சீ- விளையாட்டு பூபந்து போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் பெற்று தினா-தான் சாதனை, தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னணி ஜோடியான பேர்லி தான்-தினா முரளிதரன் 86 நிமிட விருவிருப்பான கடிமையான போட்டியின் இறுதியில், இன்று SEA Games தாய்லாந்து 2025…
ஜொகூர் அம்னோ : பாகோவைத் தற்காக்க முஹைதீனுக்கு வழிவிடுவோம்
15-வது பொதுத் தேர்தலில், பாகோ தொகுதியைத் தற்காத்துகொள்ள பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசினுக்கு வழிவிட தயாராக இருப்பதாக, ஜொகூர் அம்னோ கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளது. இத்தகவலை ஜொகூர் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்தத் திட்டம் ஏற்கனவே கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப் பட்டுவிட்டதாகவும்…
கோவிட் 19 : தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட…
சுகாதார அமைச்சு இன்று நண்பகல் வரை, 2,295 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது. ஆக, மலேசியாவில் மொத்த நேர்மறை தொற்றுகளின் எண்ணிக்கை 117,373-ஆக உள்ளது. புதிய நேர்வுகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 2,000-ஐ தாண்டியது இதுவே முதல் முறை. நேற்றைய நிலவரத்தைப் போலவே, சிலாங்கூரில் அதிக…
ஐந்து மாநிலங்களில் மோசமான வானிலை எச்சரிக்கைகள்
இன்று மோசமான மற்றும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்டுள்ளது. தீபகற்பத்தின் நான்கு மாநிலங்களிலும், சபாவின் பல பகுதிகளிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஹாங்கில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டங்களிலும், ஜொகூரில் சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய்,…
`அன்வரைத் தாக்குவதை மகாதீர் நிறுத்த வேண்டும்` – அமானா இளைஞர்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமை விமர்சிப்பதை அல்லது தாக்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க "வலுவான மற்றும் உறுதியான" பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படுவதை நிரூபிக்கத் தவறியது உட்பட, அன்வரை விமர்சித்து மகாதீர் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, அமானா…
எச்.எஸ்.ஆர்.-க்கு மாற்று திட்டம் முன்மொழியவும், ஜொகூர் டிஏபி வலியுறுத்துகிறது
ஜொகூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், நிறுத்தப்பட்ட கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்திற்குப் பதிலாக மற்றொரு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, ஜொகூர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள், ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம், விரைவில்…
சிங்கப்பூருடனான் எச்.எஸ்.ஆர். ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது, மலேசியா இழப்பீடு செலுத்த வேண்டும்
மலேசியாவுடனான கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் திட்டம் (எச்.எஸ்.ஆர்.) தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை சிங்கப்பூர் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மலேசியா இரயில் பாதையில் மாற்றங்களைச் செய்ய விரும்புவதாகவும், இது இரு நாடுகளின் அரசாங்கங்களிடையே விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுக்கு அது வழிவகுத்ததாகவும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியது.…
பிடிபிடிஎன் கடனைத் திருப்பி செலுத்துதல் : தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒத்திவைப்பை நீட்டிக்க…
தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகத்தின் (பி.டி.பி.டி.என்) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட கடனாளிகளுக்கு மட்டுமே அந்தச் சலுகை வழங்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னி அகமது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். கோவிட் -19…
பி.கே.பி.பி. மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) நீட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நள்ளிரவில், முந்தைய ஆணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் 2021 மார்ச் 31 வரை, பி.கே.பி.பி. மீண்டும் நீட்டித்தது. மற்றவற்றுடன், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எந்தவொரு விதிமுறைகளையும் வெளியிட, சுகாதாரத் தலைமை இயக்குநருக்கு இந்த விதிகள்…
கோவிட் 19 : ஆண்டின் இறுதி நாளான இன்று, ஆக…
இன்று, 2,525 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் கிட்டத்தட்ட பாதி வழக்குகள் சிலாங்கூரில் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 26-ல் பதிவான 2,335 நேர்வுகள் சாதனையை அது மீறுகிறது. இன்று 1,481 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
2021 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நிறைந்த வளம், மிகுந்த மகிழ்ச்சி, தொடரும் வெற்றி, பிணியில்லா வாழ்வு இவை அனைத்தையும் இப்புத்தாண்டு நமக்குக் கொண்டு வரட்டும்!
