தமிழ்நாடும் புதுடில்லியும் இணைந்தே இலங்கை இறுதிப்போருக்கு உதவின

"இறுதிப் போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும், தமிழக அரசும் கூட்டுச் சேர்ந்து தான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும் கூட தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசியிருக்கிறேன்." இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய்…

புலிகளுக்கு எதிரான தடையை மேலும் நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் துறையின் புதிய அறிக்கைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் துறையின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு…

இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல…

உரிமைப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்கிறதா?

பொது நலத்தின் அடிப்படை சுயநலன்தான் என்ற கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக பொதுநலன் என்பதில் இருக்கக் கூடிய பொதுமையான நன்மைகள் குறித்தும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது. பொது நலன் பற்றிய சிந்தனைகளே இந்த உலகை சமத்துவமான மனிதவாழ்வை ஏற்படுத்த உதவியது-உதவுகிறது. எனவே பொதுநலம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும்…

தேர்தலுக்கு முன்பு மறு குடியமர்வு என்கிறார் பாசில் ராஜபட்ச

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த அனைவரும் தேர்தலுக்கு முன்பே மறு குடியமர்வு செய்யப்படுவர் என்று அந்த நாட்டு மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பாசில் ராஜபட்ச நேற்று தெரிவித்தார். அதேநேரத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அல்லாதவர்களை குடியேற்ற இலங்கை அரசு…

ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஆழ்கடலில் தத்தளித்த 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளரான கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தென் கிழக்குக் கடலுக்கு அப்பால் 300 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, காப்பாற்றப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலி மீன் பிடித்…

தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உலகத் தமிழ் அமைப்புகள்…

தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான போராட்டப் பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடன் Read More

ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்சே! துரத்தியடிக்க தயராகும் லண்டன் தமிழர்கள்

லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் போர்க்குற்றவாளியும் இலங்கை குடியரசுத் தலைவருமான மகிந்த ராஜபக்சே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜபக்சே லண்டனுக்குள் நுழைந்தால் துரத்தியடிக்க தாமும் தயராக இருப்பதாக லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் சூளுரைத்துள்ளனர். அத்துடன், மகிந்தவுக்கு எதிராக லண்டன் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை…

மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே மக்கள் ஆஸ்திரேலியா செல்கின்றனர்: ஐ.தே.க.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி இனவாதத்தை அரசாங்கம் தூண்டிவிட்டுள்ளது. நாட்டில் மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே ஆபத்தென்றாலும் படகில் அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு பொதுமக்கள் தப்பித்துப் போகின்றார்கள் ௭ன்று இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பொய்யினால் தொடர்ந்தும் ஆட்சியை தக்க…

அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை என்கிறார் கோட்டா

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்து வருவதாகவும் அது தவறு…

ராசபக்சவின் இணைப்பாளர் மீது அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்!

மகிந்த ராஜபக்சேவின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும் கருணாவின் சகாவுமான இனியபாரதி என்பவரை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இத்தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004-ஆம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா என்ற…

நீதிதுறையில் அரசியல் குறுக்கீடு: வடகிழக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு, அச்சுறுத்தலைக் கண்டித்து இலங்கையின் வடக்கில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததனால், பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சாவகச்சேரி பருத்தித்துறை மல்லாகம் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னார்…

தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை!

தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் அகதி முகாமைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள…

இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் இந்தியா கட்டித்தர ஒப்பந்தம்

கொழும்பு: இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை…

ஒபாமா கருத்துக்கு இந்திய எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு, நமது பொருளாதாரம் மற்றும் சந்தையை திறந்து விட வேண்டும் என…

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 131 பேர் இலங்கையில் கைது

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்கு மீன்பிடி படகுகளில் செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நேரத்தில், மேலும் 131 பேர் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள கல்குடா கடலோரத்திலிருந்து சுமார் 20 கடல்…

சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற போலிசார் மீது சுற்றி வளைத்துத்…

இலங்கையின் பண்டாரகம பகுதியில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற இலங்கை போலிசார் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த போலிஸ் அதிகாரி ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் போலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டி!

இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பிபிசி-யிடம் தெரிவித்தார். கிழக்கு மாநில தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை…

இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம் என்கிறார் கோட்டாபய

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பி Read More