ஈழத் தமிழருக்காக 3வது நாளாக மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்

வெள்ளிக்கிழமை காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து…

தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு

காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த…

உள்ளடக்கங்களைக் கொண்டே முடிவெடுக்க முடியும் – மன்மோகன் சிங்

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் Read More

இந்தியாவை இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர்…

திமுக-வை பாரட்டியதாக வெளிவந்த தகவலை மறுக்கிறார் ‘சனல் 4’ கெலம்…

இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் துணைத் தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. தி.மு.கவின் இந்த போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான…

மதுரையிலுள்ள இலங்கை பணிமனை மீது கடும் தாக்குதல்

மதுரையில் செயல்படும் ட்ரான்ஸ்லங்கா எனும் விமானப் பயணிகள் சேவை நிறுவன பணிமனை நேற்று பிற்பகலில் தமிழ் உணர்வாளர்களால்  தாக்கப்பட்டு கடும் சேதத்திற்குள்ளானது. குண்டாந்தடிகளை ஏந்தி வந்த அவர்கள், பணிமனையில் இருந்தவர்களிடம், தமிழர்கள் தொடர்ந்து இலங்கையில் தாக்கப்பட்டுவரும் வேளையில் நீங்கள் பயணிகளை அங்கே அனுப்புவதா எனக்கேட்டு மிரட்டிவிட்டு கணினி, நாற்காலி,…

ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈழ ஆதரவாளர் தீக்குளித்து…

போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 44 )  என்பவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு…

கறையான் போல் நாட்டை அரிக்கிறது காங்கிரஸ்; மோடி ஆவேசம்

காங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால் கறையான் போல் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் இரவு காவலாளி போல் செயல்படுகிறார் என பா.ஜ., மூத்த தலைவர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பா.ஜ., தேசிய கவுன்சில்…

மீண்டும் திரையில் நடிக்கும் ஜெயலலிதா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா…

இலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாதாம்; சொல்கிறார் இந்திய வெளியுறவு…

ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கை அரசு தொடர்பான…

கோல்கட்டா மார்க்கெட்டில் தீவிபத்து: 18 பேர் உடல் கருகி பலி

கோல்கட்டா: கோல்கட்டாவின் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோல்கட்டாவின் சீல்டாக் பகுதியில் சூர்யாசென் என்ற பெயரில் மார்க்கெட் மற்றும் கோடவுன் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியில்…

தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!

டெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள்…

சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகை; டெசோ கூட்டத்தில் முடிவு!

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.02.2013) காலை தொடங்கியது. டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 5-ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு…

‘ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது’ – மன்மோகன் சிங்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர்…

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 11 பேர் பலி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. மக்கள் நெரிசல் மிக்க நகரில் இருக்கும் ஒரு பஸ் நிலையத்தில்…

ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் அரசியல் கட்சி

இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம்…

இலங்கை வீரர்கள் பங்குபெறும் ஆசிய தடகளப் போட்டிகளை ரத்து செய்தார்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை விளையாட்டு வீரர்களும் பங்கு பெறக்கூடும் என்ற நிலையில் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் அப்போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இலங்கை வீரர்களும் பங்கு பெற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக…

பால்முகம் மாறாத பாலகனே.. பாலசந்திரனே! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி…

இலங்கையில் பிரபாகரன் மகன் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா, சபை ஆழ்ந்த கவலை கொள்வதுடன், தீர்வு சொல்லட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனவுகளின் ஈரம் காயாத கண்கள்: சர்வதேச சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை…

பாலச்சந்திரன் கொல்லப்பட்டதன் எதிரொலி: சென்னையில் தாக்குதல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை சனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிமனை தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷ இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக…

பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத போர்க்குற்றம்: ஜெயலலிதா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன்…

ஜெயலலிதா – வைகோ திடீர் சந்திப்பு : காரணம் என்ன?

அ.‌‌தி.மு.க. அரசு பொறு‌ப்பே‌ற்று 20 மாத‌ங்க‌ள் ஆ‌கியு‌ம் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவுட‌ன் எ‌ந்த தொட‌ர்பு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளாத வைகோ, அ.‌தி.மு.க. அரசை கடுமையாக ‌‌விம‌‌ர்‌சி‌த்து‌ம், போர‌ா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்த‌ியு‌ம் வ‌ந்தா‌ர். இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள டா‌ஸ்மா‌க் கடைகளை மூ‌ட‌க்கோ‌ரியு‌ம், பூரண மது‌‌வில‌க்கை அம‌ல்ப‌டு‌த்த‌க் கோ‌ரியு‌ம் ம.த‌ி.மு.க. பொது‌‌ச் செயலாள‌ர் வைகோ…

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு

வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து இன்றே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை…

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா நடவடிக்கை

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து இந்தியா 12 ஹெலிகாப்டர்களை வாங்குகின்ற 75 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முறைப்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களில் பதிலும் கோரியிருக்கின்றது.…