மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
சாபா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கட்சி விலகினார்
சாபா டிஏபி-இல் உள்சண்டை முற்றியதால் லுயாங் சட்டமன்ற உறுப்பினர் ஹியு கிங் சியு கட்சியிலிருந்து விலகினார். இப்போது அவர் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர். ஆதரவாளர்களையும் நண்பர்களையும் கலந்து ஆலோசித்தபின்னர் அம்முடிவுக்கு வந்ததாக சாபா டிஏபி-இன் முன்னாள் தலைவரான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜிஇ13: மக்கள் நீதிமன்ற விசாரணை விவாதத் தொகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
மலேசியவின் 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நீதிமன்ற விசாரணையில் இறுதி வாதத் தொகுப்பு செப்டெம்பர் 27, 2013 இல் தாக்கல் செய்யப்படும். அந்த வாதத் தொகுப்பை பேராசிரியர் குர்தயால் சிங் நிஜார் வழங்குவார். 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான அதன் ஐந்து-நாள் விசாரணையை மக்கள்…
கெராக்கான்: விசாரணையின்றிக் காவலில் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அந்த நடைமுறையை அடியோடு கைவிடுவது நல்லது என பிஎன் உறுப்புக் கட்சியான கெராக்கான் கூறுகிறது. “கடந்த காலத்தில் தடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருகிறது. அதனைப் பொதுமக்கள் ஆத்திரத்துடன் எதிர்த்தனர். அதன் விளைவாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ), அவசரகால சட்டம் (இஓ) …
தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் விவகாரம் குறித்து அன்வார் எச்சரிக்கை
தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அதன்மீது விவாதம் நடத்தப்படுவதற்கும் பக்காத்தான் ரக்யாட் இடமளிக்காது என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்பில் பெர்சே கூட்டுத்…
பிஏஏ சட்டத்தின்கீழ் பிகேஆர் உறுப்பினருக்கு ரிம6,000 அபராதம்
கடந்த மே மாதம் 505 கறுப்புத்தினப் பேரணியை ஏற்பாடு செய்த குற்றத்துக்காக ஜோகூர் பிகேஆர் நிர்வாகச் செயலாளர் யுனேஸ்வரனுக்கு ஜோகூர் செஷன்ஸ் நீதிமன்றம் ரிம6,000 அபராதம் விதித்தது. 505பேரணி ஏற்பாடு செய்த குற்றத்துக்காக அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் (பிஏஏ) தண்டிக்கப்படும் முதலாவது ஆள் அவராகத்தான் இருக்க வேண்டும். தீர்ப்பை…
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார்
சிலாங்கூர், செமிஞி இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், நாட்டுப்பண்ணைப் பாடவும் மதிக்கவும் மறுத்த மாணவர்களை நோக்கி “இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்குப் போங்க”, என்று திட்டினாராம். எஸ்எம்கே எங்கு உசேன் பள்ளியின் உதவிமுதல்வர் செப்டம்பர் 23-இல், மாணவர்களிடம் மலேசியாவைப் பிடிக்காதவர்கள் “திரும்பிச் செல்லலாம்” என்று கூறியதாக சின் சியு…
கர்பால்: பிசிஏ திருத்தங்கள் அரசமைப்புக்கு முரணானவை
குற்றத்தடுப்புச் சட்டத்தில்(பிசிஏ) கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அரசமைப்புக்கு விரோதமானவை என டிஏபி தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். “நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு இருந்தாலும் அரசமைப்புடன் ஒத்துப்போகாத ஒன்றைத்தான் செய்கிறோம். அது அரசமைப்புக்கு முரணானது”, என்றாரவர். அமைச்சர் முடிவு செய்த ஒன்றை இப்போது மூவரடங்கிய வாரியம் முடிவு செய்யும் என்பது…
முன்னாள் மந்திரி புசார் அசிசான் காலமானார்
முன்னாள் கெடா மந்திரி புசாரும் சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அசிசான் அப்துல் ரசாக், இன்று காலை மணி 11.15-க்கு, அலோர் ஸ்டார் சுல்தான் பாஹியா மருத்துவமனையில் காலமானார். கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அச்செய்தியை உறுதிப்படுத்தியதாக பெரித்தா ஹரியான் கூறியது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் விரைவில்…
சுற்றுச்சூழல் குழுக்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
இன்று, இரண்டு சுற்றுச்சூழல் என்ஜிஓ-கள் நாடாளுமன்றத்தின் தலைவாசலில் கூடி நின்று, லைனாஸ் அரிய மண் ஆலைக்கு எதிராகவும் சரவாக் அணைக்கட்டுகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தன. சேவ் மலேசியா, ஸ்டோப் லைனாஸ் (எஸ்எம்எஸ்எல்) அமைப்பையும் அணைக்கட்டு எதிர்ப்புக் குழுவையும் சேர்ந்த சுமார் 60 சமூக ஆர்வலர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.…
நஜிப்பின் பொருளாதாரத் திட்டங்களில் குறை காண்கிறார் தெங்கு ரசாலி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பொருளாதாரத் திட்டங்களைச் சாடிய முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி, அவை தவறான போக்கைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அரசாங்க உருமாற்றத் திட்டம், பொருளாதார உருமாற்றத் திட்டம் ஆகியவற்றைச் சேர்த்தே அவர் குறைகூறினார். பெட்ரோனாஸின் நிறுவனரும் நஜிப்பின் தந்தையார் அப்துல் ரசாக் உசேன் நிர்வாகத்தில்…
கம்முனிசத்துக்குப் புத்துயிர் கொடுக்க முயல வேண்டாம்: ஐஜிபி எச்சரிக்கை
