சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு மோடி வலியுறுத்தல்

பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டை வளப்படுத்த மக்கள் சரியான முடிவை எடுத்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை காலை மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் பின்னர் டுவிட்டர் இணையதளத்தில்…

மேலும் 15 இந்திய மீனவர்கள் கைது: மீனவர்களை விடுவித்தால் மட்டுமே…

இலங்கையின் கடல்பகுதிக்குள் அத்துமீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் 15 இந்திய மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் 32 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸில்…

இலங்கை கடற்படை தரும் துயரத்தை கூற இனி வார்த்தைகள் இல்லை!–…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை மற்றும் துயரங்களை கூறுவதற்கு இனி தம்மிடம் வார்த்தைகள் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் இந்த மாதம்…

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கி​றது!- பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள…

இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது!- திருமுருகன் தடாலடி

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கம், சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டது. தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகனிடம் பேசினோம். ஐ.நா-வுக்கான உயரதிகாரியாக பணிசெய்த விஜய் நம்பியார், இலங்கை அரசுக்கு…

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்யும் விஷயத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில், தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…

தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல்! அமைச்சர் சிதம்பரத்துக்கு…

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு அருகே…

இலங்கைத் தமிழர்களுடன் இந்தியா இணைந்திருக்கும்: குர்ஸித்

இலங்கையின் வடக்கு தமிழர்களின் புனர்வாழ்வு பணிகளில் இந்தியா இணைத்திருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இன்று மியன்மாரில் சந்திக்கவுள்ளமை தொடர்பிலேயே குர்ஸித் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே இந்தியா அவர்களுக்கு வீடுகள், பாடசாலைகள்…

எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்கு

எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் விவகாரத்தில், பள்ளிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக குற்றம் கூறியுள்ள நாஸ் என்கிற தன்னார்வ…

“ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடலில்…”

இலங்கை இந்திய மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருநாட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை மீறும் வகையில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் சனிக்கிழமை இரவு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது பற்றி தகவல் தெரிவித்த மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத்…

ராஜீவோடு கொல்லப்பட்டோரின் உறவினர் உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்கள். ராஜீவ் கொலை…

வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள்: நரேந்திர மோடி

முஸ்லிம் மக்களை சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கு வங்கியாக பார்ப்பதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் மேலும் அவர் கூறியதாவது: மதச்சார்பின்மை குறித்து பேசி நாட்டு மக்களை சமாஜவாதி,…

மோடி ஆண்மையற்றவர் தான்: அடித்து சொல்கிறார் சல்மான் குர்ஷித்

இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம்…

மார்ச் 13ல் இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் 13ம் திகதியன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையின் சிறைகளில் உள்ள 121 இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக…

ராஜீவ்காந்தி சிலை உடைப்பு வழக்கு: நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை…

ஆந்திராவில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 122வது முறையாக பிறப்பிக்கப்படும் குடியரசு தலைவர்…

“மரண தண்டனையைக் குறைத்த தீர்ப்பில் வெளிப்படையான தவறுகள்”

இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களது கருணை மனுக்களில் முடிவு வழங்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத கால தாமதத்தை ஏற்படுத்திவிட்டதால், அவர்களுடைய மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி மத்திய அரசு சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய…

இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள் கவலை அளிக்கின்றன: அமெரிக்கா

இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள் கவலை அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் மற்றும் மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகள் சுமுகமான முறையில் முடிந்து விட்டதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்து விட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி,…

காங்கிரசும் வேண்டாம் காவியும் வேண்டாம்! ஆம் ஆத்மியில் இணைந்த உதயகுமார்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார். இடிந்தகரையில் நடைபெற்ற விழாவில், ஆம் ஆத்மி நிர்வாகி டேவிட் முன்னிலையில் உதயகுமார் மற்றும் கூடங்குளம் போராட்டக்குழுவின் இதர நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவிலிருந்து தாம் வெளியேறுவதாகவும், தனக்குப்பதிலாக…

கச்சதீவை ஏன் இந்தியா மீளக்கோர முடியாது? !– ஜீ.கே.வாசன் கேள்வி

இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவின் அதிகாரத்தை இந்தியா ஏன் மீண்டும் கோர முடியாது என்று இந்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சதீவை மீளப்பெறுவது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு…

ராகுலை விட மோடிக்கு ஆதரவு அதிகம்: அமெரிக்க நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: நடைபெற உள்ள இந்திய பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளதாக, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவுக்கான தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீட்டுக்கான ஆயத்தப் பணிகளில்…

நளினி உள்பட நால்வரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன்,…

புதிய வர்த்தக யுக்திகள் வேண்டும்: நரேந்திர மோடி

இந்திய வர்த்தகர்கள் தமது வர்த்தகக் கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் முதல் நாளான வியாழனன்று அதில் கலந்து கொண்டு பேசிய…