பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சீதைக்கு இலங்கையில் கோயில் : மத்தியப் பிரதேச அரசின் திட்டம்
இலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட…
அனைத்து கட்சியிலும் ஊழல்: 86% இந்தியர்கள் நம்புவதாக ஆய்வில் தகவல்
லண்டன் : அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிறைந்தவை தான் என 86 சதவீதம் இந்தியர்கள் நம்புவதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அம்பலமாகி உள்ளது. ஊழலின் அளவு குறித்தும், நாடுகளின் அரசியல் கட்சிகள் பற்றிய மக்களின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. "சர்வதேச ஊழல்…
தமிழகத்தின் முதல் பசுமை நகரமாக கோவை
கோவை: கோவை நகரிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், நகரம் முழுவதும் மரங்களை வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள புதிய முயற்சி, வெற்றியடைந்தால், இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்தின் முதல் பசுமை நகரமாக கோவை மாறும் வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கோவை நகரில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன்…
எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி அட்டூழியம்
லே: எல்லையில் மீண்டும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்தும், பதுங்கு குழிகளை சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்துள்ளது. அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில், நடைமுறை எல்லை…
தர்மபுரியில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில்…
தர்மபுரியில் இளவசரன் மரணத்தை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அரசியல் கட்சியினர் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் சார்பில் அவரது…
ஆசிட் வீச்சு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
புதுடில்லி: பெண்கள் மீதான ஆசிட் வீச்சு தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக ஆசிட்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் அதிகரித்து…
புத்தகயா குண்டுவெடிப்பு: பிடிபட்ட சந்தேகநபரிடம் விசாரணை தொடர்கிறது
இந்தியாவில், பௌத்தர்களின் புனித தலமான புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் புத்தகயாவை அண்டி வரிசையாக ஒன்பது இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பேர் காயமடைந்தனர்.…
என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்க ‘செபி’ அமைப்பு ஒப்புதல்
புதுடில்லி:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக அரசு வாங்க, இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், என்.எல்.சி., பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், விரைவில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. என்.எல்.சி.,யின், 5 சதவீத…
எல்லை பாதுகாப்பில் பெண் கமாண்டோ: இந்திய வரலாற்றில் புதிய ஏற்பாடு
புதுடில்லி: பாதுகாப்பு துறையில் பெண்கள் பல விதமாக அங்கம் வகித்தாலும் எல்லை பாதுகாப்பில் பெண் அதிகாரிகள் இது வரை நியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இந்த குறை இப்போது நிறைவு பெறுகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:…
புத்தகாயாவில் குண்டுவெடிப்பு : பௌத்த மையங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள ''புத்தகாயா'' பௌத்த வழிபாட்டிடத்தில் ஞாயிறன்று அதிகாலை 8 குண்டுகள் வெடித்துள்ளன. நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலில் எவரும் பலியாகவில்லை என்றும், அங்கிருக்கும் போதி மரத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அந்த பௌத்த ஆலய…
சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன் : கருணாநிதி ஆவேசம்
திருவாரூர்: ""சேது சமுத்திரத் திட்டத்துக்காக, என்னையும் அழித்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன்,'' என, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார். திருவாரூர் தெற்கு வீதியில், கருணாநிதியின், 90வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் கலைவாணன்…
கேதார்நாத் கோவில் சிலைகள், பொருட்கள் திருடப்படும் அபாயம்!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில்ஏற்பட்ட பேய்மழை, பெருவெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ள, கேதார்நாத் சிவன் கோவில் சிலைகள் மற்றும் பழமையான பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கொள்ளையர்கள் எந்த நேரமும், அவற்றை கொள்ளையடித்துச் செல்லலாம் என்ற நிலை காணப்படுகிறது. புராண காலத்தை சேர்ந்தது: மந்தாகினி ஆற்றில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவில்,…
யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் …
சுமார் 12 வருடங்களாக மலையாள மாத்ருபூமியின் புகைப்படக்கலைஞராக இருந்துவிட்டு தற்போது திருவனந்தபுரத்தில் புகைப்பட பயிற்சி பள்ளி வைத்து நடத்துகிறார். பத்திரிகை புகைப்படக்காரராக இவர் பணியாற்றிய காலத்தில் இவர் அதிகம் ரசித்து படமெடுத்தது யானைகளை மட்டுமே, இதற்காக ரொம்பவே அலைந்து படங்களை பதிவு செய்துள்ளார். இதனால் இவருக்கு "யானை' சந்திரகுமார்…
தலாய் லாமாவின் 78-வது பிறந்த நாள்: கோலாகல கொண்டாட்டம்
தர்மசாலா, திபெத்தியர்களின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர் தலாய் லாமா. 6-7-1935 அன்று திபெத்தில் பிறந்த இவரை 13வது தலாய்லாமா துப்டன் கியாட்சோவின் மறுபிறவியாக கருதிய புத்த துறவிகள் இவரது 2-வது வயதிலேயே தங்களின் அடுத்த மதத் தலைவராக தேர்வு செய்தனர். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவித்து தனி…
உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் – யுக்தா…
மும்பை : உலக அழகியும், பிரபல நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.…
தில்லி பாலியல் வல்லுறவு: இளம்பிராய சந்தேக நபர் மீதான வழக்கு…
தில்லியில் சென்ற வருடம் யுவதி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளம்பிராய குற்றச் சந்தேகநபர் ஒருவர் மீது நடந்துவந்த வழக்கு முடிவடைந்துள்ளது. இந்திய இளம்பிராயத்தார் நீதிவிசாரணை தீர்ப்பாயம் இவ்வழக்கில் தனது தீர்ப்பை ஜூலை 11ஆம் நாள்…
சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது : சீன தளபதி கொக்கரிப்பு
பீஜிங்: ""எல்லை பிரச்னையில், சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது,'' என, சீன ராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சீன பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய - சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, அந்நாட்டு ராணுவ அமைச்சருடன் இன்று அவர்…
பட்டியாலா மகாராஜாவின் வெள்ளிப் பாத்திரங்கள் ஏலம்
பாட்டியாலா மகாராஜாவின் விருந்து பரிமாறும் பாத்திரங்கள் ( டின்னர் செட்) லண்டனில் ஏலத்துக்கு வருகிறது. சுமார் 500 கிலோ எடையுள்ள தங்கம் பூசப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களுக்கு ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்கள் முதல் 2.3 மில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுவதாக கிரிஸ்ட்டிஸ் ஏல நிறுவனம் கூறுகிறது.…
தர்மபுரி கலப்பு திருமணம்: கணவன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு
தமிழகத்தை உலுக்கிய தர்மபுரி மாவட்ட கலப்பு திருமணத் தம்பதியரில், கணவன் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். தலித் இளைஞரான இளவரசன் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவை அவரது பெற்றொரின் விருப்பத்தை மீறித் திருமணம்…
யோகா மதசார்பின்மையை ஏற்படுத்துகிறது
இந்தியாவில் உருவான யோகா கலை, மதசார்பின்மையை ஏற்படுத்துவதாக கலிபோர்னியாவை சேர்ந்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு…
உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல்
இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும். உணவுப்…
காவல்துறையில் பாலியல் தொல்லை: தமிழகத்தில் விசாரணைக் குழு
காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கின்ற பாலியல் தொல்லை தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரிக்கவென தமிழகத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சீமா அகர்வால் தலைமை வகிப்பார் என…
கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்
புதுடில்லி : சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையின் பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர்…
