தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை!

தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் அகதி முகாமைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள…

அமெரிக்க கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் பலி

துபாய்க் கடற்பரப்பில் மீன் பிடி படகொன்றின் மீது அமெரிக்க கடற்படையினர் சுட்டதில், படகில் இருந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் துபாய் அருகேயுள்ள ஜெபல் அலி என்ற துறைமுகத்துக்கு அருகே நடந்ததாக பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் தெரிவிக்கிறார். கொல்லப்பட்ட…

94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் மண்டேலா

வயதால் மிகவும் மெலிந்து தளர்வடைந்து மக்களின் பார்வையில் படாமல் மறைந்து வாழ்ந்து வரும் தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா வரும் புதனன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடி அதற்காக 27 ஆண்டுகள் சிறை…

எகிப்தில் ஹிலாரி கிளின்டன் மீது தக்காளி வீச்சு

கெய்ரோ: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து நாட்டில் பயணம் மேற்கொண்ட போது, அவர் மீது, தக்காளி மற்றும் ஷூக்கள் வீசப்பட்டன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து, இஸ்ரேல், லாவோஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், அவர் எகிப்து…

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சிங்கள இராணுவத்தினர் இடமாற்றம்!

தமிழகம்: தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து குன்னூரில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு இலங்கை இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு கருதி வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குன்னூரில் நடைபெறும் இராணுவ பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள 10 நாடுகளிலிருந்து இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். முகாமில் பங்கேற்க வந்துள்ள…

குழந்தையை உயிரோடு புதைக்க முயன்றவர் கைது

லாகூர்: குழந்தை பெரிய முகத்துடன் பிறந்ததால், அதை உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை, பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கனிவால் நகரத்தை சேர்ந்தவர் சந்த்கான். இவருக்கு, ஏற்கனவே, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், இவரின் மனைவிக்கு பெண்…

ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்!

லண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அறிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர். இதுவரை அறிவு…

தனி ஈழத் தீர்மானம்: பல்டி அடித்த கருணாநிதி!

தமிழகம்: திமுக தலைவர் மு. கருணாநிதி அடுத்த மாதம் சென்னையில் தனது கட்சி நடத்தவிருக்கும் டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது எனக் கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை (15.07.2012) கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். அச்சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக…

இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் இந்தியா கட்டித்தர ஒப்பந்தம்

கொழும்பு: இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை…

ஒபாமா கருத்துக்கு இந்திய எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு, நமது பொருளாதாரம் மற்றும் சந்தையை திறந்து விட வேண்டும் என…

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 131 பேர் இலங்கையில் கைது

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்கு மீன்பிடி படகுகளில் செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நேரத்தில், மேலும் 131 பேர் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள கல்குடா கடலோரத்திலிருந்து சுமார் 20 கடல்…

சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற போலிசார் மீது சுற்றி வளைத்துத்…

இலங்கையின் பண்டாரகம பகுதியில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற இலங்கை போலிசார் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த போலிஸ் அதிகாரி ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் போலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…

இராணுவ வீரரை அடித்து உதைத்த பொதுமக்கள்!

இந்தியா அசாம் மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவர், விறகு சுமந்து கொண்டு சென்ற இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் சிப்சாகர் மாவட்டத்தில், நெட்டை புஹூரி வனப்பகுதியில் விறகு சுமந்து கொண்டு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது…

இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்கடன் என்ற இடத்தில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி மையத்திற்கு இலங்கை இராணுவத்தின் 57-ம் பிரிவு படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் கடற்படையின் ரியர் அட்மிரால் எஸ்.என்.ரணசிங்க ஆகிய இருவரும் பயிற்சிபெற வந்திருக்கும் சம்பவத்தால் அப்பகுதியில்…

வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா?

பொன்னன்: மலேசியா திரும்பும் வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா? கோமாளி: பொன்னா, அலை எப்பொழுது ஓய்வது; தலை எப்பொழுது முழுகுவது என்றில்லாமல் தக்க தருணத்தில் நாடு திரும்பும் வேதமூர்த்தியின் செயல் பாரட்டத்தக்கது. இண்ட்ராப் பேரணி முடிந்த அடுத்த நாளே லண்டன் பயணமான அவரின் கடந்த 56 மாத…

நைஜீரியா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தி்ல் 100 பேர் பலி

நைஜீரியா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தி்ல் பெட்ரால் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதியை ‌‌‌சேர்ந்த 90க்கும் ‌‌மேற்பட்டோர் பலியாயினர்‌, இது குறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த அதிகாரி யூசுவா சுவாய்ப் கூறுகையில்; தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள…

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டி!

இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பிபிசி-யிடம் தெரிவித்தார். கிழக்கு மாநில தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை…

ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பா? சர்ச்சைக்குரிய கடிதத்தால் பரபரப்பு!

இந்தியாவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul-…

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன…

நாட்டு மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளனரா? சார்ல்ஸ் அதிர்ச்சி

அரச மலேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் மற்றும்  உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் ஆகியோரும் நமது நாடும் நாட்டு மக்களும் பாதுகாப்பான சூழ்நிலையில்தான் உள்ளனர் என அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.…

100-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பு

இலங்கையின் பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் மருத்துவ மனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் இராணுவ வீரர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 57 பேர் பனாகொட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவ…