சீனாவிடம் சரணடைந்தார் நேரு: கிரண் ரிஜ்ஜூ கருத்தால் சர்ச்சை

ஐதராபாத்: கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின் போது சீனாவிடம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரணடைந்தார் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஐதரபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில்,…

தாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை

புதுடில்லி : ஒரு கன்றுக்குட்டி திருடப்பட்ட சம்பவம், உண்மைநிலை அறியாமல், அரசியல் மற்றும் மதசாயம் பூசப்பட்டதால், பூதாகரமாக வெடித்தது தற்போது அம்பலமாகி உள்ளது. உ.பி., மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம்…

எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகள்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை

நியூயோர்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகளை விற்பனை செய்துவருகிறார். மிரா (11) என்ற இந்திய வம்சாவளி மாணவி சாதாரண வழிமுறையை பயன்படுத்தி இந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கி வருகிறார். ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்திற்கு 13465…

ஊத்திக் கொடுத்த உத்தமியும், உத்தமரும்.. மதுவிலக்கை வலியுறுத்துவது தேசத்துரோகமா? சீமான்…

மது விலக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்ட கோவன் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவின் தீமைகளையும், மது விலக்கின் தேவை குறித்தும் தமிழக மக்களுக்கு வீதி நாடகங்கள் மூலமும், தனது பாடல்களின் மூலமும் விழிப்புணர்வு…

மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது:…

மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக்…

லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு: முஷாரஃபின் கருத்தில் ஆச்சரியம் இல்லை;…

லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஆதரித்து, உதவிகளை மேற்கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டிம் கெய்ன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை…

உலகிலேயே அதிக மாசுபட்ட நகரம் தில்லி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நச்சுத் துகள்கள் காரணமாக உலகிலேயே மிக மாசுபட்ட நகரமாக தில்லி மாறியுள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தில்லியின் நில அமைப்பு, வானிலை, ஆற்றல் நுகர்வு கலாசாரம், நகர மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கும் காற்று மாசுபாடு ஆகியவை குறித்து பிரிட்டனின் சுர்ரே பல்கலைக்கழகக் ஆராய்ச்சியாளர்கள் குழு…

டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவன் தே.பா. சட்டத்தின் கீழ்…

சென்னை: மது ஒழிப்பிற்காக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை…

செல்வ வளர்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா..!

உலக நாடுகளின் செல்வ வளம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த ஆய்வில் பிரிட்டன் நாட்டின் முக்கிய ஆய்வு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு இருந்தது. கடந்த 15 வருடத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் குறித்து முழுமையாக ஆய்வு செய்ததில் இந்திய நாட்டின் செல்வ வளம் சுமார் 211 சதவீதம்…

தமிழக மீனவர்களை பாதுகாக்க 24 மணித்தியால கண்காணிப்பு: இந்திய கடலோர…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்கும் வகையில் 24 மணித்தியால கண்காணிப்பு பணியில் தாம் ஈடுபட்டு வருவதாக இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சர்மா தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக்…

புத்திசாலியாக்கும் மாத்திரை மோடபினில்: போற்றும் மாணவர்கள்

லண்டன், அக். 29- தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மோடபினில்(Modafinil) என்கிற மாத்திரை புத்திசாலித்தனத்தை தூண்டுவதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இதனை ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். நீண்ட நேரம் பணிபுரியும் காவல் துறையினருக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 24 வெவ்வேறு துறைகளின் கீழ் சோதனை…

வர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு

வாடகைத்தாய் நடைமுறை என்பது இந்தியாவில் பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது வர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிரும்புவதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் பெரும் வர்த்தகமாக வளர்ந்துவரும் வாடகைத்தாய்கள் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்படும். குறிப்பாக…

பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால்…

பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999 முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷரப் இருந்தார். இந்தநிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 10 வயது…

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான புதையல் நகரம்!

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான புதையல் நகரம்!bg vfcdfbgvfcdxsdfgvb vcfdxதமிழகத்தின் கீழடி என்ற ஊரில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான புதையல் நகரம், சங்ககால தமிழ் மக்கள் தமது வசதி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த நாகரீக வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. கீழடி என்ற இந்த ஊர்…

ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் போதையில் உலாவும் கொடுமை.. கரூரில்!

கரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எது விற்கிறதோ இல்லையே மது மட்டும் நன்றாக விற்கிறது. மது விற்பனையில் தமிழகம் ஆண்டுக்கு ஆண்டு சாதனை படைத்தும் வருகிறது. மது…

தமிழக மீனவர்கள் 34 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை மீண்டும்…

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 34 தமிழக மீனவர்களையும் அவர்களின் 7 படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் இருந்து நேற்று 700க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு இன்று…

மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்…

மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15  அன்று  மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். https://www.youtube.com/watch?v=CHkJs1_VsFs -http://www.naamtamilar.org

தலித்துகள் கொலை குறித்து மோடி தொடர் மௌனம்: காங்கிரஸ் கண்டனம்

""ஹரியாணாவில் தலித்துகள் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காக்கிறார்; அதேசமயம், பிரிட்டனில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அவர் விரிவாகப் பேசுகிறார்'' என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. நாட்டு மக்களுக்கு மனதின் குரல் ("மன் கீ பாத்') என்னும் வானொலி நிகழ்ச்சியின்…

கோலா, பெப்சியை விரட்டுவோம்… 27ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி…

சென்னை: தாமிரபணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீர் கபளீகரம் செய்யப்படுகிறது. நெல்லை சீமையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோககோலா- பெப்சி ஆலைகளை விரட்டியடிப்போம், அக். 27-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்…

துபாயில் சொத்து வாங்கி குவிக்கும் இந்தியர்கள்

துபாய் : இந்திய தொழிலதிபர்கள், இந்தியாவில் சொத்து வாங்குவதைக் காட்டிலும், துபாயிலேயே அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், மட்டும், இந்தியர்கள் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக துபாய் ரியல் எஸ்டேட் நிர்வாகத்துறையின் பொது இயக்குநர் சுல்தான்…

உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் ; ரேடியோ உரையில் மோடி…

புதுடில்லி: மனதின் குரல் (மன் கி பாத்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசி வருகிறார் . இன்று பிரதமர் பேசுவது 13 வது உரையாகும் . இன்றைய உரையில் ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவும் உடல் உறுப்பு தானம்…

கென்யாவில் மக்கள் பசுவின் ரத்தத்தை குடித்தாலும் அவற்றை கொல்வதில்லை: மோகன்…

கென்யா நாட்டில் மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்களே தவிர அவற்றை கொல்வதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், கென்யா நாட்டில் கடும் வறட்சியின் போது, மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்கள். அவர்கள், மூங்கிலால்…

செல்போன் தான் பாலியல் பலாத்காரம் அதிகரிக்க காரணம்: ஆசம் கான்

செல்போன்கள் தான் பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் என உத்தரபிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம்கான் தெரித்துள்ளார். அவர் கூறியதாவது... செல்போன்கள் மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. இளைய தலைமுறையினரிடம் மோசமான தகவல்களை பரப்புவதில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கிராம…