இலங்கை ஜனாதிபதி தேர்தல் மோசடியாக நடத்தப்பட்டது: அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டுமே தேர்தல்  சடடங்களை மீறி  மோசடியாகவே நடைபெற்றதாக அமெரிக்காவின் மனித உரிமை  அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகளாவிய மனித உரிமை நிலை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்   வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்  வைக்கப்பட்டுள்ளன. 44 பக்கங்கள்…

தமிழர் பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்கிறார் பொன்சேகா

வடகிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா, அங்கு  மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள இராணுவ படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.…

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வவுனியாவில் உண்ணாநோன்பு

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஜனநாய மக்கள் முன்னணி, பிரஜைகள் குழு ஆகிய…

பொன்சேகாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல்

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் உரிமையைக் காக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.  குடியரசுத் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானபோதும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது.…

சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார்!

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கூடிநின்று அவரை வரவேற்றுள்ளனர். பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டு, அந்தப் பிரதேசமே பொன்சேகா ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்ததாக…

போர் குற்றங்கள் குறித்து நாங்களே விசாரிப்போம்; இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து நாங்களே விசாரிப்போம். அனைத்துலக நீதிமன்ற விசாரணையை ஏற்க முடியாது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எம்.பெய்ரிஸ் நேற்று கூறினார். இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் கண்மூடித்தனமாக…

சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் மகிந்தா ராஜபக்சே கையொப்பம்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, குடியரசுத் தலைவர் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு மகிந்தா ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு…

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: TGTE பிரமர் உருத்திரகுமாரன் உரை!

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு…

விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ…

உலக முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள…

புலிகளின் நீதிபதிக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் நீதிபதியாக பணிபுரிந்த கே.பி லங்காசேவாரன் என்பவரை கொழும்பு நீதிமன்றம் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு முன் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் செயல்பட்டு வந்ததாக இலங்கை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின்…

ராஜபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வைர விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்படி காமன்வெல்த் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதை கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உறுதி…

இலங்கை இனப்பிரச்னை: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு!

இலங்கை இனப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமையமைச்சர் பணிமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பின்போது இந்த…

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன!

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த…

இறுதிப் போரின் போது தஞ்சம் அடைந்த 1 1/2 லட்சம்…

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இனப் படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும் இடையில்…

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் கைது!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போருக்கு பின்னரும் அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இலங்கை இராணுவத்தைவிட்டு தப்பிச் சென்ற 2500 படைச் சிப்பாய்கள்  இவ்வாண்டு வரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சுமார் 65000 சிப்பாங்கள் இராணுவத்தில் இருந்து…

மகிந்தாவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: பா. அரியநேத்திரன்

இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து, மக்களைப் பட்டினியால் வதைக்கின்றது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசு. வாழ வழியின்றித் திண்டாடும் மக்கள் மரணத்தின் வாசலில் நிற்கின்றனர் என்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சிமேன்டு ஆகியவற்றின் விலைகளை…

இலங்கையுடனான பேச்சுவார்த்தையை புதுப்பிக்க வேண்டும்: TNA

இலங்கை அரசுடன் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுடன் நடைபெற்று வந்தது. மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.…

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை: எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தல்

அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா தலைமையிலான நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை…