகைய உணர்வறிந்து…

தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாக மாற்றும் வீரமணியின் திரிபு வேலையை…

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், ‘திராவிடர் திருநாள்’ – திருவள்ளுவராண்டு 2046 (2015) தை 2, 3, 4 நாட்களில் (சனவரி 16, 17, 18), சென்னையில் நடப்பதாக அறிவித்துள்ளார்கள். தமிழர் திருநாள் என்று நீண்ட நெடுங்காலமாக தமிழ் அறிஞர்களாலும், தமிழக அரசியல் தலைவர்களாலும்…

பாஜகவில் இணைந்தார் கிரண் பேடி: கேஜரிவாலை எதிர்த்துப் போட்டி?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவருமான கிரண் பேடி பாஜகவில் இணைந்தார். கட்சி மேலிடம் விரும்பினால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

தீபாவளி, புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாத ஜெ. பொங்கலுக்கு வாழ்த்தினார்

சென்னை: அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி: "உலகெங்கும் வாழ்கின்ற…

குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

குவைத்தில் கடந்த ஆண்டு 559 இந்தியர்கள் இறந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் என்றும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குவைத்தில் 2014ம் ஆண்டு 559 இந்தியர்கள் இறந்த விவரம் தூதரகத்தில் பதிவு…

வெளிநாட்டு கறுப்புபணம் கணக்கிடவில்லை:மத்திய அரசு

புதுடில்லி : வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, முன்னாள் மத்திய தகவல் துறை கமிஷ்னர் ஷைலேஷ் காந்தி கேட்ட விபரங்களுக்கு பதிலளித்த மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.…

உ.வே. சாமிநாதரின் நினைவிடத்தில் தருண் விஜய் எம்.பி. மரியாதை

உத்தரகாண்ட் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தருண் விஜய், இன்று திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் உள்ள தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் நினைவிடத்துக்கு வந்து, அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருண் விஜய், திருக்குறள் வாழ்வியல் தத்துவங்களை விளக்கக் கூடியதாக…

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள்…

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட…

பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் மூலம் நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதஞ்சலி யோகா பீடம் மக்கள் தினமும் பயன்படுத்தும் சத்துமாவு, சோப்புகள், ஷாம்பு, தோல்…

நித்யானந்தா ஆண்மை உள்ளவர்: மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

நித்யானந்தாவால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும் என கர்நாடக சிஐடி பொலிசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நித்யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை…

கச்சதீவில் இந்திய மீனவர்களை சரமாரியாகத் தாக்கிய இலங்கைக் கடற்படை

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக தெரிவித்தும், போதை பொருட்கள் கடத்தியதாக பழி சுமத்தியும் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைபிடித்து செல்வதும்…

ஐ.நா.சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும்: நேபாள துணை…

காத்மாண்டு, ஜன.12- ஐக்கிய நாடுகள்சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என நேபாள துணை ஜனாதிபதி பர்மானந்தா ஜா வலியுறுத்தியுள்ளார். உலக இந்தி தினத்தையொட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய அவர் கூறியதாவது;- நேபாள மொழிகளுக்கும் இந்திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது.…

தமிழர்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும்!

இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கிற அநீதியை எதிர்த்தும், அரசமைப்புச் சட்டத்தில் கண்ட 22 இந்திய மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகள் ஆக்கக் கோரியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் பேசிய…

கறுப்பு பண மீட்பு விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது:அமித் ஷா

புது டில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் பா.ஜ.க., சார்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை…

சுனந்தாவின் பணியாளர் போலீசாரிடம் வாக்குமூலம்! சசிதரூரிடம் போலீசார் விசாரணை?

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூரிடம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிதரூரின் மனைவி சுனந்தா. இவர் கடந்த ஆண்டு டெல்லி நட்சித்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சுனந்தா…

ஆட்சி நடத்தவோ, போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை: அரவிந்த் கேஜரிவால்

"ஆட்சியை திறமையாக நடத்தவோ, வீதியில் இறங்கிப் போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை; ஆனால், இந்த இரண்டையும் நாங்கள் அறிவோம்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவாலை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.…

ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்

ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது. மொத்தம் 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும் கைப்பற்றின. ஒமர்…

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புதிய அதிபருக்கு தமிழகத்…

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என புதிய அதிபர் மைத்ரி பாலா சிறீசேனாவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி (திமுக): இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு…

நேதாஜி குறித்த ரகசியம் வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும்: மத்திய…

நேதாஜி குறித்த உண்மை வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவ படையை நிறுவினார். ஜேர்மன் நாட்டின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். சுதந்திர…

தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர…

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான். ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது…

பேரழிவு நியூட்ரினோ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் : சீமான்…

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,  ‘’தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடந்தன. அப்போதே அதனைக் கண்டித்து அந்தப் பகுதி…

மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்சே சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  ராமதாசு அறிக்கை: ’’இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி இராஜபக்சே மக்கள் சக்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறான். பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின்…