மேஃப்ரல்: இசி, வெளிப்படைத்தன்மை இருப்பதுபோலக் காண்பிக்க முயல்கிறது

தேர்தல்களைக் கண்காணிப்பதில் அனுபவம் வாய்ந்த மலேசியாவின் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பு(மேஃப்ரல்), தேர்தல் ஆணையம் அனுபவமற்ற என்ஜிஓ-கள் சிலவற்றைப் பார்வையாளர்களாக அமர்த்திக்கொண்டு தன்னிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறது. 13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐந்து என்ஜிஓ-களுக்கும் தேர்தலைக் கண்காணிப்பதில் நிபுணத்துவமோ அனுபவமோ கிடையாது என்று…

ஜுன் 30க்குள் பதிவு செய்கின்றவர்கள் ஆகஸ்டுக்கு பிந்திய பொதுத் தேர்தலில்…

இன்னும் பதிவு செய்து கொள்ளாத மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஜுன் 30க்குள் பதிவு செய்து கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் அது ஆகஸ்ட்-க்கு பின்னர் நடைபெற்றால் வாக்களிக்க முடியும். ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு…

இசி: ஒரே அடையாளக் கார்டு எண்களை சில வாக்காளர் பகிர்ந்து…

சில வாக்காளர்கள் ஒரே ஏழு இலக்க அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. என்றாலும் வாக்காளர் பட்டியலின் நேர்மையை அவை பாதிக்காது. இவ்வாறு இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார். சில வாக்காளர்கள் 'மறு சுழற்சி'…

இசி:வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் ஆதரவு திருப்தி அளிக்கவில்லை

வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும்கூட அதற்குப் போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப். “வெளிநாடுகளில் வசிப்பவர்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். “ஆனால், அதற்கு வரவேற்பு நன்றாக…

இசி: அடையாளக் கார்டு எண்கள் பிறந்த தேதியுடன் ஒத்துப் போகவில்லை…

மை கார்டு எண்களும் பிறந்த தேதியும் ஒத்துப் போகாத பல வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்களே என்று தேசியப் பதிவுத் துறை சொல்வதாக இசி என்னும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தவறு என அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் அம்பலப்படுத்தியுள்ள நான்கு வாக்காளர் பற்றிய விவரங்கள் தேசியப் பதிவுத் துறையில்…

சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு இசி-யும் கேட்டுக்…

'Selangorku Bersih' என்னும் இயக்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடைய Read More

13வது பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்குத் தடை

13வது பொதுத் தேர்தலில் தனிப்பட்டவர்களைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் அல்லது தோரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. 2011 சரவாக் தேர்தலின்போது, பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தனிப்பட்டவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் கேலி செய்யும் விதத்தில் இருந்தன என்று தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான்…

எல்லாக் கட்சிகளும் கலந்துகொள்ளும் பொது விவாதங்கள் நடத்த இசி ஆலோசனை

எல்லாக் கட்சிகள் பற்றிய செய்திகளும் ஊடகங்களில் நியாயமான அளவில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த பொதுவிவாதங்களை ஏற்பாடு செய்து அவற்றில் போட்டியிடும் கட்சித் தலைவர்களைப் பங்கேற்க வைக்கலாமா என்று தேர்தல் ஆணையம்(இசி) ஆலோசிக்கிறது. “மற்ற நாடுகளில் நடப்பதுபோல் தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர்களுக்கிடையில் பொதுவிவாதங்களுக்கு இசி ஏற்பாடு செய்யக்கூடும்.” நேற்றிரவு  கோலாலம்பூரில்…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை கிடைக்கலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு வகை செய்யும் பொருட்டு இசி என்ற தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் வரும் ஜுன் மாதக் கூட்டத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய எண்ணியுள்ளது. "எங்கள் இலக்கு ஜுன் கூட்டத் தொடர்," இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்,…

இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சேயும் எதிர்க்கட்சிகளுமே காரணம்

பெர்சேயும் எதிர்க்கட்சிகளும் திரித்த கதைகளுக்கும் பொய்களுக்கும் அரசாங்கம் செவி சாய்த்ததின் விளைவாகவே தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார். "அவை அந்தத் திருத்தம் பற்றிய கதைகளை ஜோடித்தன. அபத்தமான கதைகளை உருவாக்கின. அதனால் அந்த…

