தமிழக மீனவர்கள் தொடர் விடுதலை: இலங்கையுடன் பேச்சு நடத்த தமிழக…

முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கைச் சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து, இலங்கை மீனவர்களுடன் கொழும்பில் வரும் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு,…

மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்தால்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: ஜெயலலிதா திட்டவட்டம்

அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்த பின்னர் தான் இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வக்குமார சின்னையனை ஆதரித்து, காங்கயம் அருகே, பரஞ்சேர்வழி நால்ரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:…

இறந்த சாமியார் உயிரோடு வருவார்: சிஷ்யகோடிகள் உடலை அடக்கம் செய்ய…

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சாமியார் ஒருவர் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இறந்து விட்டார். இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் சாமியார் காலமாகிவிட்டார் என அதிகாரப்பூர்வமாக கூறினாலும், சாமியார் உச்சகட்ட தியானத்தில் இருக்கிறார், அவரும் இறக்கவில்லை என்று கூறி அவருடைய சிஷ்யகோடிகள் உடலை அடக்கம்…

மாணவி பாலியல் வல்லுறவு: நால்வருக்கு மரண தண்டனை உறுதி

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டில் இன்று வியாழக்கிழமை டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்தரபால் மற்றும் பிரதிபா ராணி ஆகியோர்…

தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு…

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம்,…

தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து…

நியூயார்க்: முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், அவமதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.…

116 இந்திய மீனவர்கள் விடுதலை : நாளை பேச்சுவார்த்தை நடக்காது

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்தமைக்காகக் கைது செய்யப்பட்டு யாழ்ப்யாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 116 இந்திய மீனவர்கள் புதனன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட நீரியல் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார். இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவரையில் மொத்தமாக 148 பேர் கடற்படையினரால்…

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 16 பேர் பலி

நக்ஸல்கள் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரை சிகிச்சைக்காக வாகனத்தில் கொண்டு செல்லும் சிஆர்பிஎஃப் படையினர். நக்ஸல்கள் தீவைத்ததில் உருக்குலைந்த வாகனங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திமுக- அதிமுக

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.…

மோடி பிரதமரானால் சிறிலங்கா குறித்த இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் வரும்…

இந்திய மத்திய அரசின் பலவீனத்தினால் தான், இந்தியாவை சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும், நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தநிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இந்தியாவின் முன்னாள் வெளிவகார அமைச்சரும், பாஜக மூத்த தலவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், நேற்றுமாலை மதிமுக சார்பில்…

இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ஐநா பெண்கள் அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா. சபை பெண்கள் அமைப்பு, இந்தியாவின் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்தது. இது குறித்து அந்த அமைப்பின் பிரதிநிதியான ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியதாவது: இந்தியாவில் பெண்…

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் பேசுகிறார் ராகுல்: மோடி தாக்கு

பிகார் மாநிலம் பூர்ணியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக முழக்கமிடும் மோடி.   காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை நினைவில் கொள்ளாமல், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார்…

எம்.பி.;எம்.எல்.ஏ. மீதான வழக்குகள் ஓராண்டில் நிறைவுற வேண்டும்: உச்சநீதிமன்றம்

  இந்திய உச்சநீதிமன்றம்   இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஒரு வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. போன்றோர், பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீதுள்ள வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், தண்டனை…

“இடிந்தகரையிலிருந்து விரைவில் வெளியே வருவோம்”

ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இடிந்தகரையில் இருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் உதயகுமார் பேசினார். இடிந்தகரையில் இருந்து விரைவில் வெளியே வருவோம் என அவர் கூறினார். ஆம் ஆத்மி கட்சி சார்பில், மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

குஜராத்தை விட மேற்கு வங்கத்தில் அதிக வளர்ச்சி

குஜராத்தை விட மேற்கு வங்க மாநிலம் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தில்லியில் பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: குஜராத் மாநிலத்தில் நக்சல் பிரச்னை இருந்ததா? ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் இருந்த நக்சல் பிரச்னைக்கு தீர்வு…

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்! ஜெயலலிதா

துரோகம் செய்யும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறியுங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு பெருகிவிட்டது. இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தான் முக்கிய காரணமாகும். அரசு நிர்ணயித்து வந்த…

விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி :…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று பாராட்டு விழா…

குஜராத்தில் கேஜரிவால் கூட்டத்தில் கல்வீச்சு

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் "ஆம் ஆத்மி' கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சௌக் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுமார் 50 பேர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு…

7 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்வார்!- ராம் ஜெத்மலானி

7 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன்,…

பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது; மோடி அலை ஏதும் இல்லை

"உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் மோடி அலை ஏதும் வீசவில்லை' என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச உயிரியல் பூங்காவுக்கு சில சிங்கங்கள் வழங்கப்பட்டன. இதை வைத்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்துக்கு சிங்கங்களே…

மோடியை திடீரென சந்திக்க முயற்சி: கேஜரிவாலுக்கு மறுப்பு

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி திடீரென கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் குஜராத்தை விட்டு அவர் வெளியேறினார். குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதா? என ஆய்வு செய்யும்…

ஜெ. பிரதமராவதை ஆதரிப்பேன்: மமதா பானர்ஜி

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமராக தேர்வாகும் சூழல் உருவானால், அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு அளிக்கப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பிரதமராக தேர்வு செய்யும் பட்சத்தில் அதை முழுமனதோடு வரவேற்பேன்…

அதிமுகவால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும்

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், நாகை மக்களவைத் தொகுதி  வேட்பாளர் கே. கோபாலுக்கு வாக்கு சேகரித்துப் பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா.   அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும். விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்று தமிழக…