பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சர்வதேசம் சர்வதேசமென்று செல்வதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை! பிரதியமைச்சர் கருணா
சர்வதேசம், சர்வதேசம் என்று செல்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எமது பிரச்சினையை எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த முறையாக அமையும் என மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் குறித்த…
“மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை”
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் மேம்படவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. திருகோணமலையில் மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்த ஒரு நிகழ்வில் அவர்கள் மிரப்பட்டனர். உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித…
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்த விசேட அமெரிக்க பிரதிநிதி நியமனம்
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தவும், தீர்மானம் நிறைவேற்றவும் சமேலா கே…
ராஜபக்ச கூறுவது பொய்: வடக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும்…
வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக பொய்யுரைத்துள்ளதாகவும், வடக்கில் 16 முதல் 19 வரையான படைப் பிரிவுகள் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் நேற்று யாழ் புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய…
இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன்!– ஆணைக்குழு முன் அனந்தி…
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்டத்திற்கான மூன்றாவது நாள் அமர்வினை இன்று திங்களன்று நடத்தியபோது, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்க சட்டம்: அமைச்சர்
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார். தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய…
பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத்…
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு…
பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு போகவேண்டிய தேவையில்லை!
உள்நாட்டின் பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு எங்கள் பிரச்சினைகள் போகவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. எமது பிரச்சினை 60 வருடங்களைக் கடந்து நகர்ந்திருக்கின்றத என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தினால் வடமாகாண சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று…
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவோம்: சீன தூதுவர்
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எந்த தயங்கமும் இன்றி, இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் ஜீ ஹெங் ஹோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கை…
நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரித்தானியா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை…
அனந்தி கைதானாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ அரசாங்கம் பின்விளைவுகளை சந்திக்கும்!- சுரேஷ் எம்.பி
வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்…
வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி…
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை அரசு இது தொடர்பான இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது. இறுதிப் போரின் போது வன்னிப் பிராந்திய மருத்துவ சேவைகளிற்கான தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் வீரகத்திப்பிள்ளை…
மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம்!- சிங்கள…
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில மேற்குலக நாடுகள் புலி ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வமா மாநாட்டில் பங்கேற்பதற்கு அனுமதியளித்துள்ளன. இந்த நடவடிக்கையானது முழுமையாக சட்ட விரோதமானது. வெளிவிவகார…
இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்பதை கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும்!-…
வடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் பிழை…
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது…
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது. அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 29ம் திகதி இலங்கையில் மேல் மற்றும்…
இலங்கையில் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். முதலாவது மோட்டார் வண்டி ஓட்டுநரை தினசரி கூலி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.…
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும்- ஐ.தே.க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துதுள்ளார். இலங்கைக்கு எதிராக ஏற்கனவே இரண்டு தடவைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண…
இலங்கை மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்க ஒப்புதலளிக்க முடியாது!
இந்தியா வந்திருக்கும் இலங்கை மீனவர்கள் இலங்கையில் வாழும் வடகிழக்கு பகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்வகையிலான தமிழக மீனவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க மாட்டோம் என இந்தியா வந்துள்ள இலங்கை மீனவர் பிரதிநிதி குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்து உள்ளதால்…
அனைத்துலக காவல்துறையால் தேடப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் பாரிசில்…
தீவிரவாதம் தொடர்பாக அனைத்துலக காவல்துறையால் (Interpol)தேடப்பட்டு வந்த – விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிரான்சில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு,… அனைத்துலக காவல்துறையால் தேடப்பட்டு வந்த கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதுடைய ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவரே பாரிசில்…
மனிதஉரிமை மீறல்கள் புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம்!- விக்ரமபாகு கருணாரட்ன
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் உண்மையான புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம். ஜெனிவா கூட்டத்தொடரின் போது அரசை தோல்வியடையச் செய்ய வேண்டுமாயின் வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கை அரசியல் அமைப்புகளுடன் இணைய வேண்டும் என நவ சமசமாஜக் கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். ஆகவே,…
இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை
இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை…
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன!- சிங்கள ஊடகம்
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் பொது இலங்கைக்கு எதிராக செயற்பட மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன. பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில்…
தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை! சர்வதேசத்தை நம்பியே…
தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது. வடக்குத் தமிழர்கள் இன்று சர்வதேச அமைப்புகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான…
