நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர்

நியூயார்க்: நாடு முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் நரேந்திர மோடி என பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பா.ஜ., கூட்டத்தில் அக்கட்சியின் பிரசார…

ஆட்சி முடியும் நிலையில் உள்ள அரசுகள் சாதனைகளை விளம்பரப்படுத்த தடை

புதுடில்லி : ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள அரசுகள், தனது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிக்க சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது. இது மக்கள் அரசிற்கு செலுத்தும் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணாக செலவிடும் விதமாக உள்ளதாகவும், தேர்தல் விளம்பரத்திற்கு அரசு பணத்தை செலவிட…

இந்துத்துவ தலைவர்களின் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு

கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்கள் இருவரின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசு அமைத்திருக்கும் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவானது கடந்த வெள்ளியன்று (ஜூலை19,2013) இரவு தமிழக பா.ஜ.க. பொதுச்…

பா.ஜ.க. நிர்வாகி கொலை: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த…

சென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்களும், பா.ஜ.க., தலைவர்களும் படுகொலைக்கும், ஆயுதத் தாக்குதலுக்கும் உள்ளாகி…

சுற்றுலாப் பயணி மீது பாலியல் கொடூரம் புரிந்த 6 பேருக்கு…

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்து சுற்றூலாப் பயணி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய நீதிமன்றம் ஒன்று 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தனது கணவனுடன் சைக்கிளில் சுற்றுப் பயணம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் இந்த…

பள்ளி உணவில் விவசாய பூச்சிகொல்லி மருந்து: பிஹார் பொலிஸ்

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் இவ்வாரம் முன்னதாக பள்ளியில் மதிய உணவு உண்டு 23 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தில், அந்த உணவில் பயன்படுத்தப்பட்டிருந்த சமையல் எண்ணெயிலும், மிஞ்சிய உணவிலும் மிக அதிக அளவிலான விவசாய பூச்சி கொல்லி மருந்து இருந்ததென தற்போது தெரியவந்துள்ளதாக இந்தியப் பொலிசார் கூறுகின்றனர். இவற்றிலிருந்து மாதிரிகளை…

நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது: பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்

புதுடில்லி: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். டில்லியில், நேற்று, "அசோசெம்' அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் ஒரு எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு…

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் எல்லாப் பெரிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பாதுகாப்புப் படையினர் அமல்படுத்தி வருகின்றார்கள். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரிவினைவாதக் குழுக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை தடுக்க ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். வியாழனன்று, ராணுவ முகாமுக்கு வெளியே…

‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி…

சென்னை: எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை…

பீஹார் மரணங்கள் : விதிமுறை மீறப்பட்டது

பீஹார் மாநிலத்தில் மதிய உணவுக் கூடத்தில் உணவில் விஷக் கலப்பட சம்பவத்தில் 23 மாணவர்கள் இறந்ததை அடுத்து இந்த சம்பவத்தில் உணவுக் கலப்படம் எந்த கட்டத்தில் நடந்தது என்பதை அறிய நடத்தப்பட்டு வரும் தடயவியல் சோதனைகளின் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று பீஹார் மாநில உயர்…

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் பெண்கள் மீது ஆசிட் (திராவகம்) வீசப்படுவதை குறைக்கும் முயற்சியாக, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்லுபடியான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட் விற்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறான விற்பனைகள் பற்றி போலிஸுக்கும் அறிவிக்கப்பட…

பைபிள் கிடைத்ததன் எதிரொலி : திருமலை உணவு விடுதிகளில் சோதனை

திருப்பதி : திருமலையில் உள்ள, அனைத்து உணவு விடுதிகளிலும், வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திருமலையில் உள்ள ஓட்டலின் பின்பகுதியில், மூன்று நாட்களுக்கு முன், பைபிள் கிடைத்ததன் எதிரொலியாக, அனைத்து ஓட்டல்களிலும், சோதனை நடத்தப்பட்டது. ஓட்டல்களில் பணிபுரிவோர், எங்கிருந்து வந்துள்ளனர்; எவ்வளவு காலமாக பணிபுரிகின்றனர்; அவர்கள்…

50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு

புதுடில்லி: சீன படைகள் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எல்லைப்பகுதியில் படைககளை குவிக்‌க முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட பலர்…

மதிய உணவு சுகாதாரம் : தமிழ்நாட்டின் நிலை எப்படி ?

இந்தியாவின் பீஹார் மாநில பள்ளிக்கூடமொன்றில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்த சம்பவம், மதிய உணவுக் கூடங்களில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விதிகள் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது. மதிய உணவுத்திட்டத்தை பல தசாப்தங்களாக அமல்படுத்திவரும் முன்னோடி மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில், இந்த…

தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம்…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி…

முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி

புதுடில்லி : முக்கியமான சில தொழில்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டிற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அந்நிய முதலீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விதிகளை தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் தளர்த்தி உள்ளது. முதலீடுகளை கவருவதற்காகவும்,…

கர்நாடகாவில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவிருந்த திட்டம் ரத்து

தென் கொரிய நிறுவனமான பாஸ்கோ இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய்கள் முதலீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அம்மாநிலத்தின் கடக் பகுதியில் அமையவிருந்த ஒரு எஃகு ஆலைத் திட்டத்தை உள்ளூர் எதிர்ப்புகள் மற்றும் அனுமதிகள் வழங்குவதில் இருந்த தாமதங்கள் காரணமாக தாங்கள் கைவிடுவதாக பாஸ்கோ கூறியுள்ளது.…

கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி மனு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி : "கடந்த, 1974ம் ஆண்டில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, அதை தமிழகத்தின் ஒரு பகுதியாக்க வேண்டும்' எனக் கோரி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக, மத்திய அரசுக்கு "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. ராமேஸ்வரத்திற்கு…

ஜார்கண்ட் அட்டூழியம் ; விடுதியில் தங்கிய 4 மைனர் பெண்கள்…

பாகூர் : ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தான் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 4 மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இங்குள்ள பாகூர் மாவட்டத்தில் லிட்டிபரா பிளாக்கில் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு சுமார் 18 முதல் 25 வயது…

இந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதன்மூலம் இழப்பீடு வழங்கும் வேலைகளை வேகமாக…

சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தும் அழிவுப் பாதையில் நாட்டை வழிநடத்தும்…

புனேயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- பொருளாதார சரிவு, இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெருகி வரும் ஊழல் ஆகியவற்றை மதவாதம் என்ற திரைக்கு பின்னால் மறைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. கொள்கை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு எல்லா…

வெறும் உணவு பாதுகாப்பு சட்டம், தட்டில் உணவை கொண்டு வந்துவிடாது

பாரதீய ஜனதா பிரசாரக்குழு தலைவர் நரேந்திரமோடி, மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பெர்குஸ்சான் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இது நமக்கு மிகுந்த பலம் ஆகும்.…