பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியா-பாகிஸ்தான் அமைதித் தூதராக செயல்பட மலாலாவுக்கு அழைப்பு விடுங்கள்:மத்திய அரசுக்கு…
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதித் தூதராகச் செயல்பட, பெண் கல்விக்கு உரக்க குரல் கொடுத்து வருபவரும், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்துக்காக நோபல் பரிசு பெற்றவருமான மலாலாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்,…
செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பாவில் எருக்கம்பாடு வனப்பகுதியில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தியதில், 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை பொலிசார் சுற்றி வளைத்த போது அவர்களில் சிலர் தப்பி ஓடியுள்ளனர். மேலும், அவர்களில் 55 தமிழர்கள்…
ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களில் இடம் பிடித்த சென்னை
சென்னை விமான நிலையம், ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது ’தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ்' என்ற சுற்றுலா இணையதளம், இது தொடர்பாக 27 ஆயிரத்து 297 விமானப்பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், ஆசியாவில் மிக…
இந்தியாவில் அதிகரிக்கும் பெண்குழந்தைகள் மரணம்… ஐ.நா. ஆய்வில் அதிர்ச்சி
டெல்லி: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்தான் அதிகம் மரணித்துள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் விகிதம் குறித்து உலகின் பெண்கள்-2015…
ஆம், இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தவே அணு ஆயுத தயாரிப்பு… முதன்முறையாக…
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தவே அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டதாக முதன்முறையாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் நிதியை அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்துவதாக பாகிஸ்தான் மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நாடு அணு ஆயுத குவிப்பில்…
தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டம்
இந்தியத் தலைநகர் டில்லி அருகே இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஃபரிதாபாத் என்ற இடத்தில் உள்ள வீதிகளை மறித்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் பலரும் இன்று இணைந்துகொண்டுள்ளனர்.…
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2 லட்சம் பேர்…
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 'சர்வதேச சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கை - 2015'-ல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2,07,551 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014ம் ஆண்டில் சாலை விபத்துகளில் ஒட்டு மொத்தமாக 1,37,572 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. உலக அளவில் மக்கள் தொகை 4 சதவீதமும்,…
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு உதவி: ரஷ்யா உறுதி
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு ரஷ்யா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் உறுதி அளித்துள்ளார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது குறித்து உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கைய ஏற்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ்…
சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்திருக்கிறது: அமெரிக்கா
உலக அளவில், வளரும் நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாகியுள்ள நிலையிலும், உரிய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனது பொருளாதாரத்தை பலமான நிலையில் இந்தியா வைத்திருக்கிறது என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது. இருப்பினும், உலகப் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும் முன்னோடியாக இந்தியாவால் உருவெடுக்க முடியவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க…
காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது சுமார் 53 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தியின் உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டு, அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். காந்தியின் கொள்ளுப்பேத்தியான ஆஷிஷ் லதா ரம்போகின் (45) என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்…
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மத்திய…
டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள், மற்றும் மரண தண்டனை வழங்க வழி செய்ய மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி…
“பொருளாதரத் தடையை” நீக்குங்கள்- பிரதமர் மோடியிடம் நேபாள துணை பிரதமர்…
நேபாளத்துக்கு எதிரான 'அதிகாரப்பூர்வமற்ற' பொருளாதாரத் தடையை நீக்கி எரிபொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அந்நாட்டு துணை பிரதமர் கமல் தாபா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேபாளத்தில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி முறை அமலில் உள்ளது. உலகின் ஒரே இந்து நாடு…
பசுக்களை வதம் செய்வோர் கொல்லப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி-யில் உள்ள தாத்ரி கிராமத்தில் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஊரே கூடி அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: இராமேஸ்வரத்தில் தொடரும் பதட்டம்
கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை உடைத்து, பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு இரும்பு குண்டுகளால் தாக்கி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுக் காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று…
நடிகர் சங்க தேர்தல்: தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து நடந்த…
நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து நடந்த முற்றுகை போராட்ட ம் நடந்தது போராட்ட த்தை ஒருங்கிணைத்த தமிழர் நடுவ தோழர்களுடன தமிழர் முன்னேற்ற கழக தோழர்கள மற்றும் தமிழ் தேசிய போராளிகள். Non of the Tamil Nadu T.V Channels…
காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்:பிரதமருக்கு கேஜரிவால் வலியுறுத்தல்
"காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் தில்லியில் உள்ள நாங்லோயி, ஆனந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுட்டுரையில் தான் வெளியிட்ட பதிவில் கேஜரிவால் இவ்வாறு…
தமிழக- கேரள எல்லையில் போலீஸார், மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் அந்த மாநில போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையான அகழி காவல் எல்லைக்கு உள்பட்ட மல்லீஸ்வரன் மலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.…
மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வே மத்திய அரசின் விருப்பம்
மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வையே மத்திய அரசு விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கவேண்டுமெனில் எல்லை தாண்டி மீன்…
இந்தியாவுக்கு ஐ.நா., சபை 561 கோடி ரூபாய் பாக்கி
நியூயார்க்: அமைதிப் படையை அனுப்பிய வகையில், இந்தியாவுக்கு, ஐ.நா., சபை, 561 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது; அதே சமயம், ஐ.நா.,விற்கு தர வேண்டிய தொகையை, இந்தியா நிலுவையின்றி செலுத்தி விட்டது. நியூயார்க்கில் நேற்று முன்தினம், ஐ.நா., பொதுச் சபையின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை குழு கூட்டம் நடைபெற்றது.…
குறைகிறது கங்கை நதி டால்பின்கள் எண்ணிக்கை
கங்கை நதியில் வாழும் டால்பின்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு அண்மையில் நடந்து முடிந்தது. அந்தக் கணக்கெடுப்பில் கங்கையில் இப்போது 1,263 டால்பின்கள் உள்ளதாகத் தெரியவந்தது. இந்தக் கணக்கெடுப்பு 3,350 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சுற்றுச் சூழல் மாசுபடுதல் காரணமாக ஆண்டுக்கு 130 முதல் 160 டால்பின்கள்…
மூணாறு தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் கேட்ட ஊதியம் ரூ500-…
திருவனந்தபுரம்: கேரளாவில் மூணாறு கண்ணன்தேவன் நிறுவன தேயிலை தோட்டத்தில் தமிழ்பெண் தொழிலாளர்கள் நடத்திய 2 வார கால போராட்டத்தின் முடிவில் சொற்ப கூலி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. தினக்கூலி ரூ500 வழங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ரூ301ஆக மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் போராடும் நிலைக்கு தமிழ்ப்…
பார்வையற்றவர்களில் 5-இல் ஒருவர் இந்தியர்: ஆளுநர் தகவல்
உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார். ராஜன் கண் மருத்துவமனையின் 20-ஆவது ஆண்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: உலக அளவில் இந்தியாவில்தான் பார்வையற்றோர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.…
“சீனப் போரின் போது அமெரிக்காவிடம் உதவி கோரினார் நேரு’
கடந்த 1962-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடைபெற்ற போது, அமெரிக்காவிடம் உதவி கேட்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடிக்கு, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடிதம் எழுதினார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு உருவெடுப்பதைத் தடுப்பதற்காகவே, அப்போதைய சீன அதிபர் மாசே…
