பெர்சே: திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன

மக்களவை இன்று அதிகாலையில் நிறைவேற்றியுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன. இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறுகின்றது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்ட அந்தத் திருத்தங்கள் சுயேச்சையாகக் இயங்கும் தேர்தல் முகவர்களுடைய பங்கைப் பெரிதும்…

KPF பேராளர்கள் FGVH பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம்

எதிர்ப்பு கடுமையாக இருந்த போதிலும் Koperasi Permodalan Felda என்னும் பெல்டா கூட்டுறவுக் கழகப் பேராளர்கள் FGVH என்னும் Felda Global Venture Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 1,227 பேராளர்களில் 1,227 பேர் பங்குப் பட்டியலில் அது…

பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கத்தில் இடமில்லை என்கிறது டிபிகேஎல்

கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது. இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம்…

ஜைனுடின் மைடின்: பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஊடகங்களுக்கு தடையாக இருக்கும்…

முன்மொழியப்பட்டுள்ள மலேசிய ஊடக மன்றம் ஊடகச் சுதந்திரம் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் தங்கள் கடமைகளின் போது பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் எதிர்நோக்கும் அச்சுறுத்தலையும் தீர்க்க உதவும் சிறந்த தேசிய பத்திரிக்கையாளர் விருதைப் பெற்றுள்ள ஜைனுடின் மைடின் கூறுகிறார். மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் நோக்கம் கொண்ட சட்டப்பூர்வ விவகாரங்களையும் அந்த…

பிரஞ்சு நீதிபதிகள் சுவாராம் சாட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்

மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்  சமர்பித்த சாட்சிய அறிக்கை பாரிஸ் பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அது அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை விசாரணை நீதிபதி Roger Le Loire முன்னிலையில் வைத்தது. 2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கத்துக்கு…

மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற கடிகாரம் முடக்கப்பட்டது

கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்திராத வகையில் நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு 12 மணி அடித்ததும் நேர ஒட்டத்தை முடக்கியது. தேங்கியிருக்கும் மசோதாக்களையும் பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்பட்டது. "அவையில் இருந்த இலக்கவியல் கடிகாரங்கள் அனைத்தும் நின்று விட்டன," என்று ராசா எம்பி அந்தோனி லோக் கூறினார். மக்களவைக்…

மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாஸ் “பாதுகாவலர்களை” அனுப்புகிறது

டத்தாரான் மெர்டேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பாஸ் யுனிட் அமல் என்றழைக்கப்படும் அதன் பழுத்த சிவப்பு நிற சீருடை பொதுநல குழுவை களமிறங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்றிரவிலிருந்து 30 யுனிட் அமல் ஆர்வலர்கள் டத்தாரான் மெர்டேக்காவில் நிறுத்தி வைக்கப்படுவர் என்று பாஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கைருல்…

சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு "சிலாங்கூர்கு பெர்சே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. "இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு" இத்திட்டம் உதவும் என்று…

உதயகுமார்: எனக்கு எதிரான தேசநிந்தனை வழக்கை கை விடுங்கள்

தேசியநித்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நஜிப்பின் நேர்மையை நிருபீக்க தமக்கு எதிரான தேசநிந்தனை குற்றச்சாட்டை கை விடுமாறு இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் சவால் விட்டுள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி இட்டுள்ள இது சம்பந்தமான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார்.…