இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை! கசிந்தது நவநீதம்பிள்ளையின் அறிக்கை!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்…

ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தை ஏமாற்ற முடியாது!- உறவுகள் ஆதங்கம்!…

இலங்கை அரசாங்கம் ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தையோ, வடக்கையோ  ஏமாற்ற முடியாது. இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியப்பதிவுக்காக நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த உறவுகள் பலர் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பான சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்படி…

காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று…

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து…

என் கணவரை விசாரணைக்கென அழைத்து சென்ற இராணுவத்தினரை அடையாளம் காட்டமுடியும்!:…

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா, இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தனது கணவர் சரணடைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்டமுடியும் என…

காணாமல்போகச் செய்தவர்கள் படையினர், ஈபிடிபி, கருணா குழுவினரே!- உறவுகளின் கண்ணீரால்…

யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய…

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முனைப்பை ரஷ்யா நிராகரிப்பு

மேற்கத்தைய நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை கோருவதை ரஷ்யா நிராகரித்துள்ளது. இலங்கையின் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை கோரப்போவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்து வருகின்ற. ஏற்கனவே இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளும் இலங்கையை கேட்டுக்கொண்டது.…

இலங்கை மீது போலியான சாயம் பூச முயற்சி: சவேந்திர சில்வா

மேற்கத்தைய நாடுகளில் இலங்கை மீது போலியான சாயத்தை பூச பல குழுக்கள் முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக்குழுக்கள் தமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திப்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றன. எனினும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். நியூயோக்கில்…

அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 800 குழுக்கள்: கலக்கத்தில் இலங்கை!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் அடிப்படையில் தமது கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு விடுதலைப் புலிகளின்…

ஐ.நா தலையீட்டுடன் வடக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!– அரசாங்கம்

வடக்கின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் தீர்வு காண முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வட மாகாணசபைக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென…

அமெரிக்க,பிரித்தானிய யோசனைகளை நிராகரித்த இலங்கை அரசு!- திவயின தகவல்

மார்ச் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் வடமாகாண சபைக்கு 13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டுமென அமெரிக்காவும், பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோளை  இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 சிபார்சுகளையும்…

அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.நாவின் மனித…

போரின் போது மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: மன்னிப்புசபை கோரிக்கை

இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு சர்வதேச மன்னிப்பு சபை, 25வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரியுள்ளது. ஜெனீவா மாநாடு ஆரம்பமாவதை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரின் போது மனித…

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் நிறைவேறும்: பிரித்தானியா நம்பிக்கை

இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளன. தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் மற்றும் சியோப்ஹெய்ன் ஆகியோர், பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த நாட்டின்…

இலங்கைக்கு சீனா ஆதரவு வழங்குவதாக பீரிசிடம் வாக்குறுதி!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. நேற்று பெய்ஜிங்கில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துப் பேசிய, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்துள்ளார். மனிதஉரிமை விவகாரங்களை வைத்து இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், சில நாடுகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக,  வெளிவிவகார…

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செவ்வி

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை அவசியமெனக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக  பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கின் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு…

சிறிலங்காவில் பெண்களின் நிலை – அமெரிக்க அதிகாரி கவலை

சிறிலங்காவை விமர்சிப்பதற்காகவே, தான் அங்கு பயணம் செய்யவிருந்ததாக, சிலர் எண்ணுவதாகவும், ஆனால், தனது நோக்கம் அதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல். சிறிலங்காவினால், நுழைவிசைவு மறுக்கப்பட்ட, கத்தரின் ருசெல் அம்மையார், நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கன் நிலையத்தில், உள்ளூர் பெண்கள்…

“இந்திய மாநில அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்”…

இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினை இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்துள்ளமையை ஏற்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேலும்…

எதிர்கால உறவு குறித்து இலங்கையும் ஐ.நாவும் பேச்சு

இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் தமக்கிடையிலான எதிர்கால உறவுகள் குறித்து கலந்துரையாடின. இலங்கைக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் ஹோலியாங் சூ மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுக்கா செனவிரட்ன ஆகியோர் இன்று இது தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்…

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் –…

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான, ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் சிறிலங்காவும் மும்முரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே, சிறிலங்கா அமைச்சர்கள் பலரும், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ்,…

நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார். எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஐந்து…

இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து வெளியிட உள்ளது

இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து வெளியிட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது. இந்த மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை…

லிபியா மற்றும் ஈராக் போன்று இலங்கையையும் மாற்ற தீய சக்திகள்…

லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனித உரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர் என அவர்…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உரையாற்றுவர்!

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர். எதிர்வரும் 25 வது மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் கடுமையான…