அம்னோவிலிருந்து துன் ஃபைசல் 6 ஆண்டுகள் இடைநீக்கம்

சிறப்பு விவகாரங்கள் (சேவைகள்) துறையின் (ஜாசா) முன்னாள் இயக்குநர் துன் ஃபைசல் இஸ்மாயில் அஜீஸ் அம்னோவிலிருந்து ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். மார்ச் 8-ம் தேதி, கட்சியின் ஒழுக்காற்று வாரியம் எடுத்த முடிவை அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுதி செய்ததை அடுத்து, இடைநீக்கக் கடிதம் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின்…

மஇகா தலைவர் : வாக்கு18-ஐ ஒத்திவைத்தது நியாயமானது

18 வயதில் வாக்களிப்பு (வாக்கு18) மற்றும் தானியங்கி ஓட்டுப் பதிவு ஆகியவற்றை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் (இசி) எடுத்த முடிவு நியாயமானது என்று மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். உண்மையில், நாம் சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன (வாக்கு 18 அமல்படுத்தப்படுவதற்கு முன்பு), நாம்…

வாக்கு18 : பி.என். பயப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டதுடன் எந்தத் தொடர்பும் இல்லை…

தேசியக் கூட்டணி அரசு (பி.என்.) 18 வயதினர் வாக்களிப்பு (வாக்கு 18) மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு கண்டு பயப்படவிலை, அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையம் (இ.சி) இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று பி.என். விரும்புகிறது. இருப்பினும், பிரதமர் முஹைதீன் யாசின், தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி…

‘வாக்கு18’ ஆதரவாளர்கள் உரிமை கோரி நாடாளுமன்றத்தின் முன் கூடினர்

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலைவரை, வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமையை இளைஞர்களுக்கும் வழங்கக் கோரி, சுமார் 100 ‘வாக்கு18’ ஆதரவாளர்கள் இன்று நாடாளுமன்றத்தின் முன் அமைதியாக கூடியிருந்தனர். விரைவில், அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு வந்துள்ளது. மூடா கட்சியின் தலைமைச் செயலாளர் அமீர்…

‘பிரதமர் வேட்பாளர்? நீங்கள் இப்போது அவருடன்தான் பேசிக்கொண்டுள்ளீர்கள்’ – மொஹமட்

இன்று, பத்திரிகையாளர் சந்திப்பில், அடுத்த பொதுத் தேர்தலில் (ஜி.இ) வெற்றி பெற்றால், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்றக் கேள்விக்கு, "ம்ம்ம்... நீங்கள் இப்போது அவருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,” என்று அம்னோ துணைத் தலைவர், மொஹமட் ஒரு நொடி கழித்து கூறினார். அது அந்த அறையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும்,…

கோபிந்த் : போலிஸ் “கார்டெல்” விசாரணைக்குப் பிரதமர் உத்தரவாதம் அளிக்க…

அரச மலேசியக் காவற்படையில் "கார்டெல்கள்" (கூட்டமைப்பு) இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் பதில் "பலவீனமாகவும் திருப்தியற்றும்" உள்ளது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ விவரித்தார். [caption id="attachment_190277" align="aligncenter" width="2560"] கடந்த வியாழக்கிழமை, போலிஸ் அதிகாரிகளிடம் உரை நிகழ்த்தியபோது பிரதமர்…

நொராய்னி : அம்னோ 30% பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்

கட்சியின் மீது மகளிர் கொண்டுள்ள விசுவாசத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அடுத்த பொதுத் தேர்தலில் (ஜி.இ), 30 விழுக்காடு பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று அம்னோ மகளிர் தலைவர் நோராய்னி அகமது விரும்பம் தெரிவித்தார். உயர்க்கல்வி அமைச்சருமான நோராய்னி, அம்னோவைச் சேர்ந்த ஆண் எம்.பி.க்கள் பெண் எம்.பி.க்களை விட…

