ஊராட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் EC-க்கு மட்டுமே உண்டு

பினாங்கில் மாநில அரசே ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடதுவது சட்டத்தை மீறிச் செயல்படுவதாகும் என்கிறார் முதலமைச்சர் லிம் குவான் எங். ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு என்பதை ஊராட்சி சட்டம் 1971 தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றாரவர். அந்தச் சட்டத்தைத் தந்திரமாக மீறலாம் என்று…

வரி செலுத்தவில்லை என்றால் வாக்குரிமை இல்லையா?, EC-ஐ சாடியது பெர்சே…

வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு வரி செலுத்தாதிருக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதைத்  தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) முன்வைத்துள்ள பரிந்துரை அரசமைப்புக்குப் புறம்பானது என்று தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே 2.0 கூறுகிறது. இசி பரிந்துரை,  குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று அரசமைப்பு குறிப்பிடுவதைப் புறக்கணிப்பதாக…

அன்வார்: தேர்தல் ஆணையம் சிறிய விஷயங்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது

இசி என்ற தேர்தல் ஆணையம் சிறிய, நடைமுறை விஷயங்கள் மீது நேரத்தை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "தேர்தல் ஆணையத்தின் பெரிய கடமை தேர்தலை தூய்மைப்படுத்துவதாகும். அது வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த வேண்டும்.…

வாக்காளர் பட்டியலில் ஐயத்துக்கிடமான 42,025 பெயர்கள் நீக்கம்

தேர்தல் ஆணையம்(இசி), வாக்காளர் பட்டியலில் உள்ள ஐயத்திற்டமான 42,025 பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 42,051 பெயர்களை இரண்டு மாதங்கள் காட்சிக்கு வைத்ததில் 26வாக்காளர்களை மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.எனவே, எஞ்சியுள்ள 42,025பெயர்களை நீக்குவதென முடிவு செய்யப்பட்டதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்தார்.  “வழக்கமாக ஒரு…

ஆக, EC விதிமுறைகள் அரசமைப்புக்கு மேலானவை

"அரசமைப்பை மீறுகின்ற எந்தச் சட்டத்தையும் செல்லாததாக்கும் உரிமை நீதிபதிகளுக்குக் கிடையாதா? என்னைப் பொறுத்த வரையில் இது அப்பட்டமான அரசமைப்பு அத்துமீறல்." தொகுதியில் இல்லாத வாக்காளர்களாகப் பதிவு செய்யும் முயற்சியில் வெளிநாடுகளில் வாழும் ஆறு மலேசியர்கள் தோல்வி சரவாக்டயாக்ஸ்: தொகுதியில் இல்லாத வாக்காளர்கள் என்பதை அனுமதிக்காதது, தேர்தல் ஆணையம் (இசி)…

பிப்ரவரியிலிருந்து அழியா மையைப் பயன்படுத்த EC முடிவு

பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் பணி பிப்ரவரி முதல் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (PSC) இன்று அறிவித்தது. பிஎஸ்சி, இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன் அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதைத் தேர்தல் ஆணைய…

வரும் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்தவும் முன்கூட்டியே வாக்களிக்கவும் இசி…

பிஎஸ்சி தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளூமன்றத் தேர்வுக் குழு, அழியா மை மற்றும் முன் கூட்டியே வாக்களிப்பு ஆகியவை தொடர்பில் வழங்கிய பரிந்துரைகளை 13வது பொதுத் தேர்தலில் இசி என்ற தேர்தல் ஆணையம் அமலாக்கும். அந்தத் தகவலை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் இன்று வெளியிட்டார்.…

அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும்…

டிஏபி: இசி தேர்தல் தேதி குறித்து கூட்டரசு, மாநில அரசுகளுடன்…

எப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை சுமூகமாக முடிவு செய்வதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் கூட்டரசு, மாநில அரசுகளை ஒன்றிணைக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். அது அவ்வாறு செய்யாவிட்டால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் மாநிலத் தேர்தல்களை நடத்துவது மீதான…

இசி ஐயத்துக்குரிய 42,000 வாக்காளர் பட்டியலை மீண்டும் காட்சிக்கு வைக்கிறது

இசி என்ற தேர்தல் ஆணையம் ஐயத்துக்குரிய 42,051 வாக்காளர் பட்டியலை நாளை தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி வரையில் தனது www.spr.gov.my இணையத் தளத்தில் காட்சிக்கு வைத்திருக்கும். சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் வாக்காளர்களுடைய நிலை குறித்து உறுதி செய்வதற்கு உதவியாக அந்தப் பட்டியல் இணையத்தில் சேர்க்கப்படுவதாக…

வெளிநாட்டிலுள்ள 6 வாக்காளர்கள் இசிமீது வழக்கு தொடரலாம், நீதிமன்றம் தீர்ப்பு

வெளிநாட்டில் வசிக்கும் ஆறு வாக்காளர்கள், தேர்தல் ஆணையம்  தங்களைத்  தொலைவில்-உள்ள வாக்காளர்கள் என்று பதிவுசெய்ய வேண்டும் என்று வழக்காட கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்விவகாரத்தில் இசியின் முடிவை நீதிமன்ற மேலாய்வுக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கேட்டு அவர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று நீதிபதி ரொஹானா யூசுப் தீர்ப்பளித்தார். இசி-யைப் பிரதிநிதித்த…

பிஎஸ்சி அழிக்க முடியாத மை மீது பெர்சே-யுடன் ‘இணக்கம்’

ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்கு அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தும் யோசனையை ஏறத்தாழ தான் ஒப்புக் கொள்வதாக இன்று பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. பெர்சே 2. 0 இன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் பேசிய அந்தக் குழுத் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி, அழிக்க…

அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 1363% அதிகரிப்பு, நுருல் இஸ்ஸா அதிர்ச்சி

லெம்பா பந்தாய் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது குறித்து அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வார் கவலை தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட அந்தத் தொகுதிக்கான மிக அண்மைய வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 2,180 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த…

வெளிநாட்டில் வாழும் மலேசியர்கள் இசி-க்கு எதிராக வழக்கு

வெளிநாட்டில் பணிபுரியும் ஆறு மலேசியர்கள், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய தேர்தல் ஆணைய (இசி)த்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மனுவைப் பதிவுசெய்த அவ்வறுவரும் பிரிட்டனில் வேலை செய்கின்றனர்.13வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க தங்களை நாட்டில்-இல்லா வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றவர்கள்…

தேர்தல் சீர்திருத்தம் மீது முன்னாள் இசி தலைவர் “வெளிச்சத்தை” காண்கிறார்

கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் 'தேர்தல் மனிதராக' திகழ்ந்த  இசி என்ற  முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சூழ்நிலைகள் மாறியுள்ளதாகக் கருதுகிறார். 2008ம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் இப்போது சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருப்பதாகவும் எண்ணுகிறார். ஈராயிரத்தாவது ஆண்டு…

முன்னாள் இசி தலைவர்: அடையாள அட்டை திட்டம் குறித்து உருப்படியான…

1990ம் ஆண்டுகளில் சபாவில் ஆயிரக்கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள். மற்ற எல்லா நல்ல கட்டுக்கதைகளைப் போன்று அதற்கு நிறைய ஆதாரம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அது நிகழ்ந்ததற்கு மறுக்க முடியாத ஆதாரம் ஏதுமில்லை. எது எப்படி இருந்தாலும் அடையாளக் கார்டு…

முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது…

2008 தேர்தலின்போது அழியா மையைப் பயன்படுத்த முடிவுசெய்து பின்னர் அம்முடிவு கைவிட்டதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்ட தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், இப்போது அழியா மை பயன்படுத்தப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறார். சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்னதாக முடிவை மாற்றிக்கொண்டது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதைத்…

பாஸ், இசி-என்ஆர்டி இணைப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது

வாக்காளர் பட்டியலில் 40,000 பெயர்கள் சந்தேகத்துக்குரியவை  என இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து அதனையும் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையையும் இணைக்கும் அலிஸ் என்ற கணினித் தொடர்பு முறைக்கு என்னவாயிற்று என பாஸ் அறிய விரும்புகிறது. பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்காக சந்தேகத்துக்குரிய…

இசி: மனுப்பாரங்களை நிராகரிக்கவில்லை, மைகார்ட் பிரதிகள் தேவை

தேர்தல் ஆணையம் (இசி), டிஏபி கூறுவதுபோல் மைகார்ட் பிரதிகள் இணைக்கப்படாமல் சமர்பிக்கப்படும் புதிய வாக்காளர்களின்  விண்ணப்பப் பாரங்களை நிராகரிக்கவில்லை என்று அதன் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறுகிறார். அரசியல் கட்சிகள் விண்ணப்பத்தாரர்களின் மனுப்பாரங்களை அனுப்பிவைக்கும்போது கூடவே அவர்களின் மைகார்ட் ஓளிநகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர்…

வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பெயர்கள் “ஐயத்துக்குரியவை”, இசி

இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பேர்களின் பெயர்களை வெளியிடவிருக்கிறது. அந்த பெயர்களுடைய உண்மை நிலை குறித்து தான் உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அது கூறியது. பொது மக்கள் ஆழமாக ஆய்வு செய்வதற்காக அந்த பெயர்கள் அனைத்தும் இசி இணையத் தளத்தில்…

அரசியல் நிதி சீர்திருத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்தது

அரசியல் கட்சிகளுக்கு அரசாங்க நிதிகளை வழங்குவதின் மூலம் அரசியல் நிதியைச் சீர்திருத்த தெரிவிக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் நிராகரித்ததாக முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருக்கிறார். அவர் வழக்குரைஞர்கள் மன்றம் அரசியல் நிதி மீது ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றில் பேசினார். அந்த நிதிகளைப்…

நகல் வாக்காளர் பட்டியலிலிருந்து 200 அந்நியர்கள் நீக்கப்படுவர்

சிலாங்கூர் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதிக்கான 2011ம் ஆண்டு இரண்டாவது கால் பகுதிக்கான நகல் துணை வாக்காளர் பட்டியலிலிருந்து குடிமக்கள் அல்லாத 220 பேரை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் உள்ளூர் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்த 222 பெயர்கள் மீது…

தேர்தல் ஆணையம் ஊராட்சி மன்றங்களைச் சந்திக்கிறது ஆனால் திடீர்த் தேர்தலை…

விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணைய கண்காணிப்புக் குழுக்களில் அங்கம் பெறுவதற்காக ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஆயத்தம் செய்யப்படுவதாகக் கூறப்படுவதை ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். "தேர்தல் செயலகத்தின் சாதாரணக் கூட்டம்தான் அது. அதில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலிருந்தும்…