“மஹிந்தவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” : என் ராம்

இந்தியாவில் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை ஓரளவுக்கு சிறியதாக உள்ளதே தவிர, அவர்கள் கூறியபடி புரட்சிகரமான வகையில் சிறியதாக இல்லை என்று ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் பிபிசி தமிழோசையிடம் கூறினார். அமைச்சரவை அனுபவம் இல்லாத பலர் இம்முறை பதவி பெற்றுள்ளனர் என்றும்,…

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்

இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு…

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடியோன் ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது. இராஜபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, இன்று 26.5.2014 தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கொண்டிருக்கும்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், மதிமுக  கழகப் பொதுச்செயலாளர் வைகோ…

மீனவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை மோடி வரவேற்பு

இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானத்தை இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு நாளை இடம்பெறவுள்ளது.  இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க…

மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன்…

இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்‌ஷ இந்தியா…

மோடி பதவியேற்பு விழா: ஷெரீஃப் பங்கேற்கிறார்

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நவாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். இந்தப் பயணத்தின்போது,…

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததைத் தொடர்ந்து தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றவர்கள். பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும், தஞ்சாவூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரகுநாத…

தமிழக கட்சிகள் மீது அதிருப்தியை வெளிபடுத்திய மோடி: ராஜபக்சே அழைப்பு…

நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கும் தமிழக கட்சிகளின் மேல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளதால் வருகிற 26ம் திகதி நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு…

இலங்கை விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்தவித வேறுபாடும் இல்லை:…

பிரதமர் பதவியேற்கும் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கண்டித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருப்பதை சிபிஐ கடுமையாகக் கண்டிக்கிறது, இது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு, தமிழர்களின்…

ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு…

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே ராஜபக்சேவிற்கு அழைப்பு: பாஜக விளக்கம்

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்துள்ளதாக பாஜக வி்ளக்கமளித்துள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை…

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்ச பங்கேற்பு: வெந்த புண்ணில் வேல்…

இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா…

தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது பாஜக

பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக நேற்று வியாழக்கிழமை நிராகரித்து விட்டது. இது குறித்து டில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம்…

திப்பு சுல்தானின் ” ராமர்” மோதிரம்- 1.4 லட்சம் பவுண்டுகளுக்கு…

திப்பு சுல்தானின் மோதிரம்   பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட , மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் அணிந்திருந்ததாகக் கூறப்படும் தங்க மோதிரம் ஒன்று பிரிட்டனில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. இந்துக் கடவுளான ,ராமரின் பெயர், தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த இந்த…

பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே பாராட்டுகளை அள்ளும் மோடி

புதுடில்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே தனது செயல்பாடுகளின் காரணமாக, எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நரேந்திர மோடிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 336 இடங்களில் வெற்றி…

‘ராஜீவ் நினைவுநாள் உறுதிமொழியை முதல்வர் எடுக்கவில்லை’

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தமிழக தலைமைச் செயலகத்தில் வழக்கமாக நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி தமிழகத்தின்…

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷவுக்கு அழைப்பு குறித்து வைகோ எதிர்ப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே இலங்கைப் போரில் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட…

வைகோவிற்கு கவுரவ பதவி வழங்க பாஜக திட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பாஜக கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று டெல்லியில் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பின்னர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி…

பாஜக என் தாய்க்கு சமம்: கண்ணீர் விட்டு அழுத மோடி

பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி உருக்கமாக உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற மத்திய அரங்குக்குள் நுழைந்தபோது படிகளில் மண்டியிட்டு வணங்கினார். பின்னர் மூத்த தலைவர் அத்வானியின் பாதம் பணிந்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, நடந்த கூட்டத்தில் அத்வானி முன்மொழிய, பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு…

பாமகவுக்கு அமைச்சரவையில் இடம்? ” மோடி முடிவு செய்வார்”: அன்புமணி

"மோடிதான் முடிவெடுப்பார்" : அன்புமணி   இந்தியாவில் பாஜக தலைமையில் உருவாகவிருக்கும புதிய அமைச்சரவையில் , தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளிலிருந்து வெற்றிபெற்ற பாமகவுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து மோடிதான் முடிவெடுப்பார் என்கிறார் முன்னாள் அமைச்சரும் , தர்மபுரி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ்.…

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு

புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. போட்டிகளின்போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால், இந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்…

தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் இணைக்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் பொதுமக்கள் பங்களிப்புடன் இணைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராம.கோபாலன் வலியுறுத்தினார். பொள்ளாச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகின்றன. இதற்காக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக…

சோனியா, ராகுல் ராஜினாமாக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளது

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர்.   நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த…