சிரியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் உச்சகட்ட போர்

அலெப்போ : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் வர்த்தக நகரை மீட்பதற்காக அதிபர் பஷர்-அலி-ஆசாத்தின் அரசுப் படையினர் உச்சகட்ட போரை நடத்தி வருகின்றனர். இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இருப்பதாக அஞ்சப்படுகிறது. முதல் முறையாக தலைநகர் டமாஸ்கசின் கிறிஸ்தவப் பகுதியில் ஆரம்பித்த இந்த சண்டையில் இதுவரை, 20 ஆயிரத்துக்கும்…

புனேயில் தொடர் குண்டு வெடிப்பு: முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று மாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஜங்கலி மகாராஜா சாலை, டெக்கான் சாலை, கந்தர்வா திரையரங்கு அருகில் மற்றும் கார்வாரே கல்லூரி அருகில் என அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்டதாக…

லண்டன் ஒலிம்பிக் 2012 : இறகுப் பந்துப் போட்டியில் சர்ச்சை!

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற எட்டு இறகுப் பந்து வீரர்களை, அனைத்துலக இறகுப் பந்து சம்மேளம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மகளிர் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில், காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் தெரிந்தே தோல்விடைய முயற்சி செய்தனர் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாயினர். காலிறுதிப் போட்டியில் சுலபமாக வெற்றி பெறக்…

‘Wanted man’ Waythamoorthy returns

Hindu Rights Action Force (Hindraf) leader P Waythamoorthy has returned to Malaysia, allaying fears that he would be arrested by the Johor immigration department. There was a moment of suspense about noon for about 20…

இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல…

உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க…

ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பைடிதல்லி (வயது70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின்…

அறுபது கோடி இந்திய மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு!

ஆமதாபாத் : இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களாக டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. இதனால் மெட்ரோ உள்ளிட்ட ரயில்களின் சேவை,…

ஊழியர்களை கூண்டோடு இடமாற்றம் செய்த தமிழக அமைச்சர்

திருவள்ளூர்: தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனையில் தொழிலாளர் தமிழக அரசின் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு நடத்தி, ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனை ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கணினியில்…

வீட்டில் இருந்து வினோதினி மாயம்; கடத்தப்பட்டிருக்கலாம் என தாயார் சந்தேகம்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணமல்போனதாக கூறப்படும் தனது மகள் வினோதினி குனசேகரன் (வயது 14) கடத்தப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தாயார் சிவபாக்கியம் அச்சம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்ற வினோதினி இதுவரை வீடு…

50 வது படத்தை இயக்கிறார் மணிவண்ணன்!

எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் நடிகர் மணிவண்ணன். (Actor Manivannan Interview) முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார். இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக…

ஒலிம்பிக் அரங்கில் பாராசூட்டில் இருந்து குதித்த ‘ராணி எலிசபெத்’

லண்டன்: லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா அன்று காண்பிக்கப்பட்ட வீடியோவில் ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து ஒலிம்பிக் அரங்கில் குதித்தார் இங்கிலாந்து 'ராணி எலிசபெத்'. லண்டனில் கடந்த 27-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. துவக்க விழா நடந்த ஒலிம்பிக் அரங்கில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில்…

உரிமைப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்கிறதா?

பொது நலத்தின் அடிப்படை சுயநலன்தான் என்ற கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக பொதுநலன் என்பதில் இருக்கக் கூடிய பொதுமையான நன்மைகள் குறித்தும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது. பொது நலன் பற்றிய சிந்தனைகளே இந்த உலகை சமத்துவமான மனிதவாழ்வை ஏற்படுத்த உதவியது-உதவுகிறது. எனவே பொதுநலம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும்…

தேர்தலுக்கு முன்பு மறு குடியமர்வு என்கிறார் பாசில் ராஜபட்ச

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த அனைவரும் தேர்தலுக்கு முன்பே மறு குடியமர்வு செய்யப்படுவர் என்று அந்த நாட்டு மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பாசில் ராஜபட்ச நேற்று தெரிவித்தார். அதேநேரத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அல்லாதவர்களை குடியேற்ற இலங்கை அரசு…

40 ஆண்டுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும்…

லண்டன்: கடந்த 40 வருடங்களுக்கு முன், அதாவது 1969-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் 6 விண்வெளி வீரர்களுடன் அப்போல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. நிலவிற்கு வெற்றிகரமாக சென்று இறங்கிய விண்வெளி வீரர்கள், தங்கள் நாட்டின் அறிவியல் மற்றும் பொறியியல் திறமையை பறைசாற்றும் விதத்தில் அங்கு…

ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஆழ்கடலில் தத்தளித்த 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளரான கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தென் கிழக்குக் கடலுக்கு அப்பால் 300 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, காப்பாற்றப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலி மீன் பிடித்…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து; தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த…

நெல்லூர்: ‌இந்திய தலைநகர் டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌புகையிரத்தின்…

தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உலகத் தமிழ் அமைப்புகள்…

தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான போராட்டப் பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடன் Read More

The mystery of the Indian intruder at the…

The Indian delegation marched into the Opening Ceremony just like the other 203 countries at the Summer Olympics. A flag bearer led the procession and was accompanied by a female sign holder and a young…

இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?

இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன. எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர…

தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்: சீமான்

சென்னை: "உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர்…

சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு முற்றுகை

இந்திய நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அன்னாஹசாரே ஆதரவாளர்களும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள்…