இசி பெர்சே-யின் மஞ்சள் நிறத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறது

 அடுத்த பொதுத் தேர்தலுக்கு இசி என்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துவ நிறமான மஞ்சளை மாற்றிக் கொள்ளும். அதே நிறத்தை ஏற்றுக் கொண்டுள்ள பெர்சே-யிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் பொருட்டு அது அவ்வாறு செய்கிறது. அந்தத் தகவலை இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் இன்று…

பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என பிகேஆர் வேண்டுகோள்

தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உண்மையில் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுவதை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க அகோங்கிற்கு ஆலோசனை கூறுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பிகேஆர் எழுதவிருக்கிறது. இசி தலைவர் தமது நியமிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குப் பின்னர் எந்த ஒரு…

தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”

பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை "ஜனநாயகத்தை அழித்தவர்" என்றும் கூறியுள்ளது. தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து…

சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு "சிலாங்கூர்கு பெர்சே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. "இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு" இத்திட்டம் உதவும் என்று…

EC: அது மோசடி அல்ல, சட்டப்பூர்வமான “இல்லாத வாக்காளர்” பதிவு

நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ள தேர்தல் மோசடி எனக் கூறப்படும் விசயம், உண்மையில் சாதாரண வாக்காளர் ஒருவர்  'இல்லாத வாக்காளர்' எனப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாகும் என தேர்தல் ஆணையம் (EC) விளக்கியுள்ளது. தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத தேர்தல் ஆணைய…

நான் இன்னும் சிலாங்கூரில் போட்டியிட முடியும் என்கிறார் காலித்

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம், தமது வாக்களிப்புத் தொகுதி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து கோலாலம்பூரிலிருந்து லெம்பாய் பந்தாய் தொகுதிக்கு மாறியிருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் சிலாங்கூரில் போட்டியிட முடியாமல் போகலாம் என்ற ஆரூடங்களை நிராகரித்துள்ளார். அந்த விவகாரம் மீது முதன் முறையாக கருத்துரைத்த…

இசி: எல்லைத் திருத்தம் தேர்தல் சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமானது

தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்படும் போது ஒருவர், வாக்களிக்கும் தொகுதி மாறுவதற்கு தேர்தல் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் "வாக்காளர் இருக்கும் இடத்தை நகர்த்தாமல் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்துவதும்" அடங்கும் என இசி என்ற தேர்தல் ஆணையத்தின் இணையத்…

காலித்தின் வாக்களிப்புப் பகுதியை மாற்றியதின் மூலம் இசி சட்டத்தை மீறியுள்ளது

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் வாக்களிப்புத் தொகுதியை பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து லெம்பா பந்தாய்க்கும் மாற்றியதின் மூலம் இசி என்ற தேர்தல் ஆணையம் 1958ம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் 'கடுமையான குற்றத்தை' புரிந்துள்ளது. இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் பூஸியா சாலே கூறியிருக்கிறார். தொகுதிகளைப் பிரிப்பதற்கான…

இசி: சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்களிப்பு பகுதி மாறவில்லை

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர். அவர் ஏற்கனவே அண்டையிலுள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வாக்காளராக இருந்தாலும் தொகுதி எல்லை திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர் என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாட்டின்…

“இசி விருப்பம்போல் பெயர்களை வெட்டுகிறது, ஒட்டுகிறது”

தேர்தல் ஆணையம் (இசி)வாக்காளர் பட்டியலிலிருந்து 120,000 பெயர்களை நீக்கி, 6,705 பெயர்களைப் புதிதாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு  செய்வதற்குமுன் அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும், அரசு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் அந்த நடைமுறைகள்  பின்பற்றப்படவில்லை என்று பிகேஆர் கூறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்  பல பெயர்களை…

தேர்தல் ஆணையம் “கள்ளத்தனமாக தில்லுமுல்லு ” செய்வதாக பிகேஆர் குற்றச்சாட்டுகிறது

தேர்தல் ஆணையம் தொகுதி நடைமுறை என அழைக்கப்படும் ‘Belah Bahagi’ என்ற போர்வையில் சிலாங்கூரில் உள்ள  நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்குள் வாக்காளர்களை சட்ட விரோதமாக இடம் மாற்றி வருகிறது என பிகேஆர் கூறுகிறது. "வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் அளவுக்கு சட்டவிரோதமான ஒர் நடவடிக்கையை தேர்தல்…