பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விழாக் காலங்களில் மக்கள் செலவிடும் தொகை பாதியாகக் குறைந்தது.. அசோசாம்…
டெல்லி: இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்தட்டுக் குடும்பங்கள் விழாக்காலத்தில் செலவிடும் தொகை கடந்த வருடத்தை விட 43 சதவீதம் குறைந்துள்ளதாக அசோசாம் அமைப்பு கூறியுள்ளது. இத்தகைய நிலைக்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கல்விக் கட்டணங்கள் உயர்வு மற்றும் குறைவான வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளதாக இவ்வமைப்பு…
எல்லை தாண்டி வந்தால் 25 கோடி அபராதம்! இலங்கை அரசின்…
தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றும், தாக்குதல் நடத்தி ஊனப்படுத்தியும், பிடித்துச் சென்று சிறையில் அடைப்பதுமான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்போம்’ என அடுத்த அஸ்திரத்தை அப்பாவி மீனவர்கள் மீது ஏவியுள்ளது…
இந்தியாவைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அணுகுண்டுகள்: உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன!
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. "பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் அந்த நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: 120 அணு குண்டுகளை வைத்துள்ள பாகிஸ்தான், இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷியாவுக்கு…
பாஜக, மோடிக்கு இது பொன்னான தருணம்… திருந்த!
பலரும் எதிர்பார்த்ததற்கும், அஞ்சியதற்கும் மாறாக பீகார் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நிலவப் போகிறது அல்லது சொற்ப இட முன்னணியில் நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி விடும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. என்டிடிவி மற்றும் சாணக்கியா தொலைக் காட்சிகளின்…
தமிழகம், புதுவையில் கடும் மழை:இயல்பு நிலை பாதிப்பு
தமிழகம் அருகே வங்க கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை நீடிக்கின்றது. இப்பகுதிகளில் செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், திங்களன்று பெய்து வரும் அடை மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.…
மோடி, அமித்ஷாவின் அகம்பாவம் அழிந்தது…. கொண்டாடும் கேஜ்ரிவால்
டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்புதான் பீகார் தேர்தல் முடிவுகள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்தவர் கேஜ்ரிவால். வாக்காளர்கள் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது தேர்தலில் வென்றுள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால்.…
பீகாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார்… தொலைபேசியில் மோடி, ட்விட்டரில் அமித்ஷா…
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியாற்றியது…
தாவூத் இப்ராஹிமை மறைத்து வைத்திருக்கும் பாகிஸ்தான்: சோட்டா ராஜன் வெளியிட்ட…
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் நண்பரான சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து போலிசார் அவரை…
ஆந்திராவில் செம்மரக் கடத்தலை தடுக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி
திருப்பதி, நவ.8– ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு…
“இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும்’
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது. உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்.) தெற்காசிய, இந்தியா பகுதி தலைவர் விராஜ் மேத்தா இது தொடர்பாக இணையதளத்தில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் முக்கியமானதான இந்தியாவில், இப்போது அரசியல், பொருளாதார…
ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி: பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த தேவையான சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…
கோவனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாடல் மூலம் அரசை விமர்சித்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு நக்சலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி 2…
இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நட்புடன் இருக்கவே விரும்புகிறோம்: நவாஷ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்லாமாபாத்தில் நேற்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைனும் நவாஷ் ஷெரீப்பும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப் தி நேஷன் செய்தி நிறுவனத்திற்கு…
இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாம்: பாகிஸ்தான் முதலை கண்ணீர்
இஸ்லாமாபாத், நவ.6- இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளதாக பாகிஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்பது உலகமே அறிந்த விஷயம். ஆனால் தன்முதுகில் மேல் இருக்கும் மண்ணை பார்க்க முடியாத பாகிஸ்தான், இந்தியாவை குற்றம் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது. இப்போது பாகிஸ்தானுக்கு புதிய…
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதிக்காதீர்: மத்திய அமைச்சர்களுக்கு அன்புமணி…
சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை அனுமதிக்கக் கூடாது என்று கூறி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு…
திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு எஸ்.ஐ. பதவி வழங்கலாம்: தமிழக அரசுக்கு…
எஸ்.ஐ. பதவிக்கு விண்ணப்பித்த திருநங்கை பிரித்திகா யாஷினி முழு தகுதியுடன் இருப்பதால் அவருக்கு அந்த அந்த பதவியை வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து…
சகிப்பின்மை: விவாதிக்க அரசு தயார்
நாட்டில் தற்போது சகிப்பின்மை நிலவுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மாட்டிறைச்சி உண்டதாக உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இதனைத்…
சசிபெருமாள் மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி
காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், சசி பெருமாள் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனக் காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சசிபெருமாள் மரணம் தொடர்பாக அவரது…
எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்"…
பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் மோடி: பர்வேஸ் முஷாரப்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். சேனல் 92வுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நடக்கும் பிரச்னை ஆளும் கட்சியின் கொள்கை அடைப்படையிலானது அல்ல.…
தில்லி மக்களுக்கு ஓர் எச்சரிக்கை: சுற்றுச் சூழல் மாசு அபாயகரமான…
தில்லியில் சுற்றுச் சூழல் மாசு அபாயகரமான கட்டத்தை எட்டிவிடும் நிலையில் இருப்பதாக தெரிவந்துள்ளது. தில்லியில் காலையில் இருந்து நண்பகல் வரையில் 200 முதல் 500 கனமீட்டர் மைக்ரோகிராம் மாசு ஏற்படுவதாக தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தில்லியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி வானிலை…
ஓசோன் படலம்: மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய்ப் பாருங்க.. பசுமைத்…
டெல்லி: ஓசோன் படலம் குறித்து முதன்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனை தெரிந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள பூகோள சக்கரத்தை பாருங்கள் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கண்டிப்பு காட்டியுள்ளனர். ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை…
தாவூத்துக்கு பாகிஸ்தானில் கூடுதல் பாதுகாப்பு?
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் கூடுதல் ராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டிருப்பதையடுத்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மும்பையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிமின்…
