அன்வார்: பணமாய் கொட்டுகிறது, ஆனால் பிஎன் வெளியேற்றப்படுவது நிச்சயம்

மக்கள் அடுத்த ஆண்டில் அரசாங்கம் கொடுக்கும் அன்பளிப்பை வாங்குவதற்குக் காத்திருக்கிறார்கள். அதே வேகத்தில் ஆளும் கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். “மக்கள் பிஆர்1எம் (1மலேசியா உதவித்தொகை ரிம500)-மை வாங்கிக் கொண்டாலும் பிஎன்னைப் பதவியை விட்டிறக்குவது உறுதி”, என நேற்றிரவு…

பினாங்கில் வீடு ஒன்று இடிக்கப்பட்டது தொடர்பில் அன்வார் நகராட்சி மன்றத்தைச்…

பினாங்கு மாநில அரசாங்கத்தின் உத்தரவு ஏதுமில்லாமல் ஜார்ஜ் டவுன் லெங்கோக் சுங்கை குளுகோரில் 72 வயதான ஒருவர் தங்கியிருந்த வீட்டை இடித்ததற்காக  பினாங்கு நகராட்சி மன்றம் கடுமையாக சாடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் தன்மூப்பான நடவடிக்கையைக் கண்டித்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பெரிய வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து தப்பி விடுகின்றன…

DBKL “ஒத்துழைக்கவில்லை”, ஆனாலும் அன்வாருக்கு உற்சாகமான வரவேற்பு

நேற்றிரவு பிரிக்பீல்ட்ஸில் பிகேஆரின் தீபாவளி நிகழ்வுக்கு அதிகாரிகளால் பல இடையூறுகள். ஆனாலும், அந்நிகழ்வுக்கு  வருகை புரிந்த பிகேஆர் நடப்பில் தலைவருக்கு உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விடாமல் பெய்த மழையிலும் இரவு மணி 9.30வரை காத்திருந்து அன்வாரை வரவேற்றனர். ஜெலஜா மெர்டேகா ரக்யாட் பேருந்தில் அன்வார்…

அன்வார்: பிஎன் கூட நிழல் அமைச்சரவையைப் பெற்றிருக்கவில்லை

பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. "நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை…

பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் அவையில் இல்லாதது குறித்து கேள்வி…

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை மக்களவையில் தொடக்கி வைத்தார். அப்போது மக்களவையில் பிரதமர் நஜிப் காணப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். "பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் இங்கு இருப்பதுதான் வழக்கம். ஆனால் விவாதத்திற்கு…

Anwar: Budget fails to address cronyism, monopolies

The Budget 2013 offers “small doses” of election goodies and fails to address basic structural problems such as cronyism and monopolies, said Opposition Leader Anwar Ibrahim.In an immediate reaction to Prime Minister Najib Abdul Razak’s…

அன்வார்: ஜெட் விமானத்தைக் கொடுத்துதவிய நண்பர் கைம்மாறாக சலுகைகளை எதிர்பார்க்கவில்லை

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்குத் தெரிந்த ஒருவர் பக்காத்தான் ரக்யாட் குழு அவருடைய தனி விமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்றும் அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சாபா, சரவாக்கில் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்நோக்கியதால்…

ஜோகூர் பிகேஆர் விருந்தில் ஹிஷாமுக்கு கண்டனக் கணைகள்

நேற்றிரவு ஜோகூர், ஸ்கூடாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிகேஆர் இரவு விருந்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.அம்மாநிலத்தில் பயணம் செய்யும் பிகேஆர் பரிவாரங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்த அவர் மீது பிகேஆர் தலைவர்கள் கண்டனக் கணைகளைப் பொழிந்தனர். அமைச்சரின்…

அன்வார், முகமது நபி எதிர்ப்பு திரைப் படத்தை கண்டிக்கிறார்

'Innocence of Muslim' என்னும் தலைப்பைக் கொண்ட 'இஸ்லாமிய எதிர்ப்பு' திரைப்படத்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார். அது 'முஸ்லிம் உணர்வுகளைக் காயப்படுத்தி குழப்பத்தைத் தூண்டும்' நோக்கத்தைக் கொண்ட திட்டம் என அவர் வருணித்தார். அதற்குப் பொறுப்பான தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்…

சைபுலுக்கு எதிரான அவதூறு வழக்கை அன்வார் மீட்டுக்கொண்டார்

ஒரு திடீர் திருப்பமாக, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் முன்னாள் உதவியாளர் முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொள்வதென முடிவு செய்துள்ளார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கிறது என்றாரவர். அந்த அவதூறு வழக்கு இன்று…

அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர்…

"பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்." இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். "நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி…

துப்பாக்கி காட்டப்பட்ட சம்பவம்: அன்வார் போலீசாரிடம் விட்டு விடுகிறார்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், மலாக்கா ஜாசினில் நேற்று தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் மீது நடு நிலையை எடுத்துள்ளார். கோலாலம்பூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், பிகேஆர் பஸ்ஸை வழி மறித்தவர்கள் தம்மை மருட்டியதாக தமது மெய்க்காவலர் தம்மிடம் தெரிவித்தார் எனச் சொன்னார்.…

அன்வார்: மகாதீர் சொல்வது சரியே, அம்னோ-பிஎன்தான் பிசாசு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என அவர் சொன்னதை ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். "நான் பல விஷயங்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன்  இணக்கமாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு அவரது…

நஜிப்பையும் அன்வாரையும் சந்திக்க விரும்புகிறார் வேதமூர்த்தி

இம்மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பிய  இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் தனித்தனியே சந்தித்து இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது பற்றி விவாதிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி கேட்டு இருவருக்கும் எழுதியிருக்கிறார். “அப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண அன்றும்…

பினாங்கு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அன்வாருக்கு சம்மதமே

பினாங்கு அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர எண்ணியிருப்பதில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சேபணை இல்லை. சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் அச்சட்டம் கொண்டுவர முடிவு செய்திருப்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார் என அன்வார் கூறினார்.…

அன்வார்: “நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் இருக்க மாட்டேன்”

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் உள்ள பிரதமருக்கான அதிகாரத்துவ இல்லத்தில் வசிக்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். அவர் நேற்று புக்கிட் கந்தாங்கில் பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார். "அந்த இடத்துக்கான மின்சாரக் கட்டணம்…

மகாதிர்: ஒபாமாபோல் அன்வாரும் கெட்டவரே

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பிட்டுள்ளார்.இருவரும் பெரிய மாற்றங்கள்  செய்யப்போவதாகச் சொன்னார்கள் ஆனால், செய்யவில்லை என்றாரவர். ஒபாமா(வலம்)வைப் போலவே அன்வாரும் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.ஆனால், அவை நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்…

இணையக் கொத்தர் ( Hacker) அன்வாரை நஜிப்பிடம் ‘மன்னிப்பு’ கேட்க…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ வலைப்பதிவுக்குள் நேற்றிரவு ஊடுருவிய  இணையக் கொத்தர் ஒருவர் அந்த பிகேஆர் மூத்த தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறும் போலி நோன்புப் பெருநாள் செய்தியை பதிவு செய்துள்ளார். அந்தச் செய்தி இல்லை என உறுதி செய்த பின்னர்…

அன்வார்: என்எப்சி விவகாரத்தில் நோ பதவி விலகாதது ஏன்?

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ரிம250மில்லியன் ஊழல் விவகாரத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த பின்னரும் அதன் அமைச்சர் நோ ஒமார் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக அவரை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார். “மாடுகள், கொண்டோ விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நோ(வலம்) பதவி விலகவில்லை,அப்படி…

அன்வார்: ‘அடையாளக் கார்டு திட்டம்’ மீதான விசாரணையை நான் நிராகரிக்கவில்லை

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்ட ரகசிய நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து அந்த 'அடையாளக் கார்டு திட்டம்' மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திற்கு உதவுவதற்குத்…

சுவா: ஆர்சிஐ-யை முதலில் நிராகரித்தது அன்வார்

சபாவுக்குள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் குவிந்தது தொடர்பான பிரச்னைகளை ஆராய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்த முதலாவது நபர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். 1994ம் ஆண்டு பார்ட்டி பெர்சத்து சபா…

‘அடையாளக் கார்டு திட்டம் அன்வார், மகாதீர் மீது களங்கம் கண்டு…

சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை கொடுத்ததாக கூறப்படும் அடையாளக் கார்டு திட்டத்தில் பங்காற்றியதாக  முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளையில் அதே சூழலில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் சிக்கிக் கொள்ளக் கூடும். அந்த விஷயத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம்…

நஸ்ரி: அன்வார் ‘தவளைகள் மன்னன்’

சபா பிஎன் தலைவர்களை ஈர்க்கும் அன்வார் இப்ராஹிமின் முயற்சிகள் பிஎன் -னைப் பாதிக்காது என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். தாங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிறுத்தப்பட மாட்டோம் என்பது கட்சி மாறியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் பசுமையான புல்வெளியைத் தேடுகின்றனர் என…