உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இஸ்ரோ – நாசா இணைந்து செயற்கைகோள் தயாரிப்பு:
பெங்களூரு : ""இஸ்ரோவும், நாசாவும் இணைந்து, செயற்கை கோள்களை தயாரிப்பது குறித்து, பேச்சு நடத்தப்பட்டு வருகிறது,'' என, இஸ்ரோ தலைவர், ராதாகிருஷ்ணன் கூறினார். இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்) தலைவர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செயற்கை கோள்களை வடிவமைப்பதில், மற்ற நாடுகளுக்கு, நாம், முன் மாதிரியாக திகழ்கிறோம். இதனால்,…
ரூ.20ல் 8 பேர் சாப்பிடலாம்: அமைச்சர் சவால்
கவுகாத்தி : குறைந்த விலையில் நிறைவாக சாப்பிட முடியும் என அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் வேளையில் ஒருவருக்கு தலா ரூ.2.50 என்ற விகிதத்தில் ரூ.20ல் 8 பேர் நன்றாக சாப்பிடலாம் என அசாம் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் நிலோமோனி சென் தேகா தெரிவித்துள்ளார்.…
இந்திய மாநிலங்கள் துண்டாகும் அபாயம்!
டார்ஜிலிங் : தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனிமாநில அந்தஸ்து பெரும்பட்சத்தில் கூர்காலாந்தையும் பிரிக்க கூர்கா ஜன்முக்தி மோர்சா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் 3 நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதே போன்று மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா பகுதியை பிரித்து தனி…
பிரதமரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்: அன்னாஹசாரே
கோண்டா, (உத்தரபிரதேசம்), ஜூலை 29– அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதிகாரம் வாய்ந்த பதவியான பிரதமரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். இந்த நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்து…
ராஜ்யசபா எம்.பி.,க்கு விலை ரூ.100 கோடி ! காங்கிரஸ் எம்.பி.,…
புதுடில்லி : நாட்டில் உள்ள பிரபலங்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக வேண்டுமென்பதற்காக 100 கோடி வரை செலவிட தயாராக இருப்பதாக காங்., கட்சியை சேர்ந்த சவுத்திரி பிரேந்திரசிங் எம்.பி., என்பவர் கூறியுள்ள தகவல் டில்லி அரசியலில் கல கலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மாநில வாரியாக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்களின்…
பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி; சொத்துக்கள் அவரது மகள்களுக்கே
இந்தியாவின் முன்னாள் மகாராஜா ஒருவரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை அவரது மகள்கள் இரண்டு பேர் வென்றுள்ளனர். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கான வாரிசுரிமையைக் கோரி 21 ஆண்டுகளாக நடந்துவந்த நீதிமன்ற போராட்டத்தில் பரிட்கோட் மகாராஜாவின் மகள்மார் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். பரிட்கோட் மகாராஜா ஹரிந்தர் சிங் பிராரின்…
விவசாய பொருட்கள் விலை: பிரதமர் மன்மோகன் கவலை
புதுடில்லி : அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விவசாய விளைபொருட்கள் விலை உயர்ந்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள, பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்னைகளைத் தீர்க்க, பொருளாதார நிபுணர்கள், தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார். டில்லியில், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து…
மெட்ராஸ் கஃபே! இதுவா சட்டம் – ஒழுங்கு? – சீறும்…
பிரபல நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடித்து இயக்கியுள்ள "மெட்ராஸ் கபே' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் ஆகஸ்டில் வெளியாகிறது. மும்பையில் தணிக்கை செய்யப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது மெட்ராஸ் கபே.! இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென்கிற அளவுக்கு தமிழீழ உணர்வாளர்களிடம் ஆவேசம் தெறிக்கிறது. இதன் ஒருகட்டமாக சென்னை…
காஷ்மீர்: பாத்கம் மாவட்டத்தில் கொந்தளிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு
இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் பாத்கம் மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்பு தொடர்பாக பரவலான கொந்தளிப்பு எழுந்ததை அடுத்து அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். பொலிஸ்காரர் ஒருவர் தலையில் அடித்ததால் இந்தப் பெண் இறந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஃபாத்திமா என்ற இந்த 57 வயதுப்…
எய்ட்ஸ் தம்பதியினர் பெற்ற குழந்தைகளைச் சுடு காட்டிற்கு விரட்டிய கிராம…
லக்னோ: எய்ட்ஸ் காரணமாக மரணமடைந்த தம்பதியினருக்கு பிறந்த 5 குழந்தைகளை கிராமத்தை விட்டே விரட்டி சுடுகாட்டிற்கு அனுப்பிய கொடுமை உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய சோதனை நடத்தி தேவையான உதவிகள் செய்யப்படும் என மாநில அகிலேஷ் அரசு அறிவித்துள்ளது. உ .பி.,…
குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு சீட் தர முடியாது:ராகுல்
புதுடில்லி : குற்ற பின்னணி கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் சீட் தர முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது ராகுல் இதனை தெரிவித்துள்ளார். டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும்…
இழப்பீடு தம்மை இழிவுபடுத்துவதாக ஹரியானா விவசாயிகள் ஆத்திரம்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நாசமடைந்த பயிர்களுக்காக மிகக் குறைவான( 2 ரூபா வரை) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதையிட்டு விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். அரசு தம்மை இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ள பல விவசாயிகள், தமக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையை மாற்றவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளை அரசு 'குரூரமாக கேலி'…
பேரின்பத்திற்கு பெருந்துன்பம்!
