பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை!
சென்னை: "தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை'' என Read More
ஊழலை ஒழிக்க அரசியலில் குதிக்கிறது அன்னா ஹசாரே குழு
டெல்லி: இந்தியாவில் ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஊழலை ஒழிக்க அவர்கள் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளனர். ஊழலுக்கு எதிராகவும், வலுவான…
புனேயில் தொடர் குண்டு வெடிப்பு: முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று மாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஜங்கலி மகாராஜா சாலை, டெக்கான் சாலை, கந்தர்வா திரையரங்கு அருகில் மற்றும் கார்வாரே கல்லூரி அருகில் என அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்டதாக…
உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க…
ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பைடிதல்லி (வயது70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின்…
அறுபது கோடி இந்திய மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு!
ஆமதாபாத் : இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களாக டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. இதனால் மெட்ரோ உள்ளிட்ட ரயில்களின் சேவை,…
ஊழியர்களை கூண்டோடு இடமாற்றம் செய்த தமிழக அமைச்சர்
திருவள்ளூர்: தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனையில் தொழிலாளர் தமிழக அரசின் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு நடத்தி, ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனை ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கணினியில்…
மாணவர்களிடம் கைத்தொலைபேசி இருந்தால் பறிமுதல் செய்க: தமிழகத்தில் உத்தரவு
தமிழகம்: பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி வைத்திருந்தால் பறிமுதல் Read More
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து; தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த…
நெல்லூர்: இந்திய தலைநகர் டில்லியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த புகையிரத்தின்…
தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்: சீமான்
சென்னை: "உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர்…
சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு முற்றுகை
இந்திய நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அன்னாஹசாரே ஆதரவாளர்களும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள்…
விபத்தில் சிறுமி பலி; பள்ளிப் பேருந்து தீயிட்டு எரிப்பு!
சென்னையை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, புதன்கிழமை (25.7.12) பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு துவாரம் வழியாக கீழே விழுந்து அவள் பயணித்த பேருந்து ஏறியே கொல்லப்பட்ட சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை…
“கை விடப்படவில்லை”: சொல்கிறார் கருணாநிதி
சென்னை: "தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட வில்லை'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். "இந்திய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில், தி.மு.க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய மத்திய அரசின் வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக…
இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி
சென்னை: இலங்கை விமானப் படையினர் நான்கு பேர், பயிற்சிக்காக மாற்று உடையில் சென்னை வழியாக கோல்கட்டா சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையினருக்கு தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பின் அவர்கள்,…
இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத்…
மருமகளுக்கு தனது கிட்னியை தானம் கொடுத்த மாமியார்!
மராட்டிய மாநிலம் நாசிக் தாலுகாவில் உள்ள பலஷிகாவின் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). இரண்டு குழந்தைகளுக்கு தாய். காயத்ரிக்கு கடந்த ஆண்டு கிட்னி தொடர்பான நோய் பாதித்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு கிட்னி முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக…
அமெரிக்க கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் பலி
துபாய்க் கடற்பரப்பில் மீன் பிடி படகொன்றின் மீது அமெரிக்க கடற்படையினர் சுட்டதில், படகில் இருந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் துபாய் அருகேயுள்ள ஜெபல் அலி என்ற துறைமுகத்துக்கு அருகே நடந்ததாக பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் தெரிவிக்கிறார். கொல்லப்பட்ட…
தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சிங்கள இராணுவத்தினர் இடமாற்றம்!
தமிழகம்: தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து குன்னூரில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு இலங்கை இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு கருதி வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குன்னூரில் நடைபெறும் இராணுவ பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள 10 நாடுகளிலிருந்து இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். முகாமில் பங்கேற்க வந்துள்ள…
தனி ஈழத் தீர்மானம்: பல்டி அடித்த கருணாநிதி!
தமிழகம்: திமுக தலைவர் மு. கருணாநிதி அடுத்த மாதம் சென்னையில் தனது கட்சி நடத்தவிருக்கும் டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது எனக் கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை (15.07.2012) கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். அச்சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக…
இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் இந்தியா கட்டித்தர ஒப்பந்தம்
கொழும்பு: இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை…
இராணுவ வீரரை அடித்து உதைத்த பொதுமக்கள்!
இந்தியா அசாம் மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவர், விறகு சுமந்து கொண்டு சென்ற இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் சிப்சாகர் மாவட்டத்தில், நெட்டை புஹூரி வனப்பகுதியில் விறகு சுமந்து கொண்டு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது…
இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்கடன் என்ற இடத்தில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி மையத்திற்கு இலங்கை இராணுவத்தின் 57-ம் பிரிவு படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் கடற்படையின் ரியர் அட்மிரால் எஸ்.என்.ரணசிங்க ஆகிய இருவரும் பயிற்சிபெற வந்திருக்கும் சம்பவத்தால் அப்பகுதியில்…
ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பா? சர்ச்சைக்குரிய கடிதத்தால் பரபரப்பு!
இந்தியாவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul-…
100-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பு
இலங்கையின் பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் மருத்துவ மனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் இராணுவ வீரர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 57 பேர் பனாகொட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவ…