பெர்சே செயல்குழு உறுப்பினர் சாபாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே 2.0-இன் இன்னொரு உயர்நிலை உறுப்பினருக்கும் சாபாவுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் அஹ்மட் ஷுக்ரி அப் ரெஜாப் இன்று காலை சாபாவுக்குள் நுழைய முற்பட்டபோது மாநிலக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது,…

பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை: பிரதமர் எச்சரிக்கை

பக்காத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைத்து திறம்பட ஆட்சி செய்யத் தவறி நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினால் அதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று எச்சரித்தார். “அந்த அபாயத்தை எதிர்கொள்ளலாமா?  நம் எதிர்காலத்தை நாமே பணயம் வைக்கலாமா? சிலர், பரவாயில்லை, அவர்கள் சரியாகச் செயல்படவில்லை…

சொய் லெக்: ஹூடுட்டைக் கொண்டுள்ள நாடுகள் பின்தங்கியுள்ளன

ஹூடுட்டைப் பின்பற்றும் 11 நாடுகளில் எட்டு நாடுகள் ஊழல்மிக்கவையாக, நிலைத்தன்மையற்றனவாக, பாதுகாப்பற்றவையாகக் கருதப்படுகின்றன என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அந்ந்நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. “ பாஸின் ஹூடுட், குற்றச்செயல்களையும் ஊழல்களையும் குறைக்கும் என்று முஸ்லாம்-அல்லாதரிடம் சொல்லிச் சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளது…

மசீச பேராளர்களின் புதிய தோற்றம்

மசீச பேராளர்கள் வெள்ளைச்சீருடையில் பேராளர் கூட்டங்களில் கலந்துகொள்வதுதான் மரபாக இருந்து வந்தது. அம்மரபில்  ஒரு மாற்றம்.  இன்று 59-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள் பிஎன் நிறமான நீலநிறத்தில் டி-சட்டை அணிந்திருந்தார்கள். இப்புதிய டி-சட்டைகளின் இடப்புற கையில் 1மலேசியா சின்னம் இருக்கிறது.  வலக்கையில் “பிஎன்னைத் தேர்ந்தெடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. சட்டையின் பின்புறத்தில்,…

முன்னாள் பணிப்பெண் ஆடம்பர வீடு வாங்க அரசியல் தலைவர் உதவினாரா?

ஒரு முன்னாள் பணிப்பெண் இந்தோனேசியாவில் ரிம100,000 பெறும் ஆடம்பர வீடு வாங்கியுள்ளார். அது எப்படி என்பதை ஓர் அரசியல் உயர் தலைவர்தான் விளக்க வேண்டும் என்கிறது பிகேஆர் தொடர்புள்ள என்ஜிஓ-வான ஜிங்கா 13. இதன் தொடர்பில் குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவரின் அலுவலகத்தில் ஒரு மகஜரை ஒப்படைத்த ஜிங்கா…

திட்டமிட்ட பாரபட்சம்தான் இந்திய குண்டர் கும்பல் பெருக்கத்துக்குக் காரணம்

உங்கள் கருத்து: “ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்”. இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க தனி ஆணையம் தேவை ஏசிஆர்: உண்மையில் அது தேவைதான். அதை நினைவுபடுத்திய டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி. அம்னோவும் மஇகாவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு…

கவலை வேண்டாம்: ஜென்னிவாவில் தங்கம் வாங்கியவர்களுக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்

தங்கம் விற்பனை செய்யும் ஜென்னிவா நிறுவனத்தின்மீது பேங்க் நெகாரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவனத்தின் தங்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டுக் கலங்கி நிற்கும் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 60,000 பேருக்கு நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நடைபெற்ற ஒரு சந்திப்பு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. ஜென்னிவா…

வீ: கடன்கள் உயர்ந்து வந்தபோதிலும் மலேசியா நொடித்துப் போகாது

மலேசியாவின் தேசிய கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜிடிபி) 53 விழுக்காடு என்றாலும் நாடு அதனால் ஒன்றும் நொடித்துப் போய்விடாது என்கிறார் மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங். “கீனிசியன் கோட்பாட்டை உருவாக்கிய இங்கிலாந்தின் புகழ்பெற்ற பொருளாதார மேதை ஜான் மைனார்ட் கீனிஸ், நாடு பொருளாதச் சுணக்கத்தில்…

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு நோட்டீஸை DBKL உடனடியாகத்…

கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அம்மன்றம் கோயில் நிருவாகக் குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இன்று பின்னேரத்தில் அறிவித்தது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன்…

மகாதிர்: மலாய்க்காரர் பிளவுக்கு நான் காரணம் அல்ல

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்ததன்வழி மலாய்க்காரர்களின் பிளவுக்கு வித்திட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். திரெங்கானுவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய மகாதிர், மலாயன் யூனியன் காலம் தொடங்கி மலாய்க்கார்கள்  பிளவுபட்டுக் கிடப்பதாகக் கூறினார் என சினார் ஹரியானும்…

எல்லாவகை பள்ளிகளையும் சமமாகக் கருத வேண்டும்

அரசாங்கம், எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறும் அரசுசார்பற்ற அமைப்பான ப்ரோஹாம் (Proham), தாய்மொழி பள்ளிகளோ, கிறிஸ்துவ சமயக் குழுவினர் நிறுவிய பள்ளிகளோ, இஸ்லாமியப் பள்ளிகளோ அவற்றுக்கிடையில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறது. “கல்வி அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட…

பிகேஆர்: வழக்கு முடிந்தது, நஸ்ரி மகன் விவகாரம் என்னவானது?