மரண அச்சுறுத்தல் : சந்தேக நபருக்கு நோக்கம் இருந்தது, ஆனால்…

கடந்த ஆண்டு ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில், கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இருந்து ‘டாயிஸ்’ பயங்கரவாதக் குழுவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6 பேரை அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்) கைது செய்தது. கடந்தாண்டு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் உட்பட…

வீட்டில் தனிமைப்படுத்த சந்தாராவுக்கு ஏன் அனுமதி, நூர் ஹிஷாம் விளக்கினார்

கூட்டரசுப் பிரதேசங்களின் துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாரா, நியூசிலாந்தில் இருந்து திரும்பி வந்த பின்னர் வீட்டிலேயேத் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டார். தற்போதைய செந்தர இயங்குதல் நடைமுறைகளின் கீழ், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஹோட்டல் போன்ற தனிமைப்படுத்தப்படும் மையத்தில் பிரித்து வைக்க வேண்டும். சந்தாராவுக்கு ஏன் விலக்கு அளிக்கப்பட்டது என்று கேட்டதற்கு, சுகாதாரத்…

‘வாக்கு 18’ ஒத்திவைப்பு : இளைஞர் குழு அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு…

‘வாக்கு 18’ உரிமை பிரச்சாரத்தை நடத்தும் இளம் வாக்காளர்கள் சங்கம், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. 18 வயதில் வாக்களித்தல் மற்றும் தானியங்கி வாக்காளர்களின் பதிவு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்ததைத் தொடர்ந்து இது…

மலேசியாகினி மீது ஜாஹிட் RM220 மில்லியன் வழக்கு தொடர்ந்தார்

அம்னோ தேசியத் தலைவர், அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தனது ஊழல் விசாரணையை உள்ளடக்கிய மலேசியாகினியின் செய்தி அறிக்கைக்கு எதிராக, RM220 மில்லியன் மதிப்புள்ள அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மார்ச் 24 அன்று, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மலேசியாகினியால் வெளியிடப்பட்ட 22 கட்டுரைகளில், ஏழு பெர்னாமா…

வாக்கு 18 : நாளை நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம், பி.எச்.…

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைப்பது மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் (இ.சி) முடிவை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு நாளை நாடாளுமன்றம் முன் அமைதி போராட்டத்தில் இறங்கவுள்ளது. பி.எச். இளைஞர் அணி தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், நாளை நடைபெற திட்டமிட்டுள்ள…

‘நோய்த்தொற்று வளைவு மீண்டும் உயர்கிறது’, நூர் ஹிஷாம் எச்சரிக்கை

கோவிட் -19 தொற்று வளைவு அதிகரித்து வருவதை அடுத்து, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று காலை எச்சரிக்கைவிடுத்தார். "வளைவை மீண்டும் தட்டையாக்குவதற்குச் சமூகப் பொறுப்பு மற்றும் விரிவான இணக்கம் நமக்குத் தேவை," என்று அவர் முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்தார். தொற்று (ஆர்.டி)…

பி.எச். : பிரதமர், அமைச்சர்களைக் கொலை செய்யும் முயற்சி, முஹைதீன்…

2020-ஆம் ஆண்டில், நாட்டின் தலைவர்களைத் தாக்கும் திட்டம் இருந்ததைப் பற்றி முஹைதீன் யாசின் ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை மன்றம் நேற்று இரவு எழுப்பியது. புக்கிட் அமான் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்திய திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல், முஹைதீன் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது…

எதிர்க்கட்சி எம்.பி. : தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது

‘வாக்கு 18’-ஐ (வாக்களிக்கும் வயது 18) அமல்படுத்துவதில் தாமதம் மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு காரணமாக, ஒன்பது எம்.பி.க்கள் பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் (இ.சி.) நேற்று பிற்பகல் எடுத்த முடிவு, மக்களவை…

