பக்காத்தான்: முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்

பக்காத்தான் ரக்யாட், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அதன்  நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அண்மைய முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க இன்று ஒன்றுகூடிய பக்காத்தான் தலைவர்கள் இதை அறிவித்தார்கள். அது பற்றி மேலும் விவரிக்க அவர்கள் மறுத்தனர். நெருக்கிக் கேட்டதற்கு, “முன்பிருந்த நிலைதான் இப்போதும். நாங்கள்…

ஜாஹிட்: பிசிஏ-இல் மாற்றம் செய்ய அரசாங்கம் தயார்

சர்ச்சைக்குரிய  குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த்தைக் குறைகூறியுள்ள தரப்புகளுடன் பேச்சு நடத்திய பின்னர்,  தேவையென்றால்  அதில் மேலும் திருத்தங்கள் செய்ய அரசாங்கம்  தயாராக இருக்கிறது என  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். பிரதமர் பணித்திருப்பதை அடுத்து,  அஹ்மட் ஜாஹிட், பிசிஏ-யைக் குறைகூறியுள்ள வழக்குரைஞர் மன்றம், என்ஜிஓ-கள் ஆகிய தரப்பினருடன்  பேச்சு…

‘நஜிப்பின் பூமிபுத்ரா கொள்கை என்இபி-இலிருந்து மாறுபட்டதல்ல’

அண்மையில்,  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பிஇஇ), 1970-இல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையைப் போன்றதுதான் என நாட்டின் மிகப் பெரிய சீன வணிகக் கூட்டமைப்பு கூறுகிறது. ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவுவதுதான் பிஇஇ-யின் தலையாய நோக்கம் என்று கூறப்படுவதைத் தாம் சந்தேகிப்பதாக…

ஆலய கொள்ளை தொடர்பில் இருவர் கைது

கடந்த மாதம்,  மலாக்கா  ஆலயங்களில் திருடுபோன ரிம20,000 மதிப்புள்ள பொருள்களின் தொடர்பில் போலீசார் இருவரைக்  கைது  செய்துள்ளனர். செப்டம்பர் 19-இல்,  பத்து பிரண்டம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி கோயிலில்  எட்டு சிலைகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில்  தஞ்சோங் கிளிங்,  தாமான் தாங்கா பத்துவில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக  மலாக்கா குற்றப் புலனாய்வு…

லாவோஸ் விமான விபத்தில் பலியான 49 பேரில் ஒருவர் மலேசியர்

நேற்று, லாவோஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்  தென் லாவோசில், மீகோங் ஆற்றில் விழுந்து நொறுங்கியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவ்விபத்தில் விமானத்தில்  இருந்த  49 பேரும் உயிர் இழந்தனர்  என லாவோஸ் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.   10 நாடுகளைச் சேர்ந்த…

கிழக்கு மலேசியாவில், கிறிஸ்துவர்கள்‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை இல்லை

சாபாவிலும் சர்வாக்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் வழிபாட்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தாராளமாக பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.  மலாய்மொழி பைபிளிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர்  ஜோசப் குருப் கூறினார்  என சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது. “முறையீட்டு…

ஜாகார்த்தா போஸ்ட் ஆசிரியர்: இறைவன்மீது யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை

இறைவன் ஒருவனே என நம்பும் எவரும் முஸ்லிம்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும்  கிறிஸ்துவர்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும் கூற முடியாது.   ‘அல்லாஹ்’  என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது  என  மலேசிய முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்வினையாற்றியுள்ள  இந்தோனேசிய நாளேடான  ஜகார்த்தா போஸ்ட்-இன் ஆசிரியர்  இவ்வாறு…

உதவித் தலைவர் தேர்தல்: ஹிஷாமையும் முக்ரிசையும் முந்திக்கொண்டு செல்கிறார் அலி…

அம்னோவில் உதவித் தலைவர் தேர்தலில் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் பரவலாக நிலவும் எதிர்பார்ப்பைக் கவிழ்த்து விடுவார்போலத் தெரிகிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் தேர்தல் பற்றிய அண்மைய கணிப்பு இது: குற்றத்தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வந்ததாலும் பல்வேறு விவகாரங்களில் கடுமையான போக்கை…

கேஎல்ஐஏ2 கிட்டத்தட்ட தயாராகி விட்டது

குறைந்த கட்டண விமானச்சேவைக்கான  மிகப் பெரிய விமான நிலையமான கேஎல்ஐஏ2,  திட்டமிட்டபடி  2014 மே 2-க்குள் செயல்படத் தயாராகிவிடும். அதன் முனையக் கட்டிடம் 99 விழுக்காடு தயாராகிவிட்டது என்றும் “முடியும் தருவாயில் உள்ளது” என்றும் மலேசிய விமான நிறுவன ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி) தலைமை நடவடிக்கை அதிகாரி அப்ட் ஹமிட்…

‘கெராக்கான் தேசிய தலைவர் பதவிக்கு தெங் சரியானவர் அல்லர்’

பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ, தேசிய தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மாநில கெராக்கானில் உள்ள அனைவரும் வரவேற்பதாகக் கூறுவதற்கில்லை. தேசிய தலைவர் பதவிக்கு தெங்கைக் காட்டிலும் சிறந்த தலைவர்கள் உண்டு என வழக்குரைஞர் பல்ஜிட் சிங் கூறினார். பல்ஜிட், செப்டம்பர் மாதம் மாநிலத் தலைவர் பதவிக்கு…

மசீச இளைஞர் தலைவர் கட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதியில்லை

டாக்டர் சுவா சொய் லெக் கட்சித் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்றளித்த வாக்குறுதியை மீறினால் தாம் எந்தவொரு பதவிக்கும் போட்டியிடப்போவதில்லை என்று மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார். தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என மே 6-இல் வாக்குறுதி அளித்த சுவா, அவ்வாக்குறுதியைக்…

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் முஸ்லிம்கள் சமய துரோகிகள் என அறிவிக்கப்படும்…

முன்னாள் ஜோகூர் முப்தி முகம்மட் நூ காடுட்,  ‘அல்லாஹ்’ விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் முஸ்லிம்கள் காபிர்களாக அல்லது சமய துரோகிகளாக அறிவிக்கப்படும் அபாயம் உண்டு என எச்சரித்துள்ளார். தீர்ப்பை எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இழிவான குணமுடையவர்கள் என்றும்…

ஆஸ்திரேலியாவில் அன்வாரின் நிகழ்வுகளில் பிஎஸ்டி மாணவர்கள் கலந்துகொள்ளத் தடையா?

ஆஸ்திரேலியாவில் அரசாங்க உதவிச் சம்பளத்தில் படிக்கும் மலேசிய மாணவர்கள் அன்வார் இப்ராகிமின் நிகழ்வுக்குச் செல்லக்கூடாது என அங்குள்ள பொதுச் சேவைத் துறை (பிஎஸ்டி)-இன் மாணவர் ஆலோசகர் “எச்சரிக்கை விடுத்தது” உண்மையா என்று பிகேஆர் வினவியுள்ளது. சனிக்கிழமை, ஏடிலேய்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரின் நிகழ்வுக்கு பிஎஸ்டிமாணவர்கள்…

‘முதலில் சுடுங்கள்’ என்று ஜாஹிட் கூறியது ஏன் என்று அரசு…

பிகேஆர்  உதவித் தலைவர் என்.சுரேந்திரன், தாம் போலீசாரின் சுடும் நடவடிக்கையில் கலந்துகொண்டாலும்கூட  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ‘முதலில் சுடுங்கள்’ என்று கூறியதற்கு விளக்கம் தராமல் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார். போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், போலீஸ் நடவடிக்கையை நேரில் காண வருமாறு டிவிட்டரில் …

அசிஸ் பாரி: அல்லாஹ் தீர்ப்பில் நீதிமன்றம் தவறு செய்துள்ளது

  கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்ட் அதன் மலாய் மொழிப் பதிப்பில் கடவுளைக் குறிக்கும் "அல்லாஹ்" என்ற சொல்லை பயன்படுத்துவதைத் தடை செய்யும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் கூறுகிரார். "பெடரல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1) ஐ சமய உரிமைகளுடன்…

அல்லாஹ் தீர்ப்பு: வழிக்கு வாருங்கள் அல்லது வழியைப் பாருங்கள்

  கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மலேசிய கிறிஸ்துவ சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி எப்போது வேண்டுமானாலும் சிந்திக்கலாம் என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா)…

தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு அரசு நிலம் கொடுக்கவில்லை

பினாங்கு இண்ட்ராப்,  தலைநிலத்தில் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு மாநில அரசு நிலம் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்ட நிலம் கொடுக்காத மாநில அரசு  அதே பத்து கவான் தொகுதியில் ஹல் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்துள்ளது என இண்ட்ராப் பினாங்கின் தலைவர் கே.கலைச்செல்வம் கூறினார். “தமிழ்ப் பள்ளி மாணவர் எண்ணிக்கை…

இப்ராகிம் அலி: ‘அல்லாஹ்’ தீர்ப்பு அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது

முறையீட்டு நீதிமன்றம்,  கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்டில்  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தானது  அரசமைப்பு,  சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்  செய்யப்பட்ட ஒரு முடிவாகும்  என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். இந்நாட்டில் மற்ற சமயத்தவர் தேவாலயங்கள், கோயில்கள் போன்றவற்றுக்குச் சென்று வழிபடுவதற்கோ அவர்களின்…

கத்தோலிக்க வார இதழில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை

கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட  ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கான தடையை உறுதிப்படுத்தி புத்ரா ஜெயா முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்வழி, அச்சொல்லைப் பயன்படுத்தலாம் எனக்  கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை அது தள்ளுபடி செய்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய த…

‘அரசமைப்பைக் காக்க முடியாதவர்கள் நீதிபதிகளாக இருக்கக்கூடாது’

கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுத்தத் தடை விதித்த  முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பைப் பலரும் குறைகூறியுள்ளனர். வழக்குரைஞரான ஷியாரெட்ஸான் ஜொஹான், அரசமைப்பைக் காப்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்த நீதிபதிகள் நீதிபதியாக இருக்கக்கூடாது என்றார். “நீதிபதிகள் அரசமைப்பைக் காக்க அவர்கள் உறுதிமொழி…

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க ஊடக உதவி நாடப்பட்டது

பினாங்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இனி கோமாளித்தனங்கள் செய்து தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களின் செயல்களைச் செய்தியாளர் குழு ஒன்று அணுக்கமாகக் கண்காணித்து மதிப்பீடு செய்யும். சட்டமன்றத்தில் இருந்து உறுப்பினர்களின் நடத்தையைக் கவனித்து வருபவர்கள் என்பதால் உறுப்பினர்களைக் கண்காணித்து அவர்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்ய செய்தியாளர்களின் உதவி  நாடப்பட்டது எனச் சட்டமன்றத்…

அம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தல் முடிவு, ஹஜ்ஜு பெருநாளுக்குப்…

அம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தலில், முன்னணி வேட்பாளர்கள் இருவரும் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருப்பதால் வெற்றியாளர் யார் என்பது ஹஜ்ஜு பெருநாள் முடிந்துதான் அறிவிக்கப்படும். முன்னணி வேட்பாளர்களான ஜமாவி ஜாஃபாரும் கைருல் ஹருனும் 190 தொகுதிகளிலிருந்து ஆளுக்கு 73 தொகுதி வாக்குகளைப் பெற்றிருப்பதாக அம்னோ தேர்தல் குழுத்…

கேலி கூத்தாக்காதீர்: இந்திய குத்தகையாளர் அமைப்பு காட்டம்

கடந்த தேர்தலின் போது தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரிம 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றை கட்ட இந்திய குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 53 இந்திய குத்தககையாளர்கள் தங்களது டெண்டர்களை சமர்ப்பித்தனர். இவை சமர்பித்து 6 மாதங்கள் ஆகியும் இன்னமும் இழுப்பறியாகவே இருப்பதாகவும் மாறி ,மாறி…