இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
பான் கீ மூனின் பேச்சால் கடுப்பாகியுள்ள இலங்கை!
இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள் நேர்காணல் இலங்கை அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகம் ஒன்று…
இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது
இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2009-இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில்…
சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை இன்றுடன் முடிகிறது
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் (26.04.2012) முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார். எனினும் அவரைப் பிணையில் விடுவிக்கும் முயற்சிகள்…
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை: இலங்கை அரசு
தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து, இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பிறகு, குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களை பார்வையிட, பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர்…
தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடப் போகிறாராம்!
தனி தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் வடசென்னை தி.மு.க., சார்பில் பெரவள்ளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சட்டசபையில் எதிர்கட்சிகளை…
ஈராண்டுக்குள் இலங்கை இரண்டாகும்: ஐ.நா. மன்றம் இதை அரங்கேற்றும்!
ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் இலங்கை அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலங்கை இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும் என்றும், ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின்…
தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் வாபஸ் பெற ராஜபக்சே மறுப்பு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் அண்மையில் இலங்கை சென்றனர். அங்கு 6 நாட்கள் தங்கி சுற்று பயணம் மேற்கொண்டனர். இறுதி கட்டப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரில் சென்றனர். முள்வேலி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களையும், சொந்த ஊர்களில்…
விடுதலைப் புலிகளைப் பிடிக்க சிங்கள இராணுவம் வேட்டை
இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போரில் விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே அறிவித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஐலன்ட் என்ற நாளிதழில்…
45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் வடித்தோம்: இந்திய எம்.பி
"மட்டக்களப்பு பகுதியில், 45 ஆயிரம் விதவைகளைப் பார்த்து, சுஷ்மா சுவராஜ் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் கண்ணீர் வடித்தோம்" என, இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார். இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கையில் தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்புக்…
தம்புள்ளவில் பள்ளிவாசல் மீது தாக்குதல்: பௌத்த துறவிகள் எச்சரிக்கை
இலங்கையின் தம்புள்ளவிலுள்ள பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பள்ளிவாசலை மூடிவிடும்படி அந்தப் பிரதேசத்தில் செயற்படும் பௌத்த துறவிகளை பிரதிநிதிக்கும் அமைப்பு எச்சரித்திருந்த நிலையிலேயே இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றுமாறு…
சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து: தனியாக சந்தித்ததால் சர்ச்சை
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அக்குழு தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது. இந்நிலையில், குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே நேற்று சிறப்பு விருந்து அளித்தார். மற்ற எம்.பி.க்கள்…
95 சதவீதம் பேரை குடியமர்த்தி விட்டோம்: பாசில் ராஜபக்ஷே தகவல்
"இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்' என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார். இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும்…
தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; பின்னணியில் அரசியல்வாதி
இலங்கையின் தெற்கே காலி - திலிதுற தோட்டத்தில் புத்தாண்டு நாளன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகளோடு வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து…
இலங்கையில் இராணுவப் படைத் தளத்தை நிறுவுகிறது சீனா!
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய…
ராஜபக்சே மற்றும் பாலஸ்தீன தலைவருக்குமிடையே விசேட சந்திப்பு
இரண்டு நாள் அதிகாரப்பூர்வமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பாலஸ்தீன குடியரசுத் தலைவருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.. நேற்றிரவு இலங்கை வானூர்தி நிலையத்தை சென்றடைந்த பலஸ்தீனத் தலைவர் முஹமட் அப்பாஸ் மற்றும் அந்நாட்டு முக்கியஸ்தர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,…
தமிழர்கள் பிரச்னை, பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது : சந்திரிக்கா
தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி…
ஆணைக்குழு பரிந்துரை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் கருத்து
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக இலங்கை அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். டில்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை…
இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர்
ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால், இந்தியா மீது கோபமில்லை என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது நடந்த போர்க் குற்றம்…
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு விசேட ஆயுதப் பயிற்சி ?
தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலி பேராளிகள் இலங்கைக்குள் மீனவர்கள் என்ற போர்வையில் ஊடுருவியிருப்பதாகவும், இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதுங்கியிருப்பதாகவும், இலங்கையை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கையின் ஆங்கில நாளேடான 'ஐலண்ட்' வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று…
கடாபியின் நிலை தனக்கு வந்துவிடுமென அஞ்சுகிறார் ராஜபக்சே!
லிபியாவில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் பின் அந்நாட்டு சர்வதிகாரத் தலைவர் கர்ணல் கடாபியை அந்நாட்டு புரட்சியாளர்கள் உயிரோடு பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேநிலை இலங்கையில் தனக்கு ஏற்பட நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான ராஜபக்சே ஒரு கூட்டத்தின்போது பேசியுள்ளார். "ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே…
இலங்கையில் பணிமனையை நிறுவுகிறது மனித உரிமை ஆணையம்
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில், இலங்கையில் தனது பணிமனை ஒன்றை நிறுவ மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்தக் கண்காணிப்புக் பணிமனை…
திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை; ராஜபக்சே உத்தரவு
நிருபர்களின் கை கால்களை உடைப்பேன் என திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு அந்நாட்டு அமைச்சர்கள் அடாவடி பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வா என்பவர் வெளிநாடுகளில்…
உகண்டாவில் இலங்கையைக் காட்டிக் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று உகண்டாவி்ல் நடைபெறவுள்ள அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமர்வுகளின்போது நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம் மாதம் 30ம் தேதி தொடக்கம், ஏப்ரல் 6ம் திகதி வரை அனைத்துலக நடாளுமன்றக் குழு அமர்வுகள் உகண்டாவின் கம்பலா நகரில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்போது சிறீலங்காவிலுள்ள…