அமைச்சர் முகம்மட் நஸ்ரியின் மகன் முகம்மட் நெடிம் நஸ்ரியின் மெய்க்காவலர் சம்பந்தப்பட்ட அடிதடி வழக்கு தொடர்பில் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிலில் பிகேஆருக்குத் திருப்தி இல்லை. “முகம்மட் நெடிம் நஸ்ரி (வலம்)மீது குற்றவியல் சட்டம் பிரிவு 160-இன்கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்னவாயிற்று?”, என்றது வினவியது. “விசாரணை நடைபெற்றதை…

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு: DBKL பின்வாங்கியது

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீவரர் காளியம்மன் கோயில் அக்டோபர் 25 ஆம் தேதி வாக்கில் உடைக்கப்படும் என்று கோயில் நிருவாகத்திற்கு அனுப்பியிருந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) இன்று ஒப்புக்கொண்டது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கடந்த செப்டெம்பர் மாதம்…

இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க ஆணையம் தேவை

மலேசிய இந்திய இளைஞர்கள் குண்டர்தனத்தில் ஈடுபடுவதை விசாரிக்க “உயர் நிலை” ஆணையம் ஒன்று தேவை என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிய அப்படி ஒரு விசாரணை ஆணையம் தேவை என்றும் அதில் மலேசிய சமுதாயத்தின் எல்லாத் துறையினரின் பங்கேற்பும் இருக்க…

அம்னோவின் கை சுத்தமாக இருந்தால் பணத்தைக் கடத்த வேண்டியதில்லையே

உங்கள் கருத்து: “நஸ்ரி, ரிம40 மில்லியனைக் கடத்துவது குற்றமில்லையா? அக்குற்றம் புரிந்த சாபா அம்னோமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” ரிம40 மில்லியன் நன்கொடையைப் பெற்றது குற்றமில்லை என்கிறார் நஸ்ரி 1மலேசியா2சமயம்: சுவாராம் வெளிநாட்டிலிருந்து சட்டப்பூர்வமாக வங்கிகள்வழி பண உதவி பெற்றதை பிஎன் சட்டவிரோதம் என்று கூறியது. இப்போது மைக்கல்…

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் கோயிலை உடைக்க DBKL…

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 100 ஆண்டுகால ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கோயில் நிருவாகத்தினருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இம்மாதம் 24 ஆம் தேதி வாக்கில் கோயில் உடைக்கப்படவிருக்கிறது. DBKL-லின் கோயில்…

நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது

பாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். மாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர். காலங்கள்…

‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்படுவதை மறுக்கிறார். “அது ஒரு குறுகிய, தப்பான கண்ணோட்டம். விவகாரங்கள் பற்றி விளக்குவது அமைச்சின் வேலை. கூட்டரசு அரசாங்கத்துக்கு…

சொய் லெக்: ஹூடுட் அமலுக்கு வந்தால் 1.2 மில்லியன் பேர்…

மசீச தலைவர் சுவா சொய் லெக், பாஸ் மலேசியாவில் ஹுடுட்டை அமல்படுத்தினால் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர் என்று அனாமதேய குறுஞ்செய்தி ஒன்றை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். ஹூடுட் அமலாக்கத்தால், கெந்திங் மலை சூதாட்ட விடுதி, பந்தயக் கட்டும் இடங்கள், உடம்புப் பிடி நிலயங்கள் போன்ற இடங்களில்…

நஸ்ரி: ரிம40மில்லியன் அரசியல் நன்கொடை பெற்றது குற்றமல்ல

சாபா அம்னோ, அடையாளம் தெரிவிக்கப்படாத ஒரு கொடையாளரிடமிருந்து ரிம40 மில்லியன் பெற்றது தவறல்ல என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர். “அந்த அரசியல் காணிக்கை வழங்கப்பட்டதில் தவறு எதுவும் நிகழவில்லை. “அது குற்றமல்ல. அது குற்றமென்றால் அதைக் குற்றமென்று கூறும் சட்டம் இயற்றப்பட வேண்டும்”, என்று முகம்மட் நஸ்ரி அப்துல்…

கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை

உங்கள் கருத்து: “பிரச்னையைவிட அதன்பிறகு ஒருவர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.” கெடா இல்லாத வீடுகளைப் பழுதுபார்க்க பணம் செலவிட்டுள்ளது பெர்ட் டான்:  அரசு ஊழியர்களிடம் ஊழல், கடமை தவறுதல் முதலிய பிரச்னைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. தவறு செய்பவர்கள் அதற்கு எந்தக் காரணமும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது.…

ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்

பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம்  தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு  அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “ஏஇஎஸ் மீது மாநில…

போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள். அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ…