மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
ஒப்ஸ் சண்டாஸ்: குண்டர் கும்பலைச் சேர்ந்த 304பேர் கைது
ஒப்ஸ் சண்டாஸ் நடவடிக்கையின்கீழ், போலீசார் நேற்று நள்ளிரவுவரை நாடு முழுக்க பல்வேறு குற்றங்களுக்காக 11,036பேரைத் தடுத்து வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் கூறினார். அத்துடன் 23 துப்பாக்கிகள், 14 ஏர் ரைபில்கள், ஒரு கையெறிகுண்டு, 1,238 தோட்டாக்கள், இன்னும் பல்வகை ஆயுதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடும்…
பணக்காரர்களான 40விழுக்காட்டினர் உதவித் தொகைகளில் 80விழுக்காட்டை அனுபவிக்கின்றனர்
அரசாங்க உதவித் தொகை யாரை இலக்காக வைத்துக் கொடுக்கப்படுகிறதோ அவர்களைச் சென்றடைவதில்லை எனத் துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் இன்று கூறினார். “நாட்டில் உயர் வருமானம் பெறும் 40 விழுக்காட்டினர்தான் உதவித்தொகைகளினால் கிடைக்கும் நன்மைகளில் 80விழுக்காட்டைத் துய்க்கிறார்கள்” என்றாரவர். ஆக, உதவித் தொகை சிறந்த பயனை அளிக்கவில்லை. ஆனால்,…
லவ்: ஊழல் ஒழிய இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்
அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகிறார். இடைத்தரகர்களால்தான் தொழிற் செலவுகள் தேவையில்லாமல் கூடி விடுகின்றன என்றார். ஏனென்றால் அவர்களுக்கு வேறு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தொழிலின் மதிப்பு கூடுகிறதா என்றால் எந்த வகையிலும் கூடுவதில்லை.…
‘பினாங்கை முன்மாதிரியாகக் கொள்வீர்; நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துவீர்’
மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும், பினாங்கு அரசின் மாற்றுத்தரப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் முயற்சியைப் பின்பற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பினாங்கு அரசின் முடிவைப் பாராட்டிய புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்-மும் (இடம்), புக்கிட் பெண்டேரா எம்பி…
ஜாஹிட்: இடம் அளித்தால் மடம் கட்டுவார்கள்
காலஞ்சென்ற மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்து அவருக்கு ஒரு நினைவு மண்டபமே அமைத்து விடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். “அஸ்தி ஒரு பிரச்னை அல்ல. ஆனால் அதை வைத்து யாராவது ஒருவர் அவருக்கு ஒரு…
ரபிடாவின் பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார் மஸ்னா
அம்னோ மகளிர் தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரில் ஒருவரான மஸ்னா மஸ்லான், முன்னாள் மகளிர் தலைவர் ரபிடா அசீசின் உரிமைபெற்ற பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார். கடந்த சனிக்கிழமை, கடைசி நேரத்தில்தான் மகளிர் பகுதி உயர்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாகவும் அதற்காக யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறினார்.…
கேள்விகளைத் தாக்கல் செய்வதற்கான கால நிர்ணயிப்பு ‘சர்வாதிகாரத்தனமானது’
எம்பிகள், நாடாளுமன்றத்துக்கான கேள்விகளை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு 14 நாள்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யும் நடைமுறை சரியானதல்ல என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். அதில் ‘சர்வாதிகாரத்தனம்’ தெரிகிறது என்றாரவர். இதனால் கேள்வி களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்படும்போது அவை பழையவையாக மாறியிருக்கும். காலத்துக்குப் பொருத்தமானவையாகவும் இருக்க மாட்டா. இரண்டு நாள்களுக்குமுன்வரை …
ஏஎம்பேங்க் நிறுவனர் நஜாடியின் கொலையாளி பிடிபட்டான்
அரேப் மலேசியன் பேங்க் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடி-யை கோலாலும்பூரில் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் 44-வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். “நாலு கண்” என்றழைக்கப்படும் கொங் சுவீ குவானும் மேலும் இருவரும் இன்று காலை தைப்பிங்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அக்கொலைச் செயலுக்கு ஏற்பாடு செய்தவர்…
மரண விபத்து……..ஓராண்டுக்குப் பின்னர் விசாரணை
கடந்த ஆண்டு, செப்டம்பர் 3-இல், கிள்ளான், ஜாலான் பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமா-வில் டான் மே தெங் என்பாரை ஒரு கார் மோதித்தள்ளியதில் அவர் உயிர் இழந்தார். மோதிய கார் நிற்காமல் ஓடி விட்டது. டானின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். விசாரணை நடப்பதாக தெரியவில்லை. குடும்பத்தாரின்…
‘எண்ணெய் விலை உயர்வுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல’
எண்ணெய்க்கு வழங்கிவரும் உதவித்தொகையைக் குறைத்தது மட்டுமே அரசாங்கம். மற்றபடி, எண்ணெய் விலை உயர்வுக்கு அது பொறுப்பல்ல என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் விளக்கியுள்ளார். “உலகச் சந்தைதான் எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறது, அரசாங்கம் அல்ல”. இன்று, நாடாளுமன்றத்தில் மாபுஸ் ஒமார் (பாஸ்- பொக்கொக் சேனா) கேட்ட கேள்விக்குப்…
மஇகா ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா?