இனங்களுக்கிடையிலானப் பிரச்னைகளைச் சரிகட்டுவதற்கென்று தயாரிக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்ட சில நிமிடங்களுக்குள் அதில் கையெழுத்திட்ட பெர்காசா மற்றும் இந்திய அரசு சார்பற்ற அமைப்பு பேரின்பம் ஆகிய இருதரப்பினர்களுக்கிடையில் தகராறு மூண்டது. இச்சாசனம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா துணைத் தலைவர் ஜுல்கிப்லி நூர்டின் சுங்கை பூலோ ஸ்ரீ…
இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர்…
சென்னை: "இலங்கைத் தமிழர்களுக்கு, தன்னாட்சி உரிமை அளிக்கும் வரை, நமது பணி தொடரும்' என, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 14ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், "இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, எந்த வகையிலும் ரத்து…
ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை: கொலையாளிகளை ஒரு வாரத்திற்குள்…
சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் ஒரு வாரத்திற்குள் பிடிக்க, போலீசிற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூரில், ஜூலை 1ல், இந்து முன்னணி மாநிலச்செயலர், வெள்ளையப்பன்; சேலத்தில்,…
லஞ்சம் தர முன்வந்ததை வெளியிடுவேன்: “மாஜி’ ராணுவ தளபதி வி.கே.சிங்…
புதுடில்லி: ""ராணுவத்துக்கு, "டாட்ரா 'வாகனங்கள் கொள்முதல் செய்ததில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, லஞ்சம் கொடுக்க முன்வந்தது தொடர்பான ஆவணங்களை, வெளியிடுவேன்,'' என, ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங் எச்சரித்துள்ளார். இந்திய ராணுவத்துக்கு, "டாட்ரா' வாகனங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி,…
குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்
குஜராத்தில் ஜி.பி.எஸ்., (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) முறையைப் பயன்படுத்தி பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக காடுகளில் பழங்குடியினர் பயன்படுத்தி வந்த நிலத்தை, அவர்களுக்கே தர ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதற்கு முன் பழங்குடியினரின் நிலத்தை அந்தந்த மாநில…
இந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது!
இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழ்மை வேகமாக குறைந்து வருவதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் குறிப்புணர்த்துகின்றன. இந்தியாவில் ஏழைகள் என்று வரையறுக்கப்படும் மக்கள் தற்போது நாட்டின் ஜனத்தொகையில் 22 சதவீதம் பேரே என இந்த விவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதும், சமூக நலத்…
பள்ளி மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க பிஹார் ஆசிரியர்கள் மறுப்பு
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு உண்ட பிள்ளைகள் 23 பேர் சென்ற வாரம் பலியான நிலையில், அரசாங்க இலவச மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மறுத்துள்ளனர். இத்திட்டத்தில் ஊழல் புரையோடிப்போயுள்ளது என்றும், போதுமான உதவி இன்றியும், தரம் குறைவான உணவுப் பொருட்களைக்…
7 மாதங்களில் 150 முறை அத்துமீறிய சீன ராணுவம்!
புதுடில்லி: இந்த ஆண்டின், ஏழு மாதங்களில், இந்திய பகுதிக்குள், சீன ராணுவம், 150 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, தெளிவான எல்லை, இன்னும் வரையறுக்கப்படவில்லை. தற்காலிக எல்லை மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில்,…
தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்
கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை…
தெலுங்கானா மாநில அறிவிப்பு விரைவில் வெளியீடு
இம்மாதம், 31ம் தேதி அல்லது ஆக., 3ம் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக் குழு டில்லியில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், ஆந்திர மாநில சபாநாயகர் மனோகர், டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் முயற்சி!
புதுடில்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இணையதளம் ஒன்றில் தனது கட்டுரையில் எழுதியிருப்பதாவது:ஐ.மு., கூட்டணியானது ஆட்சி நிர்வாக நெருக்கடி, சரியான தலைமை இல்லாதது ஆகிய…