பினாங்குப் படகுதுறைக்கு ஒரு பிரியாவிடை
கடந்த இரண்டு வாரங்களாக, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஒரு பழமையான பயணத்திற்காக, படகு சவாரிக்காக பினாங்குக்கு வருகிறார்கள். சுமார் 126 ஆண்டுகளாக உள்ள பினாங்குப் படகுச் சேவை மாநிலத்தின் ஓர் அடையாளமாகும். படகில் நீங்கள் எண்ணற்ற முறை சவாரி செய்திருந்தாலும், படகில் ஏறி தீவுக்குச் செல்லும்போது, கடல் தென்றலையும்,…
இ.பி.எஃப். தொகையைத் திரும்பப் பெறுவது : ‘தங்க முட்டையிடும் வாத்துகளைக்…
தொழிலாளர் சேமநிதியில் (இபிஎஃப்) இருந்து பெரும் தொகையை வெளியாக்க அனுமதிக்க வேண்டுமென அம்னோ வலியுறுத்தியது, இறுதியில் இது பங்களிப்பாளர்களைப் பாதிக்கும் என்று மூத்தப் பத்திரிகையாளர் அப்துல் கதிர் ஜாசின் தெரிவித்துள்ளார். "பிரபலத்தை விரும்பும் சிலர் பரிந்துரைத்தபடி, இபிஎஃப் பங்களிப்பாளர்கள் தங்கள் சேமிப்பை விருப்பப்படி திரும்பப் பெற அனுமதித்தால், அந்த…
நிதி திரட்டும் பிரச்சாரம் இலக்கை அடைந்தது, சைட் சதிக் மொட்டைப்…
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் ‘RM200,000 தொகையைத் திரட்டும் இலக்கை அடைந்தால், தலையை மொட்டையடிப்பேன்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். 28 வயதான அந்த எம்.பி., நேற்றிரவு 7 மணி அளவில் RM383,000 வசூலானதன் மூலம் தனது இலக்கை மீறிவிட்டார். ‘1 குடும்பம் 1…
`கட்டாயத் தொழிலாளர்கள்’ இருக்கலாம் என்பதால், அமெரிக்கா சைம் டார்பி தயாரிப்புகளைத்…
கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைகள் இருக்கலாம் எனக் கவலைகொண்ட அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (Customs and Border Protection - சிபிபி) துறை, செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர் சைம் டார்பி பிளான்டேஷன் பெர்ஹாட்-இன் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. "சைம் டார்பி பெருந்தோட்ட செம்பனை எண்ணெய் மீதான வெளியீட்டுத்…
கோவிட் 19 : 1,870 புதிய நேர்வுகள், 8 புதியத்…
இன்று, நாட்டில் 1,870 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவானதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். முதன்முறையாக, ஜொகூர் இன்று 607 வழக்குகள் அல்லது 32.5 விழுக்காடு புதிய நேர்வுகளுடன் மற்ற மாநிலங்களில் இருந்து முன்னிலை வகிக்கிறது. "ஜொகூரில் நேர்வுகளின் அதிகரிப்புக்குச் சிறைச்சாலை…
‘குழியால் எழுந்த அமைச்சரும், விழுந்த பாதுகாவலரும்’
எஸ் அருட்செல்வன் | அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு நான் எதிரி அல்ல. உண்மையில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிறந்த அமைச்சர்களில் அவர் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். சாலையில் இருந்த ஒரு குழியின் காரணமாக, நேற்று அவர் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக…
ஒன்பது ஈரச் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கோவிட் -19…
ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களிடையே, கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக, அதிகமான வணிக வளாகங்கள் துப்புரவுப் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களாக, நாடு முழுவதும் பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஈரச் சந்தைகள் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்ய…
அஸார் ஹருன் சபாநாயகராக நிலைநிறுத்தப்பட்டார், டாக்டர் எம்-இன் வழக்கை நீதிமன்றம்…
மக்களவையின் சபாநாயகராக அஸார் அஸிஸான் ஹருன் தொடர்ந்து இருப்பார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் கமல் முஹமட் ஷாஹித்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் வழக்குக்கு எதிரான அஸாரின் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டது. மக்களவையின் துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டாக்டர் மகாதீரின் சட்ட நடவடிக்கையை…
2020 செய்தி தூண்டுநர் யார்?
வாக்குகள் | கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு நிறைவுருவதற்கு முன்பு, மலேசியாகினி அவ்வாண்டின் செய்தி தூண்டுநர் யார் என்பதைப் பட்டியலிடும். ஒரு செய்தி தூண்டுநர் என்பது, "ஒரு நபரின் செய்கை, தலைப்புச் செய்திகளாக, பொது சொற்பொழிவுகளுக்குத் தாக்கமாக மற்றும் மலேசிய அரசியலில் ஒரு சிறந்த…
கோவிட் 19 : இன்று 1,925 புதிய நேர்வுகள், பஹாங்கில்…
சுகாதார அமைச்சு இன்று, 1,925 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து, பஹாங்கிலும் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. 1,123 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 55…
பெர்சத்து , பாஸ் இல்லாமல் அம்னோ – `ஏன் முடியாது?`
15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜி.இ.) முன்னதாக, அம்னோ தனது சொந்த பாதையில் செல்ல வேண்டுமானால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்சா கூறினார். "ஏன் கூடாது?" பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல், அம்னோவின் சொந்த திறனில்…
பி.எச். கொள்கைகளைக் கடைப்பிடிப்பார் என்றால், மகாதீரை அழைக்கலாம் – அன்வர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் உட்பட, கூட்டணியின் கொள்கைகளைக் கடைபிடித்து, இணைந்து வேலை செய்ய விரும்பும் எந்தத் தரப்புக்கும் அழைப்பு கொடுக்க பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தயாராக உள்ளது. ஆனால், அழைக்கப்படும் தரப்பினர் அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கொண்டு, கூட்டணியைச் சேதப்படுத்தும் எண்ணத்தோடு வரக்கூடாது என்று…
ஹிண்ராஃப் பதிவு இரத்து, ஆர்.ஓ.எஸ்.-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
தனது பதிவை இரத்து செய்ய, உள்துறை அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவு இலாகா (ஆர்.ஓ.எஸ்.) எடுத்த முடிவுக்குச் சவால் விடுத்து, இந்து உரிமைகள் நடவடிக்கை முன்னணி (ஹிண்ராஃப்) நீதித்துறை மறுஆய்வு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் விண்ணப்பத்தாரராக, பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் பி வேதமூர்த்தி செயல்படுவதை, மலேசியாகினி இன்று…
























