பெண்கள் மீதான தாலிபான்களின் கொடூர அடக்குமுறை!

பாகிஸ்தானில், மழையில் நனைந்து நடனம் ஆடிய சகோதரிகளை, தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமிகள் ஆடும் காட்சிகள், இணையதளத்தில் வெளியானதைப் பார்த்த பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பழமைவாத கருத்துகளை பின்பற்றும், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், ஏராளமானோர் உள்ளனர். காதல்…

கருணை மனுக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மத்திய அரசு…

புதுடில்லி: "தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி எடுக்கும் முடிவே, இறுதியானது. கருணை மனுக்கள் மீது, ஜனாதிபதி, ஒரு முடிவு எடுத்தபின், அதில், கோர்ட் தலையிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொடூர கொலை வழக்கில், அசாம்…

இந்திய தூதரகத்தை உளவு பார்த்த அமெரிக்க புலனாய்வு துறை

வாஷிங்டன்: இந்திய தூதரகம் உள்ளிட்ட, 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். தற்போது இவர், ரஷ்யாவில் பதுங்கியுள்ளார். இவரை ஒப்படைக்கும் படி,…

ஊட்டச்சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகம்

புதுடில்லி: சர்வதேச அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இந்தியாவில்தான் 40 சதவீதத்தினர் உள்ளனர் என்றும், இதற்கு இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அமல்படுத்துவதில் சீரான வழிகள் பின்பற்றப்படவில்லை என்றும், இந்திய கொள்கைகள் படுமோசமாக இருப்பதாகவும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனடாவை மையமாக கொண்டு…

இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்

புதுடில்லி:இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் உள்ளது. இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம். ரூபாயின் மதிப்பு சரிவு:டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள்…

காவிரி-படுகை மீதேன் திட்டத்தை கைவிடலாம்: அமைச்சர் ஜெயந்தி

தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு மற்றும் நிலக்கரியை எடுக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிடுவதே சரி என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். மத்திய அரசு கடந்த 2010 இல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி எனும் நிறுவனத்துடன்…

அரசே அவமானப்படுத்தலாமா?

இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப்பிடம் போன்ற எல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட்டிருப்பதை…

நிர்வாண கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி காடன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் கைவரிசை காட்டி வருகிறான். வீடுகளுக்கு வெளியில் காம்பவுண்டு சுவருக்கு உட்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சமையல்…

செயல்படாத தலைவர் கருணாநிதி: பரிதி இளம்வழுதி சிறப்பு பேட்டி

சென்னை: கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில், தி.மு.க., சார்பில், ஒரேயொரு, எம்.எல்.ஏ., வாக பரிதி இளம்வழுதி அதிரடியாக பணியாற்றி, தி.மு.க., வுக்கு குரல் கொடுத்தார். 1996 முதல், 2001ம் ஆண்டு வரை துணை சபாநாயகர் பதவி வகித்தார். பின்,…

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா​வில் தொடர்ந்து பயிற்சி!

சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவில் இருந்து விரட்டியடிப்பது நாளுக்குநாள் தொடர்கிறது. ஆனாலும் அவர்களைப் பயிற்சிக்காக வரவழைப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவே தெரியவில்லை. கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தஞ்சாவூரில் இந்திய விமானப்படைத் தளத்தின்…

சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரம் : அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: சி.பி.ஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான அமைச்‌சரைவை பரிந்துரைக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்க வழக்கு குறித்து விசாரணை நடத்தி சி.பி.ஐ., அதன் அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் காண்பித்ததை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. சி.பி.ஐ தற்போது…

நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டர்

ராஜ்நந்கவான்: நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயியை, உன் விருப்பப்படி செத்துப் போ என்று ஒரு மாவட்ட கலெக்டர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி. ராமேஷ்வர், தனக்கு சொந்தமான…

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக,இ.கம்யூ,திமுக வெற்றி

தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே, ஆளும் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும், அதன் ஆதரவு பெற்ற ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், திமுகவின் வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளனர். அ இஅதிமுகவின் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல் ஆகியோர் தலா 36 வாக்குகளும், அக்கட்சியின்…

மீட்பு பணியில் ஈடுபடுவது யார்? கட்சிகளிடையே மோதல்

டேராடூன்: உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு யார் உதவி செய்வது என்பது தொடர்பாக டேராடூன் விமான நிலையத்தில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின்…

இந்திய சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் ஏன் ?

கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம் கூறுகிறது. கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர்.…

உத்தர்கண்ட் மீட்பு ஹெலிகாப்டர் விபத்து: பலியான 17 வீரர்கள் உடல்…

புதுடில்லி: இமயமலை சுனாமி எனப்படும், பேய் மழையால் உருக்குலைந்து போன உத்தரகண்ட் புனித தலங்களை சீரமைக்க ரூ. 100 கோடியை மத்திய அரசு ஒதுக்கிட முடிவு செய்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்மாதம், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்…

நெய்வேலியில் 5 வீத பங்குகளை தமிழக அரசு நிறுவனங்களுக்கு விற்கவும்

மத்திய அரசு விற்கவிருக்கிற 5 சதவீத நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்குகள் தமிழக அரசு நிறுவனங்களுக்கே விற்கப்படவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியிருக்கிறார். அத்தகைய விற்பனைக்குத் தமிழகத்தில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், ஐந்து சத பங்குகளை விற்பதென்று மன்மோகன் சிங் அமைச்சரவை கடந்த…

அரசு அறிவித்தப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செயல்படுமா?

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் முக்கியமான இடத்தை வகிப்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி. யானைகள் கூட்டம்.. கூட்டமாக அதிகமாக வாழும் காடும் இதுதான். கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்படும் போது அப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டமாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும். காரணம் சத்தி- பவானிசாகர்…

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 5 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஸ்ரீநகர் வரும் நிலையில், ராணுவ கான்வாயை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். ஸ்ரீநகர் அருகேயுள்ள பெர்மினா பகுதியில், ராணுவ வாகனங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் இரு…

தமிழகத்திலிருந்து இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறினர்

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை கூற அவர்…

தமிழக அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம்: பிரதமருக்கு, முதல்வர்…

சென்னை:"என்.எல்.சி., பங்குகளின் உண்மையான மதிப்பு தெரிந்திருந்தும், அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தமிழக அரசு மீது, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் முயற்சி,' என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடித விவரம்:நெய்வேலி…

இந்த வேகம் யாருக்கப்பா வரும்…! 15 ஆயிரம் பேரை மீட்ட…

உத்ரகண்ட்: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை அதிகாரிகள் படையுடன் சென்று பத்திரமாக மீட்டு வந்தார் மோடி . இவரது அசுர வேக செயல்களை பக்தர்களும் , பா.ஜ., தொண்டர்களும் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளனர். பருவ மழை காரணமாக வட மாநிலங்கள் வரலாறு காணாத…

வட இந்திய வெள்ள மீட்பு முயற்சிகள் தீவிரம்

இந்திய அரசாங்கத்தினால் தேசிய நெருக்கடி நிலையாக விபரிக்கப்பட்டுள்ள வட இந்திய வெள்ளத்தில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களை ஹெலிக்கொப்டர்கள் மூலம் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற பாதுகாப்புப் படையினர், வீதிகளையும், பாலங்களையும் திருத்துவதற்காகவும் திண்டாடிவருகின்றனர். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை…