அ.தி.மு.க., ஓட்டு வங்கி சிதறும்! இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர் “பகீர்’

தஞ்சாவூர்: "அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் இருந்து, ஓட்டு சிதறி, பா.ஜ.,வுக்கு போய் சேரும்,'' என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார். தஞ்சையில், அவர் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீத ஓட்டு, தி.மு.க., ஓட்டு…

முதல்வர் பதவியில் இருந்து விலகியது தவறு: கேஜரிவால் ஒப்புதல்

முதல்வர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு தவறானது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியைப்…

காவிரி: கர்நாடகத்தின் புதிய பணிகளுக்கு தடை கோருகிறது தமிழகம்

கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்ற திட்டப்பணிகள் மேற்கொள்வதை தடை செய்யக் கோரி தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தரப்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வெள்ளிகிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு…

தமிழர்கள் வாழவேண்டுமெனில் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சீமான்

தமிழர்கள் வாழ்வதற்கு ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள அவர், எம்.ஜி.ஆர். வழியில் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கட்சி அதிமுக. அதனால் தான் சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம்…

பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கில் போடுவதா?: முலாயம்

 "பாலியல் பலாத்கார குற்றத்துக்கு இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு' என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங்…

தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தினார் மோடி

நரேந்திர மோடி   பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை வெளிப்படியாக ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடுவதற்காக அவர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது மனைவி தொடர்பான தகவல்களை முதல் முறையாக, அதிகாரப்பூர்வமாக, பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.…

கன்னத்தில் அறைவிட்ட நபரை சந்தித்த கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் தன் கன்னத்தில் அறைவிட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் சுல்தான்புர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, லாலி என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரை நெருங்கி மாலை அணிவித்த பின்னர் அவரது கன்னத்திலும் தாடையிலும் ஓங்கிப்…

பாஜக கூட்டணி வென்றால் நதிநீர் பிரச்னைகள் தீரும்: வைகோ

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து நதிநீர் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த வைகோ, நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: அதிமுக, திமுக இல்லாத…

மணப்பெண் கொடுங்கள் வாக்களிப்போம்!: ஹரியாணா இளைஞர்கள் கோரிக்கை

எங்களது வாக்குக்கு பிரதிபலனாக எங்களுக்கு மணப்பெண் கொடுங்கள்' என்று வித்தியாசமாக ஹரியாணா இளைஞர்கள் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் இன்றளவும் பெண் சிசுக் கொலை சர்வ சாதாரணமாக நடந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் குற்றம்சாட்டுகின்றன. அதனால், அந்த மாநிலத்தில் பாலின விகிதாசாரத்தில் 1,000 ஆண்களுக்கு, 879 பெண்கள்…

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் நாடு ஆபத்தை சந்திக்கும்:…

 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் அது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும்…

நாட்டின் பாதுகாப்பு பலவீனமானதற்கு அந்தோணி விளக்கம் அளிக்க வேண்டும்: நரேந்திர…

 நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி கூறியதாவது: பாதுகாப்புப்…

அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்

டெல்லியில் சுல்தான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வருகின்ற 10ம் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சுல்தான்பூர்…

பிரதமரானால் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்: நரேந்திர மோடி

(கோப்புப் படம்) "நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மோடி கூறியதாவது: எனது கட்சி எனக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை…

பாஜக தேர்தல் அறிக்கை: சோனியா ஆவேசம்

பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் "வகுப்புவாத செயல் திட்டம்' என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பேசுகையில், "பாஜக வெளியிட்டுள்ள "வகுப்புவாத செயல்…

உலகின் அதிவேக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த இந்தியா

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதித்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ராஜஸ்தானில் உள்ள போக்ரான் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300…

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று ஆரம்பம்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு…

சிறந்த நிர்வாகமும்; வளர்ச்சியுமே குறிக்கோள் ‘- பா.ஜ., தேர்தல் அறிக்கை…

புதுடில்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ., கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டு இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்த தேர்தல் வாக்குறுதியில்…

தேவயானி விவகாரத்தை விடப்போவது இல்லை

புதுடில்லி: ""தேவயானி விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் வரை, அமெரிக்காவை தொடர்ந்து வற்புறுத்துவோம்,'' என, வெளியுறவு செயலர், சுஜாதா சிங் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி, "விசா' மோசடி செய்தார் என தெரிவித்து, அமெரிக்க போலீசாரால், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.…

காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரத்தில் களமிறங்கிய கார்த்திக்?

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது, நாடாளும் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ், ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்தனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: அத்வானி

"சிறந்த நிர்வாகியான நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர்' என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டினார். குஜராத் மாநிலம் காந்திநகரில் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றபோது அத்வானி இவ்வாறு பாராட்டினார்.…

மோடியின் 3டி பிரசாரம் ஆரம்பம்: டெல்லி பிரசாரம் ரத்து

புதுடெல்லி, ஏப்.6- தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். அதாவது, 3டி ஹாலோ கிராபிக் மூலம்…

செலவுக் கணக்கை குறைத்து காண்பித்தால் பதவி பறிப்பு: தேர்தல் ஆணையர்…

தேர்தல் பிரசாரத்தின்போது செலவிடப்படும் கணக்குகளை ஆணையத்திடம் குறைத்துக் காண்பித்தால், வெற்றி பெற்ற வேட்பாளரின் பதவி பறிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்ற உமேஷ் யாதவ் என்ற வேட்பாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதி இழப்புக்கு ஆளான சம்பவத்தை அவர் நினைவுபடுத்தினார்.…

மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு மரண…

மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்ட 3 பேர். (கோப்புப் படம்)   மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விஜய் ஜாதவ், முகமது சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி ஆகிய மூவருக்கும் மரண…