காங்கிரஸ் மூழ்கும் கப்பல்: அருண் ஜெட்லி தாக்கு

புதுடில்லி: காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என கூறிய பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, காங்.,மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிட மறுத்து வருவதாக கூறினார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தோல்வியடைவோம் என்ற…

நெருக்கடியில் கருணாநிதி: மு.க.அழகிரி

கருணாநிதியைச் சுற்றியுள்ள துரோகிகளிடமிருந்து அவரையும் திமுகவையும் காப்பாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும் மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க. அழகிரி கூறினார். திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து, மு.க.அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திமுக…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை: இலங்கை

இலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து…

இந்திய தேர்தல்: பணத்துக்கேற்ப செய்திபோடும் ஊடகங்கள்?

இந்தியாவின் அச்சங்கங்கள் அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 தினசரிகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த தினசரிகள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் மாபெரும் பிரசுரிக்கும் நிறுவனம் ஒன்று, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிதழ்கள்,…

வெறுத்து ஒதுக்கப்பட்ட விதவைகள்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு இந்துக்கள் புனித யாத்திரையை மேற்கொண்டு புனித நீராடுகின்றனர். இந்த ஊரில் தான் இந்தியாவில் விதவைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.இந்தியாவை பொறுத்தவரையில் விதவைகள் என்றால் கெட்ட சகுணம், சூன்யம் செய்பவர்கள் என்று பார்க்கப்படுகிறது. விருந்தாவனில்…

மோடியால் பிரதமராக முடியாது: ராகுல்

புதுடில்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நகைச்சுவையானவை என கூறியுள்ள ராகுல், பா.ஜ., மற்றும் மோடியால் அதிகாரத்துக்கு வர முடியாது என கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பா.ஜ., சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா?…

பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  கேள்வி எழுப்பினார். காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் மாநாட்டில் அவர் பேசியதாவது: கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்பதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என…

ஊடகவியலாளர்களை மிரட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்

மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மோடிக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்புவோம்' என்று அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பணத்துக்கு ஆசைப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் மோடிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தொலைக்காட்சி சேவைகளும் விலை போய்விட்டன. இது…

தேவயாணி கோப்ரகடே மீது அமெரிக்காவில் புதிய வழக்குப் பதிவு

வீட்டுப் பணியாளரை அமெரிக்கா வரவழைத்ததில், விசா முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு, நீதிமன்றத்தில் மீண்டும் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. புதிய வழக்கின் அடிப்படையில், அந்நாட்டு நீதிமன்றம் தேவயானி கோப்ரகடேவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே மீதான விசா…

ஈழத் தமிழர் நலன் காக்கும் அரசாக மோடி அரசு திகழ…

கூட்டாட்சி கொள்கை; மதச்சார்பற்ற தன்மை; சமூக நீதி; ஈழத் தமிழர் நலன் காக்கும் அரசாக நரேந்திர மோடி அரசு திகழ வேண்டும் என தில்லி வழக்குரைஞர் மாநாட்டில் வைகோ முழக்கம் இட்டார். புது டில்லியில் தல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று (14.03.2014) வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தலைமையில், நரேந்திர…

தமிழக மீனவர்கள் தொடர் விடுதலை: இலங்கையுடன் பேச்சு நடத்த தமிழக…

முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கைச் சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து, இலங்கை மீனவர்களுடன் கொழும்பில் வரும் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு,…

மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்தால்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: ஜெயலலிதா திட்டவட்டம்

அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்த பின்னர் தான் இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வக்குமார சின்னையனை ஆதரித்து, காங்கயம் அருகே, பரஞ்சேர்வழி நால்ரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:…

இறந்த சாமியார் உயிரோடு வருவார்: சிஷ்யகோடிகள் உடலை அடக்கம் செய்ய…

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சாமியார் ஒருவர் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இறந்து விட்டார். இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் சாமியார் காலமாகிவிட்டார் என அதிகாரப்பூர்வமாக கூறினாலும், சாமியார் உச்சகட்ட தியானத்தில் இருக்கிறார், அவரும் இறக்கவில்லை என்று கூறி அவருடைய சிஷ்யகோடிகள் உடலை அடக்கம்…

மாணவி பாலியல் வல்லுறவு: நால்வருக்கு மரண தண்டனை உறுதி

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டில் இன்று வியாழக்கிழமை டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்தரபால் மற்றும் பிரதிபா ராணி ஆகியோர்…

தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு…

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம்,…

தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து…

நியூயார்க்: முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், அவமதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.…

116 இந்திய மீனவர்கள் விடுதலை : நாளை பேச்சுவார்த்தை நடக்காது

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்தமைக்காகக் கைது செய்யப்பட்டு யாழ்ப்யாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 116 இந்திய மீனவர்கள் புதனன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட நீரியல் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார். இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவரையில் மொத்தமாக 148 பேர் கடற்படையினரால்…

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 16 பேர் பலி

நக்ஸல்கள் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரை சிகிச்சைக்காக வாகனத்தில் கொண்டு செல்லும் சிஆர்பிஎஃப் படையினர். நக்ஸல்கள் தீவைத்ததில் உருக்குலைந்த வாகனங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திமுக- அதிமுக

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.…

மோடி பிரதமரானால் சிறிலங்கா குறித்த இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் வரும்…

இந்திய மத்திய அரசின் பலவீனத்தினால் தான், இந்தியாவை சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும், நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தநிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இந்தியாவின் முன்னாள் வெளிவகார அமைச்சரும், பாஜக மூத்த தலவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், நேற்றுமாலை மதிமுக சார்பில்…

இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ஐநா பெண்கள் அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா. சபை பெண்கள் அமைப்பு, இந்தியாவின் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்தது. இது குறித்து அந்த அமைப்பின் பிரதிநிதியான ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியதாவது: இந்தியாவில் பெண்…

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் பேசுகிறார் ராகுல்: மோடி தாக்கு

பிகார் மாநிலம் பூர்ணியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக முழக்கமிடும் மோடி.   காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை நினைவில் கொள்ளாமல், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார்…

எம்.பி.;எம்.எல்.ஏ. மீதான வழக்குகள் ஓராண்டில் நிறைவுற வேண்டும்: உச்சநீதிமன்றம்

  இந்திய உச்சநீதிமன்றம்   இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஒரு வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. போன்றோர், பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீதுள்ள வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், தண்டனை…