வகுப்பறையில் கோவிட் -19 : மூன்று மாதங்களில் 2,000-க்கும் மேற்பட்டோர்…

கோவிட் -19 | இன்று அறிவிக்கப்பட்ட எட்டு புதியத் திரளைகளில், மூன்று கல்வி நிறுவனங்கள் தொடர்பானவை என்பதனால், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கைகள் எடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சுகாதார அமைச்சு நினைவூட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுபோன்ற 41 திரளைகள் இன்றுவரை…

2020-ல், மகாதீருக்கு எதிரான கத்தி குத்து முயற்சியைப் புக்கிட் அமான்…

அரசாங்கத்தின் பல முக்கியத் தலைவர்கள் மீது, தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் ஒருவரைப் புக்கிட் அமான் பயங்கரவாதச் சிறப்பு கிளை (இ8) கைது செய்தது. இ8 உதவி இயக்குநர் அஸ்மான் ஒமர் கூறுகையில், இந்த நபர் 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்டார், அவர் டாக்டர் மகாதிர் மொஹமட், லிம்…

ஜிஇ15 வரை பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு – அம்னோவின் முடிவுக்கு இஸ்மாயில்…

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பெர்சத்துவுடனான உறவுகள் தொடர்பில் கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறினார். இதன் பொருள், அரசாங்கத்திற்கும் பிஎன் கூட்டணிக்கும் தலைமை தாங்கும் அம்னோ – பெர்சத்து இடையிலான ஒத்துழைப்பு, ஜிஇ15-ல்…

மசீச : ‘யானையும் யானையும்’ மோதிக்கொள்வதை நிறுத்த வேண்டும்

கெடா மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் தான் சீ ஹியோங், கெடா மற்றும் பினாங்கு மாநில அரசாங்கங்கள், நீர் பிரச்சினைகள் தொடர்பாக வாதிடுவதை நிறுத்திவிட்டு, இரு மாநில மக்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்தித்து பேச வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். பதிலடி கொடுக்கும் நடவடிக்கை பிரச்சினையை மிகவும் சிக்கலானதாக…

இன்று 1,360 புதிய நோய்த்தொற்றுகள், 2 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,360 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூரில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சரவாக்கில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று 1,491 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

புவா : கோல்ட்மேன் சாச்ஸ்-க்கு உயர் சட்டக் கட்டணங்கள், பிரதமர்…

இந்த விவகாரத்திற்காக வக்கீல்களுக்கு அரசாங்கம் பெரும் பணம் செலுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அகற்ற, கோல்ட்மேன் சாச்ஸுடனான மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட தீர்வு குறித்து பிரதமர் முஹைதீன் யாசின் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால், முஹைதீனின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாது என்று டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி…

‘300 முன்னாள் பி.கே.ஆர். உறுப்பினர்கள் கெராக்கானில் இணைந்தனர்’

தலைமைக்கான உள்போராட்டத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் மக்களின் நலன்களைப் புறக்கணித்தல் காரணமாக, பி.கே.ஆர். ஈப்போ பாராட் கிளையைச் சார்ந்த 300 உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, கெராக்கானில் சேர்ந்தனர். பேராக் கெராக்கான் தலைவர் சீ தியான் செங், ஒரு வருடத்திற்கு முன்பு பி.கே.ஆரை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள், இப்போது…

‘அம்னோ-பி.கே.ஆர். ஒத்துழைப்பு இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது’

கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு பிரச்சினை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும், அதை பல்வேறு வடிவங்களில் மொழிபெயர்க்கலாம் என்றும் பி.கே.ஆர். உதவித் தலைவர் சாங் லி காங் கூறினார். "ஒத்துழைப்பு பல வடிவங்கள் உள்ளன. அம்னோ பி.எச்.- உடன் (பக்காத்தான் ஹராப்பான்) இணைந்தாலும் அல்லது பி.கே.ஆர். தேசிய…