எஸ்.ஓ.பி.-க்குக் கீழ்ப்படியாத முதலாளிக்கு 12 மாதச் சிறை – இஸ்மாயில்…

செந்தர இயங்குதல் நடைமுறைக்கு (எஸ்ஓபி) இணங்காமல், பிடிவாதமாக இருக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களைக் கட்டாயக் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுத்த மறுக்கும் முதலாளிகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் அபாயம் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளிகளுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில்…

கோல லங்காட் ஜே.கே.ஆர்.-ரின் ‘கைகள் கட்டப்பட்டுள்ளன’ – சட்டமன்ற உறுப்பினர்

சாலையில் இருக்கும் குழிகளை மேம்படுத்த, கோல லங்காட் பொதுப்பணித் துறைக்கு (ஜே.கே.ஆர்) ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் நிதி அமைச்சை வலியுறுத்தினார். “[…] ஜே.கே.ஆர். கோல லங்காட் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது, காரணம் தேவையான பல ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு…

கோவிட் – 19 : இன்று 1,594 புதிய வழக்குகள்,…

சுகாதார அமைச்சு இன்று 1,594 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. சிலாங்கூர் இன்று அதிக எண்ணிக்கையிலான (697) பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது புதிய பாதிப்புகளில் 43.7 விழுக்காடு. இதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் 194 நேர்வுகள் (12.2 விழுக்காடு), ஜொகூரில் 191 நேர்வுகள் பதிவாகியுள்ளன. தீவிர…

’66 விழுக்காடு மருத்துவர்கள் பகடி வதைக்கு ஆளாகின்றனர், குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்’

நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களிடையேப் பகடி வதையின் அறிகுறிகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பொதுச்சேவை பணியாளர்கள் சங்கம் (கியூபெக்ஸ்) சுகாதார அமைச்சை வலியுறுத்தியது. மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) ஆய்வு அறிக்கையைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது…

கையுறை தயாரிப்பாளர், துணை நிறுவனத்திற்கு எதிராக 30 குற்றச்சாட்டுகள்

பிரைட்வே ஹோல்டிங்ஸ் கையுறை உற்பத்தியாளரும் அதன் இரண்டு துணை நிறுவனங்களும் ஊழியர்களின் வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் சட்டம் 1990 (சட்டம் 446) கீழ், பல்வேறு குற்றங்களை உள்ளடக்கிய 30 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். மனிதவள அமைச்சின் கூற்றுப்படி, பிரைட்வே மற்றும் அதன் துணை நிறுவனமான பையோபிரோ…

கோவிட் 19 : இன்று 1,196 புதிய நேர்வுகள், 3…

சுகாதார அமைச்சு இன்று, 1,196 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. கோலாலம்பூர், சிலாங்கூர், சபா மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் 100-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், 997 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,…

ஜொகூர், நெகிரி செம்பிலானில் மூன்று இடங்கள் பி.கே.பி.டி.

கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களிலும், மூன்று இடங்களில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.) அரசாங்கம் இன்று அறிவித்தது. கோத்த திங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தைச் (ஐபிடி) சார்ந்த, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளைத் தடுத்துவைக்கப் பயன்படுத்தப்படும்…

‘முனைமுகப் பணியாளர்களை ஏமாற்றாதீர்கள், துன்புறுத்தாதீர்கள்’ – டாக்டர் நூர் ஹிஷாம்

நாட்டின், முனைமுகப் பணியாளர்களின் சுகாதார நிலை குறித்து பொய் சொல்ல வேண்டாம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்தார். ‘டோமோகிராபி’’ (சி.டி. ஸ்கேன்) செய்வதற்கு முன்னர், தனது அறிகுறிகளைத் தெரிவிக்காத ஒரு நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததனால், தனக்குத் தற்போது கோவிட் -19…

