இந்து கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த சிங்கள அமைச்சரின் ஆர்பாட்டத்திற்கு…

இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. அந்தக் கோயிலில் நடக்கவிருந்த மிருக பலி பூசையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியே அமைச்சரும், வேறு சில அமைப்புக்களும் அங்கு ஆர்ப்பாட்டம்…

சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : இந்திய மத்திய…

டெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் இந்தியாவில் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ அறிவித்துள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது…

தமிழர்களே நம்பிக்கையோடு இருங்கள்: ஐ.நா-வுக்கான ஜப்பானிய தூதுவர்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் சமாதானத்தை கொண்டுவருவதென்பது இலகுவான விடயமல்ல; தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் என ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். இலங்கை தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும்அனைத்துலக சமூகம்…

இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?

டெல்லி: இலங்கை மீது தாக்குதல் நடத்த இந்திய ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு…

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வைத்து இலங்கை விசேட அதிரடிப் படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப் படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்துக்குரிய குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே படையினர் மீது…

இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் : வேல்முருகன்

"தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப்போல் செய்து வருகிறது சிங்கள கடற்படை" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இல்லையேல், தமிழக மீனவர்கள் தங்களைத்…

வறட்சியால் இலங்கையின் வடக்கே ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு

வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட…

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு: இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கிழக்கு மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழீழம் அழியவில்லை அது அங்குதான் உள்ளது; கூறியது தமிழர் அல்ல…

தமிழீழம் அழியவில்லை. அது அங்குதான் உள்ளது. அது தற்போது இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழீழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என சிங்களவராக இருந்துகொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான சுய உரிமையோடு…

புத்தரை முத்தமிட்ட மூவர் இலங்கையில் கைது

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடை…

எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை கைப்பற்றலாம் :TNA

இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "கிழக்கு மாநில சட்டமன்ற…

ஈழத்தை இலங்கையில் உருவாக்கமுடியாது என்கிறார் சிங்கள இனவாதி

உலகத்தில் எந்த இடத்தில் ஈழம் தொடர்பாக மாநாடுகளை நடத்தினாலும் இலங்கையில் ஈழம் என்றொரு நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கனவில் மாத்திரமே முடியும் என இலங்கையின் ஜாதிக யஹல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் இருந்து கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைக்கும்…

அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்

லண்டன்: 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் நாடு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை, 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு…

கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தல்: முஸ்லிம் கட்சிகளிடையே அடிதடி!

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை(13.8.12) இரவு நிலவிய அமைதியற்ற சூழலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார பணிமனையொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. அட்டாளச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பணிமனை தீ வைக்கப்பட்டுள்ளதோடு மோட்டார்…

இலங்கை தமிழரிடம் கனிமொழி வாக்குவாதம்?

சென்னை: 'டெசோ' மாநாடு ஆய்வரங்கத்தில் வரைவுத் தீர்மானங்கள் மீது, காரசாரமான விவாதம் நடந்தது. ஈழம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது நாட்டின் தலைவர்களிடம் முடிவு கேட்டு தான், தீர்மானத்தில் கையெழுத்திடுவோம் என வாதிட்டனர்; ஒரு சிலர் வெளிநடப்பு செய்ய…

இலங்கை தமிழர் விவகாரம்: மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரின் பதவி பறிப்பு

இலங்கை தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து இலங்கை அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் கல்யாணந்த கொடஹே கூறியுள்ளார். இது குறித்து பேசிய தூதுவர் கொடஹே, ''…

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் பயணம்…

கொழும்பில் டெசோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; கருணாவின் உருவபொம்மை எரிப்பு!

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு அனுமதி வழங்கியதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையின், ''தேசத்தைக் காக்கும் அமைப்பு'' என்னும் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தின்…

மட்டக்களப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் எரிக்கப்பட்டது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் இருநூறுவில் கிராமத்திலுள்ள மொகிதீன் ஜூம்மா பள்ளிவாசல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத குழுவொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். உழவு இயந்திரமொன்றில்…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த சீனர்கள் கைது

இலங்கையில் கிழக்குக் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 37 சீன நாட்டவர்கள் உட்பட 39 பேர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் இலங்கை பிரஜைகள் என்றும் கடற்படை தெரிவிக்கின்றது. பொத்துவில் பிரதேசத்திலுள்ள அறுகம்பை கடல் பகுதியில் கரையிலிருந்து…