LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!

குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். நகைகள் மற்றும் கைப்பை…

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை…

விபத்தில் சிறுமி பலி; பள்ளிப் பேருந்து தீயிட்டு எரிப்பு!

சென்னையை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, புதன்கிழமை (25.7.12) பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு துவாரம் வழியாக கீழே விழுந்து அவள் பயணித்த பேருந்து ஏறியே கொல்லப்பட்ட சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை…

ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்சே! துரத்தியடிக்க தயராகும் லண்டன் தமிழர்கள்

லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் போர்க்குற்றவாளியும் இலங்கை குடியரசுத் தலைவருமான மகிந்த ராஜபக்சே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜபக்சே லண்டனுக்குள் நுழைந்தால் துரத்தியடிக்க தாமும் தயராக இருப்பதாக லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் சூளுரைத்துள்ளனர். அத்துடன், மகிந்தவுக்கு எதிராக லண்டன் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை…

மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே மக்கள் ஆஸ்திரேலியா செல்கின்றனர்: ஐ.தே.க.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி இனவாதத்தை அரசாங்கம் தூண்டிவிட்டுள்ளது. நாட்டில் மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே ஆபத்தென்றாலும் படகில் அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு பொதுமக்கள் தப்பித்துப் போகின்றார்கள் ௭ன்று இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பொய்யினால் தொடர்ந்தும் ஆட்சியை தக்க…

“கை விடப்படவில்லை”: சொல்கிறார் கருணாநிதி

சென்னை: "தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட வில்லை'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். "இந்திய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில், தி.மு.க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய மத்திய அரசின் வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக…

இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி

சென்னை: இலங்கை விமானப் படையினர் நான்கு பேர், பயிற்சிக்காக மாற்று உடையில் சென்னை வழியாக கோல்கட்டா சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையினருக்கு தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பின் அவர்கள்,…

சிரியாவின் போக்கு : பான் கீ மூன் கண்டனம்

பெல்கிரேட் : சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பிர‌யோகிப்பதாக கூறப்பட்டதற்க ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷார் அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்‌ச்சி செய்து வருகின்றனர். ஐ.நா.தூதுக்குழு அனுப்பி வைத்தும் அங்கு சண்டை ஓயவில்லை. தற்‌போது கிளர்ச்சியாளர்கள்…

அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை என்கிறார் கோட்டா

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்து வருவதாகவும் அது தவறு…

லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கோடைகால ஒலிக்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியின் சுடர், பிரிட்டனின் பல பகுதிகளில் பயணித்த பிறகு தற்போது லண்டனின் பல பகுதிகளில் அது வலம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை(22.7.12), இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியின் பல இடங்களுக்கு இந்த ஒலிம்பிக்…

சிலாங்கூரில் இந்தியர் பண்பாட்டு மையம்

சிலாங்கூர் மாநில அரசின் இந்தியர் பண்பாட்டு மையத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும், அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதன் காணொளியை பார்வையிட இங்கே சொடுக்கவும். தேசிய முன்னணி காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடக்கப்பட்ட மூன்று இனங்களுக்குமான பண்பாட்டு…

எழும்புத்துண்டுக்கு வாலாட்டுவதுதான் மஇகாவின் மாபெரும் சாதனை!

கண்ணம்மா: கோமளி அவர்களே, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மாஇகாவின் மபெரும் சாதனையாக எதை கருதுவீர்? கோமாளி: கண்ணம்மா, நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர் என்பார்கள். மஇகாவின் தொடக்கம் இனவாதம் ஆனால் தேசியத்தன்மை கொண்டதாக இருந்தது. அது ஒரு பணக்காரர்களின் கட்சி. அதில் மும்முரமாக ஈடுபட்டவர்கள்…

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத்…

மருமகளுக்கு தனது கிட்னியை தானம் கொடுத்த மாமியார்!

மராட்டிய மாநிலம் நாசிக் தாலுகாவில் உள்ள பலஷிகாவின் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). இரண்டு குழந்தைகளுக்கு தாய். காயத்ரிக்கு கடந்த ஆண்டு கிட்னி தொடர்பான நோய் பாதித்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு கிட்னி முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக…

நம்பிக்கை வைத்தோம்; அவன் ஆப்பு வைத்தான்!

பொருளாதார அடிப்படையில் சில முக்கிய கூறுகளை கண்ணோட்டமிட்டால் இன்னும் இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலைமை தெள்ளத்தெளிவாக புலப்படும். இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஐந்தாண்டு திட்டங்கள் 1961 -ல் தொடங்கி 2015 வரை பத்து திட்டங்கள் பூர்த்தியாக உள்ளது. இந்த திட்டங்களில் இந்தியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கினார்கள், உண்மையில்…

முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு சவுதி எச்சரிக்கை

ரியாத்: ரம்ஜான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம்…

ராசபக்சவின் இணைப்பாளர் மீது அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்!

மகிந்த ராஜபக்சேவின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும் கருணாவின் சகாவுமான இனியபாரதி என்பவரை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இத்தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004-ஆம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா என்ற…

நீதிதுறையில் அரசியல் குறுக்கீடு: வடகிழக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு, அச்சுறுத்தலைக் கண்டித்து இலங்கையின் வடக்கில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததனால், பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சாவகச்சேரி பருத்தித்துறை மல்லாகம் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னார்…

சிரியா அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்

சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ்ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது. அஸ்ஸிஃப் ஷெளக்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர். தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர்…