திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலைகள் தக்க வைக்கப்படுகின்றன
நாளை தொடங்கி, செப்டம்பர் 8 வரை, ரோன்95, ரோன்97 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் முறையே RM2.05, RM2.72 மற்றும் RM2.15 ஆக இருக்கும். தானியங்கி விலை பொறிமுறையைப் (ஏபிஎம்) பயன்படுத்தி, வாராந்திர அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று நிதி அமைச்சு இன்று…
சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர் வயது 18 – பினாங்கு மசோதாவை…
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், பினாங்கு மாநில அரசியலமைப்பு சட்டம் (திருத்தம்) மசோதா 2021, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்களுக்கான வயது வரம்பை 21 -லிருந்து 18-ஆகக் குறைத்தது. மசோதாவைச் சமர்ப்பிக்கும் போது, மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு குழு தலைவர் சூன் லிப் சீ, உலகெங்கிலும் உள்ள சமூக…
சிலாங்கூர் எம்பி மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – பிஎஸ்எம் பரிந்துரை
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, கோல லங்காட் உத்தாரா வனக்காப்பு (எச்.எஸ்.கே.எல்.யூ.) விலக்குதலை இரத்து செய்ய தவறினால், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரைப் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முன்மொழிந்துள்ளது. இன்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் சுற்றுச்சூழல் மற்றும்…
திங்கள் முதல் பி.கே.சி. உதவிதொகை வழங்கப்படும் – பிரதமர்
கோவிட் -19 சிறப்பு உதவிதொகையின் (பி.கே.சி.) முதல் கட்ட தொகை, வரும் திங்கள்கிழமை முதல் செலுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். செப்டம்பர் 6 -ம் தேதி தொடங்கி, கட்டங்கட்டமாகச் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 10 -ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். ஏழைகள்,…
20,897 புதிய நேர்வுகள், 282 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,897 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 282 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 16,664- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 18,465 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
அன்வார் : மெர்டேக்கா காலனியர்களை மாற்றுவது மட்டுமல்ல, அதன் நடைமுறையும்…
மெர்டேக்காவின் பொருள் பிரிட்டிஷ் காலனித்துவ தலைமையை மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆட்சி முறையை இரத்து செய்வதும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அன்வார் தனது 64-வது மெர்டேக்கா தின உரையில், காலனித்துவவாதிகள் செய்தது போல், நாட்டைக் கொள்ளையடிக்கும் மற்றும் மக்களை ஒடுக்கும் பழக்கத்தைத் தொடராமல்…
தாக்கப்பட்டு மரணமடைந்த பாதுகாவலர் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மறு…
கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில், பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று சுயநினைவு திரும்பாமலேயே இறந்துபோன பாதுகாவலர் வழக்கை, போலீசார் கொலை வழக்கு என்று மீண்டும் வகைப்படுத்தினர். பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹிட் கூறுகையில், சந்தேகநபர்…
‘பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னதாக பாதுகாப்பான சூழலை உருவாக்கவும்’ – பேஜ்
கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுவின் (பேஜ்) தலைவர், நூர் அஸிமா அப்துல் ரஹீம், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பொருத்தமான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்கி, பாதுகாப்பான சூழலை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். குழந்தைகள் பள்ளி படிப்பைக் கைவிடாமல் இருக்க, பள்ளிகளைத் திறப்பது மிகவும் முக்கியம்…
#லாவான் போராட்டத்தின் பின்னால் உள்ள முகங்கள்
வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பதற்கான கோரிக்கையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப் போவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்த இரண்டு நாள்களில், இளம் ஆர்வலர்கள் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் கூடியது. முஹைதீன் யாசின் இராஜினாமா செய்வதற்கான அழைப்புகள் உட்பட, இக்குழுவின் பல தொடர் நடவடிக்கைகளின் தொடக்கத்தை இது குறித்தது. [caption id="attachment_193897"…
19,268 புதிய நோய்த்தொற்றுகள், ஐந்து மாநிலங்களில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய…
இன்று நண்பகல் வரையிம், 19,268 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மொத்த நேர்வுகளை 1,725,357-ஆகக் கொண்டு வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி நேர்வுகள், சிலாங்கூர் 3,567, கோலாலம்பூர் 672 எனக் குறைந்து வந்துள்ளன. இருப்பினும், மற்ற நான்கு மாநிலங்கள் - சபா, ஜொகூர், சரவாக்…
உயர்க்கல்வி அமைச்சராக மீண்டும் நொரைய்னி நியமனம் – யுஎம் மாணவர்…
பொதுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இயக்கம் ஒன்று, தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தில், பதவியில் இருந்தபோது தோல்வியைக் கோடிட்டுக் காட்டிய உயர்க்கல்வி அமைச்சர் நொரைய்னி அகமது மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம் (கே.எம்.யு.எம்.) 2021, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நோரைய்னியை…
‘சுகாதார அமைச்சராக பதவியேற்றவுடன், கேஜே நிதியை அங்கீகரிக்க வேண்டும்’
கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே, கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்திருப்பதால், பல்வேறு மாநிலச் சுகாதாரத் துறைகள் தங்கள் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அதற்கான நிதி போதியதாக இல்லை என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கூறினார். எனவே, கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சரானவுடன் செய்ய…
புதிய அமைச்சர்கள் இஸ்தானா நெகாராவில் பதவியேற்றனர், தனிமைபடுத்தல் காரணமாக இஸ்மாயில்…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தனது அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. கோவிட் -19 நேர்மறை நேர்வுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இஸ்மாயில் இன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பதவியேற்பு…
‘பாதுகாவலர் தாக்குதல் வழக்கை, கொலை வழக்காக வகைப்படுத்துக’ – குலா…
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பாதுகாவலர், ஆகஸ்ட் 28-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாவலரைத் தாக்கியவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டுமென டிஏ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். இன்று, ஓர் அறிக்கையில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கடுமையான உடல் உபாதைகளை…
20,579 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியது
சுகாதார அமைச்சு இன்று 20,579 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. 285 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 16,000-ஐத் தாண்டியது. சிலாங்கூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்கள் புதிய நேர்வுகளில் கிட்டத்தட்ட பாதி பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜொகூர், கெடா, பினாங்கு, கிளந்தான் மற்றும் பேராக்…
ஆடாம் : மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும்
மலேசியாவிற்குக் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது, பொது சுகாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் விஞ்ஞானிகளின் ஆற்றலைத் திரட்டி, அதனை உற்பத்தி செய்ய முடியும். தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க, நாட்டிலேயே கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் சுகாதார…
‘கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம்’ ஏன் அவசியம் – அசலினா
நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் போது, கட்சியின் நிலைப்பாட்டிற்கு இணங்காது, சொந்த முடிவு எடுப்பது கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று, பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஓத்மான் சைட் குறிப்பிட்டார். முகநூல் பதிவு ஒன்றில், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசலினா, முன்மொழியப்பட்ட அச்சட்டம்…
இஸ்மாயில் சப்ரியின் முழு அமைச்சரவை சிறப்பானது என்றால், கேஜே மட்டும்…
ஆகஸ்ட் 20-ம் தேதி, இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாவது பிரதமரானபோது, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அம்னோ துணைத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று சில ஆய்வாளர்கள் ஆருடம் கூறினர். புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில், முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தின் 'தோல்வியடைந்த…
பெற்றோரின் கல்லறைக்குச் சென்ற பிரதமர், மக்களின் விமர்சனத்துக்கு ஆளானார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று பஹாங்கில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது அவரது பெற்றோரின் கல்லறைக்குச் சென்றார். இந்த வருகை சில சமூக ஊடகப் பயனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அவரின் வருகை குறித்த ஆஸ்ட்ரோ அவானியின் செய்தி, 1,000-க்கும் மேற்பட்ட கருத்துகளைப் பெற்றது, அவற்றில் பெரும்பாலானவைப்…
`மெர்டேக்கா` என்ற உந்துதலால்..
இது நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தருணம். துங்கு அப்துல் இரஹ்மான் மேடை ஏறி, "மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என்று முழங்கினார் – அது மலாயாவின் விடுதலை அடையாளம். பல்வேறு இடர்களையும் தடைகளையும் கடந்து, அறுபத்து நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன. நாம் ஒரு விவசாய நாட்டிலிருந்து, ஒரு தொழில்துறை…
22,597 புதிய நேர்வுகள், 252 மரணங்கள்
இன்று, கோவிட் -19 புதிய தொற்று எண்ணிக்கை 22,597 -ஆக பதிவாகியுள்ளது. சிலாங்கூர் 5,814 புதிய நேர்வுகளுடன், தொடர்ந்து அதிக தினசரி நேர்வு பங்களிப்பாளராக உள்ளது. சபா, சரவாக் மற்றும் கெடாவில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில், பினாங்கும் ஜொகூரும் அந்த நிலையை…
மோஸ்தி தடுப்பூசி தயாரிப்புகள் மீது கவனம் செலுத்தும் – பிரதமர்
கோவிட் -19 தொடர்பான அனைத்து தடுப்பூசி திட்டங்களும் சுகாதார உத்திகளும் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கைரி ஜமாலுதீன் அபு பக்கர் மூலம், சுகாதார அமைச்சால் மட்டுமே கையாளப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் ஆடாம் பாபா தலைமையிலான அறிவியல், தொழில்நுட்பம்…
‘புதிய தலைமை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ – உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள்
ஆர்வலரும், தகவல் தொடர்பு ஆலோசகருமான நதானியேல் தான், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோது, கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, தனது உண்ணாவிரதத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று வலியுறுத்தினார். எவ்வாறாயினும், பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா காரணமாக ஏற்பட்ட அரசியல்…