மஇகா இந்தியர்களை கடந்த 30 வருடங்களாக ஏமாற்றிவிட்டது என்றும் அது தற்போது ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர் கட்சி போல் நடந்து கொள்வதில் பயன் இல்லை என்றும். மஇகாவை பிரதிநிதித்து அரசாங்கத்தில் இரண்டு முழு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் இருக்கின்ற பொழுது அமைச்சரவையில் இந்தியர்களின் தேவைகளுக்கும்…
உதவித் தலைவர்கள்: இருக்கும் நிலை தொடர்வதே அம்னோவுக்கு நல்லது
அம்னோ உதவித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறுமுனை போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இருக்கும் நிலை தொடர்வதே கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நல்லது என்று நடப்பு உதவித் தலைவர்கள் மூவரும் கூறினர். அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், முகம்மட் ஷாபி ஆகிய அம்மூவரும் புத்ரா உலக வாணிக…
பக்காத்தானில் ‘தலைசிறந்த’ தலைவர்கள் உண்டு: முக்ரிசுக்கு நினைவுறுத்து
பக்காத்தான் தலைவர்களை “டைனோசர்கள்” என்று குறிப்பிட்ட முக்ரிஸ் மகாதிரை பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் சாடினார். அவர்களுக்குப் பின்னரும் பொறுப்பேற்க தங்களிடம் “தலைசிறந்த” புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை எண்ணித்தான் முக்ரிஸ் போன்றோர் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய தலைவர்களில் துணிச்சலாக…
‘சின் பெங்கின் அஸ்திக்கு மறுப்புத் தெரிவிப்பதைப் பார்த்து உலகம் சிரிக்கும்’
சின் பெங்கின் அஸ்தி நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தால் உலகின் கேலிக்கு ஆளாவோம் என முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ், ரஹிம் முகம்மட் நூர் எச்சரித்துள்ளார். 1980-களில், போலீஸ் சிறப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ரஹிம், அப்போது கம்முனிஸ்டுகளுடன் நடத்தப்பட்டுவந்த அமைதிப் பேச்சுகளுக்குத்…
மலேசியாவில் அரசியல் கட்சிகளுக்கு “அதிக அளவில்” தொழில் ஈடுபாடு உண்டு
மலேசியாவில் அரசியல் கட்சிகள் தொழில்களில் ஈடுபடுவதும் நிறுவனங்களை வைத்திருப்பதும் மிகப் பரவலாகவே உள்ளது எனக் கல்வியாளர் ஒருவர் பெர்சேயின் மக்கள் நடுவர் மன்றத்தில் கூறினார். “அரசியல் கட்சிகள் பரவலான வர்த்தக ஈடுபாடு கொண்டிருப்பதும் நிறுவனங்களை நடத்துவதும் இந்நாட்டில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக தெரிகிறது”, என மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை…
கேஎல் மக்கள்தொகை இரண்டு மில்லியன்; எலிகள் 8 மில்லியன்
கோலாலும்பூரில் ஒரு மனிதருக்கு நான்கு எலிகள் வீதம் இருக்கின்றன. எலிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை விளக்கும் இயக்கத்தைத் தொடக்கிவைத்த மாநகர் மேயர் அஹமட் பீசல் தாலிப் இதனைத் தெரிவித்தார். கோலாலும்பூரில் இரண்டு மில்லியன் மக்களுடன் எட்டு மில்லியன் எலிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என டிபிகேஎல் மதிப்பிட்டிருப்பதாக பெரித்தா ஹரியான்…
அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி
அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கான தேர்தல் நான்கு-முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. அதன் இப்போதைய தலைவரான இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்காரை எதிர்க்கப் போவதாக முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளரான சனுசி ஜூனிட்டின் புதல்வர் அக்ராம்ஷியா உபைடா சனுசி ஏற்கனவே கூறியிருந்தார், இப்போது…
டோனி புவா: நஜிப்பின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளது
நஜிப் அப்துல் ரசாக்கை, பிஎன் ஆதரவாளர்கள் “சீர்திருத்தவாதி” என்று போற்றிப் புகழ்ந்தார்கள். எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள்கூட அம்னோவில் உள்ள சுறாமீன்கள் கூட்டத்தில் அவர் சாதுப் பிராணி, ஒரு மிதவாதி, என்றே நினைத்தார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவருடைய உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிக் கொடுத்து விட்டன என்கிறார்…
லேனாவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும்
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 20, 2013. கோமாஸ் என்ற மலேசிய அரசு சார்பற்ற அமைப்பின் அதிகாரி லேனா ஹென்றி 2002ம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தின் 6 (1)(B) பிரிவின் கீழ் , தணிக்கை செய்யப்படாத காணொளி ஒன்றிணை திரையிட்டதிற்காக கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரெட் நீதி மன்றத்தில்…
பினாங்கு-கெடா நீர்ப் பிரச்னை நாசி காண்டா விருந்தில் பேசித் தீர்க்கப்படும்
கெடாவிலிருந்து பெறப்படும் நீருக்கு பினாங்கு கட்டணம் செலுத்த வேண்டுமா, வேண்டாமா என்று தொடர்கின்ற வாதம் விரைவில் முடிவுக்கு வரலாம். நாசி காண்டா சாப்பிட்டுக்கொண்டே அவ்விவகாரத்தைப் பேசித் தீர்க்கலாம் என பினாங்கு முதலமைச்சர், கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாசி காண்டா உணவகத்தை முக்ரிஸே தேர்ந்தெடுக்கலாம்…
69 விழுக்காட்டு வாக்காளர்கள் பிஎன்னும் பக்காத்தானும் இணக்கம் காண்பதை விரும்புகிறார்கள்
மலேசிய வாக்காளர்கள் பெரும்பகுதியினருக்கு அரசியல் சர்ச்சைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. அவர்கள் பிஎன்னும் பக்காத்தானும் தேசிய அளவில் முரண்பாடுகளை மறந்து இணக்கம் காண வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் ஆணையம் (Umcedel) கூறுகிறது. அம்மையம் 1,546 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், …
பக்காத்தான் கேட்கிறது: Apa lagi Umno mahu?
மாற்றரசுக் கட்சியுடன் பேச்சு நடத்தத் தொடர்ந்து மறுத்துவரும் பிஎன் நிலை குறித்து வியப்புத் தெரிவித்த அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா முன்பு கேட்ட கேள்வியை இப்போது திருப்பிப் போட்டார் : “Apa lagi Umno mahu? (அம்னோவுக்கு வேறு என்னதான் வேண்டும்?)”.…
வங்காள தேசிகள் வந்ததாக உறுதியாகக் கூற முடியுமா? தெங்கு அட்னானுக்கு…
பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று காலையில் சொன்னதைப் பார்க்கும்ப்போது புத்ராஜெயாவுக்கு வங்காள தேசி வாக்காளர்கள் வந்ததை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது என்று பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார். மே 5 தேர்தலின்போது பெர்சேதான் வங்காள தேசிகளை புத்ரா ஜெயாவுக்கு அழைத்து…


