குறைந்தபட்ச சம்பளம் அமலாக்கப்பட வேண்டும்: மனிதவள அமைச்சரிடம் மகஜர்

குறைந்தபட்ச சம்பளம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும்.  இக்கோரிக்கையை வலியுறுத்தும் மகஜர் எதிர்வரும் 24.10. 2013 (வியாழக்கிழமை) இல் காலை மணி 10.30 க்கு நாடாளுமன்ற வளாகத்தில் மனிதவள அமைச்சரிடம் வழங்கப்படும். இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் பொதுமக்களும் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.        …

‘புறந்தள்ளப்பட்ட’ மகாதிருக்கு சுங்கை லிமாவில் பரப்புரை செய்யும் துணிச்சல் உண்டா?

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு துணிச்சல் இருந்தால் கெடா, சுங்கை லிமாவ்  இடைத் தேர்தலுக்குப் பரப்புரை  செய்ய வரட்டும் எனச் சவால் விடுத்துள்ளார். “சுங்கை லிமாவை ஏன் நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்?  அதன்வழி பிஎன்னுக்கும் அம்னோவுக்கும் அம்னோ தேர்தலில்…

“வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை; தேர்தல் பரப்புரைக்குத்தான் செலவிட்டேன்”

அம்னோ உச்சமன்றத்துக்குப் போட்டியிட்ட நூர் ஜஸ்லான் முகம்மட், அப்போட்டியில் தோற்றதற்கு வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயன்றதுதான் காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார். தாம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை  என்றும் பரப்புரை செய்வதற்குத்தான் பணம் செலவிட்டதாகவும் அவர் கூறினார். “அவர்கள்,(அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்) எங்கு வேண்டுமானாலும் சென்று பரப்புரை செய்ய…

சுங்கை லிமாவ் இடைத் தேர்தல், அனேகமாக நேரடிப் போட்டியாக இருக்கும்

கெடா, சுங்கை லிமாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல், பாஸ் ஜெராய் தொகுதி இளைஞர் தலைவர் அஸாம் சமட்டுக்கும் பிஎன் வேட்பாளரான யுனிவர்சிடி சுல்தான் இட்ரிஸ் விரிவுரையாளர் சுஹாய்மி லாஸிமுக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 4 இடைத் தேர்தலில் போட்டியிடும் அவ்விரு வேட்பாளர்களின் பெயர்களும்…

ஜாஹிட்: சூலு சுல்தான் இறப்பால் சாபாவுக்கான மருட்டல் முடிவுக்கு வந்துவிடாது

தம்மை சூலு சுல்தானாக சுய-பிரகடனம் செய்துகொண்டிருந்த ஜமாலுல் கிராம், ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீன்சில் இறந்துபோனாலும் சூலு படையினரால் சாபாவுக்கு ஏற்பட்ட மிரட்டல் முடிவுக்கு வந்துவிடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. “சூலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சுமார் ஏழு பேர் சூலு சுல்தான் பதவிக்கு உரிமை…

குற்றவியல் சட்டத் திருத்தங்களைக் குறைகூறினார் பிஎன்னின் அஸலினா

நாடாளுமன்றத்தில், அஸலினா ஒத்மான்(பிஎன் -பெங்கேராங்), அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் செய்யும் திருத்தங்களினால் “அப்பாவி மக்கள்” பாதிக்கப்படலாம் என்று கண்டித்தது வியப்பைத் தந்தது. குறிப்பாக, தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கை அவமதித்தால் ஐந்தாண்டுச் சிறை என்பதை அவர் குறைகூறினார். “அத்தவற்றைச் செய்தவன் விளைவுகளை அறியாத ஒரு சிறுவன் என்றால் என்னவாகும்?…

சாங்-சாக்கா கொடி பறக்கவிடப்பட்டதுதான் குற்ற்வியல் சட்டத் திருத்தம் கொண்டுவர காரணமாகும்

தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கை அவமதிப்போரை சிறையிடும் வகையில்  குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களில் ஆகஸ்ட் மாதம் சாங்-சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்ட சம்பவமும் ஒன்று. சட்டத் திருத்தத்தை இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்த பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி, அது “மிக வருத்தமளிக்கும்” சம்பவமாகும்…

குற்றவியல் சட்டத் திருத்தம் இரகசியங்கள் வெளியாவதைத் தடுக்கும் திட்டமா?

இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள ஒரு சட்ட முன்வரைவு, மலேசியாவை எதேச்சதிகார ஆட்சி நடக்கும் இருண்ட காலத்துக்குக் கொண்டுசெல்லும் என்று மாற்றரசுக் கட்சி எம்பி  என்.சுரேந்திரன்  சாடியுள்ளார். அது, எந்தவொரு இரகசியத்தையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் அரசு அதிகாரிகள் சிறையிடப்படுவார்கள் என எச்சரிக்கிறது என்றாரவர். குற்றவியல் சட்டத்துடன் சேர்க்கப்படவுள்ள இப்புதிய…

‘அல்லாஹ்’ தடைவிதிப்புக்கு ஏஜி கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல

உள்துறை அமைச்சு  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த  விதித்திருக்கும் தடை  த ஹெரால்ட்  இதழுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அது ஏற்கத்தக்கதே என்று  சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல்  அளித்துள்ள “குறுகலான விளக்கம்” எடுபடாது,  அது ஏற்கத்தக்கதுமல்ல என்று  டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். அந்தத் தடைவிதிப்பை…

ஆங்கில மொழி பயிற்சி அளிக்க ரிம270 மில்லியனா?

சமீபத்தில் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 தயாரிப்பதற்கு அறிவுரை வழங்கியதற்காக பிரிட்டீஸ் மெக்கின்சி நிறுவனத்திற்கு ரிம20 மில்லியனை கல்வி அமைச்சு கொடுத்தது.   அது ஒன்ரும் பெரிய விசயமல்ல. எனது நாடாளுமன்ற கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் உள்ளூர் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி …

மசீச சிறப்பு பொதுக்கூட்டம்: அமைச்சரவைப் பதவியைத் தவிர்த்து இதரப் பதவிகள்…

  அமைச்சரவைப் பதவி ஏற்கக் கூடாது என்று கட்சி முன்பு எடுத்திருந்த முடிவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மசீச பேராளர்கள் இன்று நிராகரித்தனர். இன்று இச்சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2,199 பேராளர்களில் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 1,090 பேரும் 1,080 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.18 வாக்குகள் செல்லுபடியாகவில்லை. இதனிடையே,…

கைரி: அம்னோ பேராளர்கள் தொடர்ச்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்

அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர்கள் மூவருமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளுக்காக கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார். “அதன்வழி அரசாங்கத்தில் தாங்கள் தொடர்ச்சியை விரும்புவதை அடிநிலை பேராளர்கள் உணர்த்தியுள்ளனர். “என்னைப் பொறுத்தவரை, அதை…

லாஹாட் டத்து ஊடுருவலுக்கு உத்தரவிட்ட சூலு சுல்தான் காலமானார்

சாபாவுக்குள் ஊடுருவும்படி தம் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்ட சூலு சுல்தான் ஜமாலுல் கிராம்  III உறுப்புச் செயலிழப்பின் காரணமாக உயிர் இழந்தார். தம்மை சூலு  சுல்தான் எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருந்த  அவர், இன்று அதிகாலை மணி 4.30க்கு மரணமுற்றார் என அவரின் மகள் ஜேசல் கிரம் தெரிவித்ததாக பிலிப்பின்ஸ்…

ஜாஹிட்: வெற்றிபெற வைத்த எதிரணி-ஆதரவு வலைத்தளங்களுக்கு நன்றி

நேற்று அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்ற அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, தம் வெற்றிக்கு எதிரணியை ஆதரிக்கும் சமூக ஊடகங்கள்தாம் காரணம் என்கிறார். “அந்த வலைத்தளங்களுக்கும் இதழ்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். “உண்மையில், அவைதாம் நான் பேரும் புகழும் பெற உதவின”, என்றவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன்…

அம்னோவின் தற்போதைய உதவித் தலைவர் மீண்டும் வெற்றி பெற்றனர்

அம்னோ கட்சியின் தேர்தலில் தற்போது உதவித் தலைவர்களாக இருக்கும் அஹ்மட் ஸாகிட் ஹமிடி, ஷாப்பி அப்டாய் மற்றும் ஹிசாமுடின் ஹுசேன் ஆகியோர் மீண்டும் பேராளர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஹமிடி 185 வாக்குகளும், ஷாப்பி மற்றும் ஹிசாமுடின் ஆகியோர் முறையே 174 மற்றும் 100 வாக்குகளும் பெற்றனர்…

சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமருக்கு உதயகுமார் கடிதம்

  காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தாம் சிறையில் தாம் தொடர்ந்து  சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புகார் செய்துள்ளார். "தீய நோக்கத்துடன் நான் காஜாங் சிறையில் மிகவும் அஞ்சப்படும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் 27 நாள்களாக அடைத்து வைக்கப்படிருக்கிறேன்", என்று…

பள்ளிக்கூடங்கள் என்ன மாடு வெட்டும் கசாப்புக் கடைகளா?, குலா காட்டம்…

புனித ஹஜ்ஜுப் பெருநாள், முஸ்லீம்களின் தியாகத்தை வலியுருத்தும் திருநாள். அன்பையும்  அரவணைப்பையும் மனித நேயத்தையும் விளக்குவது ஈகைப் பெருநாள். அப்படி அந்த புனிதத் தன்மை வாய்ந்த இஸ்லாத்தை களங்கப்படுத்தும் வண்ணம், இஸ்லாமிய நெறிகளை போதிக்கிறோம் என்று சொல்லி  மிருக வதையை, பள்ளி வளாகத்தில் செய்திருப்பது பொது மக்களிடையே பெரும்…

பிரதமரின் போக்கு மிதவாதமா?, சந்தர்ப்பவாதமா?

- டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 19,2013. நல்லதொரு நாட்டுக்கும், அதன்  தலைவர்களுக்கும் நிலையான கொள்கைகளிருக்க வேண்டும்.  நம் நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் கொண்டவைகளாகவும் நகைச்சுவையாகவும் உள்ளன. ஆனால், இதுவரை  இவர்கள்  பேசியதையும், செய்தவற்றையும்  ஆழமாகக் கவனித்தால்,  இவர்கள் தேசத்திற்கும், மக்களுக்கும் ஆற்றியுள்ளது…

சுவா: லியோ கண்டனத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கில்லை

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியோ தியோங் லாய்மீது  கொண்டுவரப்படவுள்ள கண்டனத் தீர்மானத்தை மீட்டுக்கொள்வது தம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்கிறார். கண்டனத் தீர்மானம் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) கடிதம் வரப் பெற்றதை உறுதிப்படுத்திய…

இன்று அம்னோ தேர்தல்

அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் இப்போது உதவித் தலைவருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக அறுவர் போட்டியிடுகின்றனர். நடப்பு உதவித் தலைவர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், ஷாபி அப்டால் ஆகியோரை எதிர்த்து…

லியோவிடம் கருணை காட்டுங்கள்: மசீசவுக்கு ஆர்ஓஎஸ் வேண்டுகோள்

நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் (இஜிஎம்), துணைத் தலைவர் லியோ தியோங் லாய்க்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டாம் எனச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி முற்றுவதைத் தவிர்க்க அத்தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய்…

பிசிஏ தொடர்பில் மாமன்னருக்கு மகஜர் கொடுத்தார் கர்பால்

குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தத்துக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் என மாமன்னரைக் கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை டிஏபி தலைவர் கர்பால் சிங் இஸ்தானா நெகாராவிடம் ஒப்படைத்துள்ளார். அகோங்கின் ஒப்புதல் இல்லாவிட்டாலும்கூட அத்திருத்தங்கள் 30 நாள்களில் இயல்பாகவே சட்டமாகிவிடும் என்பதை உணர்ந்தே கர்பால் அம்மகஜரைக் கொடுத்துள்ளார். “அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டாம்…

என் மகன் ஆசிபெற்ற வேட்பாளர் அல்லவே: மகாதிர் அங்கலாய்ப்பு

அம்னோ பேராளர்கள் நாளைதான் வாக்களிப்பார்கள்.  ஆனாலும்  அக்கட்சியின் முன்னாள் தலைவர்  டாக்டர் மகாதிர், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  ஆறு வேட்பாளர்களில்  ஒருவராகிய தம் புதல்வர் முகிரிஸ் வெற்றிபெற மாட்டார் என்பது தமக்கு இன்றே தெரிந்து விட்டது  எனக் கூறிக்கொள்கிறார். “அம்னோவில், தலைவர்  யாரை விரும்புகிறாரோ அவர்களைத்தான் பேராளர்கள்…