கம்முனிஸ்டுச் சிந்தாந்தத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மலாயா கம்முனிஸ்டுக் கட்சியைப் பெருமைப்படுத்திப் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர். டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட உள்ளூர்வாசி ஒருவரும்…
ஜாலோர் கெமிலாங்கை அவமதித்தால் 15 ஆண்டுச் சிறை
மலேசியக் கொடியை அல்லது வெளிநாடுகளின் கொடிகளைக் காலில் போட்டு மிதித்தல் போன்ற செயல்களின் மூலமாக அவமதிப்போருக்குக் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இதற்குக் குறைந்தது ஐந்தாண்டாவது சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய குற்றவியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அச்சட்டத் திருத்தம் இன்று மக்களவையில் முன்வைக்கப்பட்டது. இன்னொரு கூடுதல் சட்டத்…
‘சின் பெங் ஜனநாயகத்தை எதிர்த்தார் என்பதை மறக்கக் கூடாது’
சின் பெங்கைப் பொறுத்தவரை மலேசியாவை கம்முனிஸ்டு நாடாக்குவதுதான் அவரது குறிக்கோளாகும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் கொண்டுவரலாமா கூடாதா என்ற சர்ச்சை குறித்து வினவியதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார். “இதில் சர்ச்சையே வேண்டியதில்லை. பலர் ஆத்திரப்படுகிறார்கள். சிலர் அவரை…
சட்டத் திருத்தத்தில், விசாரணையின்றி தடுத்துவைக்கும் அதிகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது
இன்று காலை குற்றத்தடுப்புச் சட்டத்திற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்திருத்தங்களில் ஒன்று, பிரிவு 7பி, ஈராண்டுகளுக்கு விசாரணையின்றி காவலில் வைக்கும் அதிகாரத்தை மீண்டும் அரசாங்கத்துக்கு வழங்குகிறது. அதற்காக மூவரடங்கிய குற்றத்தடுப்பு வாரியம் ஒன்று அமைக்கப்படும். உயர் நீதிமன்ற நீதிபதி, முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்லது கூட்டரசு…
குற்றச் சட்டம்: வழக்குரைஞர் மன்றத்திடம் ‘ஆலோசனை கலக்கப்படவில்லை’
குற்றத் தடுப்புச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் இன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு வரும் எனத் தெரிகிறது. சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்போது, வழக்கமாக சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் அது பற்றி வழக்குரைஞர் மன்றம், போலீஸ் ஆகியோரிடம் பின்னூட்டங்கள் பெற முனையும். ஆனால், குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும்…
ஜகார்த்தா ஸஹ்ரேனை தூதராக இன்னும் ‘அங்கீகரிக்கவில்லை’
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸஹ்ரேன் ஹஷிம் இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை. இதை, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்த வெளியுறவு துணை அமைச்சர் ஹம்சா சைனுடின், அதன் காரணமாக ஸஹேரேனை முறையான தூதர் என்று குறிப்பிட முடியாது என்றார்.…
சுரேந்திரன் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், நடப்பு நாடாளுமன்றக்கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் எம்பி-ஆக விளங்குகிறார். முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ள அந்த பாடாங் செராய் எம்பி, போலீஸ் காவலில் பி.கருணாநிதி இறந்துபோனது எப்படி என்று கேட்டிருந்த கேள்வியை அனுமதிக்க அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மறுத்துவிட்ட பின்னரும் விடாமல் கேள்வி கேட்டது…
முகைதின்: மெக்கின்சேக்கு ரிம20 மில்லியன் நியாயமான தொகைதான்
தேசிய கல்வி செயல்திட்டத்தை உருவாக்குவது மிகப் பெரிய வேலை என்பதால் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸே அண்ட் கோ-வுக்கு ரிம20 மில்லியன் என்பது “நியாயமான” கட்டணம்தான் என்கிறார் கல்வி அமைச்சர் முகைதின் யாசின். அத்திட்டத்தைத் தயாரிக்க ஈராண்டு ஆனது என்பதுடன் பன்னாட்டு நிபுணர்கள் பலரது ஆலோசனையையும் பெற வேண்டியிருந்தது என்பதால் அந்நிறுவனத்துக்கு…
ஊழல் கடந்த கால வரலாறாக்கபடும், நஜிப்
மலேசிய பிரதமர் நஜிப் ஊழல் ஒரு கடந்த கால வரலாறு ஆக்கப்படும் என்று சூழுரைத்துள்ளார். அமெரிக்கா, சான்பிரான்ஸ்சிஸ்கோவில் காமன்வெல்த் கிளப் லெக்சர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்த ஊழல் ஒழிப்பிக்காக ஒரு புதிய ஆளுகை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக ஓர் அமைச்சரையே நியமித்திருப்பதாக கூறினார். அந்த அமைச்சர் டிரான்ஸ்பேரன்சி…
ரோஸ்மாவின் பெர்மாதாவுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை நிறுத்த வேண்டும்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் தலைமையின் கீழ் இயங்கும் பெர்மாதா நெகாரா செயல்திட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிகேஆரின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கூறினார். பெர்மாத்தா பிரிவின் செயலாளர் சைடாத்து அக்மா ஹசான் அளித்த தகவல்படி வழங்கப்பட்ட ரிம 150 மில்லியனில்:…
கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!
நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்…
நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!
நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை…
சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர். மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை…