எஸ்.ஓ.பி.-யை மீறிய தொழிற்சாலைக்கு RM1,000 தண்டம், பெட்டாலிங் ஜெயா எம்.பி.…

கடந்த வியாழக்கிழமை, நடந்த ஒரு சோதனையில், மலேசிய சுகாதார அமைச்சு  நிர்ணயித்த செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்.ஓ.பி.) மீறியதற்காக கிள்ளானில் உள்ள ஒரு கையுறை தொழிற்சாலைக்கு RM1,000 தண்டம் விதிக்கப்பட்டது தொடர்பில், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா தனது ஆச்சரியத்தையும் கோபத்தையும் தெரிவித்தார். "சாதாரண…

`மகாதீருடன் நெருக்கமாக இல்லாவிட்டால், அன்வர் பிரதமராக முடியாது` – ஜாஹித்

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், டாக்டர் மகாதிர் முகமதுவுடன் சமாதானமாகப் போகாவிட்டால் பிரதமராக வேண்டும் என்ற இலக்கை அவர் அடைய முடியாது என்று ஏழாவது பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜாஹித் முஹமட் அரிப் கூறினார். "தற்போதைய சூழ்நிலையில், அவருக்கும் மகாதீருக்கும் நல்ல உறவு இல்லை, இருவரும் விலகி…

கோவிட் 19 : 2,335 புதிய நேர்வுகள், இன்று ஆக…

சுகாதார அமைச்சு இன்று, 2,335 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, இது நாட்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும். முந்தைய அதிகப் பதிவு, டிசம்பர் 10-ம் தேதி, 2,234 எனப் பதிவானது. கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளதால் இன்றைய பதிவுகள்…

‘முதலாளிகளால் ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் புகாரளிக்க சிறப்பு தளம் உருவாக்கப்படும்’ –…

அடக்குமுறை அல்லது சுரண்டல் குறித்து புகாரளிக்க, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குச் சிறப்பு புகார் தளம் ஒன்று அடுத்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார். இது தொழிலாளர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் இருப்பதை உறுதி செய்ய உதவும் என அவர்…

பஹாங் நீர் கடனை ஒழித்ததைப் போல, அரசாங்கம் பிடிபிடிஎன் கடனையும்…

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், பஹாங் நீர்வழங்கல் சேவைத் துறையை மறுசீரமைப்பதற்கும், மாநிலத்தின் நீர்வழங்கல் கடன் RM2.1 பில்லியனை அகற்றுவதற்குமான மத்திய அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைப் போலவே, பி40 பிரிவினருக்குத் தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகம் (பிடிபிடிஎன்) வழங்கியக் கல்விக் கடனையும் நீக்குமாறு…

‘ஐ.சி.இ.ஆர்.டி. ஒப்புதல் திட்டம் தனது அமைச்சரவை சகாக்களிடமிருந்து வந்தது என்பதை…

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ) புத்ராஜெயாவைக் கைப்பற்ற, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) "தாராளவாத சார்பு" மற்றும் "சோசலிச சார்பு" ஆகியவற்றின் கலவையாக மாறியுள்ளது என முத்திரை குத்திய தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அன்னுவார் மூசாவை டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் விமர்சித்தார். அரசாங்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பி.எச்.…

‘பி.எச்.-இல் தலைவர் சண்டை, முஹைதீன் தொடர்ந்து புத்ராஜெயாவில் வேரூன்றி வருகிறார்’

தலைவர் விவகாரம் தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டாம் என்று அமானா தலைவர் மொஹமட் சாபு நினைவுபடுத்தினார். யார் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் பி.எச். பிடிவாதமாக இருக்கும்போது, ​​பிரதமர் முஹைதீன் யாசின் தொடர்ந்து புத்ராஜெயாவில் வேரூன்றி வருகிறார் என்று அவர் விளக்கினார். முன்னாள்…

‘பேராக் நடவடிக்கை’ – எதிர்க்கட்சித் தொகுதிகளில் உள்ளவர்களும் பயனடையலாம்

பேராக் மக்கள், குறிப்பாக எதிர்க்கட்சி தொகுதியில் இருக்கும் மக்கள், அஹ்மத் ஃபைசல் அஸுமுவை மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒதுக்கி வைத்த அம்னோவின் முயற்சிகளை ஆதரித்த மாநிலப் பக்காத்தான் ஹராப்பானின் நடவடிக்கைகளினால் பலனடைவார்கள் என்று டிஏபி இளைஞர் தலைவர் ஹோவர்ட் லீ தெரிவித்தார். பேராக் பி.எச்., அம்னோவால் கையாளப்படுகிறது என…

கோவிட் 19 : இன்று 1,247 புதிய நேர்வுகள், ஜொகூரில்…

சுகாதார அமைச்சு இன்று, 1,247 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் 48.8 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கைச் சார்ந்தது, அடுத்த நிலையில் சபாவில் 18 விழுக்காடு, ஜொகூரில் 16.4 விழுக்காடு எனப் பதிவாகியுள்ளது. அதேவேளையில், 1,441 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக்கதை – முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்து, 125 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தத் தோட்டப்புறப் பள்ளி. வடக்கு- தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் இலெம்பா பெரிங்கின், வீடமைப்பு பகுதியில் புகுந்து பயணம் செய்தால் கெர்லிங் தமிழ்ப்பள்ளியை அடையலாம். 1980-களில், இலெம்பா பெரிங்கின் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டுக்காக பிளட்டா ரிவெர் தோட்டம் விழுங்கப்பட்டதாம்.…

அனைத்து இனங்களுக்கும் ‘கெரக்யாத்தான் மெலாயு’ – கு லி ஆலோசனை

அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்ஸா, ஒரு முறை பாஸ் முன்னாள் தலைவரும் அரசியல் பிரமுகருமான, டாக்டர் புர்ஹானுதீன் அல்-ஹெல்மியின், ‘தேசிய மலாய் அரசு (நாடு)’ என்ற கருத்தைப் புதுப்பிக்க முடியும் என்பதை ஆதரித்தார். தெளிவாக, இப்போது யோசனை என்னவென்றால், இனம் மற்றும் வம்சாவளியைப் பொருட்படுத்தாமல்,…

ஊழல் சதி குற்றச்சாட்டுகளை எம்.ஏ.சி.சி. தீவிரமாக எடுத்துக்கொள்கிறது

'மலேசியாவில் சதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்' என்ற தலைப்பில், முகமட் ஃபௌஸான் ஜாமில் என்ற பெயரில், நேற்று புலனக்குழுவில் பகிரப்பட்ட தகவலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. நேற்று ஓர் அறிக்கையில், இந்த விஷயம் தவறானது மற்றும் அவதூறு என்றும், சம்பந்தப்பட்டவர் பயன்படுத்திய…

‘டிஏபி வேண்டாம், அன்வர் வேண்டாம்’ என்பது உணர்ச்சி மட்டுமே –…

அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவரான தெங்கு ரஸலீ ஹம்சா, அம்னோ வைத்திருக்கும் ‘டிஏபி வேண்டாம், அன்வர் வேண்டாம்’ (நோ டிஏபி நோ அன்வர்) என்ற அணுகுமுறை இறுதி நிலைப்பாடாக இருக்கக்கூடாது என்று சூசகமாகக் குறிப்பிட்டார். "இது (நிலைப்பாடு) தடிமனான உணர்வு மட்டுமே என்று நான் நினைக்கிறேன். அரசியலில் என்னைப்…

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

மன்னிப்பை மக்களுக்கு வழங்கிய, மகா கடவுள் பிறந்த தினம், மக்களின் துன்பம் மறைந்த தினம், மகிழ்ச்சி எங்கும் நிறைந்த  தினம்! கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.

கோவிட் 19 : இன்று 1,581 புதிய நேர்வுகள், ஒட்டுமொத்த…

சுகாதார அமைச்சு இன்று, 1,581 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவான நிலையில், நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 100,318 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில், கிள்ளான் பள்ளத்தாக்கில் 55.3 %, சபாவில் 15.7 % மற்றும் நெகிரி செம்பிலானில் 9.1% எனப் பதிவாகியுள்ளன. இன்று, 1,085 நோயாளிகள்…